Translate

Friday, June 27, 2014

பொய் கால் குதிரைகள்

செய்தொழில் , உற்பத்தி துறை, சிறு வணிகம் என பல தொழில்களைத் திண்றது அந்நிய முதலீடு. FDI , WALL MART என பல சக்திகள் நம் தொழிலாளர் வர்க்கத்தை கடற்கரையில் இருக்கும் உழைப்பாளர் சிலை போல் உயிரில்லாமல் செதுக்குவதற்கு ஆயுத்தமாக இருகிறார்கள் என்பதில் ஐய்யம் சிறிதும் இல்லை. அதன் விளைவாக , நமது ஊர் ஒரு குறுப்பிட்ட சமூகம் மட்டுமே வாழும் நகரமாக நரகமாக மாறிவிட்டது -அது பணக்காரச் சமூகம் ! ஒரு சாமான்யத் தொழிலாளியால் இங்கிருக்கும் Mall களை வேடிக்கைத் தான் பார்க்க முடியும் , அவனும் சக மனிதன் என்பதை நாம் மறந்து விட கூடாது, இது கடந்த 15 ஆண்டுகளின் நடத்து விபரீதம் என்றே நான் சொல்லுவேன், தகவல் தொழில் நுட்பத்தால்(IT) நடந்த விபரீதம், BPO,IT நண்பர்கள் அடுத்த Hike க்குகாகத் தவம் கிடப்பதும், IT நிறுவனத்தில் வேலைச் செய்யும் UDS தொழிலாளி , Nepal/Orissa/WB security அடுத்த வேளை சோறுக்காக ஏங்குவதைப் பார்த்தும் ; Hike என்னக்கு கம்மிய போட்டாங்க ன்னு போலம்புவது அவலம் தான் ..
ஒரு காலத்தில் கோடி கட்டிய உற்பத்தி நிறுவனம் Binny Millls/Dunlop கதி தான் இந்த IT க்கும் , BPO களுக்கும் இன்னும் சில வருடங்களில் !!
இவர்களால் தான் Petrol,diesel, வீட்டு வாடகை எல்லாம் ராக்கெட் இல்லாமல் விலைவாசி விண்வெளியை தொட்டு விட்டது ,இது நிதர்சனமான உண்மை. பெரிய மரத்தின் வேர்கள் சின்ன சின்ன செடிகளை வளரவிடாது அதே போல் ஒரு சாரார் மட்டுமே வளர்ந்தால் அது குறை... இந்த பாகுபாடு ஒழிய வேண்டும், பணத்தின் ஆட்டத்தை காலத்தின் வாள் ஊனமாக்கும்.

முண்டாசு இல்லாத மீசைகள் நிறைய உள்ளார்கள், வருவோம் இனி ஒரு விதி செய்வோம் !!!
வாழு ! வாழ விடு , அலப்பரைச் செய்யாதே !!!


ராஜா sirrrrrrrrrrrrrrrr எப்பயுமே நீங்க தான் !!!

வெற்றியை நெருங்கவில்லை,
சந்திக்கவுமில்லை
தோல்வியின் உரையாடல்கள்
நீண்டு செல்கிற நேரமா ,
இல்லை அனுபவத்தின் உரமா !
சோகத்தை பகிர ஆளில்லை
கேட்க காதுகலில்லை !
காலத்தின் எச்சமாய்
அவமானத்தின் உச்சமாய்
கனவின் மிச்சமாய் சுத்திகொண்டிருக்க ;
மாதம் இறுதியில்
சேடு கடையில் தனிமையாய் இருக்கும் ஏழையின் தங்கம் போல்
இளையராஜா என்னை/நம்மை மீட்டுச் செல்வார் !!!

