Translate

Wednesday, December 31, 2014

வாசிப்பும் நேசிப்பும்

வாசிப்பும் நேசிப்பும்

http://dinaethal.epapr.in/c/4097743

பார்வைப் பெறுமா பாவைக்கூத்து

 பார்வைப் பெறுமா பாவைக்கூத்து

     http://dinaethal.epapr.in/c/4162093


குறும்படம் - உய்கை (திரைக்கதை)

                                                            

      ~~  உய்கை ~~

கதைச்சுருக்கம்:

            ராகுல் , பூஜா கணவன் மனைவி. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆக, ஒருவரையொருவர் புரிதலுக்கான சூழல் நிகழவில்லை, ராகுல் வேலையெனும் பாரத்தைச் சுமப்பவனாக திகழ்கிறான், பூஜா அவசரத்தின் பிரதிநிதி அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மனம் கொண்டவள். திருமணமாகி முதல் ஒரு வருடத்தின் இருக்கும் அன்பு மெல்ல மெல்ல சாயம் போகும் துணியாக மாறுகிறது. ஒரு நாள் பூஜா, ராகுலிடம் "இந்த பந்தத்தை முறித்துக்கொள்கிறேன், நான் வேறொருவனை காதலிக்கிறேன் அவனை மறுமணம் செய்யவிருக்கிறேன்" என்றாள். அதிர்ச்சியுட்றான் ராகுல். மேலும் அவள் கேட்பதாக இல்லை, பின்னர் ராகுல் "உன்னக்கு என்ன மகிழ்ச்சி தருமோ , அதை செய் "என்று கூறி ஒரு வேண்டுகோள் வைத்தான், " நீயும் உன் காதலனும் இறுதியாக என்னுடன் இரவு உணவு சாப்பிட வேண்டும், அத்தோடு நீ போகலாம் உன் விருப்பத்தில் குறுக்க நிக்க மாட்டேன்" என்பது தான்.

     பூஜாவும் இதற்கு செவி சாய்தால். மறுநாள் அவள் காதலன் ரூனி வந்தான், மூவரும் உண்ண ஆரம்பிக்கையில் அங்கு நிகழும் சூழல் பூஜாவை பழைய நினைவுகள் தட்டுகிறது அதே போல ராகுலையும் அந்த சூழல் விழிக்க வைக்கிறது, ரூனியின் தீய பேசும் அவன் செயலும் அங்கு தொனிக்கிறது. பூஜாவும் ராகுலும் தங்களது தவறுகளை உணரும் தருணமாக அந்த சூழல் அமைகிறது, அப்போது பூஜா மேஜை மேல் இருக்கும் முற்கரண்டி எடுத்து தன் கழுத்தில் குத்தி மாய்த்துக்கொள்ள பார்க்கிறாள் , சட்டென்று ராகுல் தடுத்து "உன்னோட அவசர புத்தி தான் இவளோ தூரம் வரவெச்சி இருக்கு, தப்பு என் மேலயும் தான் நானும் செத்துட்றேன் "என்று அந்த முற்கரண்டியை தட்டி விட்டான். ஒரு முனையில் ரூனி பீதியில் கதவை திறந்து ஓட தயாராக இருக்க, "என்ன நடக்குது இங்க ??" என்று கெட்ட ரூனிக்கு "சாரி ! ப்லீஸ் வெளிய போய்டு "என கூறினாள் பூஜா.

“ரூனி ச்சா MRS MISS ஆயிட்டா” என்ற மைண்ட் வாய்சோடு கதவை சாத்தி சென்றான். கதவு மெல்ல மூட, பூஜா "என்ன கடவுள் கூட மன்னிக்க மாட்டார், நான் லாயக்கு இல்லாதவ "என அழுதாள்.

"ஆனா நான் மன்னிப்பேன் ; எல்லாருக்கும் ரியலைஸ் பண்ண ஒரு மோமன்ட் வரும் அது இன்னைக்கு வந்திருக்கு, நம்ப மன துன்பங்களுக்கு இது லாஸ்ட் டே .." என ராகுல் கூற,கதவு மெல்ல மூடியது!!!

. காட்சியமைப்பு
   ஓர் அறையில் நிகழும் கதை, அங்கு நிகழும் சூழல் FLASH BACK கொண்டு செல்கிறது, நிகழ் காலத்தில் என்ன வசனம் பேசுகிறார்களோ அதே வசனம் FLASH BACK இல் தொடங்குவார் , FLASH BACK இல் முடியும் வசனம் நிகழ் காலத்தில் தொடங்கும்..

Meaning – உய்கை
         State of redemption, thunbangal neengi athan pin …. 

 Click the below link for screenplay

 


Saturday, December 27, 2014

பாவைக்கூத்திற்கு பார்வைப்படுமா ?

" 'சமீபத்துல ஒரு அனிமேஷன் படம் பார்த்தேன் சார் , அடடா !! என்னமா எடுத்திருக்காங்க , வெளிநாட்டுகாரனால தான் இப்படி யோசிக்க முடியும் சார் !' என்றார் ஒருவர். இதற்கு பதிலாக இன்னொருவர் 'நம்ம தாங்க அனிமேஷன், கார்டூனுக்கெல்லாம் குரு; பாவைக்கூத்து தெரியுமா ?? அட பொம்மலாட்டம் ங்க! பாவைக்கூத்தோட பரிணாம வளர்ச்சி தான் இந்த மாதிரி வேறரூபத்துல இருக்கு' "

      இயல், இசை, நாடகம் என்பது  முத்தமிழ் .நாடகம் எனபது ஆடலால், நடிப்பால் உணர்த்தப்படும் தமிழ். நாடகத்தில் ஓர் அங்கம் 'பாவைக்கூத்து', கிராமியக் கலைகளில் ஒன்று; நமது பாரம்பரியக் கலை. நம்மில் பலருக்கு 'பாவைக்கூத்து' என்ற கலை இருக்கிறதே தெரியாது அதுவும் இக்காலக்கட்டத்தில் சொல்லவா வேண்டும். பாவைக்கூத்தைப் போல் பல கூத்துகள் திரைப்படத்தின் வளர்ச்சியாலும், தொலைக்காட்சியின் ஆதிக்கத்தாலும் குத்து வாங்கி அடிபட்டு போயின. நமது கலையைப் பற்றி அறிவதும் , அதைப் பேணிக் காப்பதும் நம் தலையாய கடமையாகும்.

 பாவைக்கூத்து என்றல் என்ன ?
 உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து 'பாவைக்கூத்து', இதை இரண்டு கூத்து முறைகளாக பிரிக்கலாம். ஒன்று 'தோற்பாவைக்கூத்து', இரண்டு 'மரப்பாவைக்கூத்து'.

தோற்பாவைக்கூத்து :
       தோலினால் செய்யப் பெற்ற பாவைகளின் நிழலை மையப்படுத்தி அமைவதால் இப்பெயர் பெற்றது. பல வண்ணங்களில் வரையப்பட்டு விளக்கின் ஒளியில் வெள்ளைத் திரையின் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி அசைத்து நிகழ்த்துவது தோற்பாவைக்கூத்தின் முறை. பெரும்பாலும் புராண கதைகளை அரங்கேற்றுவார்கள், கதைகளில் இடம் பெறும் பாத்திரங்களுக்கேற்ப பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்டு அதற்குரிய அளவில் வெட்டப்படும், பாவைகளின் கீழே துடுப்பு போல் இணைக்கப்பட்டிருக்கும் அதை பாவையாட்டியின் திறமையான செயல்பாட்டினால் இயக்கம் பெற்று, திரையில் நிழல் வடிவங்களாகப் படிமம் பெறும்.
      பாவைக்கூத்து உயிருள்ள நாடகத்தின் நிழல் வடிவம், இதற்கு பெரியளவில் கலைஞர்களோ மேடையோ தேவைப்படாது, சிறிய இடமிருந்தால் போதுமானது. பாவைகள் பின்னாலிருந்து இயக்கும் கலைஞர்களின் சிந்தனைகளும், எண்ணங்களும் பாவைகள் வழியே வெளிப்படுகின்றன. பாவைகளை உயிருள்ள கதைப் பாத்திரங்களாகவே பார்வையாளர்கள் எண்ணும் அளவிற்கு நேர்த்தியாகத் திகழும்.அக்காலக்கட்டத்தில்  பெரியக் கருத்துக்களை எளிய முறை பிரச்சாரங்களாக மக்களுக்கு சென்று சேர்த்தது தோற்பாவைக்கூத்து. மேலும் சுதந்திர போராட்டத்தின் போது பிரச்சார ஊடகமாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .
      'அழகி'  படத்தில் 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடலில் தங்கர் பச்சான் அவர்கள் தோற்பாவைக்கூத்தைப்  பயன்படுதிருப்பார்கள் மற்றும் 'தசாவதாரம்' படத்திலும் 'முகுந்தா முகுந்தா' பாடலிலும் காணலாம்.

மரப்பவைக்கூத்து:
       மரத்தை நீரில் நன்றாக ஊறவிட்டு பின்னர் காய வைத்து, கதைப் பாத்திரங்கள் ஆணோ, பெண்ணோ அதற்கேற்ப வடிவம் அமைத்து வண்ணம் பூசுவார்கள். தலைப்பகுதி, உதடு , மூக்கு , கன்னம் போன்றன அமைக்கப்படும் .மார்புப் பகுதியில் துணி சுற்றப்படும். பொம்மையின் முதுகில் 6 அங்குல துவாரம் இடம் பெற்று தலை, கை, கால் ஆகிய உறுப்புகள் ஒரு இணைப்பின் மூலம் இழுத்துக் கட்டப்படும். பொம்மைகளின் உயரம் 1.5 அடி முதல் 3 அடி வரையிருக்கும்.   பொம்மைகளின் இணைப்பில் பிணைக்கப்படும் ஆதாரம் 'சுண்டுக் கயிறு' எனப்படும். பொம்மையின் தலை, கை, கால் , முதுகு ஆகியவற்றில் பிணைக்கப்பட்டுள்ள சுண்டுக் கயிறுகளின் மற்றொரு முனை 1/2 அடி நீளமுள்ள மூங்கில் குச்சிகளில் கட்டப்பெறும் . பாவையாட்டி இக்குச்சிகளைப் பிடித்துக் கொண்டு கயிறுகளை அசைக்க பாவைகள் இயங்கத் தொடங்கும், இதற்கான மேடை பொதுவாக 12 அடி நீள அகலமான மேடையில் 8 அடி உயரத்தில் வேயப்படுகிறது . மேடையின் முன்புறத்தில் பாவைகளை ஆட்டுவதற்கு 1.5 அடி இடைவெளி விட்டுக் கறுப்புத் துணியால் மறைக்கப்படுகிறது, இதனால் பாவையாட்டியின் அசைவுகள் வெளிப்படாது. மரப்பாவைகூத்திற்கும், தோற்பாவைக்கூத்திற்கும் பாவைகள் தான் வேறுபாடே தவிர படைப்பு நிலையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.திருக்குறளிலும் மரப்பவைகூத்தின் பதிவிருக்கும்.

"நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று."

         சமீபத்தில்  வெளியான கரு. பழனியப்பன் இயக்கிய ' ஜன்னல் ஓரம்' படத்தின் ட்ரைலர்  மரப்பாவைக்கூத்து பாணியில் வெளிவந்திருக்கும். வெகு சில இயக்குனர்கள் மட்டுமே இக்கலையை மறவாமல் படத்தில் கோர்த்து அக்கலைஞர்களுக்கு உரிய இடம் கொடுப்பார்கள் , அது பாராட்டுக்குரியது.

        ஒரு காலக்கட்டத்தில் பாவைக்கூத்து  மக்களின் பொழுதுப்போக்காகவும் , செய்திகளை அவர்களிடையே தெரிவிக்கும் ஊடகமாகவும் செயல்பட்டுள்ளது. இத்தகைய கலைகள் இருகிறதா என்ற கேள்வி இளைய சமூதாயத்திடம் அதிகமுள்ளது  மேலும் இக்கலைகள் அழிவில் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாத உண்மை. பாவைக்கூத்துப் போன்ற பல கிராமிய கலைகளையும் அக்கலைஞர்களையும் நாளடைவில் இழந்துவிடக் கூடாது, இக்கலையை பரம்பரை பரம்பரையாக அரங்கேற்றுவோர் குறைந்து கொண்டே வருகிறார்கள், இதை காப்பாற்றுவது நமது கடமையாகும். பாவைக்கூத்தை பள்ளி, கல்லூரிகளின் விழாவில் அரங்கேற்ற வேண்டும் அதுமட்டுமல்லாமல் நல்ல கலைஞர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்று கொடுத்தால் பழையக் கலை புதுக் கலையாக உருமாறும்.
         இப்போதைய ஊடகங்கள் குறும்படம், நடனம் , இசை என ஒவ்வொன்றுக்கு போட்டிகள் வைத்து திகட்டி போயிருக்கும் சூழலில், பாவைக்கூத்திற்கான போட்டிகளோ அல்லது அரை மணிநேரம் அதற்கான நிகழ்ச்சியையோ அடித்தளமாக கொடுத்தால் பாவைக்கூத்து புத்துயிர் பெறும், அக்கலைஞர்களின் திறமைகளை பரைசாற்றும் விதமாக மறு விதையாக அமையும். நலிந்த கிராமிய கலைகளுக்கு சத்துணவு நம் ஊக்கம்  தானே !...
    வரும் 29-ல் சுற்றுலா தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத் திடலில் தொடங்குகிறது, அதில் பல கிராமிய கலைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அவசியம் பாவைக்கூத்தின் நேர்த்தியை கண்டு மகிழுங்கள்.

"உயுரற்ற பாவைகளுக்கு ஜீவன் கொடுப்போம்,
கிராமிய கலைகளைக் கொண்டாடுவோம் "

Thursday, December 25, 2014

மேன்மை ஒரு உயரப் பறக்கும் பறவை !!

        நன்றாக பள்ளி , கல்லூரி படிப்பை படித்தால் நல்ல வேலை கிடைக்கும் அதன் பின் கை நிறைய சம்பாதிக்கலாம் இப்படியே வாழ்கையை ஓட்டலாம் என்பது  நம்முடைய அடிப்படை தீர்மானம் இதை தப்பு கூறவில்லை, நன்றாக சம்பாதித்தல் மேன்மை வருமா ? இல்லை இன்னும் பேராசை வருமா ? மேன்மை குணம் சிலரின் நற்பண்பு , சிறுமை குணம் பலருடைய பேராசையின் ஆணி வேர். நம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்கிறோம், தினம் தினம் புலம்பும் விஷயம் மேலாளர்கள் , உயர் அதிகாரிகளின் ஆதிக்கம். நமது  உழைப்பை சுரண்டி அவர்கள் சட்டைப் பையில் போடும் பலர் அலுவலகத்தில் இருக்கின்றனர், இவர்களின் இயலாமை மிகவும் வருத்தம் அளிக்கும். இப்படி பட்ட உலகத்தில் மேன்மையான உயர் அதிகாரிகள் அபூர்வம் தான், பேருந்து பயணங்களில் காணும் மனிதர்களைப் போல என் சில வேலை பயணங்களில் பல மேலாளர்களை கடந்துள்ளேன். இதை வாசித்தால் உங்கள் வாழ்வில் சந்தித்த அந்த மேன்மை மனிதர்கள் முகம் சற்றே நினைவை தட்டும்.

