இந்த சமூகத்தின் சத்தத்தை சத்தமில்லாமல் சொல்ல முயற்சித்தோம்..
Translate
Sunday, March 29, 2015
Saturday, March 28, 2015
துக்கம்
ஓர் ஊரில் ஒரு குதிரை வண்டிக்காரன் இருந்தான், யாராவது சவாரி செய்ய வாடிக்கையாளர்கள் வருவார்களா என்ற எண்ணத்தில் இல்லாமல் உயிரற்ற பாவைப் போல் நின்றுக் கொண்டிருந்தான். வாட்ட சாட்டமாக ஒரு நபர் வந்தார்.
"ஏன் பா , வண்டி வருமா ??" என்றார்
"ஐயா , வாங்க "என்றான் குதிரை வண்டிக்காரன்.
" மாம்பலம் போ "என்றார் அவர்.
அவரும் ஏறி அமர, டொக்.. டொக்.. என குதிரை ஓட ஆரம்பித்தது, குதிரைக்கு கொலுசு போல அதன் காலில் அணியப்படிருந்தது, ஜல்.. ஜல்.. என ஒரு இசையின் சப்தம் ஒலித்துகொண்டே பயணம் தொடங்கியது. வண்டிக்காரன் அவரிடம் "ஐயா கொஞ்சம் பேசலாங்களா ?? " என்றான்.
"சத்த வாய்ய மூடி ஒற்றியா , ஒரே நை.. நை.. ன்னு ??"
முகம் வாடியது குதிரை வண்டிகாரனுக்கு, மேலும் பயணிக்க, மாம்பலம் வந்தது. அந்த நபர் "இந்த வெச்சிக்கோ அரணா" என்று நகர்ந்தார்.
அந்த அரையணாவை பார்த்தபடியே நின்றான் குதிரை வண்டிக்காரன்,
"யோவ்வ் வண்டி வருமா திருவல்லிகேனிக்கு , மொத்தம் மூணு பேரு " என்று ஒரு இளைஞன் கேட்க்க.
குதிரை வண்டிக்காரன் முகம் மலர்ந்தது, "சரி ஏறுங்க தம்பி " என்றான்.
மூன்று பேரும் ஏறி அமர, வண்டி நகர்ந்தது.
"தம்பி நான் கொஞ்சம் பேசலாங்களா , மனசு சரியா இல்ல.. அதான் "
"யோவ்வ் வண்டி ஒட்டு யா , உன் ராமாயணம் எங்களுக்கு எதுக்கு, ரோட்ட பாத்து குதிரைய அடிச்சு ஒட்டு" என்றார் அதில் ஒருவர்.
வண்டிக்காரனின் முகம் நான்கு நாட்கள் ரோஜாவைப் போல் ஆனது.
திருவல்லிக்கேணி வந்தது, அவர்கள் இறங்கி பைசா கொடுத்து விரைந்தார்கள். குதிரை வண்டிக்காரன் அமைதியாக நின்றான், சற்றே நகர்ந்து குதிரையிடம் சென்றான்.
"என் பையன் செத்துட்டான் , அவனோட உடல் வீட்ல இருக்கு .. சாயிங்காலம் போய் அடக்கம் பண்ணிடுவேன், எனக்கு பைசா வேணாம் ஆனா இந்த சோகத்த பகிர யாரும் கேக்க மாட்டேன்கிறாங்க, நீயாவது கேப்பியா" என்றான்,
குதிரை கனைத்தது ..................
~ சமர்ப்பணம் ஆண்டன் செகாவ்
நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 7
இடுக்கண் களைவதாம் நட்பு ...
நட்பில்லாமல் நாட்கள் இல்லை, நாட்களில்லாமல் நட்பில்லை. துன்பங்களில் ரத்த சொந்தங்கள் தள்ளி நின்றாலும் நம் துன்பங்களை அள்ளி வீசும் JCP இயந்திரம், வாழ்கையின் புரிதல் நட்பால் ஏற்படும் ஒவ்வொரு கட்டத்தில். நட்பெனும் வாசல் அன்பெனும் தோரணையில் நம்மை வரவேற்கும், நண்பனின் மனம் உழன்று அழும் போது நட்பிற்கு மட்டுமே அது கேட்கும், கடினமான சமையங்களில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகும் நட்பு. இது போல வெவ்வேறு உவமைகள் கூறிக் கொண்டே செல்லலாம், இந்த தொடர் உங்களின் நட்பின் சிறந்த நிகழ்வை கண்ணாடி பிம்பமாக காட்டும் என நம்புகிறேன்!