நிறமிழந்து நிறமாறும் கிளிகள்

ராஜீவ் காந்தி சாலையின் பெரிய பெரிய கூண்டில்
மாட்டிக்கொண்ட பல கிளிகள்,
அமெரிக்கா மற்ற இடத்தில இருந்து வரும் சீட்டிக்குளை மட்டுமே எடுக்கிற பழக்கமும் ,
வேறு எங்கு பறந்தாலும் பக்கத்தில் உள்ள ஒரு கூண்டில் தான் அடைபடும்,
பெண் கிளிகளின் முகமூடியும் , கண்ணாடியும், சாக்க்சும்,
ஆண் கிளிகளின் குடைகளும்,
100 மீட்டர் நடக்க 60 ரூபாயும் ,
காலில்லாத பிச்சைகாரனுக்கு பை பையும் ,
இரண்டாவது காதலனுக்கு , நான்காவது காதலிக்கு குட் பையும் ,
ஐக் பேப்பர் ஆனா நவீன திருவோடும் ! ,
தேவை இல்லாத ஆங்கிலத்தின் மைகேல் ஜாக்சன் நடனமும்,
டாமினோஸ் , கே.எப். சி க்கு வைக்கும் மொய்யும்
வியப்பே !! சத்தியமாக வியப்பே !!
இறக்கை இழந்து முதிர்ந்த கிளிகளுக்கு கட்டாயமாகச் சுதந்திரம் கிடைக்கும்
ராஜீவ் காந்தி சாலை உலகம் இல்லை என்று உணர்ந்தாலும்
பறக்க தேம்பில்லையே !
இதுவும் வியப்பே !! சத்தியமாக வியப்பே !!
இவர்களின் வாழ்கை முழுவதும் நடிப்பே !!!

Wednesday, June 25, 2014

பொறியியலும் சூழலும்

'2013 இல் 80,000 சீட்டு , 2012 ல 50,000 சீட்டு' என்று ஒரு நபர் கூறுகையில் "என்னப்பா இவ்வளோ கம்மியா சீட்டு போட்டிருக்க ?" என்றார் இன்னொருவர். இதற்கு முதல் நபர்  "அட நீங்க வேற இது இன்ஜினியரிங் காலேஜ்ல காலியா இருக்கிற சீட்டுங்க! " என்றார்.
    "வருடாவருடம் சுமார் 50,000 த்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பார்க்கலாம், இது  காலி இடங்களுக்கான சராசரி நிலவரம். அப்படி என்றால் பொறியியல் படிப்பிற்கான மவுசு குறைந்துள்ளதா ? என்று கேட்டால் , அது சந்தேகம் தான் ! பெற்றோர்கள் தம் பிள்ளைகள் பொறியியல் படிப்பில் தாக்குப் பிடிபர்களா ? அவர்களின் கனவு என்ன ? விருப்பம் தான் என்ன ? என சிந்திப்பவர்கள் வெகு குறைவு. பாதிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டவர்கள்  சமூகத்தில். சமூகம் என்ன சொல்லும் தமது பிள்ளைகளைப்  பொறியியல் சேர்க்கவில்லை என்றால் ? என்ற கேள்விக்காக எதிர்கால பதில்களைத் தொலைக்கிறார்கள் பிள்ளைகள் ".

    2004 இல் தமிழ்நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகள் 250 க்குள். ஆனால் , இன்று 570 பொறியியல் கல்லூரிகள் , இதில் 520 கல்லூரிகள்   அண்ணா பல்கலைகழகத்தோடு  இணைக்கப்பெற்றவை. கடந்த பத்து ஆண்டுகளில் கல்லூரிகளின் எண்ணிக்கை  100 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வருடாவருடம் 50,000 த்துக்கும் மேல் காலி இடங்கள் என்று கூறுவது குறைவுதான் ஏனென்றால், கல்லூரிகள் அதிகரித்துவிட்டன  மற்றும் சராசரியாக வருடத்திற்கு 8 லட்சம் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகிறார்கள், குறிப்பிடும்  படியாக 90 சதவிகிதம் மாணவர்கள்  தேர்ச்சி பெறுகிறார்கள். இயற்பியல் , வேதியல் , கணிதம் , கணினி/ உயிரியல் இந்த பிரிவை தேர்ந்தெடுத்த பெரும்பாலனோர் பொறியியல் தான் சேருகிறார்கள்.
 
