Translate

Thursday, April 10, 2014

வெயிலில் காயும் மட்டைகள்

      " ந்தியாவிற்கு 6 ஓட்டங்கள் தேவை இன்னும் ஒரே பந்து மீதமுள்ள நிலையில், தோனி கடைசிப் பந்தை எதிரிநோக்கி களத்தில் ! விளாசுவரா ? விடுவாரா ? என எதிர்பார்ப்பு பின்னி பெடலெடுக்க !! இல்லாத நகங்களைக் கடித்து , இருக்கை முனையில் இருகை ஒலியோடு பரபரப்பு எதிரொலிக்கும். தோனியின் உலங்கூர்தி() அடியால் பந்து வானோக்கி நிற்கும் மின் விளக்குகளை நலம் விசாரித்து , அரங்கிற்கு வெளியே விழும். இந்த தருணத்தில் , கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் ஆரவாரமும் , மகிழ்ச்சியும் தெருக்களில் பட்டாசாக , இனிப்பாக வெளிப்படும். தேசிய ஒருமைப்பாடு இதில் தானே தெரிகிறது"

          கிரிக்கெட்டுக்கு தமிழில் துடுப்பாட்டம் என்று பொருள். இந்திய மக்களின் நாடி, குருதியெங்கும் பல ஓட்டங்கள் எடுத்து கிரிக்கெட் ஓடிக்கொண்டே இருகின்றது. தொலைகாட்சியில் பார்க்கும் போதே தொலைவில் இருக்கும் சச்சினுக்கு நம் மக்கள் அறிவுரை கூறுவார்கள்.
ஒவ்வொரு தெருக்களிலும் உடைந்த கண்ணாடி ஜன்னல்கள் எண்ணில் அடங்காது, கிரிக்கெட்டை முறையே பயின்று நாமும் சாதிக்க வேண்டும் என்று பல இளைங்கர்கள் இருக்கிறார்கள். டெல்லி , மும்பை , கொல்கத்தா , சென்னை என முக்கிய நகரங்களில் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் () மிக அதிகம். ஓவ்வொரு மாநில கிரிக்கெட் வாரியம் இத்தகையப் பயிற்சி முகாம்களை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறதா ? யார் நடத்துகிறார்கள் ? பார்ப்போம் விரிவாக.

    சென்னையைப் பொறுத்தவரை கிரிக்கெட்டிற்கு பெரிய வரவேற்பு உண்டு. எல்லா பெற்றோர்களுக்கும் தன மகன் தோனி , சச்சின் போல உருவாக வேண்டும் என்பது கனவு. கடந்த 10 ஆண்டுககளில் கிரிக்கெட் பயிற்சி நாய் குடைப் போல் பெருத்துக் கொண்டே இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட் பயற்சிக்கு வெகு சில பெற்றோர்கள் விருப்பமுடன் பணம் செலுத்தி தனது பிள்ளைகளைச் சேர்த்தனர். ஆனால், இன்றோ 70 சதவிகிதம் பெற்றோர்கள் தனது பிள்ளைக்கு மட்டைப் பிடிக்க ஆர்வமுள்ளதோ ! இல்லையோ ! கிரிக்கெட் பயிற்சிக்கு அதிக பணம் செலுத்தி சேர்கின்றனர். பத்தில் எட்டு பள்ளிகூடத்தில் இன்று கிரிக்கெட் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருகிறது , இதில் அந்த பள்ளிச் சார்ந்தப் பிள்ளைகள் மட்டும் அல்லாமல் மற்ற இளைஞர்களும் பயிற்சி பெறுவர். குறைந்தது 30 முதல் 100 வரை எண்ணிகையில் இருப்பார்கள்,  பயிற்சியலர்களே உரிமையாளராக திகழ்வார். இக்காலகட்டத்தில் இது  பெரிய வியாபாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    கோடை ஆரம்பித்தவுடன் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் நடதுபவர்க்கு பண மழை தான் ! ஒரு பக்கம் ஐ.பி.எல் பார்த்து ஆர்வத்துடன் சேர்வார்கள் ;விடுமுறையை கிரிக்கெட்டுடன் கழிக்க ; விளையாட்டின் மோகத்தால் பெரிய அளவில் விளையாட வேண்டும் என்று பல இளைஞர்கள் சேர விரும்புவார்கள். இதை நன்கே உணர்ந்த ஒரு கூட்டம் தங்களது கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு விளம்பரம் செய்வார்கள் , 45 முதல் 60 நாட்கள் வரை இந்த பயிற்சி நடை பெரும் .  ஒரு நபரிடம் இருந்து தலா 6000/- முதல் 8000/- வரை கட்டணம் வசூலிப்பார்கள்.அது மட்டுமல்லாமல் , மேலும் நடைபெறும் போட்டிகளுக்கு தனி கட்டணம். எங்கோ ஒரு மூலையில் தான் கிரிக்கெட் பயிற்சி முறையாகவும் நியாமாகவும் நடகின்றது, உண்மையில் வசூல் ராஜா முகாம்கள் அதிகம். பெற்றோர்கள் விசாரித்து கிரிக்கெட் பயிற்சிக்கு தங்களது பிள்ளைகளை சேர்ப்பது நல்லது.எங்கு ஆர்வம் மிக அதிகம் உள்ளதோ , அங்கு தான் ஏமாற்ற்றம் கிலோ கணக்கில் இருக்கும் , ஏமாற்ற்றுபவர்கள் டன் கணக்கில் இருப்பார்கள் இது நிதர்சனமான உண்மை. தமிழக அளவில் விளையாட வைப்பதாக வாக்குறுதி கூறி பணம் பறிக்கும் பயிற்சியாளர்கள் அதிகம், தமிழக அளவில் விளையாட பல தேர்வுமுரைகள் உண்டு, எல்லா வயதிற்கும் உற்பட்டோர் தேர்வு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் (உ-14, உ -16, உ - 19, உ-22, உ -25 ) , இதை (TNCA) தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும்.தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களும் இத்தேர்வில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு பிரிவிக்கும் 20 வீரர்கள் மட்டும் தான். பணத்திற்காக திறமையை கொலை செய்யும் கொலையாளிகள் உள்ளனர்.
       TNCA தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் பயிற்சிக்கு விதிமுறைகளை விதிக்க வேண்டும் அதாவது எல்லா பயிற்சி முகாமும் TNCA வுடன் பதிவு செய்ய வேண்டும்; கட்டணம் படிமுறைவீதம் கொண்டு வரவேண்டும்; தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும் . முதலியவற்றை நெறி படுத்தினால் பலரின் கனவையும் , பணத்தையும் பாதுகாக்கலாம். கிரிக்கெட்டின் தாகத்தால்  நேரத்தையும் , செல்வத்தையும் செலவழித்து வரண்டு போன திறமைசாளிகள் வெயிலில் காயும் மட்டைகள் தான் !!!