              கஜன் , என்னுடைய முதல் சிறிய மென்பொருள் நிறுவனத்தின் TL (குழு தலைவர்) . இவரின் குணாதிசயம் வியப்பிகுரியது. மிகவும் திறைமை வாய்ந்தவர். VB யை தன் சட்டைப் பையில் போட்டு திரிவார். அவர் வைத்திருக்கும் அலைபேசி எண் இறுதியில் 7744 என்று முடியும் அதே போல் அவர் இருசக்கர , நான்கு சக்கர வாகனம் எல்லாம் 7744 தான், மிகவும் வித்தியாசமான மனிதர். நான் அரட்டை அடிக்கும் போது எண் குரல் உய்ரந்திருக்கும் எல்லோரையும் கிண்டல் செய்து நேரம் போகும் அவரும் நன்றாக சிரிப்பார் , என்னக்கு VB என்றால் என்ன கூட தெரியாது அவர் வேலை கொடுத்தால் ஊமையாக மாறிவிடுவேன் அதை "பேசும்போது மட்டும் வாய் அப்படி இருக்கு வேல கொடுத்த வாய் இருக்கனே தெரியல" என்று சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. அவரும் நானும் RX 100 பைத்தியங்கள், நாள் பூர்த்தியாக பைக் தான் பேசுவோம். கஜன் அந்த சமயத்தில் காதலித்து இருந்தார் திருமணத்திற்கு தேதி பாத்துக்கொண்டிருன்தனர் அவர் வீட்டார். நான் ஒரு மனகசப்பின் பேரிலும், வேலை சுத்தமாக தெரியவில்லை எனக்கு ஸ்ரீநாத் என் நண்பன் அவன் என்னக்கு அதீத உதவி செய்தான் ஒன்னுமே தெரியாமல் கூனி குறகி போனேன், வேலையை விட்டேன் ஒரே ஒரு மின் அஞ்சல் வேலையே விடுகிறேன் என்று. கஜன் சாருக்கு எனக்கு போன் பண்ண வேண்டும் என்று அவசியம் இல்லை தொடர்ந்து ஐந்து நாள் அழைத்தார் ஆனால் நான் பேசவே இல்லை. ஸ்ரீநாத் என்னிடம் "டேய் கஜன் உன்ன வர சொல்லறாரு டா, ஈசியா கத்துக்கலாம்" அப்படியும் நான் எதுவும் சொல்லவில்லை. இரண்டு மதம் போனது வேறு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், கஜன் சாரிடம் போன் வந்தது "டேய் , எனக்கு திருச்சில மரேஜ் நீ அவசியம் வரணும்" என்று சொன்னார். நான் மிகவும் கனத்த நேரம் அது, ஒருவர் எவ்வளவு மேன்மையின் உச்சமாக இருந்தால் மதிக்காத என்னை தன் திருமணத்திற்கு அழைப்பர். அவரின் மேன்மை குணத்திற்கு இன்னும் பல தூரம் செல்வார் கஜன்.
  
      அசோக் , நான் பணிபுரிந்த இன்னொரு மென்பொருள்  நிறுவனத்தின் மேலாளர். வெகு சிலர் மட்டுமே நம் விழியன் கரு மணியைவிட்டு அகல மாட்டார் அதில் அசோக்கும் ஒருவர், மனித நேயத்தின் உச்சம். அவரிடம் அவ்வளவாக உரையடினதில்லை, அந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணி புரிந்தார், வேலையை விட்டு செல்லும் இறுதி நாட்களில் மட்டுமே நான் அவரிடம் உரையாடினேன். அவரின் நிறுவனத்தின் இறுதி நாளில் கண் கலங்கி வெளியே சென்றார், சில மாதங்கள் முன்பு என் குழுவில் இருக்கும் ஒரு நபர் மிக முக்கியமான பைல் ஒன்றை டெலீட் செய்தான் , ஒரு விரோதத்தின் காரணமாக அதை செய்தான். அது ப்ரொடக்ஷன் டேட்டா என்று சொல்வார்கள் , டெலீட் செய்து அன்று தான் அன்சைட் மேலாளருக்கு அந்த டேட்டாவை கொடுத்து ப்ரோஜக்ட் வாங்க முடியும்.
ஷ்யாம் என்ற நண்பர் தான் கண்டு பிடித்தார்  "டேட்டா மிஸ்ஸிங் அசோக் " என்றார், உடனடியாக விசாரித்தோம் எப்படி இது போனது யாரோ டெலீட் செய்திருகிறார்கள் என்பது தெரியவந்தது அவரின் பெயரும் வெளிவந்தது, அது டெலீட் செய்த ஆளின் பெர்யல்ல வேறொருவருடையது. தனிமனித காழ்புணர்ச்சி காரணமாக வேறொருவருடைய  ஐ டி யில் இருந்து டெலீட் செய்தான் அந்த தியாகி, பின்னர் குற்றவாளியே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
       அந்த நம்பரை வேலையிலிருந்து நீக்கும் படி மேலிடம் சொன்னது. வேலையில் இருந்து நீக்கப்பட்டது நியாயம் , ஆனால் அவன் எதிர்காலம் திடீர் என்று எங்கே செல்வான், அசோக் அந்த நபரை அழைத்து ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தார், " பழைச மறந்துரு , நல்லா வேல செய்யு" என்று அந்த குற்றவாளிக்கு சொன்னார். இது மேன்மையின் உச்சம், அசோக் சார் அவன் எதிர்காலத்தையும் குடும்பத்தையும் பார்த்தார், அவருக்கு என்ன என்று இருந்திருக்கலாம், மனிதநேயம் என்பது அசோக் சார் போல சிலரிடம் தென்படும். 
          இன்று வேறு மென்பொருள் நிறுவனத்தில் மிக உயரிய இடத்தில் இருக்கிறார், எங்கு சென்றாலும் மேன் மக்கள் மேன் மக்களே !!

      இதே நிறுவனத்தில்  சாம் மற்றும் வினோத் என சில மேலாளர்கள் உள்ளனர், இவர்கள் அசோகின் மறு படிமம். உதவி எனும் செயலை செய்து மார் தட்டிக் கொள்ளும் இந்த சமூகத்தில்,  இவர்கள் மற்றவர்க்கு செய்த உதவி ஊமையாகும் அவர்களது மேன்மை ஒலி பெருக்கியாய் மனதில் மார்கழி இசையாய் கேட்கும்! நாம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டால் நான் என்ற கொம்பு வரும், வினோத் 8 ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறார், கணினிக்கும் இவர்க்கும் தொடர்பே இல்லாத தொழிற் சார்ந்த பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தார் ஆனால் அவருக்கு தகவல் தொழில்நுட்பம் அழைத்தது. கணினி படித்தவர்களை விட இவருக்கு அதன் அடிப்படையும் நுணுக்கங்களும் தெரியும், எல்லாம் தன் முயற்சியால் கற்றுக்கொண்டார்.நாம் ஒரு சிறிய வேலை செய்தாலும் அதற்கான அங்கீகாரத்தை பெற்று தருவார்.
       இந்த உலகில் ஒருவரை ஒருவர் கீழே தள்ளி மேல வரும் மனிதர்களிடையே அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் மிக அதிகம், மற்றவரின் வளர்ச்சியை கண்டு மகிழ்வார் அதனிலும் அந்த வளர்ச்சிக்கு இவர் தான் காரணமுமாக இருப்பார். இவருக்கு அவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் யாரிடமும் சென்று சோகத்தை பகிர்ந்தது இல்லை, ஏன் மற்றவர்களை சோகத்தில் ஆழ்தவேண்டும் என்று மேன்மையின் உணர்வு தான்.
      சாம், உண்மையான ஆத்மா . அவரைப்போல் தேடி உதவும் குணம் மிக அரிது. எழில் என்ற நபர் சாம் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனம் சென்றான்,அவன் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்தான், சாம் அடிக்கடி அவனுக்கு அலை பேசியில் அழைத்து நலம் விசாரிப்பார், மேலும் அவன் அவதியை கண்டு திரும்ப இவர் நிறுவனத்திலேயே மீண்டும் வேலைக்கு ஏற்ப்பாடு செய்தார் அதுவும் எழில் நல்ல சம்பளத்திற்கு வந்தான் இதற்கு சாம் மிக சிரமப்பட்டு சண்டையிட்டு அவனை வேலைக்கு சேர்த்தார். இன்று வரை அதை சாம் யாரிடமும் சொன்னதில்லை. மேலும் அவர் மாதமாதம் ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு தனது சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுப்பார், இவரைப் போன்று ஒரு ஜீவன் பார்ப்பது மிக அரிது !! மேன்மையின் உச்சம் சாம், வினோத்.

      மேன்மை ஒரு பண்பு , இதை நிச்சயம் நம் உறகளிடமோ நண்பர்களிடமோ கண்டிருப்போம், இதை வாசித்திருந்தால் உங்கள் வாழ்கையின் மேனமையான மனிதர்களைப் பற்றி யோசனை தட்டி இருக்கும், நாமும் மேன்மையெனும் பண்பை காணமட்டும் இல்லாமல் கடைப்பிடிப்போம் !!

  
   

Sunday, December 21, 2014

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 5

வாழ்கை வாழ்வதற்கே !

      நாளொருவண்ணம் ஒவ்வொரு கவலையின் புலம்பல் பலரிடம் காணலாம், அவர்களை தவறு சொல்லி பயனில்லை. ஆசைகளும் , பொறுப்புகளும் கூடினால் மனதின் சத்தம் புலம்பலாக மாறும். இப்படி பட்ட ஓசை நிறைந்த அண்டத்தில் வாழ்கையை வாழும் சில இறகுகள் நம் நடை பாதையில் பார்த்திருப்போம். ஒரு சில இறகுகள் என் கல்தடங்களில் வழிகளாக !!

         தீபக், லயோலா  கல்லூரி கணிதப் பிரிவின் நண்பன். இயல்பாக எல்லோரிடம்மும் பழகும் குணம் உண்டு.இவன்  படிப்பில் சற்று மந்தம், வகுப்பு தேர்வோ அல்லது ஆண்டு தேர்விலோ தான் படித்தது வரவில்லை என்றால் அவன் மனதில் வரும் முதல் கேள்வி "இது நம்ப சிலபஸா?" எல்லா நண்பர்களும் "செம்மைய பண்ணேன் டா","இல்ல மச்சி நெக்ஸ்ட் செம் தான் ", "அப்படா மச்சி சொல்லி கொடுதாண்டா", "இந்த புண்ணியவான் ஆன்சர் சொன்னான்" என எல்லோரும் வெவ்வேறு தொனியில் சொல்வார்கள் இது ஒவ்வொரு தேர்விற்கும் வருத்தம் சந்தோசம் என தொனி மாறிக்கொண்டே இருக்கும். தீபக் என்றும் ஒரே பதில் தான் "பாத்துக்கலாம் மச்சான்". அவனுக்கு நன்றாக முயன்று படிப்பான் ஆனால் அது மதிப்பெண்ணுக்கு ஏன் தெரியவில்லை என்பது தெரியாது. தேர்வில் எளிதாக யாரையாவது பார்த்து எழுத வாய்ப்பு கிடைத்தாலும் அதை கஷ்டப்பட்டு மகேஷுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிக கவனம் அவனுக்கு. மகேஷ் அவனுக்கு நெருங்கிய நண்பன். தீபக் இதுவரை புலம்பி பார்த்ததில்லை, கடினமான நேரத்திலும் சிரிப்பு ஒன்று தான் பதிலாக இருக்கும்.
          தான் கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியோடு வாழும் ஆத்மா, இது நிச்சியம் வாழ்கையை இலகுவாக நினைத்தால் மட்டுமே அது வரும். வருத்தம் வந்தாலும் சீக்கிரம் தன் சிரிப்பின் வழியில் விடை கொடுப்பான். தீபக் வாழ்கையை வாழும் நண்பன், எதுக்கும் துவளாமல் தன்பிக்கையை தோளில் சுமந்து இன்றும் சிரித்துகொண்டே ஓடிகிறான். படித்தால் தான் நம்பிக்கை என்ற மாயை அதிகம் புழங்கும் வேளையில் வாழ்கையை வாழ்ந்தால் போதும் தன்னம்பிக்கை நம்முடன் வாழ ஆசைப்படும் என்பதற்கு உதாரணம் தீபக்.

                தீபக் போல இன்னொரு நண்பன் நரேஷ், நாங்கள் ஒரே வகுப்பு. இதற்கும் கலங்காத ஜீவன், நரேஷின் வாழ்கையில் கவலையை காணவில்லை போஸ்டர் ஒட்டியே இருக்கும்.அவன் இதுவரை முகம் வாடி பார்த்ததில்லை, நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பல எண்ணங்கள் உதிக்கும் அது கைகூடாவிட்டால் கவலையாக மாறலாம், எண்ணங்கள் முளைத்து அதன் தன்மை வெற்றியோ தோல்வியோ யோசிக்காமல் நகர்ந்தால் வாழ்கையை வாழ இயலும், இதை நரேஷிடம் காணலாம்.
          29 c பஸ்சில் தான் நரேஷ், பிரிட்டோ , சித்தார்த் , அலெக்ஸ் இவர்களுடன் நானும் கல்லூரிக்கு பயணிப்போம். இதில் ஐவருமே கணித வகுப்பு என்பது குறுபிடதக்கது. பஸ் பயணத்தில் மற்ற பிரிவைச் சார்ந்த நண்பர்களும் வருவார்கள், மூன்று ஆண்டுகளில் நரேஷ் ஒரு நாள் கூட முகம் சுளித்து வந்ததோ தன் துன்பங்களை கூறுவது என எதுவும் சொன்னதில்லை. எல்லோராலும் அவனுக்கு நன் மதிப்பு உண்டு அதற்கு ஒரே காரணி கவலையை காணவில்லை போஸ்டர் ஒட்டியது தான், எப்பொழுதும் அவனிடம் விலை மதிப்பில்லாத ஆபரணம் இருக்கும் 'புன்னகை'. வாழ்கையை வாழும் நண்பன்.
         நரேஷை சொல்லும்போது பால் எழிலழகன் சொல்லாமல் இருக்க முடியாது, கல்லூரிக்கு மீஞ்சூரில் இருந்து பயணித்து வருவான் சற்று தூரம் தான் ஆனால் முகம் சுளித்ததில்லை. வாழ்கை வாழ்வதற்கே என்பதற்கு மிக சிறந்த சான்று பால். அவன் உள்ளத்தில் அவ்வளவு குமுறல்கள் இருந்தாலும் எதிரே இருப்பவர்களுக்கு அது வெளிப்படாது. எங்கள் வகுப்பில் எல்லோரும் மேற்படிபிற்கு கணினி மற்றும் வியாபார ரீதியில் படிக்க சென்றார்கள் இன்னும் சிலர் வேலைக்கு பயணித்தார்கள், பால் ஒரு நடத்தற குடும்பத்தின் பிரதிநிதி, பணம் நிறைக்க செல்லும் மக்களிடம் சற்றே விலகி மனம்  நிறைக்க மனிதர்களைப்பற்றி சென்னை பல்கலைகழகத்தில் படித்தான்(Msc.Anthrapology). இந்த துணிவும் தனம்பிக்கையும் சிலருக்கே வரும், இது அற்புதமான படிப்பு. எங்கள் வகுப்பில் மொத்தம் 80 மாணவர்கள் அவர்களில் ஒரே ஒருவன் வேறு தொனியில் சென்றான் அது பால், தன் பாதையில் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும் சிரித்து கடப்பவர்கள் பட்டியலில் பாலும் ஒருவன்.
   பல சமயங்களில் சூழல் கடினமாக இருந்தாலும் தங்களிடம் தனபிக்கையும் புன்னகையும் இருந்தால் வாழ்கை வாழ்வதற்கே என்பதற்கு அற்புதமான சான்று பால் எழில் !!!
         நம் வாழ்வில் இது போன்ற நண்பர்கள் ஏராளம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது நம் மனதின் தாராளம். நமக்கு அவன் என்னடா என்ற நினைப்பிலே இது போல பல நண்பனை அலட்சிய படுத்துவோம். சிலவற்றை நம் ஈகோ விழுங்கி விடும், இவர்களை போன்ற நண்பர்கள் உங்கள் வட்டாரத்தில் இருப்பார்கள் மேலே உள்ள பதிவை வாசித்திருந்தால் கட்டாயம் உங்கள் நண்பனின் முகம் தெரிந்திருக்கும்.

