வேலைத்தேடி அலையும் பல திறமைசாலிகளில் ரவியும் ஒருவன் இவனின் மூன்றாவது கை அலைபேசி, எல்லா நேரங்களில் தலை குனிந்தே நடக்கும் அடக்கமான ஆ(ண்)ன் லைன் காரன். இப்படியாக நடந்து செல்லும் போது தலை நிமிர்ந்து நடந்து வந்தான்.
" டேய் ரவி!.." என அழைக்க
புன்சிரிப்புடன் தலை நிமிர்ந்த ரவி "முருகா ...." என்றான் .
"என்னடா ! மொபைல பாத்து சிரிச்சிகிட்டே இருக்க ??"
" 'வாட்ஸ் ஆப்' பிரெண்ட்ஸ் முருகா.. ! நீ என்ன ஏரியா பக்கம் ஆளே காணோம்"
" ஒரு இலக்கிய திருவிழா கோயம்புத்தூர் ல நடத்து அதுக்கு போய் இருந்தேன் டா "
" கலக்குற முருகா, புது பத்திரிக்க வேல எப்படி போகுது ?, அப்பறம் உன் நம்பர் மிஸ் ஆயிடுச்சு குடு டா , உன்னையும் நம்ப ஏரியா வாட்ஸ் ஆப் குரூப் ல ஆட் பண்ணிடுறேன்"
" நல்லா போது ரவி! நான் 1100 மொபைல் வெச்சி இருக்கேன் அதுல அந்த எதுவும் இல்ல!! (சிரிப்புடன்)"
"அட பாவி ஆதாம் ஏவாள் மொபைல் டா அது !!! செரி மிஸ்டு கால் கொடு நான் நம்பர் சேவ் பண்ணிடறேன்"
"(சிரித்துகொண்டே) மொபைல் எடுத்துட்டு வரல , ரெண்டு நாள் சுவிட்ச் ஆப் பண்ணிட்டேன் டா, சொல்றேன் நம்பர் நோட் பணிக்கோ 9*********6"
"அட கடவுளே முருகா இந்த லூசு முருகன எப்படியாவது காப்பாத்து, டேய் 1100 வெச்சி இருக்கறதே மகா குற்றம் அதையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்ட ! ஏண்டா ?" என்று ரவி கேட்க.
" ரெண்டு நாள் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஒரு நாள் மொபைல் இல்லாம இருந்து பார் ! நீ அவ்வளோ மகிழ்ச்சிய இருப்ப ! யாருக்கும் பதில் சொல்ல வேணாம் , நட வண்டியில்லாம ஒரு குழந்தை சுதந்தரமா நடக்கும் போது வர மகிழ்ச்சிய நீ அனுபவிக்கலாம் !!! நான் கிளம்புறேன் ரவி , பாக்கலாம் ! பாய் !!!"
"பாக்கலாம் முருகா ! பாய் "
ரவி , முருகனுடைய சித்தாந்தத்தில் மூழ்கி தானும் ஒரு நாள் அலைபேசி இல்லாமல் வாழ்ந்து பார்கலாம் என்ற முடிவை எடுத்தான், மறுநாள் தன் அலைபேசியை அணைத்தான். ஒரு மணி நேரம் கூட கடக்க வில்லை அவன் மனதில் யார் "வாட்ஸ் ஆப் பில்" செய்த அனுப்பிருப்பார்களோ ? என்ற ஆர்வமும் பதட்டமும் அதிகரித்து கொண்டே இருந்தது, இருபினும் விடா பிடியோடு இருந்தான் ரவி. முருகன் சொன்னது போல் ரவி க்கு ஒரு வித சுதந்திரம் கிடைத்தது, அவன் கடைத்தெருவிற்கு நடக்கும் போது இவளோ நாள் இருந்த மரத்த யார் வெட்டி இருப்பா ? இவளோ அழகான குட்டி நாய் இங்க எப்படி வந்தது ? என பல கேள்விகளுடன் நடக்க ஆரம்பித்தான், அடுத்த நாளில் இருந்து அலைபேசி அணைக்காமலே இதையெல்லாம் ரசிக்க வேண்டும் என்ற சிந்தையும் தட்டியது. இந்த நாள் அவனுக்கு அற்புதமான ஞானம் பொங்கிய நாளானது !!
" செரி , மொபைல சுவிட்ச் ஆன் பண்ணுவோம் " என்று ரவியின் மனக்குரல் சொன்னது.
பெரிய விதத்தில் அவனுக்கு குறு செய்தியோ அல்லது மற்ற செய்திகளோ வந்தாற்போல இல்லை.
மறு நாள் காலை யாருக்கோ ரவி அலைபேசியில் அழைத்தான்.
" சார்! நான் ராம் தம்பி ரவி பேசுறேன் !! இன்டர்வ்யு கால் வரும்னு சொன்னீங்க வரவே இல்லையே "
" நேத்து பூர உனக்கு கம்பனில இருந்து கால் பண்ணி வேறுத்துட்டாங்க ! இன்னொரு ஆள எடுத்துட்டாங்க !! போன வை பா .."
" தெரியாம சுவிட்ச் ஆப் பண்ணிட்டேனோ" என்ற மைண்ட் வாய்ஸ் எதிரொலித்தது.
ரவி மட்டும் அல்ல எல்லோரும் எதையாவது பார்த்து உடனே சூடு போட்டுக்கொள்கிறோம், நமக்கு இது ஏற்புடையதா என சிந்திக்க தவறுகிறோம். சூடு போட்ட தழும்பு அவமானங்களாக , ஏமாற்றங்களாக , தோல்வியாக இருக்கிறது.
தன்னிலையை உணருவோம் !!
பூனை பூனை தான் புலி புலி தான் !!