Translate

Sunday, November 13, 2016

Independent Song

காதல், மாய அலையின் மிதவை தானோ !
நானோ, தூயவலையில் சிக்கிய மீனோ !
உன் நினைவில் துள்ளிக் குதிக்கும் மானோ !
உன் பேரை பூஜை தான் செய்வேனோ !!
ஏனோ ஏனோ நெஞ்சம்.
தானே தானே கெஞ்சும்
உன் அன்பின் வாசல் வந்து கொஞ்சும் தஞ்சம்;
என்னும் பாதி நீயே
உன்னுள் பத்தி நான்,
சிறு பொழுது, நெடு நாட்கள்
கடந்து போவோம் !!
ஐயம் வேண்டாம் பெண்னே
மகிழ்ச்சி உந்தன் முன்,
நரைக் கூடி கிழப்பருவம் ஏய்தும் தாண்டி !!

பேசா  உரையாடல்கள் உன் கருவிழியில்
பௌர்ணமி வெளிச்சம் காதலின் வழியில்,
உன் சிமிட்டல் என் துன்பங்களுக்கு மிரட்டல்
உனை காண அங்கம் துடிக்குதடி
உன் மடியில் தலை சாய்ந்தால் போதுமடி
இது போதுமடி,
தூரமான நெருக்கமும்
நெருக்கமான தூரமும்
நெஞ்சில் பிசுபிசிப்பை அதிகமாக்குதே
காதலின் அடர்த்தியில்
அன்பின் நிழலில் பயணிப்போம்
தொடுவானம் மீறி  செல்வோம்
இது போதுமடி....

Monday, November 7, 2016

~ குறுங்கதை - பக்ஸரின் வெற்றி ~


அந்த வட்டாரத்தில் மூன்று குதிரைகள் இருந்தன பக்ஸர், ரோவின் மற்றும் சீசர். மூன்றுமே நெருங்கிய நண்பர்கள், அவ்வட்டாரமே குதிரைகளின் உலகம், புல் தேடுவது மட்டுமே சீசரின் வேலை அது கண்டுபிடித்து மற்ற குதிரைகளுக்கு சொல்வது அதில் நல்ல வருமானம், தன் வேலைக்கு உறுதுணையாக பக்ஸரும் ரோவினும் அழைத்துச் செல்லும் , நிரந்தர வருமானம் என்றாலும் பாக்ஸருக்கும் ரோவினுக்கும் அதீத ஈடுபாடுயில்லை, அதற்களுக்கு பந்தயங்களில் கலந்துக் கொண்டு ஓட வேண்டும் என்பது அபிலாஷையாக இருந்தது நாளைடைவில் சீசருடன் புல் வேலைக்கு செல்லாமல், குதிரைகள் நடத்தும் பந்தையங்களைப் பார்க்க சென்றது, சீசர் எவ்வளவோ சொல்லியும் அவ்விரண்டும் கேட்டக்கவில்லை. பக்ஸரும் ரோவினும் பந்தையக் குதிரைகளைப் பார்த்து மிரண்டது. சீசர் அவ்வப்போது சொல்லும் நேரத்தை வீணடிக்காதீர்கள்,அதெல்லாம் பெரிய இடத்து குதிரைகள் வலிமையானது. அதை சற்றே மதிக்காமல் பந்தயத்தை குதிரைகள் அணுகுமுறையை வேடிக்கைப் பார்த்தது.
ஒரு நாள் பந்தயத்தின் ஒருங்கிணைப்பாளர் வயதான குதிரை ஜாக் மிகவும் வருத்தத்தோடு இருந்தார், அன்று பந்தயத்திற்கு இரண்டு குதிரைகள் வரவில்லை, ஜாக்கிற்கு மொத்தம் பத்து போட்டியாளர்கள் என கணக்கு காட்டி ஆகவேண்டும் அப்போது பக்ஸரையும் ரோவினையும் அழைத்து கலந்துக் கொள்ள சொன்னது மேலும் நுழைவு பணம் வேண்டாம் ஓடினால் போதும் என்றும், வெற்றி பெற்றால் உங்களுக்கு கௌவரவ அந்தஸ்தும் தினம் மூன்று வேலை செழிப்பான உணவு என்றும் சொன்னது. ஒரு நிமிடம் என ரோவின் பக்ஸரை அழைத்து வெளியே சென்றது, " இதோ பாரு பக்ஸர் அவன் கணக்கு காமிக்க நம்ம கூப்பிட்றான், அதுவுமில்லாம நம்ம தான் கடேசி வருவோம் மத்த குதிரை எல்லாம் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கு வேண்டாம்னு சொல்லிறலாம் வா" என்றது ரோவின். "இல்ல வா கலந்துக்கலாம்" என பக்ஸர் சொல்ல. "அசிங்கமாய்டும் நான் வரல " என கூறியது ரோவின்.
பக்ஸர் உள்ளெ சென்று நான் மட்டும் கலந்துக் கொள்கிறான் என்றது, உடனடியாக இன்னொரு குதிரைக்கும் ஏற்பாடு செய்தது ஜாக். பக்ஸர் கலந்து கொள்கிறான் என்ற செய்தி கேட்டு அவனுடைய வட்டாரத்தில் இருக்கும் அனைவரும் வந்தனர் சீசர் உட்பட, " நான் உஷாரா கலந்துக்கள இல்ல இவன் தோக்க போறா மாறி நானும் .." என சீசரிடம் கூறியது ரோவின்.
பெரிய ஆரவாரம், பத்து குதிரைகள் ஒரே நேர் கோட்டில் நின்று கொண்டிருந்தது பக்ஸரை தவிர எல்லாம் திடமாக தெரிந்தது, எல்லாம் பெரிய இடத்து குதிரைகள். ஒவ்வொரு பெயர் சொல்லும் போதும் பெரிய சப்தமும் கர ஒலியும், பக்ஸர் பெயர் அழைக்கும் போதும் நிசப்தத்தின் உச்சம், 1 .. 2... 3..... ஓட்டம் ஆரம்பித்தது , எல்லாக் குதிரைகளும் வீறு கொண்டு ஓடியது, பக்ஸரும் சீறியது. மொத்தம் 10 சுற்றுகள், பக்ஸர் முதல் ஐந்து சுற்றில் எட்டாவதாக ஓடியது, மேலும் முயற்சி செய்தது அது விடுவதாக இல்லை, பெரிய வீரியத்துடன் இன்னும் வேகம் பிடித்தது, அங்கிருப்பவர்கள் எல்லாரும் சத்தம் கூச்சலின் வாயிலாக ஊக்கப் படுத்தினார்கள். பத்தாவது சுற்று வந்தது மிகவும் பரபரப்பான சூழல்.... யாருக்கு அந்த பத்தாவது இடம் என வெளியே நடந்து போட்டியில் பக்ஸர் ஜெயித்தது.ஓட்ட பந்தயத்தில் பத்தாவதாக தோற்றது, இதை கண்ட ரோவின் தலையில் அடித்து "இதற்க்கு தான் நான் சொன்னேன்.." என்றது.
பக்ஸர் வெளியே வர, சீசரும் ரோவினும் இருந்தது "நான் சொன்னேன் இல்ல... தோத்துடுவ வேணாம்னு " என சொன்னது ரோவின்.
" முயற்சி பண்ணி தோத்தா பாடமாகும், முயற்சி பண்ணாம இருந்தாதான் தோல்வியாகும், நான் என் முயற்சி ல ஜெயிச்சிட்டேன் ரோவின், ஒரு இலக்க ஆசை மட்டுமே பட கூடாது அதுக்கு ஆயுத்தமு ஆகணும், வெற்றி கிட்ட தான் இருக்கு முயற்ச்சியும் ஊக்கத்தையும் தான் தள்ளி வைக்கிறோம், வா போகலாம்" என்றது பக்ஸர்.
தலை குனிந்தது சீசரும் ரோவினும்.