            

Saturday, December 20, 2014

என் அலுவலகத்தில் .......


           என் அலுவலகத்தில் சுமார் 4000 க்கும் மேல் வேலைசெய்கிறார்கள் ,இரண்டு வாரங்களுக்கு முன்பு அலுவலகத்தால் ஒரு கலைநிகழ்ச்சி ட்ரேட் சென்டர் நந்தனத்தில் நடைபெற்றது, அது பிரத்யேகமாக எங்கள் அலுவலகத்தில் பணிபுரியோருக்கு மட்டும் தான். மொத்தம் நான்கு அணிகளாக பிரிந்து போட்டிகள் நடைபெற்றன அதில் நடனம், குறும்படங்கள், நவீன நாகரீக நடை என்று பட்டையை கிளப்பினார்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். இதை விட தனியார் தொலைகாட்சியின் தொகுப்பாளினி முழு நிகழ்ச்சியும் நன்றாக தொகுத்து வழங்கினார் மேலும் பிரபல பாடகி ஒருவர் அருமையாக பாடி பார்வையாளர்களை உற்சாகபபடுத்தினார். குளிரூட்டியால் நிரம்பிய கூடம் அது, எல்லோரும் குளிர்ந்து நடனத்தையும் மற்ற நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
பாட்டு, நடனம் என மேடையில் ஓட கிழே பார்வையாளர்கள் கூட்டம் கூட்டாமாக நடனமாடி சந்தோஷப்பட்டனர், அதை பார்க்கவும் பரவசமாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் நுழைவாயிலில் ஒத்தை அடி மேளம் ஏற்ப்பாடு செய்திருந்தனர் உங்களுக்கு புரியும் படி சொன்னால் ' சாவு மோளம் ' , இதற்கு ஆணும் பெண்ணும் ஆடின ஆட்டம் வேறு தினுசாக இருந்தது.

"ஆண்டவரே என்னை மன்னியுங்கள் எனது பொய்களுக்காக!!"
ஐம்பது சிறார்களுக்கு உணவு வழங்கினார்கள் அது மிகவும் பாராட்ட வேண்டும் , இதைத் தவிர வேறு எதுவும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. தொகுப்பாளினி செய்த அட்டூழியம் மிகவும் அதிகம் அதில் ஒன்று "எதின்னி பேருக்கு கல்யாணம் ஆகல ??? " தேவையில்லாத கேள்விகளும் பதில்களும் முகத்தை சுளிக்க வைத்தது.
எங்கள் அலுவலக பணிகள் வெவ்வேறு மாடிகளில் ஒரே வளாகத்தில் இயங்கும் அதில் காப்பாளர்களாக பணி புரிவோர் 100 க்கும் மேல் இருப்பார்கள் .எல்லோரும் ஒரிசா, வங்காளம் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் , அவர்களும் அந்த அரங்கில் இருந்தனர். இதில் வெளியே காவல் காக்க வேண்டும் உள்ளே வரக்கூடாது என்ற கட்டளையாக இருந்தது , சில விநாடி நானும் அந்த செக்யூரிட்டி ஆகா இருந்திருக்கலாமோ என்று நினைப்பு.
அப்படியும் ஒரு பெண் செக்யூரிட்டி, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவள், நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஏக்கம், தானும் இவர்களைப் போல் பங்குபெற வேண்டும் என்று, வறுமையில் அவள் கண் மை கலைந்ததை உணர்ந்தேன் சிறிது நேரத்திலே தலைமை கண்காணிப்பாளர் ஒருவர் அந்த பெண்ணைத் திட்டி அரங்கிற்கு வெளியே தள்ளினார்.
" சார் ! சார் !! இந்த டான்ஸ் மட்டும் பாத்துட்டு போய்டறேன்" என்றது இன்று வரை என்னக்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் தேவயில்லாமல் நேரத்தை விழுங்கியது. இந்த செக்யூரிட்டி களுக்கு ஒரு 5 நிமிடம் தங்கள் திறமைக்கு கொடுத்திருந்தால் ஒருங்கினைப்பாளர்களின் பாவம் சிறிது கழிந்திருக்கும்.
சாவிற்கு முன் தன் துயரை மறைக்க ஆடும் தோழர்களைப் பார்த்து "என்ன கீழ்த்தரம்" என்று வினவுவோர் அன்று அதே மேளத்திற்கு ஆடியது கேலி கூத்து தான் அதில் பெண்கள் அதிகம் என்பது வியப்பே !!
தோழர்களே ! உங்கள் அலுவலகத்தில் இதை போன்று நிகழ்ச்சி நடக்குமானால் நம் கண்ணிற்கு தெரியாத வண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள்...

ஐ . டி காரன் // குறும்படம்

ஐ . டி காரன் (I.T.Kaaran)

இந்த குறும் படம் தகவல் தொழில் நுட்ப தோழர்களை மையப் புள்ளியாக வைத்து எடுக்கப்பட்டது , சமூதாயம் இவர்களை சாடி தன் ஆதங்கத்தை தீர்ப்பவாறு கதை அமைக்கப்பட்டது, அது உண்மையும் கூட. குறையை கூவி கூவி ஒலி…
00:05:01
Added on 30-11-2014

அன்பு தோழர்களுக்கு வணக்கம்..


https://www.youtube.com/watch?v=YGNTYKyVgCY

         இந்த குறும் படம் தகவல் தொழில் நுட்ப தோழர்களை மையப் புள்ளியாக வைத்து எடுக்கப்பட்டது , சமூதாயம் இவர்களை சாடி தன் ஆதங்கத்தை தீர்ப்பவாறு கதை அமைக்கப்பட்டது, அது சில நேரங்களில் உண்மையும் கூட. குறையை கூவி கூவி ஒலி பெருக்கியீன்றி கத்தும் சிலர் ஏன் நிறையை செய்கை கூட செய்வதில்லை !

    கீழே போகும் உணவும் ,தண்ணீரும் நம் உறுப்புக்களும் ஒன்று தான், இந்த படத்தின் இறுதி துளிகள் அதை பேசாமல் சொல்லும்.உயிருடன் இருக்கும் போது அண்ண  தானம் பிறகு உறுப்பு தானம் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த குறும் படம்.

(வேறு கோணம் :

  இறுதிக் காட்சியின் போது தனது உணவை பிச்சைக்காரருக்கு வழங்கி விட்டு தன் உறுப்பு தான அடையாள அட்டையை தவறவிடுகிறார் கதையின் மாந்தர்,  அதை எடுத்து கொடுக்கிறார் அவர் மற்றும் பணத்தையும் நிராகரிக்கிறார்.

விளக்கம் - இங்கு பிச்சைக்காரர் கடவுளாக சித்தரிக்க படுகிறது , மனிதனானவன் உணவை வழங்கும் போது ஏற்கிறார். அண்ண தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், அதன் பின்னர் விழும் உறுப்புதான அடையாள அட்டை மனிதனின் உறுப்பாக திகழ்கிறது. "கிழே போகும் உடலோடு உறுப்பை ஏன் மண் ஆக்குகிறாய் மானுடமே ? மற்றவர்களுக்கு உறுப்பை கொடு வாழ்வை வீழ்ந்தப்பின்னும்" என்ற கடவுளின் அறிவுரைக்கு மனிதன் " நல்ல அறிவுரை கடவுளே" என்று பணம் கொடுக்கிறான் மனிதன்.
அதற்கு கடவுள் " என்னையும் உன்னை போல் கூலிக்காரனாக்காதே!" என்று பணத்தை நிராகரிக்கிறார். )

வாழவைப்போம் இருக்கும்போதே !!
வாழ்வோம் வீழ்ந்தப்பின்னும் !!

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 4


மாற்றம் இல்லா சிரிப்பு சிறப்பு தான் !

    வாழ்கையெனும் தோட்டத்தில் வெவ்வேறு மலர்கள் பூத்திருக்கும், சில நேரங்களில் மகிழ்ச்சியும் சில சமயங்களில் இன்னல்களும் மாறி மாறி பூக்கும் காலத்திற்கேற்ப இதன் முரணாக எல்லா தருணங்களிலும் ஒரே சிரிப்பை வைத்து மகிழ்ச்சியையும் கொண்டாடி, ஒரே சிரிப்பை வைத்து இன்னல்களை சமாளிப்பது வெகு குறைவு என்றே கருதலாம்.இத்தகைய மாந்தர்கள் உங்கள் வாழ்வில் அவசியம் உலாவியிருப்பர்கள் அதை நினைவு கூற நான் பயணித்த சிலர் உங்களுக்கு உதவுவார்கள் என நினைக்கிறேன்.

      மணிமாறன் எங்கள் கணிதத்துரையின் ஜே.எஸ் ( J S ) மூன்றாமாண்டின் போது தேர்வு செய்யப்பட்டான், எல்லோருடனும் ஒரே சிரிப்பு தான் அவன் கலக்கத்தில் இருந்தாலும் ஒரு குழந்தையின் புன்சிரிப்பு தொனித்து கொண்டிருக்கும். கணித துறையில் சுமார் 75 பேர் இருப்போம் அனைவருமே ஒரு கூட்டு பறவை போல வெளியே யாரிடமும் விட்டுக் கொள்ளாமல் இருப்போம், நான் சொன்னது போல மூன்றாமாண்டில் ஜே.எஸ் தேர்தல் வந்தது அந்த க்ஷணத்தில் இன்னொரு நெருங்கிய நண்பன் சபாஸ்டின் மணிக்கு எதிரே நின்றான், அது இருவருக்குமே நெருடலான நிகழ்வு. மணியும் சபாவும் நல்ல நண்பர்கள், இந்த தேர்தலில் கணித துறையின் அணைத்து மாணவர்களிடமும் வாக்கு திரட்ட வேண்டும். மணி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான் அவன் ஊர் மதுரை, சபாவின் வீடு அருகில் தான், தேர்தலின் முடிவில் மணி வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றான். மணிக்கு தெரியும் விடுதி மாணாக்கர்களின் வாக்கு வந்துவிடும் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று, ஆனால் அவனுக்கு மனதில் பெரும் சோகம் பீடித்துக் கொண்டிருந்தது அதை என்னிடம் பகிர்ந்தான் "மச்சா நான் தோத்தா பரவாயில்ல ஆனா சபா தோத்துட்ட அவன நான் எப்படி பார்பேன் " என கவலையுடன் சிரித்தான் ;"டேய் நீ அவன இந்த எலக்ஷன் ல மட்டும் தோக்கடிக்க மாட்டே" என்று மனதுக்குள் நினைத்துள்ளேன்.
    வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே சிரிப்பு தான் மணிக்கு அது வியப்புக்குரியது, அவன் யாரை சந்தித்தாலும் அந்த சிரிப்பு எல்லோரையும் கவரும், இன்று மணி அதே சிரிக்கும் நல்ல மனதோடு யாரையோ மகிழ்வித்து கொண்டிருப்பான். சன் டிவி யில் HR ஆகா பணிபுரிகிறான், அவன் மகனின் சிரிப்பு மணியின் மனதில் தெரிந்தது ஒரு நிழற்படத்தில்.

    மணிமாறன் சிரிப்பின் ஆழம் போல் இன்னொரு நண்பன் காலின்ஸ் இவன் சிரிப்பு முற்றிலும் சிறப்பு, எந்த எதிர் பார்ப்பும் இல்லாத முறுவல். அவன் ஒரு குழந்தை போல தேவை இல்லாமல் சண்டைக்கு இழுப்பான், "என்னடா பிரச்சனை ?" என்று கேட்டால், "போன மாசம் கலாச்ச ல அதுக்கு" என்பான். இந்த வார்த்தை சொன்னவுடன் மச்சா சாரி டா என்று சிரிப்பான், களங்கமே இல்லாமல் இருக்கும் அந்த சிரிப்பு.
நம்மில் எத்துனை நபர்களுக்கு இந்த சிரிப்பு வாய்க்கும் உள்ளே ஒன்று வெய்த்து வெளியே தான் சிரிப்போம்.

              ஒரு நாள் காலின்ஸ் கழுத்தில் நெக் பேண்ட் அணிந்து வந்தான், "என்னடா மச்சா இது" என்று ஆண்டோ கேட்டான். கழுத்து வலி என்று காலின்ஸ் கூற , அன்று வகுப்பு ஆரம்பிக்க அது  எங்கள் கணித ஆசிரியர் விக்டர் தேவதாஸ் வகுப்பு, மிகவும் கண்டிப்பானவர். அந்த நேரத்தில் ஜீசஸ் , அல்லா , பிள்ளையார் என எல்லா கடவுளையும் துணைக்கு அழைப்போம் "சாமி இந்த ஆள் என்ன எதாவது கேள்வி கேட்டு பதில் தெரியலனா , என்னோட செத்துப்போன தாத்தாவோட தாத்தாவையும் தா ன்னு திட்டுவான், என்னை கேக்க கூடாது பா " வேண்டுவோம், அன்றைக்கு காலின்ஸ் க்கு அடிச்சுது ஜாக்பாட் விக்டர் சார் கல்லின்சை கேள்வி கேட்டார் அதற்கு அவன் தன் தலையை  ஹை ஸ்பீட் காட்சிபோல (SLOW BY * 3X) திருப்பினான்.
" என்னடா காலின்ஸ், வேல செய்யாத டேபிள் பேன் மாதிரி திருப்புற, நல்லா நடிக்கிற " என்றார். காலின்ஸ் க்கு எங்கு இருந்து அந்த ஆவேசம் வந்தது என்று தெரியவில்லை "சார் ! என் வலி எனக்கு தான் தெரியும், உங்களுக்கு வந்தா தான் தெரியும்" என்று கூறினான். கழுத்து வலி கூட அமர்தாஞ்சன் போட்டால் இரண்டு நாளில் போய்விடும்,ஆனால் கல்லின்சின் இந்த ஆவேச வலி மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. விக்டர் சார் பெரிய பிரச்சனையாக உருவாக்கினார், தினமும் தன் சொல் எனும் குண்டு ஊசியால் கல்லின்சின் கழுத்தை குத்தி குத்தி விளையாடுவார்.

         இன்று காலின்ஸ் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான், என்றாவது நட்பு வட்டாரம் கூடினால் அவன் சிரிப்பை எங்கள் மனதில் சிறை பிடிப்போம் !!! காலின்சின் சிரிப்பு இன்றும் ஒரு மலரின் புன்னைகை போல் ஒரே வண்ணம் தான், உங்கள் வட்டத்திலும் காலின்ஸ் , மணி போல கள்ளமில்லா சிரிக்கும் நண்பர்கள் இருப்பார்கள். இவர்களை நீங்கள் படிக்கும் போதே உங்கள் நட்பின் சிரிப்பு மனதிற்குள் பூக்கும் !!
  