Monday, April 7, 2014

My Right - Dialogues



பாபு : என்ன அண்ணே !! இந்த நேரத்துல ??
அருள் : விரலுக்கு  பொட்டு வெச்சுட்டு வரேன் !!
பாபு : புரியலயே !! ()
அருள் : vote போட்டேன் பா !!
பாபு : சூப்பர் சிங்கர் தான் முடிஞ்சிடுச்சே !! ()
அருள் : இது நாட்டுக்காக டா , பாட்டுக்கு இல்ல !!
பாபு : போடணுமா என்னா ?? அட போங்க ணா ...
அருள் : நீ ரோட்ல நடுந்து போகும்போது யாராச்சும் இங்க நடக்க கூடாதுன்னு சொன்ன என்ன பண்ணுவ ??
பாபு : சரி !!ஓட்றன்னு சொல்லுவேன் !! ()
அருள் : காமெடி யவே இருங்க டா ..
பாபு :  சாரி,  ணா !! உன் அப்பன் வீட்டு ரோட ன்னு கேப்பேன் ..
அருள் : சரி !! இது யாரோட ரோடு ??
பாபு : goverment  து ..
அருள் : goverment  ஏன் போடணும் ?? காசு எப்படி அவங்களுக்கு ??
பாபு : அவங்களோட கடமை , நம்ப வரி பணம் தானே !!!
அருள் : அவங்க கடமை யா செய்யணும் ன, உன் கடமையை செய் , vote போடு .. உன்ன மாதிரி யெல்லதெரிஞ்ச ஆளுங்க தான் டா vote போடாம சோம்பேறி தனபடுவாங்க ..
பாபு : நான் ஒருத்த போடலேன்னா என்ன ஆகபோது ??
அருள் : உரிமைக்கு கூட விதண்டா வாதமா டா !! நாட்டுக்காக இது கூட செய்ய மாட்டிய ?? கடமைய செஞ்சிட்டு , உரிமைய ரோட்ல நட ..
பாபு : கடமைய செய்ய கேளம்புரேன் .ணா !!..
அருள் : உன் கடமைக்கு மை சாட்சி டா !!
பாபு : கேட்டுகிட்டன் ணா .. கிளம்புறேன்
அருள் : காதுல கேட்ட மட்டும் போதாது , விரலையும் நீட்டனும் !!!
பாபு : சரி ங்க ணா !!! ()
அருள் :மை நமது பெருமை
              vote எல்லோரின் உரிமை
              அவன் கிளம்பிட்டான் !! நீங்க ???