Monday, September 5, 2016

ஊக்கப்படுத்தாமல் விடுங்கள் ஆனால் ஊனப்படுத்தாதீர்கள்

~ ஊக்கப்படுத்தாமல் விடுங்கள்
ஆனால் ஊனப்படுத்தாதீர்கள் ~

எல்லோரும் ஒரு திசையை நோக்கி பயணிக்கையில் சமூகம் அதை ஆதரிப்பின் அது சரியாகுமா ? தனக்கான வாழ்வை சீனா களிமண்ணைப் போல் சமூகத்திற்காக உருமாற்றுவது அத்திசையிலே! பிறந்தோம், 'விந்தை' செய்து பெற்றோம், மலம் கழித்தோம், பணத்தை பார்த்தோம், சேர்ந்தோம் - அத்திசையிலே! வாழ்வதற்கும் பிழைப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.நீங்கள் அத்திசையில் பயணிப்பதால் மற்றவர்களையும் அவ்வாரே வாருங்கள் என்பது சொல்வது துணை தேடும் செயல். இக்காலக்கட்டத்தில் யார் வேண்டுமானாலும் பி.பீ.ஓ, தகவல் தொழில்நுட்பதிலோ அல்லது செய்முறை பணியிலோ ஜொலிக்கலாம், ஆனால் மிகவும் அரிதாக சிலரை சிறுகதையாசிரியனாய், கட்டுரையாசிரினாய், புகைப்பட கலைஞனாய், வீதி நாடக நடிகனாய், நடிகனாய், இயக்குனராய், ஓவியனாய், கவிஞராய், பாடகனாய், எழுத்தாளராய் ,விளையாட்டு வீரனாய் பார்க்கமுடியும், இவர்களுக்கு பொருளீட்டுவது சிரமம் ஆனால் ஆற்றல் கிழக்கின் வரம், எல்லோருக்கும் வாய்க்காது. இங்கு அனைவருக்கும் அங்கீகாரம் தேவை, இருப்பின் எல்லோரிடமும் பெரிய சிபாரிசும் இல்லை ஊரறிந்த வாரிசும் இல்லை, இவர்களுக்கு வெற்றி தாமதமே தடுமாற்றமல்ல.
இக்கலைஞர்கள் உங்கள் நண்பனாக, உறவாக அல்லது மூன்றாவது மனிதனாக கூட இருக்கலாம் நீங்கள் அவர்களை ஊக்கப்படுத்தாமல் இருந்தால் பரவாயில்லை ஆனால் ஊனப்படுத்தாதீர்கள். வெறும் பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல. சிறந்த படைப்புகளை வாஞ்சையுடன் பாராட்டுங்கள் வஞ்சகமாக வேண்டாம், அத்திசையில் பயணிப்போருக்கு பேராசையிருக்கும் தானும் இக்கலைஞர்களாக இருக்கலாம் அதன் முடிவில் இருப்பது பொறாமை மட்டுமே!
சிறிய கர ஒலி சிலரின் வாழ்வின் ஒளியாக மாறும், இவர்களின் அவனி தனி முடிந்தவரை மனமார பாராட்டுங்கள் அல்லது ஒதுங்கி இருங்கள், முக்கியமாக பெற்றோர்கள் தன பிள்ளையின் திறமையை கை உயர்த்தி பிடித்தால் மட்டுமே போதும்.கலையின் வேட்கை எப்பொழுதும் மற்றவர்களுக்கு வேடிக்கையே..


ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்கு விற்கும் ஆள் கூடத்
தேக்கு விற்பான்
- வாலி

Thursday, August 18, 2016

JOKER

69 வயசான சீனியர் சிட்டிசன் இந்தியாவில் என்றுமே இளமையான ஊழலுக்கு தேவையான படம் ஜோக்கர் ....
ஜோக்கர் - காரணமாக வரி விலக்கிற்கு கூட இயக்குனர் தலைப்பை மாற்றவில்லை, படம் முடிந்த பிறகு ஜோக்கர்கள் யாரென தெரியும். ஜெயகாந்தன் ரூபத்திலும் டிராபிக் ராமசாமி உணர்விலும், தோழி செங்கொடி ரூபத்திலும் நந்தினி உணர்விலும் திரையில் பார்க்கும் போது நொண்டிய படங்கள் மத்தியில் கால் முளைத்து பாடம் ஆனது.
ஒரு கழிப்பறையின் ஓட்டையான வாளியில் அரசாங்க செயல்பாடுகளை சொல்லியிருப்பார் ராஜு முருகன், ஒவ்வொரு காட்சியிலும் நாம் படும் அவலங்களின் கூற்று இதை பார்த்து திருந்துவார்களா என கேட்டால் இது தமிழ் சினிமா கிளைமாக்ஸ் இல்லை உண்மையான சமூக அக்கரையில் வெறி கொண்ட படைப்பாளியின் ஆரம்பம்.
தயவு செய்து இந்த படத்தை நாம் பார்க்க வேண்டும் ..
மிகவும் நுணுக்கமாக பாருங்கள் ...