      காலின்சை சொல்லும்போது சிரில் சில்வஸ்டர் பிரவீன் என்ற நண்பனும் பிளாஷ் கட்டில் வந்து செல்கிறேன். சிறிலின் சிரிப்பு தனி அவனும் கணித பிரிவு தான் எல்லோரிடமும் கனிவான சிரிப்புடன் இருக்கும் சுபாவம் கொண்டவன். சிரிப்பு எனும் மத்தாப்பு என்றும் அவன் முகத்தில், சிரில் ஒரு புன்னகை போராளி என்று சொல்லலாம், எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே முடித்துவிடுவான் , சிரிப்பு வித்வான்.அவனுக்கு இருக்கும் மன நெருக்கடியின் அடி மிக நீளம் அதன் வலியும் நீளம், இதுவரை சிரில் முகம் சோர்ந்தோ அல்ல ஒப்பாரி வைத்து தன் துன்பங்களை விளம்பரம் செய்ததில்லை இது மிகவும் அறிய குணாதிசயம், இன்றிய உலகில் எதாவது சோகமாக சொன்னால் சாதகமாக நடக்கும் என்கிற சூழலில் சிரில் ஒரு புத்துணர்ச்சியான லிரில் சோப்பு !!!
           சிரில் சிரிப்பை வாசிக்கும் போது உங்களின் நண்பனின் சிரிப்பும் நினைவுக்கு வந்தால் சிரில் ,மணிமாறன் மற்றும் காலின்ஸ்  க்கு மகிழ்ச்சி !!!
     
   
     

Thursday, December 18, 2014

வாசிப்பும் நேசிப்பும் !!

" நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்த்தீர்கள் ?" என்று கேட்டால், அதற்கு பெரும்பான்மையாக பல எண்களைக் கூறுவார்கள் ஆனால்  " நீங்கள் கடந்த ஆண்டு எத்தனை புத்தகம் வாசித்தீர்கள் " என்று கேட்டால் பலரிடம் பூஜியம் கூட பதிலாக வரும்.

         நம்மிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது. முப்பது ஆண்டுக்கு முன் இருந்த வாசிப்பின் எழுச்சியை இன்று காணமுடியவில்லை. இந்த தலைமுறையில் வாசிக்கும் வழக்கமும் பழக்கமும் மிக குறைவே ! இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் புத்தகத்தின் சுவாசத்தை அடைக்கச் செய்கிறது, வாசிப்பு இன்று முச்சு திணறலுடன் போராடுகிறது.சமீபத்தில் இயக்குனர் பாலா அவர்கள் இயக்கிய "பரதேசி" திரைப்படம், பி.ஹச். டானியல் எழுதிய "ரெட் டீ" , தமிழில் இரா. முருகவேள் மொழி பெயர்த்தார் -"எரியும் பனிக்காடு"; நாவல் திரைப்படமாக மாற்றுவதற்கு தனி திறன் வேண்டும், ஒரு நல்ல வாசிப்பே அதற்கு சான்று. நாம் படித்த நாவலோ , சிறுகதையோ திரையில் வெளிவருமேயானால் அந்த திரைக்கதையின் படிமங்களை முன்னரே பார்த்தது போன்று தோன்றும் , ஆம் ! ஒரு சிறுகதை அல்லது நாவலை வாசிக்கும் போது நாம் இணை ஆசிரியனாக உயர்கிறோம், திரைக்கதையை மனதில் ஓட விடுகிறோம் , அதனூடே பயணமும் செய்கிறோம் , நல்ல படைப்பை வாசிக்கையில் இந்த மகத்தான அனுபவத்தை நீங்களும் பெறலாம்.

         தமிழகத்தில் ஆண்டாண்டிற்கு பல புத்தக சந்தைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்வார்கள், இதில் அதிக விற்பனையாவது சோதிடம் சமயற்குறிப்பு புத்தகம் மட்டுமே. நம்மிடையே பல எழுத்தாளர்களின் அருமையான படைப்புகள் உள்ளன அதைத் தேடி தேடி வாசிப்போம்.  வாசிப்பால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன , நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அங்கு பங்கேற்ப்பாளராகிறோம், அதே தொலைக்காட்சியைப் பார்க்கையில் பார்வையாளராகிறோம். பங்கேற்ப்பாளருக்கும் பார்வையாளருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
   வாசிப்பின் பயன் :
  #  நம் சிந்தனை மேலோங்கும் .
  #  நம் சொல் திறன் வளரும் .
  #  நாம் எந்த தலைப்பிலும் பேச தயாராவோம்.
  #  மன அழுத்தத்தைக் குறைக்கும்  .
  #  கற்பனை வளம் அதிகரிக்கும்
  #  தனிமையை தகர்த்துவிடும் ; இப்படி இன்னும் பல..
       புத்தகம் ஒரு நண்பனைப் போல ஆழ்ந்த வாசிப்பில் அதனூடே எழுத்தாளர் நண்பனாக உரையாடுவது புலப்படும், இந்த தருணத்தை உணர வாசியுங்கள், மேன்மையடையுங்கள். புத்தக வாசிப்பின் மூலம் ஒரு மனிதன் மனதை கணிக்க முடியும் என்பதற்கான உண்மைச் சான்று 'சதாம் ஹுசைன்'.
      அமெரிக்க அரசு சதாமை கைது செய்தனர், அவரிடம் விசாரணை ஆரம்பித்தது ஆனால் அவர் பேசவே இல்லை, அவரின் அமைதியால் ஏதாவது சூட்சியுள்ளதா என்று ஐயமுற்றார்கள்;வெறுத்த அதிகாரிகள் அராப் பிரதிநிதி ஒருவரை வரவழைத்து விசாரிக்க வைத்தனர். அப்படியும் சதாம் மௌனம் காத்தார், பின்னர் அந்த பிரதிநிதி, அவரின் மனநிலை அறிய சதாமிடம் " உங்களுக்கு வேண்டுமானால் அருகே இருக்கும் நூலகத்தை பயன்படுத்துங்கள் " என்றார்.
      மறுநாள் அதிகாரிகள் நூலகத்தில் விசாரிக்கையில், சதாம் ஒரு புத்தகம் வாசித்திருக்கிறார் என தெரியவந்தது . அது 'எர்னஸ்ட் ஹெம்மிங்க்வே' எழுதிய 'தி ஓல்ட் மேன் அன்ட் சீ ' (The Old man and sea) என்ற நாவல். இந்த நாவலின் சுருக்கும் "வாழ் நாளில் எப்படியாவது திமிங்கலம் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் மீனவன் ஒருவன், முயன்று முயன்று வயதோடியது, முதிர்வும்   வந்தது. தனது வயோதிக காலத்தில் கடலுக்கு செல்கிறார் அன்று தனது வலையில் திமிங்கலம்  மாட்டிக் கொள்கிறது. கட்டுமரத்தில் இருந்தவாரே அதனோடு போராடினார் அந்த கிழவர், கட்டுமரமும் சுக்குநூறானது. கடலில் போராட்டம் நீண்டது, இறுதியில் திமிங்கலம் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியவாறு இருக்க, மறு புறம் கிழவரும் கரை ஒதுங்கினார்" என்று கதை முடியும். இந்த புத்தகத்தின் வாயிலாக தான் இறுதிவரை போராடுவேன் , வீழ்ந்தாலும் எதிரியை இறுதிவரை போராட வைப்பேன் என்று அமெரிக்க அரசிற்கு சொல்லாமல் சொன்னார் சதாம்.
        நம் பயணங்களில் அலைபேசியில் நேரம் செலவழிப்பதை விட ஒரு நல்ல படைப்பை வாசித்தால் அந்த நேரம் முழுமை பெரும், எழுத்தாளரின் மையிக்கு அர்த்தம் கிடைக்கும். வலம்புரி ஜான் சொன்னது போல "மைனராக இருந்த மானுடம்
 புத்தகங்களின் அறிமுகத்திற்கு பிறகு தான் மேஜரானது". மைனராக இருக்கும் சமூகமும் மேஜாரக மாறும் வாசிப்பின் நேசத்தை உணர்ந்தால். புத்தகங்கள் தொடர் வண்டியைப் போல இன்றைய தலைமுறைக்கும்  வரும் தலைமுறைக்கும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இலகுவாக கொடுத்து செல்லும்.
       சி.சு செல்லப்பா, சா. கந்தசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஜெயகாந்தன், சுஜாதா , நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, மௌனி , புதுமைபித்தன், கல்கி என்று பல எழுத்தளர்களின் ஈடுயிணையில்லாத முத்தான படைப்புகள் உள்ளது மேலும் அன்டான் செகோவ், தஸ்தோவெச்கி, டால்ஸ்டாய் , புஷ்கின் , ட்வைன் ,கோபோ அபே போன்ற பலரின் படைப்புகளைத் தேடி தேடி வாசியுங்கள். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரும் புத்தகக் சந்தையில் சிறந்த படைப்பை வாங்குங்கள் , வாசியுங்கள்!
வசிக்கும் பழக்கம் வளரட்டும் ;
வளரும் தலைமுறை செழிக்கட்டும் !

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு"

Tuesday, November 11, 2014

தனிமை !

கடற்கரையின் காற்று
சுதந்திரத்தின் சுவாசம்,
சிறைப்பட்ட காற்று
பலூனின் நேசம் ,
எந்த குண்டு விடுவிக்குமோ ?
அதற்கு பகலவன் துணை நிற்பானோ ?
அனாதையான பலூன்களை
காற்று வழிநடத்தும்,
ஆனால்
என்ன பயன் காற்றுக்கு சுதந்திரமில்லையே !
இருப்பினும் மெதுவாக செல்லும்,
பலூனின் காதலைக் கொல்லும்!
இறுதியில் காற்றுக்கு சுதந்திரம்
பலூன் மண்ணுக்குள் பத்திரம்
தன் காதலோடு.. !!!

பேராசையின் பிம்பங்கள் !

என் செலவவுக்கு அளவில்லை
ஆசைக்கும் மதியில்லை ,
செல்வதை அழித்தேன்; சுவைத்தேன் ,
இதில் சர்கரை நோய்யண்டினாலும்
அடைக்களம் தர காந்தியிருக்கிறார் !
மமதை பீடிக்க ,
மழையில் கரைந்த மார்கழி கோலம் போல
கனவும் கலைந்தது !!...

Sunday, October 26, 2014

பூனை பூனை தான் புலி புலி தான் !!

        வேலைத்தேடி அலையும் பல திறமைசாலிகளில் ரவியும் ஒருவன் இவனின் மூன்றாவது கை அலைபேசி, எல்லா நேரங்களில் தலை குனிந்தே நடக்கும் அடக்கமான ஆ(ண்)ன் லைன் காரன். இப்படியாக நடந்து செல்லும் போது தலை நிமிர்ந்து நடந்து வந்தான்.
 " டேய் ரவி!.." என அழைக்க 
  புன்சிரிப்புடன் தலை நிமிர்ந்த ரவி  "முருகா ...." என்றான்  .
"என்னடா ! மொபைல பாத்து சிரிச்சிகிட்டே இருக்க ??"
" 'வாட்ஸ் ஆப்' பிரெண்ட்ஸ் முருகா..  ! நீ என்ன ஏரியா பக்கம் ஆளே காணோம்"
" ஒரு இலக்கிய திருவிழா கோயம்புத்தூர் ல நடத்து அதுக்கு போய் இருந்தேன் டா "
" கலக்குற முருகா, புது பத்திரிக்க வேல எப்படி போகுது ?, அப்பறம் உன் நம்பர் மிஸ் ஆயிடுச்சு குடு டா , உன்னையும் நம்ப ஏரியா வாட்ஸ் ஆப் குரூப் ல ஆட் பண்ணிடுறேன்"
 " நல்லா போது ரவி! நான் 1100 மொபைல் வெச்சி இருக்கேன் அதுல அந்த எதுவும் இல்ல!!  (சிரிப்புடன்)"
 "அட பாவி ஆதாம் ஏவாள் மொபைல் டா அது !!!  செரி மிஸ்டு கால் கொடு நான் நம்பர் சேவ் பண்ணிடறேன்"
 "(சிரித்துகொண்டே) மொபைல் எடுத்துட்டு வரல , ரெண்டு நாள் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் டா, சொல்றேன் நம்பர் நோட் பணிக்கோ 9*********6"
 "அட கடவுளே முருகா இந்த லூசு முருகன எப்படியாவது காப்பாத்து, டேய் 1100 வெச்சி இருக்கறதே மகா குற்றம் அதையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்ட ! ஏண்டா ?" என்று ரவி கேட்க.
" ரெண்டு நாள் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஒரு நாள் மொபைல் இல்லாம இருந்து பார் ! நீ அவ்வளோ மகிழ்ச்சிய இருப்ப ! யாருக்கும் பதில் சொல்ல வேணாம் , நட வண்டியில்லாம ஒரு குழந்தை சுதந்தரமா நடக்கும் போது வர மகிழ்ச்சிய நீ அனுபவிக்கலாம் !!! நான் கிளம்புறேன் ரவி , பாக்கலாம் ! பாய் !!!"
"பாக்கலாம் முருகா ! பாய் "
  ரவி , முருகனுடைய சித்தாந்தத்தில் மூழ்கி தானும் ஒரு நாள் அலைபேசி இல்லாமல் வாழ்ந்து பார்கலாம் என்ற முடிவை எடுத்தான், மறுநாள் தன் அலைபேசியை அணைத்தான். ஒரு மணி நேரம் கூட கடக்க வில்லை அவன் மனதில் யார் "வாட்ஸ் ஆப் பில்" செய்த அனுப்பிருப்பார்களோ ? என்ற ஆர்வமும் பதட்டமும் அதிகரித்து கொண்டே இருந்தது, இருபினும் விடா பிடியோடு இருந்தான் ரவி. முருகன் சொன்னது போல் ரவி க்கு ஒரு வித சுதந்திரம் கிடைத்தது, அவன் கடைத்தெருவிற்கு நடக்கும் போது இவளோ நாள் இருந்த மரத்த யார் வெட்டி இருப்பா ? இவளோ அழகான குட்டி நாய் இங்க எப்படி வந்தது ? என பல கேள்விகளுடன் நடக்க ஆரம்பித்தான், அடுத்த நாளில் இருந்து அலைபேசி அணைக்காமலே இதையெல்லாம் ரசிக்க வேண்டும் என்ற சிந்தையும் தட்டியது. இந்த நாள் அவனுக்கு அற்புதமான ஞானம் பொங்கிய நாளானது !!
     " செரி , மொபைல சுவிட்ச் ஆன் பண்ணுவோம் " என்று ரவியின் மனக்குரல் சொன்னது.
    பெரிய விதத்தில் அவனுக்கு குறு செய்தியோ அல்லது மற்ற செய்திகளோ வந்தாற்போல இல்லை.
  மறு நாள் காலை யாருக்கோ ரவி அலைபேசியில் அழைத்தான்.
" சார்! நான் ராம் தம்பி ரவி பேசுறேன் !! இன்டர்வ்யு கால் வரும்னு சொன்னீங்க வரவே இல்லையே "
" நேத்து பூர உனக்கு கம்பனில இருந்து கால் பண்ணி வேறுத்துட்டாங்க ! இன்னொரு ஆள எடுத்துட்டாங்க !! போன வை பா .."
  " தெரியாம சுவிட்ச் ஆப் பண்ணிட்டேனோ" என்ற மைண்ட் வாய்ஸ் எதிரொலித்தது.
        ரவி மட்டும் அல்ல எல்லோரும் எதையாவது பார்த்து உடனே சூடு போட்டுக்கொள்கிறோம், நமக்கு இது ஏற்புடையதா என சிந்திக்க தவறுகிறோம். சூடு போட்ட தழும்பு அவமானங்களாக , ஏமாற்றங்களாக , தோல்வியாக இருக்கிறது.
 
