பாபு : என்ன அண்ணே !! இந்த நேரத்துல ??
அருள் : விரலுக்கு பொட்டு வெச்சுட்டு வரேன் !!
பாபு : புரியலயே !! ()
அருள் : vote போட்டேன் பா !!
பாபு : சூப்பர் சிங்கர் தான் முடிஞ்சிடுச்சே !! ()
அருள் : இது நாட்டுக்காக டா , பாட்டுக்கு இல்ல !!
பாபு : போடணுமா என்னா ?? அட போங்க ணா ...
அருள் : நீ ரோட்ல நடுந்து போகும்போது யாராச்சும் இங்க நடக்க கூடாதுன்னு சொன்ன என்ன பண்ணுவ ??
பாபு : சரி !!ஓட்றன்னு சொல்லுவேன் !! ()
அருள் : காமெடி யவே இருங்க டா ..
பாபு : சாரி, ணா !! உன் அப்பன் வீட்டு ரோட ன்னு கேப்பேன் ..
அருள் : சரி !! இது யாரோட ரோடு ??
பாபு : goverment து ..
அருள் : goverment ஏன் போடணும் ?? காசு எப்படி அவங்களுக்கு ??
பாபு : அவங்களோட கடமை , நம்ப வரி பணம் தானே !!!
அருள் : அவங்க கடமை யா செய்யணும் ன, உன் கடமையை செய் , vote போடு .. உன்ன மாதிரி யெல்லதெரிஞ்ச ஆளுங்க தான் டா vote போடாம சோம்பேறி தனபடுவாங்க ..
பாபு : நான் ஒருத்த போடலேன்னா என்ன ஆகபோது ??
அருள் : உரிமைக்கு கூட விதண்டா வாதமா டா !! நாட்டுக்காக இது கூட செய்ய மாட்டிய ?? கடமைய செஞ்சிட்டு , உரிமைய ரோட்ல நட ..
பாபு : கடமைய செய்ய கேளம்புரேன் .ணா !!..
அருள் : உன் கடமைக்கு மை சாட்சி டா !!
பாபு : கேட்டுகிட்டன் ணா .. கிளம்புறேன்
அருள் : காதுல கேட்ட மட்டும் போதாது , விரலையும் நீட்டனும் !!!
பாபு : சரி ங்க ணா !!! ()
அருள் :மை நமது பெருமை
vote எல்லோரின் உரிமை
அவன் கிளம்பிட்டான் !! நீங்க ???
No comments:
Post a Comment