எனது வகுப்பு தோழர் ராயப்பன், ஆசிரியர் படிப்பு முடித்து இளங்கலை கணிதம் சேர்ந்திருந்தார், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்தார் ராயப்பன்.கல்லூரி படிப்பு செலவிற்காக பகுதி நேரமாக ஒரு கடையில் வேலைப் பார்த்தார். அவரால் ஒரு வேலை சாப்பிடும் அளவிற்கு தான் பணமிருக்கும் நான்கு இட்லிகள் வாங்கி , காலை இரண்டு இட்டிலிகளும் மீதம் இவரைப் பார்த்து இறக்கப் பட்டு கெடாமல் இரவுவரை இருக்கும்.தண்ணீர் எனும் அடியாளை வைத்து இவர் பசியை தற்காலிகமாக அடிப்பார். எங்கள் கல்லூரியில் வருமையிலுள்ள மாணவர்களுக்கு என்று நிதி ஒதுக்கப்படும், அதில் ராயப்பன் தன் பெயர் கொடுத்தும் இல்லை யாராவது பரிந்துரை செய்தாலும் அவர் நிராகரித்து விடுவார், ஒரு நண்பன் கேட்டான் " ஏன் ராயப்பன் 'புவர் பாய்ஸ் பண்ட்' வாங்கல" என்பதற்கு, "என்னைவிட யாராவது கஷ்டப்பட்ரவங்களுக்கு உதவியா இருக்கும் " என்றார். அந்த மனிதனின் குணத்திற்கு வறுமை அழுது அழியும்!. ராயப்பன் முதல் நான்கு செமஸ்டர்களில் முதன்மை பாடமான கணிதத்தில் 100/100, அன்று வரை எங்கள் துறையில் யாரும் இதை நிகழ்த்தியது கிடையாது. ஐந்தாவது செமஸ்டர் வகுப்புகள் ஆரம்ப நிலையில் ராயப்பனை காணவில்லை அவர் எங்கே சென்றார் எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.இளம் பருவம் பெண்கள் மகிழ்ச்சி சிரிப்பு என்று கடந்த காலம் ராயப்பனை பற்றி பேசுவோம் பரிதாபப்படுவோம் அவ்வளவு தான், சிலர் மட்டும் தோழர் ராயப்பனை கண்டு பிடித்தார்கள், அவர் உடல் நலக் குறைவால் பாண்டிச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மாதமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்தார். 20 வயது தான் இவர்களுக்கு அன்று ஆனால் நட்பின் முதுமையும் தெளிவும் மிகுந்தவர்கள். ஜான் அல்போன்ஸ் , திலிப் சந்தோஷ், ரவீந்திரன் , பெல்லார்மின் , ஹேமந்த் , கமல் , செல்வா, ஜாக் பிரதர், ஜூலியஸ், தேவா மற்றும் ஷங்கர் ராம், இவர்கள் ராயப்பனுக்காக பாண்டிச்சேரிக்கு விரைந்தார்கள், பண உதவி செய்தார்கள் அதைவிட நல்ல மன தெம்பு கொடுத்தார்கள். இது ஒரு நாளில் முடியவில்லை திலிப் அவ்வப்போது சென்று ராயப்பனை சந்திப்பான், பின்னர் உடல் நலனுடன் திரும்பியபின் அவரால் ஐந்தாவது செம் வரவும், எழுதவும் முடியவில்லை; நண்பர்கள் அனைவரும் கணித துறையின் முன்னணி பேராசிரியர் விக்டர் அவர்களிடம் நிலைமையை கூறி ராயப்பனை ஆறாவது செம்மிற்கு அனுமதி கேட்டு அவரை வரவழைத்தனர். எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் நண்பனுக்காக எதையும் செய்யும் பலருடன் என் நாட்கள் கடந்தது. இன்று ராயயப்பன் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிகிறார், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் அவரைவிட இவர்களுக்கு (ஜான் அல்போன்ஸ் , திலிப் சந்தோஷ், ரவீந்திரன் , பெல்லார்மின் , ஹேமந்த் , கமல் , செல்வா, ஜாக் பிரதர், ஜூலியஸ், தேவா மற்றும் ஷங்கர் ராம்) தான் மகிழ்ச்சி அதிகம்...
என்னை முற்றிலும் உலுக்கிய நிகழ்வு, ஒரு நண்பன் இருந்தான்,அவனாலும் கல்லூரி படிப்பிற்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை அவன் யாரிடமும் கூறவில்லை, பாதர் ஒருவருக்கு மட்டும் தெரியும் அவர் பல தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டார் இறுதியில் யாரோ ஒருவர் மூன்றாண்டுக்கும் அவரே மொத்த செலவையும் ஏற்கிறார் என்றானது. யாருக்கும் தெரியாது அந்த நண்பன் ச்பான்சரில் படிக்கிறான் என்று. அவன் நன்றாக படித்தான் தேர்ச்சியும் ஆனான், நாட்கள் சென்றது அந்த நண்பனுக்காக ஸ்பான்சர் செய்தது எங்கள் அருகிலிருக்கும் இன்னொரு நண்பன். இன்று வரை அவன் இதை யாரிடமும் சொன்னது கிடையாது எனக்கு இந்த செய்தி அன்றே பாதர் மூலம் தெரியும். எப்படி ஒருவன் தன் வகுப்பு நண்பன் ஒருவனுக்கு உதவி செய்து அதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று மூன்றாண்டுகள் இருந்திருக்க முடியும். இந்த சம்பவம் மூலம் அவனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். தன் சக தோழனுக்கு என்ற ரீதியில், செய்யும் உதவி நம் நினைவிலே இருக்கக்கூடாது. இந்த பண்பும் பெருந்தன்மையும் நண்பனிடம் மட்டும் காண முடியும், எல்லா உறவுகளும் ஒரு பிரதிபலன் எதிர் பார்த்து வரும் ஆனால் நட்பு மட்டும் எதுவும் எதிர் பார்க்காது. அந்த நண்பன் எங்கள் வகுப்பை அலங்கரிக்கிறான் நட்பின் கோலமாக !!!!
இன்னொரு நிகழ்வு - ஜான் சபா, வேலை தேடும் முனைப்பில் இருந்தான் மூன்றாம் ஆண்டு முடிவில். காம்பஸ் இன்டர்வ்யு வில் அவன் சிரமப்பட்டு இருந்தான், நானும் அவனும் சதர்லாந்து கால் சென்டர் இன்டர்ய்வு விற்கு செல்ல ஆயுத்தம் ஆனோம், பெட்ராம் ஹால் என்று சொல்லகூடிய பெரிய அரங்கில் நடந்துக் கொண்டிருந்தது. வெளியே நின்றோம் உள்ளே செல்லவில்லை நான் சொன்னேன்
" நம்பளால சதர்லாந்து பொழைக்கலாமா ? அது நம்ப அவங்களுக்கு பிச்ச போட்றா மாதிரி இருக்கும்"
இதற்கு " சரியா சொன்னே மச்சி " என்றான் சபா.
"மச்சி டாஸ் போட்டு பாக்கலாம்" என்று சொல்லி முடிவெடுக்க, தலை விழுந்தால் இன்டர்வ்யுவிற்கு போகிறோம் பூ விழுந்தால் கான்டீன் இந்த நிலையில் சபா ஒரு ரூபாய் நாணயத்தை சுண்ட, அட என்ன தான் விழுந்திற்கு பாப்போம் என ஆர்வத்தில் புதைந்த மண்ணில் இருக்கும் நாணயத்தில் பார்த்தல் தலை ! ஒரே அதிர்ச்சி என் மைண்ட் வாய்ஸ் சொன்னது "உள்ள போனாலும் பைல் ஆகா போறோம் என்னடா ஒரு சாம்பார் ரைஸ் கூட சாப்ட விட மாற்றியே ஆண்டவா " என புலம்ப.