Monday, August 1, 2016

டொக்கு பீஸ்



காட்சி-1 ~டீ கடை~ மாலை

நண்பன் ராஜனை பார்க்கலாம் என காத்துக் கொண்டிருக்கிறார் அடையாளமாய் இருக்கிற சரஸ்வதி திரையரங்கின் கணக்கர் (அக்கவுண்டண்ட்) சிவ பிரகாசம்,சரஸ்வதி திரையரங்கம் மாலாக உருமாற பிரகாசம் வெளியேறி ஆறு மாதங்கள் ஓடியது, கணக்கராக வேலை கிட்டாதநிலையில் வேறு பணிப்புரிய தன்மானம் ஒரு ஸ்கோயர் பீட் கூட இடம் கொடுக்க மறுத்தது, ராஜன் ராயப்பேட்டையிலுள்ள ஒரு டயர் நிறுவனத்தின் துணை மேலாளர், பிரகாசத்தின் பழைய நண்பன்; முதலில் கணக்கர் வேலை ஏதேனும் இருந்தால் அவனிடம் கேட்க வேண்டும், என் நிலை அறிந்தால் அவன் துடித்துவிடுவான் எனும் கவலையும் இருந்தது மேலும் பி.எப் பணம் வாங்கும் விதி வைகைகளை கேட்டறியலாம் என்ற பல மன ஓட்டத்தில் டீ கடை முன் நின்று கொண்டிருந்தார்.
இருபது நிமிடங்கள் கழிந்தும் ராஜன் வரவில்லை, ஒரு போன் செய்யலாம் என பிரகாசம் அழைத்தார்.
"ஹலோ ராஜி.. ?? "
"'I got my first real six-string ,Bought it at the five-and-dime
Played it 'til my fingers bled, Was the summer of '69...summer of '69 ' .. ஹலோ .. எஸ்.பி 2 மினிட்ஸ்"
சிறிது நேரத்தில் ராஜன் வந்தார் அவருடன் தனது மூன்று சகாக்களும் வந்திருந்தனர்,தனியாக பேசலாம் என்று நினைத்திருப்பார் போலும் முகத்தில் பிரகாசம் இழந்தார் பிரகாசம்.
"என்ன எஸ்.பி எப்படி இருக்க ?? நல்ல இன்க்ரீமெண்ட் போலயே , செழிப்பா இருக்க " என நகைத்தார்.
தனது நண்பர்களை அறிமுகம் செய்தார்.
உண்மையான நண்பன் குரலை வைத்தே நட்பதிகாரத்தின் குறளாவான் சிறந்த நண்பன்.
"ராஜி , நாலு டீ சொல்லுவா ?? "
"டேய் .. ஐஞ்சு சொல்றா, இங்க நாலு பேர் இருக்கோம்,பர்ஸு டெஸ்க் ல வெச்சிட்டேன்... பாத்துக்கோ "
"ராஜன் .. அட இருங்க , நான் தரேன்" என்றார் மூன்றில் ஒருவர்.
"அட , வைங்க பாசு.. மச்சான் இருக்கான்" .
பிரகாசம் டீ சொல்லி அருகே வந்தார்,
வழக்கமான விசாரிப்பின் பிறகு பிரகாசம் "தோ, வந்திடரேன் ராஜி " என மறைவாக போனார்.
மூன்று பேரில் ஒருவர் "அவசரமோ" என குத்தினார்.
பிரகாசம் மறைவான இடத்தில் அவசரமாக தன் பர்ஸை எடுத்து பிரித்து பார்த்தால் முப்பது ரூபாய் மட்டுமே இருந்தது, ராஜன் மட்டும் வருவான் என்று நினைத்திருந்தார். அவர் வாழ்வில் இல்லாத சில்லறையை இது வரை தேடியது இல்லை அன்று தேடினார், அவர் அறியாமல் கண் கலங்கியது. இப்படியே ஓடி விடலாமா என யோசித்தார், ஏதோ ஒரு பொய் சொல்லிவிடலாம் எனும் எண்ணத்துடன் கண்களை துடைத்து நகர்ந்தார்.
ஒரு மனிதனுக்கு தன்மானம் சுயமரியாதை கிணற்றிலிருக்கும் ராட்டினமும் கயிரையும் போல, இரண்டும் எங்கும் சிக்கிக் கொள்ள கூடாது.
"எஸ்.பி எவளோ நேரம் டா ... டீ அறுத்து பார்.." என்றார் ராஜன். அமைதி காத்தார் பிரகாசம்,அனைவர் முன்னே எப்படி சொல்வதெனும் பெரிய மன போராட்டம்; வேலை கேட்பதா,பணம் இல்லை சொல்வதா, ராஜனுக்கு அசிங்கமாகிவிடுமா எனும் பல கலகங்கள் அவர் குடிக்கும் டீ யுடன் சேர்ந்து சென்றது.
கூச்சலுக்கும் அலறலுக்கும் மத்தியில் "சார்ர்ர் " என ஒருவர் பிரகாசத்திடம் வணக்கம் வைத்தார், " எப்படி இருக்கீங்க " அதே கூச்சலுடன்.
திகைத்தார் பிரகாசம்,
"யோவ் மாஸ்டர் , இவரு கிட்ட துட்டு வாங்கின உன் வாய் சைடு வங்கிக்கும் " .
"சார் .. நான் வரேன் .. டீ சாப்ட்டு கிளம்புங்க , ஸ்கூல் சவாரி விட்டு வரேன்.."
" மாஸ்டர்ர்ர்ர் .." என்ற கணீர் தொனியுடன் ஆட்டோவில் போனான்.

                                                                                                                            :CUT TO

எட்டு மாதங்களுக்கு முன்
காட்சி -2 வேறு இடம்- டீ கடை காலை-11.30

பிரகாசம் மற்றும் திரையரங்கு ஊழியர் விஸ்வமுடன் டீ குடித்துக்கொண்டிருந்தார்,
"பிரகாசம் ணே, மால் ஆவப்போதுமே .. என்ன பண்ணப் போற ??"
"வேற ஜோலி பாக்கணும் டா.."
அருகாமையில் ஒருவர் மெது வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தார், தனது சட்டை பையில் இருந்த வெத்துக் காகிதத்தில் எண்ணெய் கையை துடைத்து எரிந்து, விரைவாக ஆட்டோ எடுத்து கிளம்பலானார். பிரகாசம் துடைத்த காகிதத்தை உற்று பார்த்தார் , அது நூறு ரூபாய் தாள் சட்டென்று அதை எடுத்து அந்த ஆட்டோ காரரை உரக்க அழைத்தார் ஆனால் ஒரு பயனுமில்லை. ஆட்டோ உருண்டு செல்ல ஆரம்பித்தது.
"பிரகாசம் ணே.. காலைல நரி மொகத்துல முழிச்சிருக்க ணே ... " என்றான் விஸ்வம்.
"அட .. இரு டா .." என அவர் வந்த வாகனத்தை எடுத்து வேகமாக ஆட்டோவை மடக்கினார்.
"என்னங்க .. ரூபாய்க்கும் காகிதத்துக்குமா வித்யாசம் தெரியல.. இந்தாங்க " என பிரகாசம் சொன்னார்.
"என்ன சார் சொல்றீங்க ??" என கேட்டார் ஆட்டோ.
மறுமுறை தெளிவாக சொன்னனர் கணக்கர்.
"சார், இன்னிக்கி மிஷின் எடுத்துட்டு வர்ல, கொஞ்சம் சத்தமா சொல்லுங்க " என்றார் ஆட்டோ.
பரிதாபமும் கவலை சூழ உரக்க குரலில் தெளிவு படுத்தினார் பிரகாசம்.
நெகிழ்ந்து சொன்னார் ஆட்டோ "சார்.. இந்த நூறு பா தான் ஆட்டோக்கு பெட்ரோல் இல்லாட்டி இந்த செவிடன் எங்கையோ நின்னிருப்பான்.."
சிறிய புன்முறுவலுடன் அங்கிருந்து சென்றார் பிரகாசம்.
"ணே .. ஏன் இந்த வேண்டாத வேல .. டொக்கு பீஸ் ணே நீ " என விஸ்வம் சலித்துக்கொண்டான்.
அமைதியாக சிரித்து " வா டா .. போவோம் " என்று நகர்ந்தார்.
                                                                                                                              :CUT TO