தன்னிலையை உணருவோம் !!
பூனை பூனை தான் புலி புலி தான் !!
     

Sunday, October 5, 2014

முதிர்வின் உணர்வு


 கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

முதிர்வின் உணர்வு - சிறுகதை


மேலும் இந்த சிறுகதை சிறுகதைகள் என்ற வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது, உங்களுக்கு பிடித்திருந்தால் பகிருங்கள்.
http://www.sirukathaigal.com/குடும்பம்/முதிர்வின்-உணர்வு/#more-21512

பாசத்திற்கு பின் தியாகம் என்ற சொல் மறைந்திருக்கும் .

       இந்த பூவுலகில் பாசம் என்ற உணர்வு திகழ்வதால் தானோ இயற்கை ஓரளவிற்கு சீராக இயங்கிக்கொண்டிருகிறது, மனிதர்களிடம் பாசம் சாயம் நீர்த்து பல காலம் ஆகிறது. காந்தியின் சிரிப்பை வைத்து தான் பாசம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இக்ககட்டதில் நான் சில குடும்பங்களை கண்டிருக்கிறேன், பாசத்தின் அர்த்தத்தை விழியன் வழி அனுபவித்தேன்.
ஆனால் இந்த பாசம் பின்னே எவ்வளவு தியாகம் ஒளிந்திருக்கிறது. உண்மையான பாசத்தை காட்டுபவர்கள் தியாகத்தை மறைப்பர், இந்த மாண்பு தான் அவர்களை மான் என்று சொல்ல வைக்கும் .

     அருள் ஜோதி , என நெருங்கிய நண்பன். MSW படித்துவிட்டு TI நிறுவனத்தில் மனிதவள துறையில் பதவியில் முற்பட்டவர் ஆகா (சீனியர் - HR) உள்ளான். இவனுக்கு 4 அண்ணன்கள் உள்ளார்கள், இவன் தான் கடை குட்டி. எல்லோருக்கும் அருள் என்றால் அவ்வளவு பாசம். அருள் MSW படிக்கும் போது அண்ணன்கள் சிறிய வேலையில் தான் இருந்தார்கள், அவர்களுக்கு சிரமம் கொடுக்க கூடாதென்பதற்காக வங்கியில் படிப்பதற்கான கடன் வாங்கி படித்து முடித்தான், வேலைக்கு சேர்ந்ததும் சிறுக சிறுக சேர்த்து கட்டி முடித்தான். இந்த காலத்தில் ஏமாற்றும் மக்களிடையே நேர்மையான மனிதர்கள் பௌர்ணமி போல உடனுக்குடன் தெரிய மாட்டார்கள். எல்லோருக்கும் 5 நாள் வேலையிருக்கும் ஆனால் அருளுக்கு 6 நாட்கள் வேலை இன்னும் பல நாட்கள் ஞாயிறு கூட செல்வான் , பார்க்கவே பாவமாக இருக்கும்.
" ஏண்டா நீ வேல மாற வேண்டியது தானே ?" என்று ஒரு முறை கேட்டேன்.
அதற்கு அவன் " இல்லைட வீட்டுக்காக புதுசா லோன் எடுத்திருக்கேன் அது கம்பெனி மூல்யமா ப்ராசெஸ் ஆயிருக்க , வேலைவிட்ட மொத்த காசையும் கேப்பானுங்க, முடியற வரைக்கும் போயிதான் ஆகனும்"
 நான் அதன் பின் எந்த வார்த்தையும் சொல்லவில்லை, அவனிடம் இருந்த கற்று கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அருளின் அண்ணன் BL செய்தால் நல்லது என்று கூறி அவனை மைசூர் பல்கலைகழகத்தில் சேர்த்தார் , இது தொலைதூர கல்வி போல, எந்த வித ஆட்சேபனை தெரிவிக்காமல் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டு முடிக்க போகிறான் அருள். இதில் வியப்பு என்னவென்றால் , எல்லா விடுப்பையும் சேர்த்து BL தேர்வு எழுதுவான்.
   இந்த மாதிரியான பாசம் நமக்கெல்லாம் முன் மாதிரி தானே !!

          சந்தீப், என பள்ளி நண்பன். திருமணம் முடிந்து 2 ஆண்டுகளக்கு மேல் ஆகிறது , இவன் காதலிக்கும் போது இவன் மனைவியை எப்படி காதலித்தானோ அதை விட பல மடங்கு அதிக பாசம் , காதலுடன் திகழ்கிறான். நாங்கள் நட்பு வட்டாரத்தில் அவன் கல்யாண வேளையில் "இன்னும் 30 நாள் தான் மச்சி , இன்னும் இரண்டு வருஷம் கழிச்சி இவளோ பாசமா இருக்கின்னு பாப்போம் " என்று கூறினோம்.
அவன் காதல் எங்கள் கன்னத்தை சுளீரென அடிக்கிறது இன்று. இது மிக தூய்மையான காதல் என்று நான் கருதுவேன், காதலிக்கும் போது ஒன்றே நின்று பெற்றோர் நிச்சயித்த திருமணம் ஆகா மாற்றினார்கள்.
சந்தீப் என்னிடம் உரையாடும் போதெல்லாம் அவன் காதலின் நறுமணம் வருடாவருடம் வாசனை அதிகமாகும் என்று என் மனம் சொன்னது, இது எல்லை அற்ற பாசம் அமிபாவைப் போல, பல நேரங்களில் அவன்  முக நூலில் தங்களது புகைபடங்களை பகிர்ந்து அதிகமாக செய்வது போல தோன்றும் பலருக்கு ஆனால் அது உண்மையான காதலின் பாசத்தின் வெளிப்பாடு, தன் மனைவிக்காக ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்களை பார்ப்பதை தியாகம் செய்தான் இன்று வரையில்.
      சந்தீபிற்கு மேல் 2 அண்ணன்கள் , ஜோதியை போன்று இவனும் கடை குட்டி; இவர்களை ஆனந்தம் பிரதேர்ஸ் என்று தான் சொல்ல வேண்டும். இத்தகைய பாசம் இந்த உடனடி பீட்சா உலகத்தின் பழைய மல்லி பூ இட்லி ஏதொரு மூலையில்.

       இத்தகைய பாசம் நாம் நம் நட்பு சூழலில் நிச்சியம் இருக்கும் , இந்த சிறுபகிர்வை வாசித்து உங்கள் நினைவுகளை தூண்டினால் அதுவே அலாதியான மகிழ்ச்சி எனக்கு.     

சலவைக்கு போட்ட மனசு.


     பெரும்பாலும் மக்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் ஆனால் சிலர் மட்டும் எதற்கும் கவலைப்படாமல் தனக்கு என்ன வாய்த்ததோ அது போதும் என்று நகர்வார்கள். அவர்களுக்கு நல்லது கெட்டது  தெரியாமல் இருக்கும் மனசு, யாராவது அவர்களை கிண்டல் செய்தாலோ , ஏமாற்றினாளோ அவர்களின் வருத்தம் அறவே இருக்காது.
இதைபோல் நம் பயணத்தில் பலரை சந்தித்திருப்போம்.

    பிரவீன் , என் பள்ளி நண்பன். யாரையும் தவறாக எண்ணாத மனது. எல்லோரும் இவன் மீது உரிமை கொண்டாடி கேலி செய்வார்கள், இதை அவன் "நம்ப நண்பன் தானடா அவன் " என்று மெய்சிலிர்க்கும் பதிலை கொடுப்பான். இந்த மனது யாருக்கு வாய்க்கும். பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் போது பள்ளியில் அறிவியல் கண் காட்சியொன்று நடந்தது, அதற்கு தோரணை மற்றும் பல அலங்கார பொருள் வாங்க வேண்டும் என்று என்னிடம் ஜமீல் சார்(கணினி வாத்தியார்) கூறினார் இதை கேட்ட பிரவீன் எங்களின் தோழி மேனகா ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு என்னை தேடினான், அப்போது நான் வேறு ஒரு அலுவல் வேலையாக பள்ளியிலேயே இருந்தேன் , நான் பான்சி ஸ்டோர் சென்றேன் என்று நினைத்து  என்னை தேடி மேனகாவின் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு கண்காணிப்பாளரிடம் செய்தி கூறி வெளியே சென்றான். சைக்கிள் கூட அவனுக்கு செரியாக ஓட்ட தெரியாது, முதல் முதலில் மோட்டார் சைக்கிள் அனுபவம் ஒரே குஷி தான் அவனுக்கு. ஸ்கூட்டியின் கியர் எங்கே என்று ஓட்டிக்கொண்டே தேடினான், அக்செலரேட்டர் மிகவும் அதிகமாக திருப்பி விட்டான், பின் பிரேக் தான் பிடிக்கும் என்று சொல்லி கொடுத்திருக்கிறாள் மேனகா ஆனால் நம் அறிவாளி பிரவீன் முன் பிரேக்கை பிடித்திருக்கிறான். அன்று பார்த்து அந்த இடத்தில தார் ரோடு போட கோபுரம் போல் கருங்கற்களை கொட்டி இருந்தனர், அதில் முட்டி வண்டியை நிறுத்திடலாம் என்று நினைத்து விட்டான் வண்டியை இதை பார்த்த மக்கள் யாவரும் சர்கஸ் பார்த்த திருப்தி, டெரிமினேட்டர்-2 வில் கடைசி காட்சியில் அர்னோல்ட் முகம் போல் பள்ளிக்கு திரும்பி வந்தான். கை , முகம் ஒரே ரத்தக்களறி. இதில் பெரும் வேடிக்கை வண்டியை வரும் போது ஒட்டி வந்தான். எல்லாரும் பதைத்தனர், மேனகாவின் அழுகை மட்டும் அடங்கவில்லை, பிரவீன் அவளிடம் சென்று " எனக்கு உண்டான காயம் தன்னால ஆறிடும்.." என்று கூற
"டேய் , பண்ணி .. என் பைக் போச்சு டா " இந்த வரிகள் மேனகா கூறுகையில் இன்று கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.
     வெள்ளந்தி மனிதருள் பிரவீனும் ஒருவன் , எல்லவற்றையும் சுலபமாக நினைக்கும் மனசு சலவைக்கு போட்ட மனசு தான், பிரவீன் இன்று பெரிய தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரிகிறான். சமீபத்தில் திருமணனும் முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளன்.

       கபிலன், இவர் என் பழைய அலுவலக தோழர் என் உடன் பிறவா சகோதரர். நான் சந்தித்த மிக சிறந்த மனிதர், இவரும் சலவை மனசுக்காரர். உள்ளே ஒன்று வைத்து வெளியே பேசும் மனிதர்கள் தான் அதிகம் , என்றுமே ஒரே பேச்சு இவரிடம். கபிலன் எனக்கு அறிமுகம் செய்த புத்தகம் ஏராளம், குழந்தையின் நுனி விரல் பிடித்து நடை பழகுவது போல என்னை இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தார், இவரின் ஊக்குவிப்பால் தான் என் முதல் கட்டுரை வெளியே வந்தது, மனம் திறந்து பாராட்ட கூடிய மனிதர் கபிலன்.
      அவர் குழந்தையின் பிறந்த நாள் வந்தது, தனது நெருங்கிய நண்பரிடம் DSLR கேமரா வாங்கினார், பிறந்த நாள் முழுவதும் படம் பிடித்தார் மறு நாள் கேமராவை கொடுக்க வேண்டும், மாறாக கேமரா கிழே விழுந்து நொறுங்கியது அவர் ஸ்தம்பித்து போனார். என்னிடம் தான் முதலில் சொன்னார், " என் நண்பருடைய நம்பிக்கைய உடச்சிட்டேன் பவித்ரன் " என்று கூறி அழ ஆரம்பித்தார், அவரால் அதற்கான பணத்தையோ அல்ல புதிதாக வாங்கி தந்திருக்க முடியும் ஆனால் அவரின் உணர்வு எவ்வளவு உணமையானது என அன்று உணர்ந்தேன்.

     இதை போன்ற சலவை மனசுக்கரர்கள் உங்கள் வட்டாரத்தில் இருப்பார்கள், இவர்களை பார்த்தல் நன்றாக பாராட்டுங்கள் இவர்களெல்லாம் மிகவும் அரிது.      

வெற்றிக்கு விடா முயற்சியெனும் கடவுச் சொல் உள்ளது !

      வெற்றியும் தோல்வியும் வானிலை போல மாறிக்கொண்டே இருக்கும், நம்மில் பலர் ஒரு சில முயற்சிகளில் ஈடுபட்டு தோற்றதும் வெறுத்து துவண்டு இருப்போம் அதன் தாக்கம் வடிய சில நாட்கள் ஆகும் இன்னும் சிலர் அடுத்தென்ன என்ற நிலையில் வெற்றியை நோக்கி அம்பை தயார் செய்வர். விடா முயற்சியுடன் நாம் பயணித்தால் ஒரு போர் வீரனின் பாங்கு நம்மிடையே வளரும்.
என் சிறிய பயணத்தில் சில போர் வீரர்களை சந்தித்திருக்கிறேன்.
 