சபா சொன்னான் " மச்சி பெஸ்ட் அப் த்ரீ போடலாம் டா "
"மச்சி நீ தான் டா என் உயிர் ப்ரெண்ட்" என்றேன்.
பின்னரும் தலை தான் விழுந்தது நாங்கள் பூ விழும் வரை விடவில்லை அன்று காண்டீனில் சாம்பார் ரைஸ் சாபிடாமல் செல்லவில்லை.
இப்படி சபாவிற்கும் எனக்கும் இன்டர்வ்யு அலர்ஜி, பின்னர் தீவிரமாக தகவல் தொழில்நுட்பத்தில் வேலை தேடினான், ஆப்டிடுயூட் தேர்வில் மிகவும் சிரமப்பட்டான் . நண்பன் ஜான் அல்போன்ஸ் மற்றும் உதயா இருவரும் சபாவிற்கு சொல்லிக் கொடுத்தார்கள், அவர்கள் இருவரும் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து இருந்தது. ஆப் காம்பஸ் அண்ணா யூனிவர்சிட்டியில் நடந்தது, அப்போது உதயாவும் ஜானும் தேர்வை எடுத்துக்கொண்டனர் சபாவிற்காக.இருவரும் சபா அருகே அமர்ந்து ஆப்டிடுயூட் தேர்வு விடைகளை சொல்லிக் கொடுத்தனர். தனக்கு வேலைக் கிடைத்துவிட்டது கல்லூரியும் முடிவுற்றது இனி என்ன என்றில்லாமல் நண்பனும் நன்றாக வரவேண்டும் என்று நினைக்கும் எண்ணம் சொந்தங்களை விட நண்பனுக்கு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று சபா , ஜான் , உதயா அவர்கள் மனதைப்போல நன்றாக இருக்கிறார்கள்.
நம் துன்பங்களில் காலிங் பெல் அடிக்காமல் அதை கண்டறியும் துப்பறியும் சாம்பு நண்பர்கள், மேற் கூறிய நிகழ்வுகளைப் போல் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும் அதை அசை போடுவதற்கு இது சுவிங் கம் ஆகா இருக்கும் என்று நம்புகிறேன்.

Saturday, March 21, 2015
வண்ணமிகு வெள்ளைகள் !!
வண்ணமிகு வெள்ளைகள் !!
நிறம் ஒரு மனிதனை நிர்ணயம் செய்வதில்லை, ஆனால் நம்மில் இருக்கும் பலர் நிறம் தான் பிரதானம் எனினும் அகத்தை பார்க்கும் கண்கள் அவர்களிடம் இருந்தும் பார்க்க இயலாததே அதற்கு காரணம். என் பயணத்தின் சில பயணிகள் பல நிறங்களில் இருந்தாலும் அவர்கள் வண்ணமிகு வெள்ளையாக திகழ்ந்தார்கள், இவர்களைப் போல் நீங்களும் உங்கள் பயணங்களில் சந்தித்த வண்ணமிகு வெள்ளைகளை இந்த தொடர் பெட்ரோல் இல்லாமல் நினைவு எனும் வண்டியை ஓட்ட வைக்கும் என்று நம்புகிறேன்.
சுரேந்தர், எனது குடியிருப்பின் அருகில் வசிக்கும் நண்பன் அவனை வருடத்திற்கு இருமுறைப் பார்த்தல் அது பெரிது. இவன் என்னுடன் பள்ளியில் ஒன்றாக படித்தான், படிப்பில் அவ்வளவாக நாட்டமில்லாதவன். எல்லா ஆசிரியர்களும் அவனைப் பற்றி பாட்டு பாடாமல் அன்று ஷோ முடியாது, புதியதாக வரும் ஆசிரியர்களுக்கு எப்படி அடிப்பது என்பதை சுரேனை வைத்து பயிற்சி மேற்கொள்வார்கள்.
அவனை பள்ளி விளக்கியது, பத்தாவது டுடோரியலில் தான் படித்தான்.
நன்றாக வரையும் திறன் அவனிடம் உண்டு, வெகுளியாக பேசுவான் அவனக்கு சில சூழ்நிலையில் அளவுகோல் தெரியாது. சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்னர் அவனை நான் சந்தித்தேன், கையில் காமேரவுடன் லயோலா கல்லூரியின் விழாவை படம் பிடித்துக் கொண்டிருந்தான். " டேய் மச்சி !! என்னடா இங்க ?? " என்றேன், " ஹாய் மச்சி !! போட்டோகிராபர் டா. என்னோட ஏஜன்சி தான் கான்ட்ராக்ட்" என்றான் சுரேன். " சூப்பர் டா" என்று கூறி விடைப்பெற்றேன்.
சில ஆண்டுகள் முன் சுரேனை திரும்பவும் சந்திதேன், சென்னையில் சிறந்து புகைப்பட கலைஞனாக மிகவும் மகிழ்ச்சியுற்றேன், படிப்பு மட்டும் தான் ஒருவனை உயர்த்தும் என்பது தகர்ந்தது. ஒரு நாள் அதே தெருவைச் சார்ந்த நண்பன் எழில் மிகவும் துன்பத்தில் இருந்தான் சுரேனிடம் அவன் துன்பங்களை பகிர்ந்தான் அவனுடன் நானும் இருந்தேன் நான் ஒரு பொம்மை போல பார்த்துக் கொண்டிருந்தேன். சுரேன் " மச்சா , ஒரு ப்ரோப்ளம் இல்ல .. நீ வண்டி எடு பொண்ணு வீட்டுக்கு போலாம் , அவ பெரன்ட்ஸ் கிட்ட நான் பேசுறேன்" என்றான். நான் அதிர்ந்து போனேன், எழிலை அவன் எப்போதாவது தான் பார்ப்பன் என்னைப் போல் இருந்தாலும் அவன் அன்று கூறிய ஆறுதலான வார்த்தை ஒரு நண்பனுக்கு தோள் கொடுத்தமை என்னை சிந்திக்க வைத்தது.