       2005-2006 ஆம் ஆண்டு பொறியியலுக்கான நுழைவு தேர்வு  (TNPCEE-Tamil Nadu Professional Courses Entrance Examination) இறுதியாக நடை பெற்றது,இதில் வேதியல் , இயற்பியல் மற்றும் கணிதம் என மூன்று பாடங்களில் இருந்து ஒரு மதிப்பெண்  கேள்விகளாக ஒவ்வொரு பாடமும் 50 மதிப்பெண்கள் கொண்டது. இந்த தேர்வின் முடிவும்  பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வின் மதிப்பெண்களையும் ஒன்று சேர்த்து 'கட் ஆப்' முறையில்  கணக்கிடுவார்கள், கிராமப் புற மாணவர்களை மனதில் கொண்டு, அவர்களின் பொருளாதாரமும் , இத்தகைய தேர்வின் வெளிபடுத்துதல் குறைவாக இருக்கிறது என்று கருதி (TNPCEE ) நிறுத்தப்பட்டது. 2006 க்கு பிறகு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில்  அடிப்படையில் கலந்தாய்வும் , பட்டியலும் உருவாகிறது. கோழி பண்ணையில் ஊசிப் போட்டு வளர்க்கும் ப்ராய்லர் கோழிகள் போல் , பள்ளிகளில்  மாணவர்களை முட்டி மோதி பன்னிரெண்டாம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கும் மேல் எடுக்கச் செய்கிறார்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பொறியியல் சேர்கிறார்கள் , சிலர் படித்து முடிக்க சிரமப்படுகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

      மாணவர்களின் விருப்பமும் கனவும் தனிப்பட்ட முறையில் இருக்க வேண்டும் ; தனது நண்பர்கள் பொறியியல்   என்று  சேருபவர்கள் ஏராளம் , தன சொந்தத்தில் யாராவது பொறியியல் படித்தால் தீர்ந்தனர்   பிள்ளைகள்.  பெற்றோர்கள் வீம்புக்கும் வறட்டு கௌரவதுக்கும் பிள்ளைகள் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். இவ்வாறு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உண்டு , ஆசிரியர்கள் மாணவர்களிடம் பதினோராம் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் போதே ஒரு நல்ல விழிப்புணர்வு  அளிக்க வேண்டும். பொறியியல்  அல்லாத பிற படிப்புகளின் தரம், வேலைவாய்ப்பு பற்றியும் ஒரு எதிர்கால முன்னோட்டம் தேவைப்படுகிறது. ஆசிரியர்களின் கடமை மாணவர்களுக்குப் பாடங்களைக்  கற்றுக் கொடுப்பது மட்டுமல்ல, எந்தத் துறைக்கு எந்த மாதிரியான  படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும் , எவ்வாறான வேலைவைப்புகள் பொறியியல் மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளுக்கு உண்டு என மாணவர்களிடம் உட்பர்வை காண்பிப்பது நல்லது, பொறியியல் மட்டுமே வழி என நினைக்கும் மாணவர்களுக்கு மற்ற துறையின் மகத்துவத்தை எடுத்து கூற வேண்டும். பள்ளி நிர்வாகங்களுக்கு எப்படியாவது பொதுத் தேர்வுகளில் 100 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் ஆசிரியர்கள் அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள், இதனால் கல்வியின் நிலை வெவ்வேறு துறைகளுக்கான விழிப்புணர்வைப் பெறாமல் இருக்கிறது .  மாணவர்களிடம் கல்வி , வேலைக்கான பார்வையை தெளிவுபடுத்துவது  ஆசிரியர்களின் தார்மீக கடமை.
  
      பொறியியலுக்கான மாணவர்கள் பெரிதளவில் விருப்பம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பதன் முக்கிய பங்கு பெற்றோர்கள் தான், சமூக அழுத்தத்திற்காக பொறியியல் துறையில் தம் பிள்ளைகளைத் திணிக்கின்றனர் என்பது கசப்பான நிகழ்வு. இதனால் கல்லூரி எண்ணிக்கை அதிகரிக்கிறது , எந்தக்  கல்லூரியில் வளாக நேர்காணல்  அதிகம் கொடுக்கிறதோ , எந்தக் கல்லூரி அதிகம் தேர்ச்சி விகிதம் கொடுக்கிறதோ,  அதுவே சிறந்த கல்லூரி என்பது பல பெற்றோர்களின் எண்ணம், இம்மாதிரியான கல்லூரியில் மொட்டுகளாக சேர்ந்து , மலராக பூத்து வெளியே வரும் மாணவர்களின் அனுபவத்தைக் கேட்டால் , ஒரு புறம் வியப்பும் வருதத்மும் மேலிடும்.எல்லாம் எதற்கு ? பொறியியல் பயின்றால் அதிக வருமானம் என்ற அடிப்படை எண்ணம் தானே . "பணம் மட்டும் தான் வாழ்க்கையா" என்ற சிந்தைனைக் கேள்வி  எழும்.