  என் பள்ளி நண்பன் கிருஷ்ண மூர்த்தி , கிச்சு என்று அழைக்கும் எங்கள் நட்பு வட்டாரம். ஒவ்வொரு முறை கிச்சுவை பார்க்கும் போது உறுமெய்ம்மை ஏற்படும், அவன் யாரிடம் பேசினாலும் தேவை அறிந்த பேசும் பாங்கு மேலும் சொல் ஆற்றல் வாய்ந்து தூவும் சாரல் போல் ரம்யமாக இருக்கும். இதெல்லாம் ஒரே நாளில் வருவதன்று அனுபவத்தால் மட்டுமே ஈட்ட முடியும்.
   கிச்சு, பதினோராம் வகுப்பு சேர்கையில் கணினி பிரிவு எடுத்தான் பின்னர் குடும்பத்தாரின் விருப்பத்தின் அடிப்படையில் உயிரியல்  பிரிவு தேர்வு செய்தான், அவனின் சித்தப்பா மருத்துவர் ஆதலால் இவனையும் மருத்துவ படிப்பிற்கு முயற்சிக்கலாம் என்ற முனைப்பு. அவர்கள் தவறான தேர்வு நிகழ்தினார்களோ என்ற ஐய்யம் எனக்கு இருந்தது அவன் கணிதத்தில் மிகவும் திறமைசாலி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 180 மதிப்பெண் எடுத்தான் இதுவும் ஒரு சான்று, இன்று வரை அவனிடம் இதை பற்றி சொன்னதில்லை. படிக்க வேண்டும் என்ற முனைப்போடு கலை நிகழ்ச்சிகள் என பன்னிரெண்டாம் வகுப்பின் போது எதிலிலும் ஈடுபடவில்லை. ராஜ் பரத் , லக்ஷ்மி நாராயணன் மற்றும் கிச்சு இவர்கள் சேர்ந்தால் பயங்கர ரகளையாக இருக்கும். பள்ளி நாட்களில், நான் கிச்சுவிடம் அந்தளவு நெருக்கமாக பழகியதில்லை இருந்தாலும் அவனை மிகவும் கவனித்துள்ளேன். பன்னிரெண்டாம் தேர்வு நடந்து முடிந்தது பல ஏமாற்றங்கள் காத்துக்கொண்டிருந்தது. மிகவும் குறைவான மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றான், மருத்துவர் எனும் கனவு கடற்கரை மணல் கோபுரமாய் சரிந்தது. அவனது நண்பர்கள் இவனை விட அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றார்கள். கிச்சு சற்று கூட மனம் தளரவில்லை, மறு ஆண்டு மீள் தேர்வு எழுத முயற்சித்தான், மிகவும் தைரியமான முடிவு.
    கிச்சு, மீள் தேர்விற்காக முயற்சிக்கும் போது தனது சகாக்கள் கல்லூரிக்கு பிரவேசித்தனர். அப்போது அவனுடைய மன நிலை எப்படி இருந்திருக்கும் தவறான முடிவா இது ? என்ற கலக்கம் அதிகம் படறி இருக்கும். வினோத் என்ற நண்பன் இருந்தான். கரடிவிடம் தனது நண்பன் ராமுவை  மாட்ட செய்து தப்பிப்பான் சோமு இந்த  கதை நமக்கு தெரியும், இதில் வரும் சோமுவின் முக்கால் வாசி கதாபத்திரம் தான் வினோத். கிச்சுவை ப்ளே ஸ்டேஷனிற்கு அழைத்து சென்று அந்த விளையாட்டிற்கு அடிமை செய்தான். தேர்வு நெருங்கியது, தேர்வும் எழுதினான் கிச்சு.
    சோதனையின் வலை கிச்சுவிற்கு தானோ? வருடம் 2005 , மீள் தேர்வில் முந்தைய தேர்வின் மதிப்பெண்ணை விட குறைவு. இடிமேல் இடி, ஆனால் அவன் துவளவில்லை, மீள் திருத்தத்திற்கு முறையிட்டான். அன்றைய அதிமுக அரசு மீள் தேர்வை ரத்து செய்து , பழைய தேர்வு தான் கணக்கில் எடுக்கப்படும் என்ற ஆணை பிறப்பித்தது. சோதனை வலையை சாதனையாக மற்ற ஒரு சந்தர்ப்பம், கோடியில் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த வைப்பு கிட்டும், மீள் தேர்வின் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து பழைய சான்றிதழை வாங்கினான் , RMK கல்லூரியில் 2005 ஆம் ஆண்டே சேர்ந்தான்.
   இது வெறும் அதிர்ஷ்டமோ தற்செயலோ அல்ல, ஒருவனின் விடா முயற்சிக்கு கிடைத்த கூலி. இத்துடன் இவன் சோதனையின் தொடர்ச்சி பாகம்-2 ஆகா தொடர்ந்தது. ஸ்கை குவெஸ்ட் என்ற MLM இல் சேர்ந்து நட்பு வட்டாரத்தையும் சேர வற்புறுத்தினான் அதில் நானும் ஒருவன் ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை , நட்பு முறியும் பணத்தினால் என்ற யோசனை எழுந்தது. அதே போல பல நண்பர்களையும் இழந்தான் கிச்சு. ஸ்கை குவெஸ்ட் இல் நன்றாக வளர்ந்தான் மேல நாட்டுக்கும் சென்று வந்தான். இன்னும் காலம் கழிந்தது இவனுடன் இரண்டு பேர் சேர்ந்து ஒரு MLM வியாபாரம் ஆரம்பித்தனர், ஓராண்டு சுமாராக போனது , இதிலும் இவனது சகாக்கள் இவன் பணத்தை ஏமாற்றினார். இத்துணை சம்பவங்கள் ஒரு மனிதனை உரு கொலையா வைக்காதா ? என்ற கேள்வி என்னுள் இருந்தது. விடா முயற்சி எனும் கடைச் சொல்லை படுத்தி , கடினமான உழைப்பினால் இன்று ஒரு பெரிய மென் பொருள் நிறுவனத்தில் TL ஆகா உள்ளான்.
    நான் ரசித்த பலருள் ஒருவன் கிச்சு, நீங்கள் இந்த பதிவை வாசித்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றியின் கடவு சொல் தெரிந்திருக்கும் .        

லாபமா ?


  கபிலன் : தமிழ் நாட்ல இட்ஸ் மெடிக்கல் மிரகல் சார் ..

 கிச்சா :   சார் , யாருங்க போழசிகிட்டா ?

 கபிலன் : க்ளிசரின் கம்பெனி, செம்ம லாஸ் ல இருந்தாங்க கடந்த 2 வாரமா அமோக லாபம் ....

கிச்சா :நம்ப ஆரம்பிக்கலாமா சார் ??

கபிலன் : ????????????

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 3

கவலை ஒரு ரசம் போன கண்ணாடி

  கவலையை தொலைத்து நிம்மதியை தேடும் ஏரளமானோர் உள்ளார்கள், என்னவோ கவலை இவர்களை துரத்தி துரத்தி காதலிக்கும். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் சிலரிடம் சிரிப்பு மட்டுமே தெரியும், ஒரு வண்ண ஓவியத்தின் பின் புறம் போல. சில நேரங்களில் நான் சிந்தித்ததுண்டு இந்த மனிதர்கள் மனதின் மிக சிறந்த மருத்துவர்கள், இவர்கள் பல நேரங்களில் மற்றவர்களுக்கு சிகிச்சை செய்து குண படுத்துவார்கள். இதை போல்  பல மருத்துவர்களை நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்து இருப்பீர்கள் அதை நினைவு கூற  இந்த பதிவு ஒரு தூது வல்லரையாக செயல்படும்.
      தமிழ் மணி , மிக சிறந்த கபடி வீரன், பாடி பில்டர், பல குரல் கலைஞன் என்று வெவ்வேறு முகங்கள் உண்டு. எல்லோருக்கும் பிடித்த நண்பன் கல்லூரியில். அவனுக்கு பல கவலைகள் இருக்கிறது ஆனால் இதுவரை ஒரு முறை கூட அதை விளம்பரம் செய்ததேயில்லை. எல்லாரையும் மகிழ்வித்து தானும் மிகிழ்ந்தவண்ணம் இருப்பவன்  தமிழ் மணி, அவனுக்கு கபடி மூலம் வேலை கிடைக்காமல் போனது இதை பற்றி அவன் எந்த சலனமும் இல்லாமல் அடுத்த வேலை தேடினான். காதல் மணி மணிக்கு சரியாக அடித்ததில்லை கல்லூரி நாட்களில். அம்பதூர் ரவி, சதீஷ் , சிரில், மோகன் மற்றும் நான் விவேக்ஸ் ஷோ ரூமில் எங்களது இளங்கலை இறுதியாண்டு ப்ராஜெக்ட் அங்கே செய்ய நேர்ந்தது, அந்த காலகட்டத்தில் தமிழ் மணிக்கு ராங் கால் ஒன்று வந்தது, அது ஒரு பெண். SMS - குறுஞ்செய்து  இலவசம் மற்றும் கட்டணமும் மளிவு , ராங் கால் ரைட் கால் ஆகா மாறியது, இடை விடாமல் SMS உம் பேச்சுமாக இருக்கும் இதையெல்லாம் அவதானித்து இருந்தேன். ஒரு நாள் இருவரும் சந்திக்க முடிவெடுத்தனர், மெரினா பீச் கண்ணகி சிலை. அவள் பச்சை நிற ஆடையிலும் மணி கருப்பு நிற ஆடை என்று முடிவேடுத்திருந்தார்கள் காலம் கனிந்தது. தமிழ் மணி உசார் மணி, முதலில் அவன் அவளை பார்க்க வேண்டும் என்று தன் ஆடை நிறத்தை மாற்றி சிவப்பு நிறத்தில் முதலில் சென்று கண்ணகி சிலை அருகே நின்றான். பச்சை நிற சுடிதார் அணித்து கையில் அலைபேசி அழைப்புக்காக எதிர் பார்த்த சற்றே உடல் பருமனுடன் , வியர்வையில் பவுடர் திட்டு திட்டக மாநிற முகத்தில் இருந்தபடி பஸில் இருந்து இறங்கினாள். தமிழ் மணி அலைபேசி அடித்தது அவன் கனவு கோட்டை இடிந்தது, ஓட்டம் எடுத்தும் நம் உசேன் போல்ட். அந்த பெண்ணிடம் என்னால் இன்று வரயியலவில்லை என்று கிளம்பியவுடன் சொன்னான். " எனக்கு தெரியும் , அந்த சிவப்பு சட்ட நீங்க தானே ? " என பதில் வந்ததும் பீப் தான்.
   தமிழ் மணி கூடே இருந்தால் நேரம் எங்கே போகும் என்று தெரியாது, என் வகுப்பில் ஒரு முக்கிய புள்ளி, எல்லாரையும் மகிழ வைப்பான். சமீபத்தில் தான் திருமணம் நடந்தது, TCS கம்பனில் நல்ல மதிப்புடன் மிமிகிரி மணியாக சுகமாக இருக்கிறான்.

      ராஜேஷ், கல்லூரியில் அனைவருக்கும் மிக முக்கிய நண்பன். பரங்கிமலையின் ஜோதி மட்டும் இல்ல இவன் ஒரு சுடர் என்று கூட சொல்லலாம். ஆழ்ந்த கவலைகளை உள்ளே வைத்து முகத்தில் சிரிப்போடு இருப்பான். எங்கள் வகுப்பின் சந்தானம் , டைமிங் காமெடியில் இவனை அடிக்கவே முடியாது. ராஜேஷ் ஒரு இடத்தில இருந்தால் அங்கு எல்லோருமே சிரித்துகொண்டு  தான் இருக்க வேண்டும். சிறந்த கால் பந்து வீரன், பல தோல்விகள் சுமந்தாலும் அதை யாரிடமும் பகிர்ந்ததில்லை.
     வகுப்பில் மிகவும் சுமாராக தான் படிப்பான், தன் கடின உழைப்பின் பயனால் இன்று ஸ்கோப் நிறுவனத்தில் TL ஆகா இருக்கிறான். வேலையை கவலையுடன் சேர்க்க மாட்டன் , கவலையை வேலையுடன் சேர்க்க மாட்டன். இவனைப் பார்த்தல் நமக்கு ஒரு உத்வேகம் வரும், முன்னேற்றம் என்றால் வெற்றியும் தோல்வியும் பிரித்து பார்ப்பது அது ராஜேஷிடம் அதிகம்.  என் முதல் நாள் கல்லூரி எனது குரல் காற்றில் கரைந்து சென்றது ராஜேஷிடமும் தமிழ் மணியிடம் அதை எப்போதும் அசைபோடும் பழக்கம் எனக்கு.
    ஓராண்டுக்கு முன்னர் ராஜேஷுக்கு திருமணம் நடந்தது , நான் அருகில் இருந்தேன் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , நெகிழ்ச்சியாகவும் இருந்தது.

   அடுத்து என் நினைவில் வருவது மகேஷ், நான் முன்னர் சொன்ன வாறு இத்தகைய குணாதிசியம் கொண்ட நபர்கள் எல்லோரையும் வெகு சீக்கிரமாக நட்பின் வலையில் ஒரு சிறிய மீனைப் போல் சிக்க வைப்பார்கள். உதையா அவனுடைய நெருங்கிய நண்பன் இருவரும் இரட்டையர்கள் போல சுற்றி திரிவார்கள். எனக்கு மகேஷின் மேல் நல்ல அபிமானம் உண்டு, இரண்டாம் ஆண்டு இறுதியில் தான் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பிரெச்சனை இருந்தாலும் ஒரு சலனமே இல்லாமல் தனக்குள்ளே பேசி தீர்ப்பான்.
    இளங்கலை படிப்பு முடிந்தவுடன், மேல் படிப்புக்கு ஐயர்லாந்து சென்றான், இனிதே படிப்பை தொடங்கி நன்றே தேர்வுகளை எதிர் கொண்டான். நேரம் அவன் மேல் கருப்பு சாயத்தை பூச ஆசைப்பட்டது , சில குடும்ப சூழலால் படிப்பை தொடரமுடியாமல் இந்தியா திரும்பினான். இந்த சம்பவம் வேற யாராவது வாழ்வில் நடந்திருந்தால் அவர்கள் ஸ்தம்பித்து இருப்பார்கள், ஆனால் மகேஷ் "விடு மாமா, அடுத்தத பாப்போம் " என்று தைரியத்தின் சொல் நம்பிக்கையின் நாவின் இருந்தது வந்தது. மகேஷும்  கவலையை  ஒரு ரசம் போன கண்ணாடியாக பார்த்தான்.

  இந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் அருகாமையிலும் இருப்பார்கள் சற்றே உணர்ந்து பார்த்தால் தெரிவார்கள் நம் முன்னே மகிழ்ச்சியோடு..

  தொடரும் ....

செப் - 5

"வழியெங்கும் உயிருள்ள பதாகைகள் போல
ழகரம் முதல் சிகரம் வரை
வழிகாட்டியச் சுடரகளுக்கு
பின்னே தான் தெய்வங்கள்"

இதை படித்து , உங்கள் ஆசிரியர்கள் மனதில் வந்திருந்தால் அதுவே எனக்கு பெரிய லைக்.

காட்சி 1:
மாநில கல்லூரி (Presidency College) கணினி முதுகலை முதலாண்டு செய்முறைத் தேர்வு C ++, வெளியிருந்து ஒரு பேராசிரயர் வருவார் (External) , அவர் லயோல கல்லூரி HOD கிளெமென்ட் கிங், தேர்வு தொடங்கியது, சொற்கள் தேடிகொண்டிருக்கும் கவியைப் போல பேனா என் தாடையை தட்டிக்கொண்டு இருந்தேன். 20078104 என்று அழைத்தார் கிங் , அந்த ரோல் நம்பர் நான் தான், நானும் சென்றேன் எனக்கு வந்ததோ கடினமான ப்ரோக்ராம் கையில் பிட் கூட இல்லை அது சுலபமாக இருந்தாலும் பிட் எழுதலையே என்று யோசித்திருப்பேன்.
சரமாரியாக கேள்வி கேக்க ஆரம்பித்தார் கிங், அப்போது நக்கலான சிரிப்பு சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது அது என் நண்பர்கள் இல்லை , என் ஆசிரியர்கள் கிளாடிஸ் (Gladice) மேடம் , தமிழ் கொடி மேடம் , வெண்ணிலா மேடம் மற்றும் ரமா மேடம்.

Q.1 Difference between Liked list and Doubly Linked list ?
சிரிப்பு தொடர்ந்தது - Donno sir.
Q.2 What are Abstract Classes?
Donno sir
Q.3 huffff - ok , atleast answer this, give names of OOPS concept?
Donno sir, am sportsman i haven't attended classes சிரிப்பு தொடர்ந்தது

என் ரெகார்டை தூக்கி வெளியே எறிந்தார் கிங், " நீ லாயக்கே இல்ல கணினி படிக்க , HOD கிட்ட போய் சார் நான் இங்க படிக்க லாயக்கில ன்னு நான் சொல்றேன் ன்னு சொல்லு " என்றார்.
எங்கிருந்து எனக்கு கோவம் வந்தது என்று தெரியவில்லை , கிழே சிதறிய ஏடுகளை எடுத்துக்கொண்டு என் பையை எடுத்து TC வாங்க கிளம்பினேன், இதை கண்ட ரமா மேடம் தன் வாயில் தான் அடித்து கொள்ளவில்லை " ஓடியாங்க மேடம் ஓடியாங்க , இவன் TC வாங்க போறனா " அங்கு ஒரு பெரிய சண்டையே நடந்தேறியது, " நீ எல்லாம் என்ன கதி ஆகபோற பாரு, இனிமே கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் க்கு வந்த கால வெட்டிடுவேன்" என்று சொன்னார் ரமா மேடம். "நீ ரொம்ப கஷ்ட படபோற, உனக்கெல்லாம் கால் சென்டர் தான்" என்றார் தமிழ் கொடி மேடம். "நீ IT ல வேல செஞ்சா அது மெடிக்கல் மிராக்கள்" என்றார் வெண்ணிலா மேடம், இந்த மக்கு மூஞ்சி 13 அரியர்களோடு உறவாடினேன் அதில் HTML practicals கூட . இதை இப்போ நினைக்கும் போது இவர்களுக்கு எப்படி ஜோசியம் தெரியும் என்ற கேள்வி வந்தது.