காட்சி -1 ~(நீட்சி) டீ கடை~ மாலை
வியப்புடன் ராஜனும் அவரது நண்பர்களும் இருந்தார்கள், "காட்டு காத்து கத்தறான் .. குட் பிரெண்ட்ஸ்" என்று பகடி செய்தார் ராஜன். அதனூடே எல்லோரும் சிரித்தார்கள்.
பிரகாசமும் சிரித்தார், பூதாகரமாக சிரித்தார், மற்றவர்கள் அமைதியானார்கள்.
"எதிர்பார்ப்பு இல்லாத செயல்ல தெய்வம் இருக்கும் டா .." என சொல்லி புறப்பட்டார் நிறைந்த மனதுடன் காலி பர்ஸுடன்.

Tuesday, June 28, 2016

ஆய் - screenplay

மென்பொருள் // screenplay

Sevi saai - Based on Anton chekov's short story "MISERY" #Russian Literature


Vote is your right , dont sell it ..


100 percent Vote 100 secs video


~ இந்த பார்+வை = பார்வையின்மை ~


வண்ணம் நிறைந்த அகத்தை
பார்த்திராத விழிகளே,
கருப்பு வெள்ளை படர்ந்த புறத்தை
பார்க்கும் குருடர்கள் !
நிறம் உங்கள் வினாயென்றால்
அறம் எங்கள் விடையாகயிருக்கும் !

~ரெண்டில் ஒன்று ~


கோமாளி ஏமாளியாவான்,
காதலின் வளர் பிறையில் !
ஏமாளி கோமாளியாவான்,
மணவறையில் !
இரண்டும் அற்றவன்
காலில்லா நாற்காலியாவான்!!

அனாதைமை


ராகு காலத்தின் கழிவடையில்
நல்ல நேரத்தின் நுழைவில்,
தேடித் தேடி
இரண்டு ரூபாய் வித்தியாசத்தில்
உச்ச பட்ச மரியாதையுடன்
அமர மனைக்கட்டை,
அருகே அருகம்புல் ,
வண்ணக் குடை,
எருக்கம் பூ மாலையென
வீடுவரை ஊர்வலம்;
நடு வீட்டில் ஒய்யாரமாய்
விளக்கின் ஒளியில்,
மணியின் ஒலியில்,
முன்னே பண்டங்கள் காற்றோடுவதற்கு முன்
பின்னே வரும் காக்கை கவ்விய பின்,
அசராமல் இருப்பார்;
உலர்ந்த அகர்பத்தி சாம்பல்கள்
மணம் சூழ மூன்று நாட்கள்,
மகிழ்ச்சியின் உச்சியில்
மற்றும் ஓர் ஊர்வலம் இறுதியாக,
கரையப் போகும் பேரானந்தம்
கிணற்றிலோ,
ஆற்றில்லோ,
கடலிலோ ..
ஆனால் இவர்களுக்கு
இரண்டு ரூபாய் வித்தியாசமோ ,
அச்சின் பிசகோ,
இந்த அனாதைமை பிள்ளையார்கள்
பிளாட்பாரத்தை அலங்கரிக்கும்
மழை வர வேண்டி ...

Sunday, April 3, 2016

கொலையும் சா(த்)தியம் ..