      கடந்த வருடங்களில் பொறியியல் சார்ந்த பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பெரும்பாலும் தாங்கள் பயின்ற துறையில் வேலை செய்வதில்லை, வளாக நேர்காணலில் தகவல் தொழில்நுட்பம் மட்டுமே அதிகபட்சமாக இருந்துள்ளது, BE (EEE, ECE,E&I, Mechanical, Automobile,chemical, Aeronautical.etc) இந்தத் தொழிற்கல்வியைச் சார்ந்தவர்களுக்கு கல்லூரிகள் ஏற்படுத்தும் வேலைவாய்ப்புகள் வெகு குறைவாக உள்ளன, மேலும் வளாக நேர்காணலில் தொழிற் சார்ந்த வேலைவாய்ப்புகள் கல்லூரிகள் முயற்சி செய்து கொண்டு வருவதில்லை இன்னும் சில தருணங்களில் வளாகமும் இல்லை வளாக நேர்காணலும் இல்லை. தொழிற் சார்ந்த கல்வி பயின்றவர்கள் தங்கள் வேலையை  தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ந்தெடுக்கிறார்கள், ஏனென்றால் கல்லூரிகள் பத்துக்கும் மேற்பட்ட பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தான் வளாக நேர்காணலில் பங்கேற்கிறது.
வேலை கிடைத்தால் போதும் என நினைக்கும் மொட்டுகளைக் குறை கூற  முடியாது. BE (CSE), B.Tech(IT) பிரத்யேகமாக படித்தவர்களுக்கும்  வேலைக்கு போராடும் நிலைமை, இவர்கள் தொழிற் சார்ந்த பணிக்கு நுழைய முடியாது ஆனால் தொழிற் கல்வி பயின்றவர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் நுழைய முடியும், ஆகவே  வாய்ப்புகள்  பறிக்கப்படுகிறது, ஒரு சாரார் மட்டுமே வளர்கிறது , இது பின்னிடைவைத் தான் கட்டுகிறது.கல்வி சமூதாயத்தை மேம்படச் செய்ய வேண்டும் , ஆனால் அனைத்து தரப்பினரும் வியாபாரமாகவும் பணம் பெருக்கும் பொறிகளாகவும் எண்ணுகின்றனர். தொழிற்கல்வி படித்தவர்கள் அதிலே வேலைப் பார்த்தால் நிச்சயமாக சம நிலையில் எல்லாத் துறையும் மேலோங்கும், கல்லூரி நிர்வாகத்தினர் விளம்பரத்துக்கு காட்டும் விருப்பம் தொழிற்கல்வி வேலை வாய்ப்பை உருவாக்குவதில் காட்ட வேண்டும் .பொறியியல் சேரும் மாணாக்கர்கள் தாம் படித்த படிப்பில் வேலைபார்த்தால் மிகவும் நன்றாக இருக்கும் . சமூகம் முன்னேறும் நாடு வளரும் , பொருளாதாரம் மேம்படும் .
        சமீபகாலமாக பொறியியல் சார்ந்த படிப்பைப் படித்து விட்டு வங்கி வேலைக்கு முயற்சிப்போர்கள் அதிகம், அதே வேளையில் வங்கி வேலையில் இருக்கும் BE க்களும் அதிகம்.இவர்களது  4 ஆண்டு உழைப்பின் விலை திருமண பத்திரிககையில் இடும் மாப்பிள்ளை டிகிரி, இன்னும் சில மக்களுக்கு மாப்பிளை டிகிரி தான்.