இந்த காட்சியில் வாத்தியார் ? அனுபவம் தான் ; இதை வழங்கிய என் மாநில கல்லூரி கணினி துறை ஆசிரியர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

காட்சி 2-
ஆண்டு 2009, HSBC டெலி காலர் நேர்காணல் லயோல கல்லூரியில். நான் சென்றேன்.ஒவ்வொரு முறை நான் என் கல்லூரி உள்ளே செல்லும் போது காதலர் தினம் குனால் போல கிழே விழுந்து என் கன்னத்தில் கல்லூரி மண் முத்தமிட வேண்டும் என்று நினைப்பேன்.
அடர்ந்த ஜீவனிருக்கும் மர நிழல்களை அவதானித்து கொண்டிருந்தேன், நேர்காணலை மறந்து 2004 முதல் 2007 ர்க்கு சென்றேன்.
" டேய் , எப்படி இருக்க" என்று ஒரு ஜீவன் ஓடி வந்தது , யாரது ன்னு கிழவனைப் போல் என் இடது கை கண்கள் மேல், அவர் தான் பெலிக்ஸ் சார் , என் கணித ஆசான். அவர் அப்படியே சென்றிருக்கலாம், எனக்கு கை கொடுத்தார் அந்த உள்ளங்கை சூட்டை நான் அறிவேன். "எப்படி இருக்க , கிரிகெட் விளையாடுறிய " என்றார். " ஏதோ இருக்கேன் சார் " என்றேன். அவர் என்ன புரிந்து கொண்டார் என தெரியவில்லை " டேய் நீ நல்ல வருவ போ டா" என்று அவர் தொனியில் சொன்னார். அந்த 2 நிமிடங்களை 200 நாட்களுக்கும் மேல் சிந்தித்து கண்கள் கசிந்திருப்பேன்.

இந்த காட்சியில் வாத்தி பெலிக்ஸ் சார் தான், ரொம்ப தேங்க்ஸ் சார் .

காட்சி 3 -
பள்ளி நாட்கள் - தர்ஷியஸ் எங்கள் பள்ளி முதல்வர், படிப்பை விட வேறொரு உலகத்தை காட்டிய கொலம்பஸ். "இவன் எல்லாம் எங்க.." என்று சொன்னார்கள், ஆனால் அவர் மட்டும் என் மீது நம்பிக்கை வைத்தார், சுதந்திரமாக மேடை நிகழ்ச்சிகளை நடத்த சொன்னார். சொல்லாமல் கடமை என்றால் என்ன என்று கற்றுக்கொடுத்தார்.
+1 முதல் நாள், வெறும் 10 மாணவர்கள் மட்டும் வந்தனர் அதில் நானும் ஒருவன். அசசெம்ப்லி முடிந்து எங்களை மட்டும் அங்கே நிற்கவைத்து எந்த குரூப் எடுக்க போறீங்க என்று ஆசிரியை தாரா கேட்க்க முனைப்போடு இருந்தார். அங்கு நான் மட்டும் தான் ஷூ அணிந்திருந்தேன், 10 ஆம் வகுப்பின் முற்பாதியில் வாங்கியது சிறிது கிழிசலோடு இருந்தது. எல்லோரையும் எந்த குரூப் என்று கேட்டு விட்டு என்னிடம் வந்தார்கள். " ஒரு டிசிப்ளின் வேண்டாம் , இப்படியா வருவ ? உண்ணலாம் ஸ்கூல சேத்ததே தப்பு. துரை என்ன மார்க் வாங்கிட்டாரு ? CS குரூப் தரத்துக்கு, ஷூ ஒழுங்க போடவே வக்கு இல்ல" என்று திட்டியபோது என்னை காப்பாற்றியவர் ரமணி அம்மா , "மிஸ் அவனோட அப்பா அங்க நிக்கிறாரு , விடுங்க". என் அப்பா மிகவும் வருத்தப்பட்டார் அன்று நான் உபயோகமற்றவன் , லாயக்கில்லாதவன் என யோசிக்க தொடங்கிய நாள் அன்று.  
என் தமிழ் ஆசிரியர் ரமணி அம்மா, எனக்கு நிறைய போராடி இருக்கிறார், உன்னால் முடியும் என்று எனக்கு சொன்ன முதல் ஷிவ் கேர என் ரமணி அம்மா. சிவா சார் , என் கணித ஆசிரியார். இவர் தான் என் கணிதத்தில் காந்தம் வைத்த ஐன்ஸ்டின்.

இதில் வாத்தி ரமணி அம்மா, தர்ஷியஸ் சார், சிவா சார் - கண் குளிக்க நன்றி சொல்கிறேன்.

Saturday, October 4, 2014

பெரம்பூர் லொக்கோவிலிரிந்து பார்க் டவுன் வரை

   தினமும் என் மனதில் தோன்றும் கவலை , நான் ஏன் இங்கு வேலைக்கு சேர்ந்தேன் என்று; கொசு அடிப்பது போல் மனதை அடித்துவிட்டு மின்தொடருக்காக காத்துக்கொண்டிருந்தேன் பெரம்பூர் லோக்கோ இரயில் நிலையத்தில்.முன் தினம் பார்த்த இரயில் நிலையம் போல இல்லை, மிகவும் சுத்தமாக இருந்தது குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மையாக இருந்தது.வியப்படைந்தேன்,இந்த இரயில் நிலையத்தில் இரண்டு நடைமேடைகள் உள்ளது இரண்டிலும் காந்தியடிகளின் பதாகை கட்டி வைக்கப்பட்டு காற்றில் அதில் உள்ள எழுத்துக்கள் "சவாச் பாரத் - தூய்மை பாரதம்" ஆடி கொண்டிருந்தது இந்த புரட்டாசியில்.மனதில் உள்ள மத குப்பையை யார் சுத்தம் செய்வார்? மதம் எனும் ஆழ் கிணற்றை யார் தூர் வாருவார் ? என்று யோசித்து முடித்தவுடன் மின்தொடரின் ஒலி காதைத் துளைத்தது, சென்னை சென்ட்ரல் மார்க்கம் செல்லவிருந்தது. வெண்டார் என்று சொல்லக்கூடிய சிறு வியாபாரிகள் தங்களது வியாபார மூட்டைகளுடன், மீன் குடைகளுடன் அமர்ந்திருந்தனர் அந்த பெட்டியில் நான் ஏறினேன். சிலர் வாய் நிறைய "பாண் பராக், மாவா" என்ற புகையிலை வஸ்துக்களை மென்றவாறு உமிழ் நீரை தங்கள் அருகில் துப்பினார்கள், இந்த வஸ்துக்களை தடை செய்தார்களே என்று யோசிக்கையில் அல்லாவுதீன் விளைக்கை தேய்ப்பது போல் பெரும்பாலானோர் தங்கள் அலை பேசியை தேய்த்து சிரிக்கின்றனர் , கோவப்படுகின்றனர் என பல பாவனைகளை பார்க்க நேர்ந்தது. தவறு செய்தவர்கள் மட்டும் தலைகுனியவில்லை இன்று பாதிக்கும் மேற்பட்டோர் தவறு செய்தார்களா? என்று என் எண்ணங்கள் கேள்வி கேக்கையில் "சென்ட்ரல் வந்துடுச்சி , நீ மூடினு பார்க் டவுன் ஸ்டேஷன் நடைய கட்றியா ? " என்று எனது மைண்ட் வாய்ஸ் நறுக்கென்று கொட்டியது.
சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து பார்க் டவுன் பறக்கும் இரயில் நிலையத்திற்கு சென்றடைவது ஒரு சாகசம் தான். மூன்று முனை பூந்தமல்லி நெடுஞ்சாலை கடக்க படாத ஓட்டம் எடுக்க வேண்டும், சுரங்கப்பாதையில் கடக்க வேண்டுமானால் நமக்கு மூக்கடைப்பு அல்லது சுவாச கோளறு ஏற்பட்டிருக்க வேண்டும் , அது சுரங்கபாதையா அல்ல சுரங்க கழிப்பறையா ?
எனக்கு மூக்கடைப்போ , சுவாச கோளாறோ இல்லை ஆதலால் ஓட்டம் எடுத்தேன் , பல்லவன் மேம்பாலத்தில் என் கால்கள் மூவுருளிகளைத் தாண்டி சென்றன.
"சவாச் பாரத்" பணிக்கு கல்லூரி மாணவர்கள் எங்கோ செல்ல விரைகிறார்கள், மற்ற கூட்டம் கூட தீ மெதிப்பது போன்று பதற்றமாக நடந்தார்கள். மேம்பாலத்தில் ஒரு தொழிலாளி மூன்று சக்கர மிதி வண்டியில் கட்டைகளை ஏற்றி இழுக்க முடியாமல் இழுத்தவாறு ஏறினார், நான் வேகமாக சென்று உதவி செய்யலாம் என்று விரைவதற்குள் என்னைப்போல் ஒரு சாமான்யன், அகவை 40 இருக்கும் அவருக்கு அந்த தொழிலாளிக்கு உதவி செய்தார் மற்றவர்கள் தீ மெதித்தனர். மேட்டை கடந்து மிதி வண்டி சம பகுதிக்கு வந்தடைந்தது, தொழிலாளி தன் கையை உயற்றி அந்த சமான்யனிடம் உடல் மொழியில் நன்றி சொன்னார், இவரும் அதை ஏற்று ஒரு சின்ன சிரிப்பு செய்து பார்க் டவுன் நிலையத்திற்கு சென்றார். யார் கண்களுக்கும் இந்த தொழிலாளி தெரியவில்லையே என்று நகர்கையில் ஒருவர் அந்த சாமான்யனை நோக்கி விரைந்து சென்று " சார் !! ரொம்ப நல்ல செயல் செஞ்சீங்க , மகிழ்ச்சி" என்று பாராட்டி சென்றார்.
அந்த சாமான்யனின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி எந்த பணத்தாலும் கொடுக்க முடியாது அதை, இந்த சின்ன பாராட்டு அவரை மேலும் பல உதவிகளை செய்யவைக்கும் . எதிர் பாராத உதவிக்கு எதிர் பாரா பாராட்டு அலாதியானது. மனம் வந்து பாராட்டுவோம், பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்.
யார் கண்களுக்கும் இந்த சாமான்யனின் செயலை பாராட்ட தெரியவில்லையே என்னையும் சேர்த்து தான்.
இந்த அவதானிப்போடு நகர்ந்தேன் ...

Tuesday, September 23, 2014

சாணைப் பிடிக்க வேண்டும் !!!

  சாதியெனும் பேய்
  மனிதர்களின் ஆவியாலே,
  வேரூன்றி வெறிகொண்ட முருங்கை  மரத்தை வெட்ட
  படு கூர்மையான பகுத்தறிவா(ல்)ள்  முடியும் !!!!

Sunday, September 21, 2014

என்றுமே அனுப்பாத கடிதம்

இந்த அன்பில்லாதவள் ஞாபகம் எனும் மையில் எழுதுவது ...
    உன் நெஞ்சிலிருந்த நெருப்பை அணைத்தேன்
    புகையை இன்னும் வெளிவிடுகிறாயே ,
 என்னை நீ என்றும்  நினைக்காதே!
        நான் நனைந்த ஆடு தெரியாமல் சிலுப்பிவிட்டேன்,
        அதனால் பலியாகிறேன் ஒவ்வொரு க்ஷணமும் !!
   உனது பெயரை என் குழைந்தைக்கு வைத்து
        உன்னை கேவலப்படுத்தவில்லை !!
  உன் வேண்டுதலில் எனது  நலனிருப்பதை
       என் பிள்ளை ஆரோக்கியம் சொன்னது,
       என்னை தயவுகூர்ந்து மன்னிகாதே
       மன்னிப்பு அசிங்கப்படும் !
     மண் பசிக்கு நான் இரையாகும் போது
        இவள் பாவத்தை நம்மால் ஜீரணம் செய்யமுடியாது என்று புலம்பும் ....
        என்றோ ஒரு நாள் என் வேண்டுதலில் நீ இருப்பாய் !!!!

இந்த அதிர்ஷட்டமில்லாதவன் சந்தோசம் எனும் மையில் கிறுக்குவது ...
       காதல் என் நெஞ்சில் ஆணி அடித்தது,
       காலம் காந்தமாக வெளியே இழுத்தது,
       காலம் காலமாக சுவடுகளை சுமக்கும் என் நெஞ்சம்
       உன்னை வாழ்த்தும் அனுதினமும் ..
 

Monday, September 15, 2014

நம் பயணத்தில்..

தேடும் யாவும் கிடைப்பதில்லை
  கிடைத்த யாவும் தேடுவதில்லை !
தேடி கிடைத்த யாவும் போற்றுவதில்லை
   கிடைத்து தொலைத்த யாவும் அக்கறையில்லை !
 எல்லா மனங்களைப் புரிந்தவர்களுக்கு
  மரணமில்லை !! 

மானங்கெட்ட மனசே !

மானங்கெட்ட மனசே ,
 நீ என்ன ஜென்மமோ ??
 உன்னை செருப்பால் அடிக்க வேண்டும் !
 ஏன் ஏமாற்றத்தை நினைத்து அழுகிறாய்,
 ஏன் முடிந்ததை எண்ணி வருந்துகிறாய்;
மானங்கெட்ட மனசே,
   உன்னை அடித்தும் சொரணையில்லை 
   துடைத்துவிட்டு போனதை நிந்திக்கும், துடைத்துவிட்டு !
   யார் மானத்தையும் வாங்காத மனசு,
   பைசாக்கு பெறாத  
   மானங்கெட்ட மனசு தான் !!!!