சில தினங்கள் முன்னர் எழிலை சந்திக்கையில், " என்னடா எப்படி இருக்க ?? " என்றேன்.. " நல்ல இருக்கேன் மச்சி" என்றான் எழில்.
" சுரேனை பாத்தியா அவனை பாத்து ரொம்ப நாள் ஆச்சு" என்றேன்.
அதற்கு அவன் " மச்சி சுரேன் என்கிட்டே எப்போயவது போன் பண்ணுவான்டா, ஆனா நான் கஷ்டப் பட்டிருக்கும் போது தினமும் போன் பண்ணி நான் இருக்கேன் டா , யாராவது எதாவது பிரச்சனை பண்ணா சொல்லு மச்சி ன்னு சொல்லுவான் டா, நம்பெல்லாம் அவன அசால்ட் ஆஹ் நினைப்போம் ஆனா அவன் செம்ம கேரக்டர் டா" என்று கூறி நெகிழ்ந்தான்.
அவனிடம் விடைப்பெற்று நடந்து வருகையில் ஒருவன் வாழ்கையில் உயருவது மட்டும் முக்கியமில்லை அவன் அகத்தில் வண்ணமிகு வெள்ளையாக இருந்து பலரின் வாழ்கைக்கு பல நிறங்களை தெளிக்க வேண்டும். அதை சுரேன் செய்து கொண்டிருக்கிறான்
தேவேந்திரன் என் மாநில கல்லூரி நண்பன், ராமநாதபுரத்தைச் சார்ந்தவன். அவனும் நானும் கிரிகட் விளையாடியுள்ளோம், தேவா மிகவும் திறமையாக விளையாடக் கூடியவன். தேவா என்னக்கு அவ்வளவாக பரிட்சயம் இல்லை, அவனை நான் முதலில் பார்த்தது ஜெயா டிவியில் தான் அன்று கல்லூரி ஸ்ட்ரைக் , எல்லோரும் வகுப்புகளை புறக்கணித்து ஸ்ட்ரைக்கில் சேருமாறு சில மாணவர்கள் போர்க்கொடி தூக்க எல்லோரும் சென்றோம். "இல்லை இல்லை .. அடிப்படை வசதி இல்லை .. இல்லை இல்லை சுத்தம் இல்லை " என்ற கோஷம் ஒலிக்க. ஒரு பெரிய கல் சர்ர்ர்ர் என கல்லூரி முதல்வர் தலையில் விழுந்தது. காவலர்கள் பெரிய படையுடன் நின்று கொண்டிருந்தார்கள், முதல்வரின் ரத்தத்தால் லட்டி சார்ஜ் கொடுக்க, எல்லோரும் மாரத்தான் ஓட்டம் எடுத்தோம், அடிக்கு பயந்து நானும் வினோத்தும் தமிழ் துறையில் தஞ்சம் புகுந்தோம், பின்னர் தப்பித்து வீடு சேர்ந்தேன். டிவியை போட்டேன் மாநில கல்லூரியில் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் என முக்கிய செய்தியாக ஓடிக்கொண்டிருந்தது அன்று தி .மு. க ஆட்சி என்பதால் ஜெயா டிவியில் இந்த செய்திக்கு அழுத்தம் கொடுத்தார்கள், அப்படி பார்க்கும் போது " சார் இங்க ஒருத்தன் செடி பின்னாடி மறஞ்சிட்டு இருக்கான் பாருங்க" என்று போலீஸ் சொல்ல , தேவா வெளியே வந்தான். " சார் சார் .. நான் ஊர் சார் , கம்ப்யுடர் டிபார்ட்மெண்டுக்கு வந்தேன் சார் " என்று கூறினான். அவனை அடித்தார்கள் அவனும் வலி தாங்காமல் ஓடினான். இப்படி தான் தேவாவின் அதிசிய அறிமுகம். வெகு நாட்கள் கழித்து தேவாவை பார்த்தேன் அந்த சம்பவம் அவனை பாதிக்கும் என்று நான் கேட்கவில்லை ஆனால் அவனே அதை கூறி நகைத்தான். " மாமா எவனாவது செடி பின்னாடி ஒளிவானா டா " என்று சிரிப்புடன் கூறினான்.
பின்னர் நெருக்கமாக பழகும் வாய்ப்பு அமைந்தது, அவன் எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தான் இதுவரை யாருக்கும் அது தெரியாது. ஒரு தோழியின் பாட்டி இறந்து போகையில் அவளை வளர்த்த பாட்டி மிகவும் துன்பத்தில் இருக்கும் போது இவன் கையில் இருக்கும் பணத்தைக் வைத்து அவளின் ஊருக்கு அழைத்துச் சென்றான். காது மற்றும் வாய் பேச முடியாமல் இருக்கும் மாணவர்கள் கணினி துறையில் இளங்கலை படித்துக் கொண்டிருந்தார்கள், தேவா அவர்களிடம் பேசிக் கொண்டே இருப்பான் குறியீடு மொழி மூலம். குறியீடு மொழியை சட்டென கற்றுக் கொண்டான். எப்போதும் அவர்களுடன் சிரித்து மகிழ வைத்திருப்பான் அவர்களை,அன்று எனக்கு இவன் மேல் மதிப்பு கூடியது, தேவா திடீர் தீடீரென தனது இலக்கை மாற்றி கொள்வான், ஒரு நாள் போலிஸ் ஆகவேண்டும் என்பான், இன்னொரு நாள் எதாவது அரசு வேலை , இன்னொரு நாள் கிரிகெடர் என குறுங்கு போல மாறுவான். இதுவரை அவனை நகையில்லாமல் பார்த்திருக்கிறேன் ஆனால் புன்னகை இல்லாமல் இல்லை, அவனுக்கு இருக்கும் தனிமை, கவலை யாருக்கும் கிடையாது என்பதை நான் நன்கறிவேன் இதை நான் அவனிடம் கற்றுக் கொண்டேன்.