"சூடான சூடான சுண்டல்.. சுட சுட இருக்கு சார்..", தனியாக கட்டு மரத்தின் அமர்ந்த என்னிடம் கேட்டான், வேண்டாம் என தலையை அசைத்தேன். அவள் இன்னும் வரவில்லை அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். கரை ஒதுங்கிய ஒரு செருப்பும், மாலை நாறும்; தூரத்தில் நண்டு மண்ணில் புதைந்து வெளியே வருகையும், அதன் கூர்மையான கால் தடங்கள் ஈர மண்ணில் கோலம் இடாமல் புள்ளி வைத்தார் போல இருக்க; இந்த அலைகளாய் முன் வந்து பின்னே சென்றது என் நினைவுகளின் நுரைகள், அப்பெரிய பெரிய நுரை முட்டையில் எண்ணற்ற முகங்களின் சம்பாக்ஷனைகள்; அவனும் வந்தான் பெரிய நுரையில் பிம்பமாய் .அவன் அவளை விட்டு விலகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஓடிவிட்டது, இல்லை.. இல்லை.. அவள் அவனை விட்டு சென்று; இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை செய்து கொள்வதிலும் அதீத விருப்பமில்லை, தனிமையின் உக்கிரமான வெயிலில் நிழல் தேடாமல் காய்ந்துக் கொண்டிருக்கும் படாதப் பாடுபட்ட பட்டு போன மரம். சிலரின் அக உலகத்தின் புரிதலையும் காயங்களையும் யாராலும் உணர முடியாது அப்படியே அவனும். அவன் என் நண்பன் மதி. மதியை பற்றி சிந்திக்கும் போது பெரிய வியப்பாகவே இருக்கும், அவனுடைய காதலும் அவ்வாறே ! மதியும் அவளும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு நிறுவனத்தில் பணி புரிந்தார்கள், அவ்வபோது சந்திக்க நேர்ந்தது.அவளை மதிக்கு மிகவும் பிடித்திருந்தது எதை பற்றியும் யோசிக்காமல் தேநீருக்கு அழைத்தான், அவளுக்கும் அவன் மீது ஓர் ஈர்ப்பு இருக்க தேநீர்க்கு சென்றாள். இரண்டு தேநீர் வாங்கினான், அக்குவளைகளை அவள் எடுத்து வருகையில் அது பெண் பார்க்கும் படலமாக திகழ்ந்தது , இவருவரும் ஓர் இடத்தில் அமர்ந்தனர், அவள் குவளையை எடுத்து அதே சூட்டுடன் உரிந்தாள். மதியை எடுத்து பருக சொன்னாள்.
ஒரு நீண்ட நிசப்தத்திற்கு பிறகு "என்னைய கல்யாணம் பண்ணிக்கிறிய ?? உன்ன காதலிக்க லைசென்ஸ் வேணும் " என்றான் மதி.
அவள் சிரித்தாள், நிச்சயம் மதி அழைக்கும் போதே தெரிந்திருக்கும் அவனது நோக்கத்தை.
தேநீரை குடித்துக் கொண்டே " எங்க வீட்ல ஸ்ட்ரிக்ட் ங்க .. முடியாது " என்றாள்.
நம் ஆள் விடவில்லை, அவன் பேச்சில் வீழ்ந்தாள், அரை மணி நேரத்தில் மார்கழி கச்சேரி நடந்தேறியது.
"டைம் எடுத்து கோங்க அப்பறம் சொல்லுங்க " என்றான் வழக்கமான ஆணின் பாணியில். அமைதியாக அவள் எழுந்து " என்னங்க டீ அப்படியே இருக்கு ??? " என்றாள். அதற்கு "லைப் புல்லா டீ போட்டு தரப் போறீங்க இந்த டீ போன பரவா இல்லைங்க " என்று கூறி வீர நடை போட்டான்.
அடுத்த நாள் மதி அலுவலகத்திற்கு செல்லவில்லை, அவளும் தேடினாள், அலைபேசியில் அழைத்தாள், அவன் நண்பர்களிடம் விசாரித்தாள், அவன் கிட்டவில்லை, பதைத்தாள். இரண்டு நாட்களுக்கு பிறகு அவனது அலைபேசி தொடர்பு கொள்ள முடிந்தது, அழைத்து " இதோ பாருங்க நான் நீங்க நினைக்கறாப்ல இல்ல, நான் கீழ் ஜாதி .. உங்க வீட்ல ஏத்துக்க மாட்டங்க .. விற்றுங்க.. " என்றாள்.
மதியின் பதில் "நான் அப்படி நினைக்குரேன்னு எப்படி முடிவு பண்ண ?? எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டங்க ன்னு தெரியுமா ??.. எனக்கு முன்னாடியே தெரியும் நீ வேற வகுப்ப சேர்ந்தவ ன்னு அது தெரிஞ்சி தான் கல்யாணத்துக்கே கேட்டேன். கலப்பு திருமணம் மட்டுமே சாதிய வக்கரங்கள ஒழிக்கும், சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு முண்டாசு மீச சொன்னது எனக்கு இன்னும் கேக்குது " அவள் மறுமுனையில் அழுதுக் கொண்டிருந்தாள்.
இருவரும் இனிதே காதலித்தனர், மதியின் வீட்டில் பூரண சம்மதம் அவர்கள் சாதியை விட மனிதத்தை நேசிப்பவர்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் சென்னை வாசி. அவளோ ஊர் பக்கம் அதுவுமில்லாமல் வீட்டிற்கு கடைசி பெண். அவளின் ஆசையை பூர்த்தி செய்து தானே ஆகா வேண்டும், எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சி நண்பன் விரும்பிய வாழ்கை அமையப் போகிறது என்று. நாள் போக போக அவளின் வீட்டில் பிடி கொடுத்து பேசவில்லை, இரு வீட்டாரும் கலந்து பேசினர் ஆனால் அவளின் அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்படியோ நன்றாக முடியும் என எல்லாரும் நினைத்தார்கள். ஒரு நாள் திடீரென பெண் பார்க்க வருகிறார்கள் ஊருக்கு வா என்று அவளின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது, அவள் போக மறுத்தாள் இருப்பினும் அவளை அழைத்தார்கள், மதியிடம் பகிர்ந்தாள் இச் செய்தியினை அவன் சலனமில்லாமல் இருந்தான், அவள் மீண்டும் மூச்சை இழுத்து " ஏங்க .. நான் போய் கரக்ட் ஆஹ் பேசிற போறேன்.. அவன் யாரா இருந்தாலும் செரி.. நான் ஒருத்தர காதலிக்கிறேன் ன்னு சொல்லிடுவேன்".