           மக்களுக்கு தொலை நோக்குப் பார்வை வேண்டும் , கல்வியை வணிகமாக  பார்க்காமல்  சமூகத்தின் விதையாக விதைக்க வேண்டும். அவன் சட்டை எனக்கு பத்தாது என நினைக்கும் மூளை , ஏன் அவன் எடுக்கும் படிப்பை நானும் தேர்ந்தெடுப்பேன் என்று சிந்திக்க வேண்டும் , எல்லாம் எதையோ பார்த்து  சூடுபோட்டு கொள்ளும் ஒரு கதை தான் இது .சமூகத்திற்காக வேடம் போடுவதை முன்னிருத்தி தர்க்க சிந்தனைகளைத் தவற விடுகின்றனர் . பொறியியல் படிக்க நல்ல மதிப்பெண்ணும் , மனமும்  இருந்தால் மட்டும்  போதாது பணம் வேண்டும் என்று நடுதரவாசிகளுக்கும் , ஏழைகளுக்கும் ஒவ்வொரு வருடமும் பொறியியல் கல்லூரிகள் சொல்லாமல் சொல்கின்றன. பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.
           கல்வி நிலையின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் இந்த வகையில் விழிப்புணர்வு இல்லை என்றாலும் , கல்விச் சூழல் குறித்து கல்வியாளர்களைக் கேட்டு ஆலோசனை பெறலாமே ! வெறும் பணத்திற்காகவும் ,படோடாப வாழ்க்கைக்கும் தான் கல்வி என்ற மாயை அகல வேண்டும் , இதற்கு உரிய வழிகளை அறிஞர் பெருமக்களும் , கல்வியாளர்களும் செய்ய வேண்டும், செய்வார்கள் என்று நம்பிக்கை கொள்வோம் !!!

" தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்." 

Wednesday, June 11, 2014

மற்றவர்களுக்காக வாழ்வது சுகம் தான் !

     ஒரு எறும்பு பெரிய சர்க்கரை கல்லை சுமக்க முடியாமல் சுமந்து சென்று கொண்டிருக்க, ஓரமாக இன்னொரு எறும்பு "ஹலோ ரமேஷ்" என்றது, தன் சுமையை இறக்கி வைத்து "ஹலோ சுரேஷ் ! என்ன பா சும்மா படுத்துகுட்டு கால் மேல கால் போட்டு ஹாய் யா இருக்க".
  அட போ ரமேஷ் , "என் சொந்தகாரங்க வெள்ளத்துல செத்துட்டாங்க" .
 எப்படி என ரமேஷ் எறும்பு கேட்டான் ?
 " ஒரு ராட்ச்சஸ மனுஷன் கிணற கவுத்துட்டான், அதுல என் லவ்வர் ஆஷா , மச்சான் ராஜா எல்லாம் அடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க" என அழுதது சுரேஷ் எறும்பு.
   அட பாவமே !  கிணறுனா என்ன பா ?
  "அதான் பா மனுஷனுங்க தண்ணீர் குடிபாங்கலே கும்லரோ டம்ப்லரோ!  உன்ன மாதிரி சாப்பாடு தேட போய் தான் இப்போ பேய் ஆயிட்டாங்க, அதனால தான் நான் வெறுத்து போய்ட்டேன் , இனி ஹாய் யா இருக்கலாம்னு முடிவி பண்ணிட்டேன் " என்றான் சுரேஷ் எறும்பு .
   "என்ன சுரேஷ் இது என்ன புதுசா , அடுத்த செக்கேன்டே நான் கூட சாவலாம், அத பத்தி யோசிக்கமா நம்ப ஆளுங்களுக்கு இந்த சாப்பாடு பயன்படுத்தா அது போதும், வா பா அங்க ஒரு சர்கர கல் இருக்கு தூக்கிட்டு வா யாருக்காவது பயன்படட்டும் சும்மா இருந்து போற உயிர் வேல செஞ்சி போகட்டும் உன் லவ்வர் ஆஷா மாதிரி" என்றான் ரமேஷ் எறும்பு .
   "சுயநலமா இருந்துட்டேன் ரமேஷ் , சரி போறேன் பா ".

 "போயிட்டு ஒரு லேப்ட்டு திரும்பு ஓரமா இருக்கும் பாரு"  என்றான் ரமேஷ்.