Saturday, April 5, 2014

மருட்சி

எவ்வளவு
பக்தி மான்கள் இவ்வுலகில்,
வெள்ளைச் சுவரைப் போல,
நெற்றியில் பூசிய திருநீறு ,
ஆன்மீகத்தின் வழிச் சேறு
உண்மையில் ,
ஏமாளி எனும் எழுத்தை மறைக்கவே !!!

உண்மை நிலை


சாதியால் சிறைப் பட்டது காதல் ,
   சதியால் ஆயுள் தண்டனை !!
ஜாமீன் எடுக்க முயன்ற பலர் ,
   ஜகதைவிட்ட பல இளவரசன்கள் !!

Thursday, April 3, 2014

நட்பு ஒரு துடுப்பு

உதடுகள் வற்றிபோகும் சமையம் ,
உள்ளத்தின் உரையாடல்கள் வெள்ளப்பெருக்காகும்,
அவள் பிரிந்ததும் ...
உருகிய மெழுகு போல் நினைவுகள்
இருக்கியே சாகும்..
காதலை இழந்து ,
காலத்தை தொலைத்து ,
நம்பிக்கை தேடும் இளைஞன் - இங்கே
நிம்மதினாடுகிறான் !!
அவளிடம் பேசியதை ,
கண்ணீரில் , தண்ணீரில்
எதிரொலிப்பான் நெகிழிக் குவளையிடம் !!
அவள் சென்றாலும் காலமெல்லாம்
நினைவின் நிழலைச் சுமப்பான் ,
இவனைவிட்டதும்
பத்து மதம் நிஜத்தைச் சுமப்பாள் !!
ஊறுகாய் கொடுத்து நட்பு கூர்க்காவாகிறது ,
எந்நிலையிலும் இருப்பான் நண்பன்
துடிக்கும் இதையம் போல !
இது நட்பை உணரும் தருணம்
உண்மையானக் காதலுக்கு மரணம் !!!

Wednesday, April 2, 2014

மிதிவண்டியை மதிப்போம் !

  "கிளிங் !! கிளங் !! எனும் ஓசை ஒலிக்க; சுமையரியா  சுமக்கும் சுமைதாங்கியாய் ; அவசர சமயத்தில் வேகமாக மிதித்தாலும் நம்மை வியர்வைத் துளியோடு விட்டு விட்டவன் ; இவன் ஒரு காலத்தில் குடும்ப அட்டையில் பதியாத உறுப்பினர். இன்று கிளிங் ! கிளிங் ! ஓசை எங்கே ?  தொலைந்தானோ ? சோம்பேரிதனத்தால் மறைந்தனோ ? நாம் தொலைத்து மறந்த உறுப்பினரின் பெயர் 'மிதி வண்டி' "

        பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பாதியில் ஐரோப்பியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தானியங்கிப் போக்குவரத்தின் விதை மிதி வண்டியாகும். முதலில் மிதி வண்டியின் உருவம் மரத்தால் உருவாக்கப்பட்டது , இரு சக்கரங்களும் பெரிதாக இருக்கும், இதில் பெரும் வியப்பு என்னவென்றால் இதற்க்கு மிதிக்கட்டை கிடையாது. ஓட்டுபவர் தனது கால்களால் தள்ளிக்கொண்டு தான் நகர்த்துவார் , அதுவும் விசைக்கேற்ப தூரத்தைக் கடக்கும் , இந்த இடைவெளியில் இருக்கையில் ஏறி அமர்ந்து கொள்வார், வண்டி நிற்கும் தருவாயில் மீண்டும் தள்ளித் தொடர்வார்.இந்த வண்டியின் பெயர் விசை மிதிப்பு (velocipede) என கூறுவர், இதன் இடை 22 அயிர்சீரெடையகும் . மாற்றம் ஒன்றே மாறாதது என்பதைப் போல நாளிடைவில் பல வடிவங்களாக மாறியது மிதிவண்டி.