மதி " சரி .. பாத்து பேசு, போயிட்டு வா .. நானே விடறேன்" மனதில் இருக்கும் கலக்கத்தை வெளிக் காட்டாமல் அவளை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழி அனுப்ப சென்றான். அன்று ரயில் தாமதம், 11 மணிக்கு செல்லும் ரயில் 2 மணி அதிகாலையில் சென்றது. அதுவரை மதி அவள் கூடவே இருந்தான். ரயில் சென்றது, அவன் மட்டும் அதே சிமன்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான் ஏதோ மனக் கலக்கத்தால் அங்கயே உறங்கி விட்டான். அடுத்த நாளில் அவள் தான் இவனை அலைபேசி மூலம் எழுப்பி விட்டாள் திட்டவும் செய்தாள்.
6 மணி நேரம் கழித்து , அவள் மீண்டும் அழைத்தாள் "பையன் கலரா இருக்கான், பிஸ்னஸ் பண்ணனுமா .. வெளி நாட்ல வேலையாம்" என்று அடுக்கினாள், மதி அமைதி காத்தான்.
அவள் புரிந்து " வெறுப்பேத்தின.. கொஞ்சம் சிரிங்க .. அவன் சத்தியமா குண்டா மொக்கைய இருந்தான் "
அது தான் அவளது இறுதி மகிழ்ச்சியான உரையாடலாக இருந்தது. அவள் வீட்டில் பெரிய சண்டை ஏற்ப்பட்டு அவளை அந்த கலரா இருக்கிரவருக்கே நிச்சியம் செய்தார்கள், மதி மதியிழந்தான், என்ன செய்வது என்று புரியாமல் இருந்து தத்தளித்த நேரம், அதுவரையில் சிகரெட் தொடாதவன் ,குடி இல்லாதவன், தொட்டான் இதனை அவள் விட்டாள் அவனை, மதி அவளது வீட்டில் பிச்சையாக கெஞ்சிக் கேட்டும் அவர்கள் செவி சாய்க்கவில்லை, எல்லாம் இனிதே முடிந்தது அவளுக்கு.
கடந்த மூன்றாண்டில் அவன் எதுவும் என்னிடம் சொன்னதில்லை, அன்று பூங்கா வைன் ஷாப்பில் மாலை 5 மணிக்கு சொன்னான் அழுதே " டேய்.. எழிலு .. அவ பொறந்த நாள் டா இன்னிக்கி அவளுக்கு 12 மணிக்கு எல்லாரும் விஷ் பண்ணும் போது நான் பண்ண மாட்டேன் , சரியா 5.20 க்கு பண்ணுவேன், அப்ப தான் அவ பொறந்தாலாம்.. இப்ப சொல்லணும் ஆனா அவ இல்ல " என்று சொல்லும் போது அவளை அவன் இன்றுவரை சுமந்து கசந்துக் கொண்டிருக்கிறான் என்பது புலப்பட்டது.
அவன் முற்போக்குவாதி தர்கத்தை பார்ப்பவன் எப்படி சராசரி காதல் முரிவிற்காக மது புகையை நாடினான் என பெரும் குழப்பம் என்னுள் நிலவியது , அந்த குழப்பத்துக்கு முடிவு கட்ட ஒரு நாள் மாலை கேட்டேன் அதற்கு மதி ஆரம்பித்தான் "எழில்.., சரக்கு தம்மு உள்ள போன கொஞ்ச நேரத்துக்கு மனசுல இருக்கறது வாந்தியா வெளிய வரும் , இத நான் நியாப் படுத்துல , ஒரு மொழம் கயிற ஒரு சுருக்கு ல முடிஞ்சிரும் ஆனா சில சொல்லு வார்த்தை ஒவ்வொரு நேரமும்..; நிச்சயம் ஆனா பிறகு அவ போன் ல சொன்னா, என்கூட கல்யாணம் ஆச்சுனா கொஞ்ச நாளுக்கு அப்பறம் ஜாதின்னு சொல்லி அவள கொலை பண்ணிடுவேனா; அத கூட விடு எழில் அவ அம்மா சொல்றா, 'மேல் ஜாதி பையன் நீ உனக்கு ஏதோ தோஷம் இருக்கு; ஆண்மை இல்லாதவன் ; நீ அல்பாய்சு ன்னு குறி சொல்லிடாங்க , உனக்கு ஊர்ல யாரும் பொண்ணு தரமாட்டாங்க ன்னு என் பொண்ண கல்யாணம் பண்ண ஆசைப் பட்ரே, மரியாதையா போய்டு இல்ல வன்கொடுமை ன்னு போலீஸ் ல என் பொண்ண வெச்சி கம்ப்ளைன்ட் பண்ணுவேன் , உன் ஆத்தா அப்பன் எல்லாரும் கம்பி எண்ணனும்', அட கேடுகெட்ட உலகமே ன்னு ஆச்சு".
அவன் பேசிய பின் எனது நா தழுதழுத்தது. சாதி வெறியால் கத்தியாலும் சொல்லாலும் கொலைகள் நடந்துக் கொண்டே இருக்கிறது, கத்தியால் சில நொடிகள் வலி ஆனால் சொல்லால் ஒவ்வொரு நொடியும் வலி என்று நினைத்து அங்கிருந்து கிளம்பினேன்.
அன்று தான் மதியை இறுதியாக பார்த்தது,சமீபத்தில் ஒரு வேலை காரணமாக திருப்பூர் அருகே சென்றிருந்தான் அங்கு பட்ட பகலில் மூவர் இளம்வயது தம்பதியரை வெட்ட வந்தனர், அதை கண்டு தடுக்க போனான். அவர்களிடம் இருந்த பெரிய அரிவாளுக்கு இவனது சிறிய தலையை கொடுத்தான், இவன் ரத்த வெள்ளத்தினால் அவர்கள் தப்பித்து கரையேறினர். என் நண்பனுக்கு தெரியாது ஜாதி வெறியினால் அந்த இளம் ஜோடியை கொலை செய்ய வந்தார்கள் என்று,தெரிந்தால் அவன் இறக்கும் போது துடித்ததை விட பல மடங்கு அல்லோலப் பட்டிருப்பான். சாதியின் சிலந்தி வலையில் பல இரண்டு கால் பூசிகள் இருக்கின்றன, என் கண்ணோரத்தில் ஒரு துளி கடல் இந்த க்ஷணத்தில், நான் காதலிக்கும் பெண் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வருபவள், எங்களது திருமணம் தேதி குறித்தாயிற்று. மதியின் கனவு சாதி இனி சாத்தியம் இல்லை, அதை நோக்கி நான்.
காதலால் உரு கொலையும் சாதி சாத்தியமே என்று அவனது நினைவை முடிக்கையில் ,யாரோ என் கண்ணை மூடி "யாருன்னு கண்டு பிடிங்க ??" சிறு புன்னகையுடன் கண்டுபிடித்தேன் எனது முற்போக்கு சிந்தனையை இலட்சியத்தை !!!
"என்னடி இவளோ லேட்டு ??"
"டிராபிக் ல வர ......." அலைகளின் இசையில் இவர்களது சொற்கள் கரைந்தது...