Sunday, September 7, 2014

ஆழ்கடல்


         எப்பொழுதெல்லாம் கடற் கரையில் அமரும் போதும் ஆழ் கடல் எப்படி அமைதியாக உள்ளது என்று சிந்திக்க தோன்றும், ஒவ்வொரு முறையும் அலைகள் என் கால்களை நனைக்கும் போது அதன் சுறுசுறுப்பு மற்றும் புதிய சக்தியைக் கண்டு வியப்பு வரும், இதே போல் தான் மனிதர்களும் சிலர் அமைதியாக சிலர் துடிப்பாக. இப்படி பலரில் சிலர் மகேந்திர பாபு, என்னுடன் பயணிக்கும் ஒரு ஜீவன். இவரை ஆழ்கடல் என்றே சொல்லலாம், பள்ளி காலங்களில் இவர் ஒரு கண்ணுக்கு தெரியாத கானல் நீரைப்போல். படிப்பிலும் அப்படி தான் இவர் எடுக்கும் மார்க் கண்ணுக்கே தெரியாது அவ்வளவு சிறியதாக இருக்கும். இவர் +2 தேறமாட்டார் என்று எல்லா ஆசிரியர்களும் பெட் கட்டினார்கள் அதற்கு நேர் மாறாக தேர்ச்சி பெற்றார், எல்லாரும் இவர் மீது ஒரு நம்பிக்கையின்மையாக இருந்தார்கள் ஆனால் மகேந்திர பாபு சற்று கூட சலனமில்லாமல் அமைதி காத்தார்.
    பச்சையப்பன் கல்லூரியில் BCA சேர்ந்தார், எல்லா படத்திலும் பார்த்ததுபோல் பஸ் ரூட், பாட்டு , சண்டை , கட்டிங் என நட்பையும் , தீயதையும் சேர்த்தார். இவரின் தௌலத் தாங்க முடியாதது,  அது 2007 ஆம் ஆண்டு ஒரு நண்பனின் திருமணம் வரவேற்புக்கு  பாபு சென்றிருக்கிறார். கல்யணம் என்றால் அது குழந்தை கல்யாணம் , மணமக்களுக்கு 20 வயது தான். டாஸ்மாக் சமாச்சாரமும் நடந்தது, நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக ஐயா இளையராஜா குரலில் ஒருவர் இசைக்குழுவில் பாட ஆரம்பித்தார் "நிலா அது வானத்து மேலே", சற்று நேரத்தில் நாற்காலிகள் நடனம் ஆரம்பிக்க எல்லார் வாயில் ட்ரம்ஸ் சத்தம். இசைக்குழு அலறியது எல்லா சாமான்களையும் மூட்டை கட்டி ஓடினர். நண்பர்களின் சண்டை அதிகரித்து போலீஸுக்கு தகவல் சென்றது.
     ஏன் இந்த சண்டை என்றால் , ஒரு தரப்பினர் "ஆசை நூறுவகை" என்ற ரஜினி பாடலுக்கு கூச்சலிட, இன்னொரு தரப்பினர் "நிலா அது வானத்து மேலே" என்ற பாடலுக்கு வாதிட இறுதியல் கமல் ஜெயித்துவிட அங்கு சங்கு சத்தம் கேட்டது. சிறு நேரத்தில் போலீஸ் வந்தனர், நம் தௌலத் மகேந்திர பாபு SI இடம் சென்ற வீர வசனம் பேசினார் "உங்களுக்கு ஆள் பலம் பாக்கனுமா ? இல்ல அரசியல் பலம் பாக்கனுமா ?" என்றார். அவர்கள் லட்டி பலத்தைக் காட்டினர். எல்லா புகழும் பச்சையப்பன் கல்லூரிக்கே.
    BCA படிப்பு முடிக்கும் போது அவருக்கு 10 அரியர்கள், சற்றும் மனதை கைவிடாமல் அமைதியாக இருந்தார். அவர் சுற்றத்தார் எல்லோரும் "மகேந்தர் தண்டம், தமிழ் ல கூட பைல்" என்று ஏளனப் படுத்தினர். அரியர்க்கு விண்ணப்பம் செய்தார், அதற்குள் என் நண்பனும் பாபுவின் நண்பனுமான செந்தில் ICICI கால் சென்டர் இன்டர்வ்யு க்கு அடித்து இழுத்து சென்றார், இருவரும் வேலைக்கு சேர்ந்தனர். ஆறு மாதங்கள் ஓடியது, நன்றாக சம்பாரித்த பாபு திடீர் என வேலையை விட்டார், சுற்றத்தார் , நண்பர்கள் எல்லாரும் சாடினார்கள். அவர் ஒரு பெரிய கணினி கல்வி நிலையத்தில் சேர்ந்தார் அதே நேரத்தில் 10 அரியர்களையும் முடிக்கிறார். கணினி பொறியாளர் என்ற சான்றிதழ் தந்தனர் அந்த கணினி கல்வி கூடம். முடித்த பிறகு கூட வேலை கிடைக்க வில்லை. 40 இன்டர்வ்யு க்கு மேல் எந்த பயனும் இல்லை. பாபுவுடன் படித்தவர்கள் எல்லாம் காலத்தை விட வேகமாக நகர்ந்தனர் ஆனால் பாபு மனம் தளரவில்லை குறிக்கோள் கணினி பொறியாளன் என்ற தாகம் அடங்கவில்லை. கடினமாக ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இன்டர்வ்யு நடந்தது அதில் தேர்ச்சி பெற்றார்.
    இன்று பாபு மூன்று நிறுவனகள் மாறி, TL ஆகா ஓர் பெரிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவர் ஆழ்கடல் தான் அமைதியின் இடத்தில ஆழம் இருக்கும். அவரின் விடா முயற்சி இன்று வேறொரு பரிணாமத்தில் இருக்கிறார்.
எல்லா புகழும் பச்சையப்பன் கல்லூரிக்கே....

       சிலரிடம் அமைதி இருந்தால் திறமை அவ்வளவு சத்தம் போடாது, சிலர் சத்தம் போட்டு திறமையை அமைதியாக்கி விடுவார். ஒரு சிலர் மட்டும் தான் அமைதியாகவும் திறமையாகவும் இருப்பார்கள் அதில் ஒருவர் தான் சண்முகம் ; ஆறாம் வகுப்பு முதல் இன்று வரை எங்கள் நட்பு தொடர்கிறது. சண்முகம் எங்கள் பள்ளியின் மாணவத் தலைவன், விளையாட்டு , படிப்பு என பின்னி பெடல் எடுப்பார். திறமைசாலி என்றல் சண்முகம் தான். அவருக்கு வெட்னரி டாக்டர் ஆக வேண்டும் என்பது இலக்கு அதனால் தாவரவியல் பிரிவு எடுத்தார். திறமை மட்டும் அல்ல அவர் பேச்சிலும் செயலிலும் ஒரு தெளிவு இருந்து கொண்டே இருந்தது. எல்லாரும் கணித பரீட்சை முடிந்தவுடன் "என்னக்கு 180, 190 வரும்"   என்று ஏலம் விட்டனர் ஆனால் இவர் மட்டும் அமைதியாக இருந்தார், தேர்வின் முடிவுகள் வந்தது சண்முகம்  கணிதத்தில் முதல் வந்தார் (199/200). ஒட்டுமொத்தம் பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றார்.
     சமூகம் சண்முகத்தை தன் கனவுடன் பயணிக்க அனுமதிக்கவில்லை பிறகு பொறியியலை தேர்ந்தேடுத்தார். கலந்தைவை முடித்து 47 A  வில் அவருடைய தந்தை , தாயாருடன் வந்திருந்தார், அப்பொழுது என் கல்லூரியிலிருந்து வீடு திரும்ப 47 A வில் ஏறினேன், பார்த்தால் பெரும் மகிழ்ச்சி எதிரில்  சண்முகம்.
 " என்னடா குரூப் எடுத்திருக்க ? என்ன காலேஜ் ?" என்றேன்.
  " வேலம்மாள் டா , E & I " என்றார் சண்முகம்.
  என்னக்கு பெரிதும் மகிழ்ச்சி அது நல்ல கல்லூரி என்று,  E & I என்று பிரிவு பொறியியலில் உள்ளது என அன்று தான் தெரியும்.
எனக்கு தெரிந்த படிப்பை சொல்லி இதை எடுத்திருக்கலாமே என்றேன்.
அதற்கு சண்முகம் "எல்லாரும் தான் அத படிக்கிறாங்க , நான் அதுல விழக்கூடாது , வேற எதாவது புது முயற்சி செய்யனும்"
 இந்த சொற்கள் கோர்த்த அவருடைய குரலில் வரும் ஓசை காற்றில் மட்டும் கலக்கவில்லை என் சிந்தனையிலும் கலந்தது. சண்முகம் கல்லூரி படிப்பை முடித்தார், ஒரு பெரிய IT நிறுவனத்தில் வேலை கிடைத்தது , கை நேரிய சம்பளம் என்று இருந்தது. எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி ஆனால் துயரம் ஒரு ஆண்டுகளுக்கு மேல் சண்முகத்தை அந்த நிறுவனம் அழைக்கவில்லை, அதன் பிறகு அழைத்தும் அவர் போகவில்லை.
    அவர் வீட்டிலே சில ஆண்டுகள் இருந்தார், இந்த சமூகம் அவரை வாட்டி வதைத்தது, ஆனால் அவர் எதையோ சிந்தித்து இருந்தார் என்பது புலப்பட்டது, பிறகு அவர் படித்த படிப்பிலேயே வேலை தேடினார், வேலையும் கிடைத்தது மிக சொற்பமான சம்பளம் தான் ஆனால் மன நிறைவுடன் சென்றார். அவருடன் படித்த சக நண்பர்கள், காம்பஸ் இன்டர்வ்யுவில் கிடைத்த IT  நிறுவனத்தில் தாமதமான அழைப்பில் சேர்ந்து லட்சத்தில் புரண்ட போது , சண்முகம் லட்சியத்தில் நகர்ந்தார். ECE /EEE /E & I  என இது போன்ற தொழிற் கல்வி பயின்று வேறு துறையான IT துறையில் பணத்திற்காகவும் குடும்பதிர்காகவும் செல்லும் இளைஞ்சர்களில் தொழிற்கல்வியை போற்றி ஒரு இலக்குடன் இருந்த சண்முகத்தை பகடி செய்தது.
    சண்முகத்தின் விடா முயற்சி எனும் முகம் அவரை இன்று ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமை மின் பொறியாளராக அடையாளம் காட்டியுள்ளது. ஒரு லட்சியத்தின் போராட்டத்தில் சண்முகம்மும் ஒரு போராளி.      

Thursday, September 4, 2014

தூரிகையின் தேவதைகள்

மழலை விரல்கள்  உணரும்
      உயிர் எழுத்துகள்  உயிர்பெற்றதின் மெய்யை,
    விடலைப்பருவத்தின் மனம் சொல்லும்
ரிங்கா ரிங்கா ரோசஸ் இன்னும் வாடவில்லை என்று ,
    இளமையில்  முகவரி தெரியும்
 தொடுவானம் தோறும் மயில்கர்களாய் ,
   பௌர்ணமியை ரசிக்கும் ஓவியன் போல்
       சலனமேயில்லாமல் எங்கள் வெற்றியை ரசித்து,
       அடுத்த வெற்றியை ரசிக்க தயராவாய் ,   
 வருடங்கள் மாறலாம் 
        மாதங்கள் மாறுவதில்லை,
  ஏறும் கால்கள் மாறலாம்
     சுமக்கும் படிகள்  மாறுவதில்லை  
  கருப்பலகையை வெண்மைத்தீட்டிய தூரிகையின் தேவதைகளுக்கு !!!

Sunday, August 17, 2014

அந்த நாளை எதிர்பார்த்த நாளை !!!

முயற்சி எனும் வடிவத்திற்கு
தோல்வி எனும் உயிர் வரும் போது,
வானிலிருந்து வரும் பனி துளி
புல்லிலும் , செடியிலும் உருண்டோடுவது போல
இதயத்திலிருந்து வரும் உணர்வு
கண்ணில் ஓரத்தில் புரண்டோடும்
உப்பு நீரில் தாடியும் வளரும்
வாடிய முகமும் தொடரும்,
முயற்சி எனும் வடிவத்திற்கு
வெற்றி எனும் உயிர் வரும் நாளை ,
நாளையாக  உழைப்போம், செழிப்போம் !!!

Saturday, August 16, 2014

குறும் படம் - 'வாய்ப்பு' (English)

INT.     HOME LIVING ROOM                                  NIGHT
                            
 HIGH ANGLE SHOT

Protagonist Ezhil typing a screenplay structure to
director Ram for seeking assitant opportunity and expressing
the ambition through his eyes. Mosquitoes troubling him
though he's typing with the will .

                                       EZHIL (VOICE OVER)
                                 "At heavensake my short screenplay
                                  should come into the notice of
                                  director sir. Oh my god! this
                                   screenplay software doesn't allow
                                   tamil font, no worry thozhar you
                                   can do it in english. Somehow I
                                   wrote the first scene."

                                            (got up from the chair
                                              and breaks laziness then
                                               started to walk)
                                                                                                                                 FADE OUT

Note
We see dusted old pentium 4 series computer with opened
CPU, few books felling on table and a drunken tea glass
with insects around.

EXT BALCONY NIGHT

STEADY CAM (ENTRANCE OF THE HOME INSIDE)

Ezhil walking up and down in balcony, he thinking
what to do improvise his screenplay.

                                        EZHIL (VOICE OVER)
                                   
                                    " Is that I need to send my shot
                                      stories or only this small
                                      screenplay, ok ! I can send my blog
                                      that could impress him"
                                                (Again he comes to
                                                  living room from
                                                   balcony)
                                                                                                                                  JUMP CUT TO:
Note:
Corner screen tied up in the entrance .

 
INT. HOME LIVING ROOM NIGHT

HIGH ANGLE SHOT

Ezhil completes his scene screenplay writing and sends to
director Ram.

                                                         EZHIL (VOICE OVER)
                                                         "Oh God or luck please
                                                           help me this screenplay
                                                           should be seen by
                                                           director sir,My blog
                                                           pavithranvignesh.blogspot.in
                                                           and my mobile
                                                           number 9*******6 shoud
                                                           be viewed"
                                                                      ( taking deep breath)
    
                                                                                                                                     FADE OUT

EXT. SHOOTING SPOT DAY

HANDHELD

Director Ram shooting a shot sequence for a film, meanwhile
shooting comes to halt. All people are winding up with the
shoot, he checks his mobile and all of sudden slight
grin,Near by one of his assistant director chatting about
it.

                                                                  DIRECTOR RAM SIR
                                                                 "Yes ! Yes ! This the emotion I
                                                                   need perfect, after 10 shots you
                                                                   pulled off.We can wrap up , thanks
                                                                   fellas. (blip sound from mobile),
                                                                   some crook would have mailed me.

                                                                    ASSISTANT DIRECTOR
                                                                   " You can enjoy some interesting
                                                                      mail sir, please check"

                                                                     DIRECTOR RAM SIR
                                                                   " Yes , am checking. Some stupid
                                                                       asking assistant chance but its
                                                                       semma intersting, he asked through
                                                                       screenplay structure that too in
                                                                       english (LOL).He gave his blog and
                                                                        number"

                                                                      ASSISTANT DIRECTOR
                                                                      " Sir, somethinng fresh, we can
                                                                        chek his blog "

                                                                       DIRECTOR Ram SIR
                                                                      " Hopefully he'll have some
                                                                        substance in his blog, lemme call
                                                                        him, Rajini voice hearing but
                                                                        semmma dialer tune...."
                                                                                        (Handheld shots one on
                                                                                          one , at background
                                                                                          shooting wrap up going
                                                                                          on)

                                                                                                                                 FADE TO BLACK

Note:
Dialer tune ringing and scene ends.


INT. HOME LIVING ROOM NIGHT
 
HANDHELD

Ezhil in a deep sleep by then mobilephone(Nokia 1100)
ringing, he attends in a lazy voice.
    
                                                                            EZHIL
                                                               "Cannot even sleep for a stretch of
                                                                 hours, Hello !!! Who's that ??
                                                                 (Lazy sounding). Oh ! Tell me
                                                                  Kabilan, Semma sleep and had damn
                                                                  good dream as my short screenplay
                                                                  acknowledged by Director Ram sir
                                                                   but you thrashed it ...."

                                                                                                                        SLOW FADE TO BLACK