சமீபத்தில் அவனை பார்த்தேன் 4 ஆண்டுகளுக்கு பிறகு, அதே தேவாவாக ! ஒரு பெரிய கம்பெனி ஆரம்பித்திருக்கிறான் , கேட்க அவ்வளவு மகிழ்ச்சி ." மச்சி நம்ப காலேஜ் ல போயிட்டு கஷடப்பற்ற பசங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் டா அவங்க டிகிரி முடிக்கல செரிய படிக்கலனாலும் பரவா இல்ல நாம்ப சொல்லிக் கொடுப்போம் " என்றான்
நான் ஒரு வினாடி உறைந்தேன், இத்தைகைய வண்ணமிகு வெள்ளைக்காரன் கருப்பு உருவத்தில் .....
சரவணன் எனது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர், அவ்வளவு பரிச்சயம் இல்லை இருப்பினும் தூரத்திலிருந்து அவரை சிக்னல் லைட்டாக பார்த்ததுண்டு. அவர் நான் அமரும் இடத்திலிருந்து அருகமையில் தான் அவர் அமருவார், நான்கு நபர்களுக்கு ஒரு தடுப்பு போல அமைந்திருக்கும். தகவல் தொழில்நுட்பம் என்றாலே வெகு நேரம் வேலை,கணினியை வேண்டா வெறுப்பாக பார்க்க வேண்டும் என்பது போக நாம் அமெரிக்க ஊழியர்களிடம் நிறைய உரையாட வேண்டும் வேலை சார்பாக. அப்படி சரவணனும் உரையாடுவார் அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து, பேசும் போது ஹெட் செட் அணிவதால் அவர் குரல் உயர்த்தி கேட்க்கும் மற்றவர்களுக்கு. அவர் பேசம் ஆரம்பித்தால் சின்ன தம்பி பிரபு பாட ஆரம்பிச்சிட்டான் என்று வரு வது போல உஸ்ஸ் உஸ் என சில பெண்கள் அவரை பகடி செய்வார்கள், அவருக்கு அதெல்லாம் தெரியாது, சரவணன் சிரமப்பட்டு தான் ஆங்கிலம் பேசுவார் ஆனால் அதில் அவர் அதிகம் பேசினால் நல்ல நேர்த்தி கிடைக்கும் மற்றும் வேலையும் முடியும் என்ற சிந்தனை அவருக்கு.
is , was, that ,sure, Yes , No, definetly.. என்ற ஆங்கில சொற்கள் அங்கும் இங்கும் வெடிக்க, அயர்லாந்த் மகராணி என்று நினைக்கும் சில பெண்கள் "ஒபாமா பேச ஆரம்பிச்சிட்டாரு" என்ற பகடியை நான் கேட்டிருக்கிறேன். அவருக்கே இது காதில் விழுந்தாலும் அவர் சொல்வது "அட விடுங்க பாஸ் ! நம்மால சிரிக்றாங்க இல்ல , என்சாய் பண்ணட்டும் ! நான் நாளுக்கு நாள் முன்னேறிகிட்டு இருக்கேன்!!" சரவணனின் சிரிப்பும் அப்படி ஒரு தனித்தன்மை கொண்டது பள்ளியில் மணி போல சத்தமாக ஒலிக்கும் , யார் அருகில் இருகிறார்கள் என்பதெல்லாம் தெரியாது மனதிலிருந்து வரும் தூய மழை அது ! அன்று ஒரு நண்பரின் வீட்டில் துக்க சம்பவம் எல்லோரும் சென்றிருந்தோம் சரவணனும் இறுதிவரை வந்தார், சொந்த பந்தங்கள் அருகில் வராமல் ஒதுங்கி நின்ற போது அவர் உதவினார், உதவியின் முதல் கை அவரிடமிருந்து வந்தது. நாம் சொல்வது சரி என்றால் யார் என்னவென்று கருதாமல் நம்மை பாராட்டி பேசுவார். இது போல் சொல்லிக் கொண்டே போகலாம்.
சரவணனும் பல வண்ணங்கள் தெளிக்கும் தூரிகை அவர் மனதில் இருக்கும் வண்ணமிகு வெள்ளையினால்
இவர்களைப் போல பல மனிதர்கள் நம் வாழ்வில் கடந்திருப்போம்,அந்த வண்ணமிகு வெள்ளையை உங்கள் கண்கள் இனி அதிகம் என்ற நம்பிக்கையுடன் ......

Saturday, March 14, 2015
சூவிங்க் கம்
வெளிப்படையான, நேர்த்தியான படைப்புகள்
சமூகத்திற்கு ஒரு சூவிங்க் கம் போல,
கண்டபடி மெல்லும்
வாய் மனக்க ,
இல்லாத குறையைத் தேடி எல்லோருக்கும் தெரியும்படி காரித் துப்பி,
இருக்கும் நிறையை யாருக்கும் தெரியாமல் முழுங்கும் !
சக்கை ஏதோ ஒரு செருப்பின் கீழ் ஓட்டும்
நிச்சயம் ஓட்டும் !!
அதி மேதாவிகளின் வாயை விட செருப்பு மேல் !!
இந்த நார வாய்கள் வலிக்கும் வரை
வெளிப்படையான, நேர்த்தியான படைப்புகள் வரும் !!

கலங்காதே !!!
எனக்கு நட்பின் அருமை இன்று தெரிந்தது ,
கண்களும் கண்ணீரும்
நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்து
இடைவிடாமல் பேசிக்கொண்டன
இறுதியில்,
உன்னை அடிக்கடி சந்திப்பேன்
என்று
கண்களிடம் கூறி கண்ணீர்
கன்னத்தின் வழியே
அன்னத்தை நுழையவிடாமல் சென்றது !!
செல்லமுன் என்னிடம் நெருங்கிவந்து
உன் உப்பு கன்னத்திற்கு
சொரணை இல்லாத மாந்தர்கள் காரணம்,
கலங்காதே !!!
என்று ஆறுதல் கூறி கண்ணீர் விடைப்பெற்றது !!!

மீண்டும் ! மீண்டும் !
என் காதிலிக்கு மாப்பிளை பார்த்தனர்,
மேகத்திற்கும் ஆகாயத்திற்கும் வித்தியாசமில்லையா என்றாள்;
நம்பிக்கையுடன் வழி அனுப்பினேன்,
அடுத்த நாளே
நம்பிக்கை அகால மரணம் அடைந்தது !