Sunday, February 21, 2016

சிறுகதை - வெற்றி முன்னாடி .. நடேசன் பின்னாடி


வெற்றி முன்னாடி .. நடேசன் பின்னாடி ..

http://www.sirukathaigal.com/சமுகநீதி/வெற்றி-முன்னாடி-நடேசன்-ப/

Monday, February 1, 2016

ரெண்டு இட்லி /// screenplay

Screenplay in below link

ரெண்டு இட்லி

செவி சாய் // screenplay


 Screenplay in below link

செவி சாய்

சாதியையும் மதத்தையும் கதம் செய்ய காதல் தானே !!

~ சாதியையும் மதத்தையும் கதம் செய்ய காதல் தானே !! ~

படி தாண்டா பத்தினியே,
எக்ஸ்கலேட்டர் ஏறா சுந்தரியே !
உனக்கு கரைந்த மை அழகில்லையே,
நான் சிந்திய பொய் சலிக்கவில்லையே !
பொறுமை சாத்தியமோ - இந்த
எருமை சொல் கேளாயோ !
காதலுக்கு ஏன் சாதி, மதம்
உண்மையில் இரயில் தான் தாமதம் !
ஐய்யம் கொள்ளாதே,
என்னைக் கொல்லாதே !
பாரதி எரிந்தத் தீயில் கிளம்பிய
பல கோடிப் பொறியில் நானும்,
என்னை விட
என் வீட்டார்
உன்னை விட மாட்டார் !!
எண்ணை விட வாராயோ,
விளக்கேற்ற பொறியிருக்கே;
கேளாயோ தோழி !!

Friday, January 8, 2016

வா !! என்னுடன் வா !!

~ வா !! என்னுடன் வா !! ~

என் இளமையும் கரையும்
உன் கண் மையில்,
மண் தின்னும் உடலை
மனம் கொன்றுக் கொண்டிருக்கிறது,
உன் நினை'வில்' இலக்கு என நெஞ்சம் ;
கன்னங்குழியிலே சமாதியாகிறேன்
ஒவ்வொரு முறை எத்துப் பல் சிரிப்பில் !
வா ! என்னுடன் வா !
வாழ்க்கையின் சுமையை
இலகுவாக சுமக்கலாம்
நரை வரை !!
வழியெங்கும் பூவாவேன்
நீ மிதிக்க முள்ளிருக்காதே,
பயணம் தூரமென்றாலும்
நேரம் குறைவே !
உனக்கு புரியாவிட்டாலும்
வராவிட்டாலும்,
அழைப்பது என் கடமை
வா !! என்னுடன் வா !!