    சரி என்று சுரேஷ் சொல்லிட்டு சர்க்கரை கல் எடுக்க போனான்.
 ரமேஷ் மீண்டும் அந்த பெரிய சர்க்கரை கல்லை சுமந்து சென்றது, போகும் வழியில் ஒரு கார் அதான் மீது ஏறியது, "ராட்ச்சஸ மனித குழந்தையின் விளையாட்டு போல என நினைத்து இறந்தான் ரமேஷ்".

    சுரேஷ், ரமேஷ்  சொன்ன இடத்தில சர்க்கரை கல்லை எடுத்து தன் மக்களுக்கு சேர்க்கலாம் என சிந்தித்து நகர்ந்தான்.
" எவளோ சீக்கிரமா ரமேஷ் ரீச் ஆயிட்டான் போல , செம்ம ஸ்பீடு பா அவன் " என்று கூறியவாறு அப்பாவியாக நகர்தான் சுரேஷ்.

"எறும்புக்கு மனித உயர சிந்தனை , மனிதனுக்கு எறும்பு உயர சிந்தனை "

மற்றவர்களுக்காக வாழ்வதும் , உழைப்பதும் சுகம் தான்..      
          

Sunday, June 1, 2014

மகிழ்ச்சியின் துளிகள்

இவர்கள் மொத்தம் 8 உறுபினர்களாக எங்களது வீதிக்கு ஆதார் இல்லாத ஆதாரங்களாக திரிந்து கொண்டிருந்தார்கள்.  அண்டை  வீட்டில் லப்ரடோர் என்ற ஒரு பணக்கார வகை பிராணியை வாங்கினார், வீதியில் இருக்கும் ஆதரவற்ற ஜீவன்களின் பசியின் குரல்  கேட்டுக்கொண்டே இருந்ததால்  தனது லாப் ஆல் தூங்கமுடிய வில்லை என்பதால்  மாநகராட்சி வண்டியில் அந்த ஆதரவற்ற 5 ஜீவன்களை துன்புறுத்தி சவாரி செய்யவைத்த  காக்கிகளுக்கு 500 ரூபாய் லாபம், எனக்கு  மகிழ்ச்சியின் நஷ்டம் !
       என் RX 100 சத்தம் இவர்களுக்கு பொறை வாசமாக மாறும், 8 பேரும் வால்களை விசிறி போல் வீசுவார்கள் ,பக்கத்துக்கு வீட்டு நாயின் சட்டை பிடித்து மீதமுள்ள 3 ஜீவன்களுக்கு  RX 100 சத்தத்தை கேட்கவைத்தேன், ஒரு மன அமைதி கிடைத்தது. இந்த வாரம் இரண்டு புதிய உறுப்பினர் சேர்ந்தார்கள் . கடவுள் நம் மனதை  மகிழ்ச்சியின்    துளியால்  தினமும் தெளித்துகொண்டே இருக்கிறார் ஆனால் சிலரே உணர்வார்கள். நான் உணர்கிறேன் , நீங்களும் உணருங்கள் ஆதரவற்ற இந்த ஜீவன்கள் போல் பல வீதியில் உண்டு . 2 ரூபாய் பொறை, மனசுக்குள் மகிழ்ச்சியின் நிறை !
        சின்ன வண்டு தன் தாயிடம் பாலை உண்ணும்போது வாழ்கையின் பல அர்த்தங்களை உணர வைத்தது , அவனால் கால் ஊனக் கூட முடியவில்லை ஆனால் அவன் தன் தாயிடம் விளையாடியபோது என் மழலையை உணர்த்தினான்; இந்த படம் உங்களையும் மயிலிறகாய் வருடும் என நம்புகிறேன்; நீங்கள் இனி உங்கள்  வீதி ஜீவன்களை பார்த்தல்  உங்கள் வண்டி சத்தம் பொறை வாசமாக மாற வேண்டுகிறேன், உங்கள்ளுக்கு தெரியும் ஆனால் ஞாபகம் ஊட்டுகிறேன்.
     என் மகிழ்ச்சியின் துளிகள் உங்களிடம் தெளிக்கிறேன், நீங்கள் மற்றவர்களுக்கு மழையாய் தூவுங்கள் !!!!