மேகம் நான் என்று புரிந்தது !
தியாகிகளின் வரிசையில் தோல்வியின் பென்ஷனுக்கு
காத்துக்கொண்டு
நினைவுகளை சாம்பலாக்கினேன் !
கலங்கிய கண்கள் தெளியும் போது
அழுகையை ஞாபகப்படுத்த மறுபடியும் அவதரித்தாள்
தழும்பை கீற,
என்னை சிதைத்தாள் !
நான் என்ன தவறு செய்தேன் என்று வினவியதை
காதலின் காதில் விழுந்தது
என்னிடம் சொன்னது
'நீ சரியாக இருந்ததால் தப்பித்தாய்'
வாழ்த்து கூறி மறைந்தது
கன்னத்திலும் அறைந்தது !!

Monday, March 9, 2015
இரண்டு இட்லி - குட்டி கதை
'இரண்டு இட்லி' எனும் தலைப்பில் குறுங்கதை எழுதியுள்ளேன், படிக்க கிழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும் ...
இரண்டு இட்லி - குட்டி கதை
இரண்டு இட்லி - குட்டி கதை
Saturday, March 7, 2015
தூர் வாரினேன்
தூர் வாரும் பொழுது பழைய பொம்மைகளை கிணற்றிலிருந்து எடுக்கும்போது அந்த வீட்டுச் சிறுவனின் கண்களுக்கு புது பொம்மையாக திகழும், களிமண் கலந்தாலும் சேற்றில் இருந்தாலும் திரும்பி வந்தால் அது மகிழ்ச்சி தான்! இப்படி என் நினைவுகளை தூர் வாரும் போது அந்த சிறுவனாக மாறினேன்..
ஞாபகம் எனும் சாவியுடன் என் பள்ளி இரும்பு கதவை திறந்தேன்,
+1 வகுப்பிற்குள் நுழைந்தேன், என் நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், முதல் வரிசையில் ஸ்ரீதர், சரவணன், பிரவீன் மற்றும் ரவி அமர்ந்திருந்தார்கள். அப்படியே அவர் முகங்களை ரசித்துக் கொண்டே இருந்தேன், கவலை இல்லாத கண்களும் சிரிக்கும் கன்னங்களும் பார்கையில் மார்கழியில் AC ரூம் ஆனது என் மனது .
நான்(விக்னேஷ்) அங்கு கடைசி பெஞ்சில் சண்முகம் , சுரேஷ் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். தீடீர் என்று எங்கள் கணக்கு வாத்தியார் சபீ உல்லாஹ் உள்ளே வந்தார், எல்லோரும் எழுந்தனர் "குட் மார்னிங்" என்ற கோரஸ்.
"நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன், யாரோ.. நான் உங்களுக்கு சரியா சொல்லி தரல ன்னு கம்ப்ளைன்ட் செஞ்சிட்டாங்க so i cant work here anymore " என்று முன்னும் பின்னுமாக நடந்து சொல்லிக்கொண்டிருக்கிறார், அதை சொன்னவுடன் வகுப்பே பேரு மூச்சு விட்டது, அவர் பின் புறமாக செல்கையில் அப்போது மூன்றாவது பெஞ்சில் இருக்கும் ஆதிகேஷ் கையை ஓங்கி அவரை குத்துவது பாவனை செய்தான், சபீ திடீரென்று திரும்பினார் ஆதி மாட்டிக்கொண்டான், வகுப்பில் ஒரு நிசப்தம். ஆதியின் கையை முறுக்கி "ஏண்டா கை ஒங்குரியோ.. !! நீ தாண்டா போட்டு குடுத்திருப்ப" என்று பல்லைக் கடித்து முதுகில் நான்கு குத்து நன்கு குத்தினார். அந்த நேரத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த விக்னேஷ் சத்தம்போட்டு சிரித்தான் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை திடீர் என்று நான் நினைவு என்பதை மறந்து "டேய் அடி வாங்க போற.. சிரிக்காத" என்றேன் என்னைப் பார்த்தே :-).. ஆனால் என்ன புண்ணியம் , சபீ விக்னேஷை " டேய் நீ வெளிய வா , நான் வேலையவிட்டு போன.. ! என்னை ஒருத்தன் அடிக்க வந்தா..! உனக்கு அவளோ சந்தோசமா " என கூறி சர மாரியாக முதுகில் கல் தோசை சுட்டுக்கொண்டிருந்தார். பின்னர் ஆதியும் விக்னேஷும் வெளியே நிற்கவைத்தார் சபீ, சரி இந்த ரெண்டு பேர் என்ன செய்கிறார்கள் என்று வெளியே சென்று பார்த்தேன் விக்னேஷ் சொல்கிறான் "மச்சி நம்ப அவன்கிட்ட நிக்கல் குந்தல் போற்றுக்கணும் டா , செத்திருப்பான்" ஆதி விக்னேஷை அடித்து நிக்கல் என்றான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஓடி வந்துவிட்டேன்.
சரி ஸ்டாப் ரூமிற்கு போகலாம் என்று எண்ணினேன் ஐயய்யோ என் நினைவும் அடிவாங்கணுமா என ஜகா வாங்கி திரும்பவும் ஒரு மணி நேரம் கழித்து வகுப்பிற்கு சென்றால் அது ப்ரீ பிரியட். எல்லோரும் சத்தம்போட்டு இருந்தார்கள்,
ரேகா, மணிமேகலை, நீரஜா மூவரும் எதோ எழுதிக் கொண்டு இருந்தார்கள், ஜெயந்தி ,சரண்யா மற்றும் மஞ்சுளா ஏதோ ஆழ்ந்த உரையாடலுடன்; ராஜ் பரத் மற்றும் ரவி முஜிபுனிஸா, சுரேகா வுடன் பேசி சிரித்துக்கொண்டும்; நரேஷ், சிவா ,ராகேஷ் புக் கிரிகெட்ஆடிக்கொண்டும்; தமிழ் குமரன் வழக்கம் போல கடலைப் போட்டுக்கொண்டிருந்தான்; கிச்சு லக்ஷ்மி நாராயணிடம் எந்த கம்ப்யுடர் சென்டர் போகலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தான் ;பிரவீன் ராஜ் ரியாசிடம் அடி வாங்கிக்கொண்டு இருந்தான். எனக்கு அந்த அறையில் பேரின்பத்தின் ஒலி கேட்டது !!!