       நமது ஊரில் மிதிவண்டி ஒரு காலக்கட்டத்தில் முக்கியம் வாய்த்த போக்குவரத்து ஊர்தியாகத் திகழ்ந்தது. 21 ஆம் நூற்றாண்டின் பரப்பிற்குப் பின் எல்லோரிடத்தில இரு சக்கர வாகனம் முக்கியம் பெற்றது . 1990 -களில் வாடகைச் சைக்கிள் பிரசித்தம் சிறுவர்களிடையே, பல விதமான மிதிவண்டிக்கள். விடுமுறை நாட்களில் பெரும் பொழுதுபோக்கு வாடகைச் சைக்களில் ஊர் சுட்ட்ருவது தான் , ஆனால் இவ்வராக எங்காவது  பார்த்தல் அரிதோ அரிது. முப்பது ஆண்டுகள் முன்னர் மிதிவண்டிகள் அதிகம், இன்று  இரு சக்கர வாகனங்கள் எண்ணிலடங்காமல் இருக்கிறது .பெரிதும் மிதிவண்டியைப் பயன்படுத்துபவர்கள் பள்ளி மாணவர்கள், இவர்களும் சர்ர்ர் என இரு சக்கர வாகனத்தில் பறப்பதைப் பார்க்கிறோம், பல கல்லூரி மாணவர்களும் மிதிவண்டியை ஓட்டினால் கௌரவக் குறைச்சல் என நினைப்பதை நம்மால் உணர முடிகிறது

     புத்தாண்டு பிறந்ததும் மக்களின் முதல் பிரகடனம் உடலைக் கட்டு மஸ்தாக மாற்றுவது, பருமனாக இருப்பவர் எடையைக் குறைப்பது என உறுதி செய்வார் , உடற்பயிற்சிக் கூடத்தில் சேருவர்.அங்கே செல்வதற்கும் வாகனம் தான் , உள்ளே பார்த்தால் மிதிவண்டியை வியர்வை வர மிதிப்பர்; இது வேடிக்கைத் தான் இது மட்டும் அல்ல உடற்பயிற்சி மையதிருக்குக் கூட சில நாட்களே செல்வர் , நேரத்தின் மேல் பழியைப் போட்டு தன்னை நியாப் படுத்தி கொள்வார்கள்.
மிதிவண்டியின் பயனை நாம் உணர வேண்டும் , மக்கள் கடைத் தெருவிற்குச் செல்வதற்குக் கூட இருச் சக்கர வாகனத்தை உபயோகிப்பர், இதற்க்கு சோம்பல் முக்கிய இடம் வகிக்கிறது . எரிபொருள்  நூறு ரூபாய் ஆக உயர்ந்தாலும் கவலைப்பட மாட்டார் , இதை மீறி குரல் எழுப்பினால் " இது மோட்டார் வாழ்கை சார் " என்பார்கள். 

           வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்பதைப் போல் 'வீட்டிற்கு ஒரு மிதி வண்டி அவசியம்' - என்று உறுதி எடுக்க வேண்டும். இன்றைய வேளையில் பையில் இருக்கும் பணம் எரிபொருளால் ஓடும் வாகனத்தை விட மிக வேகமாக ஓட்டம் பிடிகிறது. நாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்தினால் சிறப்பு. அன்றாடம் மிதிவண்டி பயன்டுத்தினால் பல நன்மைகளை அறுவடைச் செய்யலாம். அதுபோல, நம் தேகத்திற்கு நல்லது ; தசை வலிமை மிகும்; கெட்ட கொழுபுக்கள் குறையும்; இருதய நோயைத் தவிர்க்கலாம்; மன அழுத்தத்தைத் தவிர்க்கலாம்; நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம். தினமும் ஒரு மணி நேரம் மிதி வண்டி ஓட்டினால் 300 (cal ) எரிசக்தியை எரிக்கலாம் , மிதி வண்டியை பழுது பார்க்கும் தொழிலாளிக்கு வருமானம் ஈட்டிதரலாம்; மாசற்றச் சுழலை உருவாக்கலாம் இதற்ககு தான் ஆசைப்பட்டார் மதிப்பிற்குரிய கலாம் ஐயா , அவர் கனவை மெய்பபடுதலாம்.

       மிதிவண்டியை மதி வண்டியாக மாற்றுவது நம்மிடத்தில் தான், இன்றே அக்கம் பக்கம் செல்ல பயன்படுத்துவோம் மிதிவண்டியை !! ஓசோன் ஓட்டையை பெரிதாகப் பார்க்க விரும்பாத  மனிதராகலாம் !
சுற்றுச் சுழல் நண்பனே ! என வானம் உங்களை வாழ்த்தும் .....


 தெரிந்துகொள்வோம் : "சைக்கிளுக்குத் தமிழில் என்ன அர்த்தம் தெரியுமா ? " துவிச் சக்கர வண்டி" , துவி என்றால் இரண்டு என்று பொருள், பின்னர் மிதிக்கட்டை அமைக்கப்பட்டதால் , மிதி வண்டி என்றானது".