+1 போதும், +2 விற்கு போகலாம் என யோசித்து நுழைந்தேன், சற்று முன் பார்த்த முகங்கள் மீசையுடன் ஒரே ஆச்சர்யம் ! என் நண்பன் சண்முகம் SPL, பத்ம பிரியா ASPL இருவரும் அசம்ப்லீயின் போது வழி நடத்துகிறார்கள், ' யு ட்யுப்' விடியோவை நகர்த்துவது போல நானும் நகர்ந்தேன், ஆசிரியர் தினம் - கலை நிகழ்சிகள் நடைப்பெற்று கொண்டிருகிறது நண்பன் மகேந்திர பாபு stand-up comedy செய்துக் கொண்டிருந்தான், பள்ளியில் அப்படி ஒரு சிரிப்பு சத்தம்... இன்னும் நகர்ந்தேன் , குழந்தைகள் தினம் - Ads Ap பில் ரவி பட்டையை கிளப்பினான், இன்னொரு கலை நிகழ்ச்சியில் ராஜ் பரத் பிதாமகன் 'விக்ரம்' கெட்டப்பில், பிரவீன் ராஜ் காதல் கொண்டேன் 'தனுஷ்' ஆகா ஆட்பரித்தார்கள்... இன்னும் நகர்ந்தேன் ,பள்ளியின் கடைசி நாள் - "மச்சி நம்ப எல்லாரும் ஒரே காலேஜ் சேரனும் டா" என சரaவணன் சொன்னான், "மச்சி உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ண போறேன் டா" என கமல் சொல்கிறான். சில தோழிகள் பிரதீபா ,மணிமேகலை , பூர்ணிமா , விஜி , பிரியங்கா கண் கலங்கினர். அந்த இடம் முழுவதும் ஒரு தூய அன்பின் சாரலை உணர்ந்தேன், என் கண்களும் சற்று கலங்கியது ஆனால் எனக்கு தெரியும் இவர்கள் இனி இப்படி பழகப்போவதில்லை , சந்திக்கபோவதில்லை ! முக நூலில் கூட ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க போவதில்லை! இருந்தாலும் அந்த நொடி மகிழ்ச்சியின் நொடி எதிர் பாரா அன்பின் துளி !!
ஞாபகம் எனும் சாவியை பூட்டி வெளியே வந்தேன். இன்று இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தன் குழந்தைகளுடன் வாழ்கையின் மேகத்தில் குடும்பத்தில் மழையாக இருகிறார்கள்..
இதை நீங்கள் வாசித்திருந்தால் ... தூர் வாரி இருப்பீர்கள் ஞாபகமேனும் சாவியுடன் !!!!!!!
Wednesday, March 4, 2015
நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 6
தெளிவே உயர்வு !
இளமையில் தெளிவு மிகவும் தொலைவு, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முடியுமா ? தெளிவில்லா மனதில் முடிவு எடுக்க முடியுமா ? தோல்விகளைச் சுமக்கும் மூட்டையாக அனுபவங்கள் திகழும் அதிலிருந்து லேசாக தெளிவு தண்ணிப் பாம்பைப் போல் தலைக் காட்டும் ஆனால் வெகு சிலர் மட்டுமே தீர்க்கமாகவும் நிதானமாகவும் முடிவெடுப்பார்கள் இதனால் அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்ல இயலாது , அவர்கள் மற்றவர்களின் அனுபவத்தைச் சிந்திக்கும் சிந்தியலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இளமையில் தெளிவு ஒரு வரம் அதற்கு நாம் பொறுமை, எந்த தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு நிதானம் வேண்டும் இப்படி பட்டவர்களை நாம் சந்தித்திருப்போம் , நீங்கள் படிக்க போகும் நபர்களும் இந்த சாயலில் இருப்பார்கள் , இவர்களை வாசிக்கும் பொழுதும் உங்கள் வட்டாரத்தின் ஒரு நண்பரோ உறவினரோ நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன்.
தேவ
பிரகாஷ் ,லயோலா
கல்லூரி
நண்பன் கணித
பிரிவு. மிகவும்
அருமையாக படிப்பான்,
பனிரெண்டாம் வகுப்பில் 1134
மதிப்பெண்கள்
வாங்கினான். சுமார் 11
ஆண்டுகளுக்கு
முன்பு இந்த BE
யின் மோகம்
அதிகரித்தது, 700 மதிப்பெண்
வாங்கினவன்
தேர்வில் தோல்வியுற்றவன்
இப்படி
தங்களால் பொறியியல்
தாக்கு பிடிக்க
முடியுமா என்று
சற்றே சிந்திக்காமல்
பெருமைக்காகவும் தன்
நண்பர்கள் பொறியியல்
தேர்வுசெய்துள்ளர்கள் என்பதாலும் ,
பெற்றோர்களின்
கட்டாயத்தாலும் தெளிவில்லாத
முடிவு
எடுத்து அவதிப்பட்டவர்கள்
ஏராளம்,
இச் சூழலில் 1134
மதிப்பெண் எடுத்து
இளங்கலை கணிதம்
தேர்வு செய்தான்
தேவா, அவனது
பெற்றோர்கள் BE என்ற
முடிவில் இருந்தார்கள்
ஆனால்
அவனது முடிவில்
தெளிவும் தீர்கமமும்
இருந்தது. ஒரு
நாள் தேவாவிடம் "ஏண்டா
உனக்கு
ஈசிய இன்ஜினியரிங்
சீட் கெடச்சிருக்கும்
அதுவும்
அண்ணா யூனிவர்சிட்டிலயே
கெடச்சிருக்குமே? "
என ஒரு
நண்பன் கேட்டான்.
அதற்கு தேவா "பாதிபேரு BE
ன்னு
விழறாங்க யோசிக்காமலே ,
நமக்குன்னு
ஒரு விஷன்
வேணும் டா
எனக்கு மாத்ஸ்
பிடிக்கும் அதானல
இங்க அப்பளை
பண்ணேன் " என்று
சொன்னது எனக்கு
இந்த வயதில்
தெளிவா என
வியந்தேன். மிக
நன்றாக படிக்கக்கூடியவன்
தேவா
எல்லோருக்கும் சொல்லிக்
கொடுத்து
அவர்களையும் நல்ல
மதிப்பெண் வாங்க
வைத்தான், மூன்றாண்டு
முடியும்
தருவையில் எல்லோரும்
காம்பஸ் இன்டர்வ்யுவிற்கு
தயாரானார்கள்
இவன் மட்டும்
போகவில்லை, சென்றிருந்தால்
ஐ.
டி கம்பனிகளுக்கு
பெருத்த லாபம்
வாய்த்திருக்கும். எல்லாரும் MCA MBA
என
மேற்படிபிற்கு வித
விதமான கூடங்களில்
சேர்ந்து TANCET மற்றும்
சில
நுழைவு தேர்வுக்கு
தயாரானார்கள், இதற்கெல்லாம்
அவன்
போகாமல் முதல்
மதிப்பெண் வாங்கும்
அறிவு அவனிடம்
இருந்தது. அந்த
சூழலில் அவனிடம்
நான் " என்ன
மச்சா என்னதான்
பிளான் பண்ற ? MCA
வும் இல்ல MBA
வும் இல்ல
ன்ற ஆனா TANCET
க்கு மட்டும்
ஏன் அப்பளை
பண்ண ? "
அதற்கு "மச்சா
வீட்ல
ஒரே தொல்ல MCA
ன்னு சொல்றாங்க ,
எனக்கு சுத்தமா
பிடிக்கல சும்மா
பேருக்கு அப்பளை
பண்ணேன். எப்படியும்
நெகடிவ் ஸ்கோர்
அதனால தப்பு
தப்பா எழுதிட்ட
மார்க் கம்மி
ஆயிடும் அப்பரம்
வீட்ல என்
இஷ்டத்துக்கு விட்ருவாங்க "
என்றான்.
"என்ன
தாண்ட உன்
இஷ்டம் ?" என
நான் கேட்க்க
"மச்சா , Msc maths
பண்ணனும் ,
ஸ்கூல் ல
பசங்களுக்கு கிளாஸ்
எடுக்கணும் .. எல்லாருக்கும்
நல்ல
கல்விய சொல்லிக்கொடுக்கணும் "
என்றான்
அன்று
அவனிடம் இருந்த
நட்பு மகிழ்ச்சியில்
கண்ணீர் சிந்தியது,
இன்று அவன்
சொன்னது போல
ஒரு பள்ளியில்
கணக்கு வாத்தியாராக
மிகவும் மகிழ்ச்சியின்
ஒளியாக
இருக்கிறான். அவன்
நினைத்தால் கல்லூரிக்கு
கூட
சென்று வகுப்பு
எடுக்கலாம் ஆனால்
தெளிவாக இருந்து
சமூகத்திற்கு ஏணியாக
இருக்கிறான்.
தேவா
ஒரு புரட்சி
தான் ..!
தேவாவைப்
பற்றி
கூறினால் ஜான்
சபாஸ்டின் மனதின்
வாசலில் நின்று
என் நினைவில்
கோலம் போடுகிறான்,
ஜான் சபா
என்ற 'சபா'
இந்த பெயரில்
எங்களுக்கு ஒரு
புத்துணர்ச்சி இருக்கும்,
அவன்
சோகமாக இருந்ததே
இல்லை மற்றவர்கள்
சோகமாக இருந்தாலும்
அவர்களை மகிழ்ச்சியில்
ஆழ்த்துவான்.
என்றும் புன்னகை
இசையின் சபா
எங்கள் சபா.
பொருளாதரத்தில் சற்று
பின்னடைவுடன்
இருந்தது சபாவின்
குடும்பம், இவன்
சம்பாரித்து தான்
எல்லாம் செய்யவேண்டிய
சூழ்நிலை.தெளிவான
முடிவு
படிப்பின் தொடக்கத்திலயே "நான்
வேலைக்கு
போய்டுவேன் மச்சி
நமக்கு PG லாம்
வேண்டாம்" என்ற
சொல் எங்களுக்கு
இன்னும் எதிரொலிக்கிறது.
சிறு
வயதிலே குடும்ப
நிலையறியும் மனமும்
குணமும் சிலருக்கே!
கல்லூரி படிப்பும்
முடிந்தது , வேலைத்
தேடி இவன்
நிம்மதியை தொலைத்தான்,
அயராத
உழைப்பில் சத்யம்
கம்பெனியில் வேலை
கிடைத்தது ஹைதராபாத்
சென்றான் மூன்று
மாதங்கள் நன்றாக
சென்றது, மதமானால்
தவறாமல் வீட்டிற்கு
பணம் அனுப்புவான்,
திடீரென்று சத்யம்
கம்பெனி கடனில்
மூழ்கியது , இராமலிங்க
ராஜு
செய்த தவறு
அப்பாவி சபாவை
பாதித்தது. பாதிக்கும்
மேற்ப்பட்டோரை
வேலையிலிருந்து நீக்கினர்
அதில்
சபாவும் ஒருவன்.
முற்றிலும் உடைந்தான்
ஆனால்
நோருங்கவில்லை, தெளிவாக
இருந்தான்
வீட்டில் தன்
வேலை போனதை
சொல்லவில்லை, ஒரு
மாதம் வேலை
தேடினான் நண்பர்கள்
உதவினார்கள், சம்பளம்
என்று
கடன் வாங்கிய
பணத்தை வீட்டிற்கு
அனுப்பினான், சுமார்
ஒன்றரை மாதத்திற்கு
பிறகு வேலை
கிடைத்தது.இன்று
இன்போசிசில் பணிபுரிகிறான்
தன்
குடும்ப பொருளாதார
சூழலையும் உயர்த்தினான்.
இதையெல்லாம்
விட தான்
காதலித்த பெண்ணையே
திருமணமும் செய்தான்
இது பெரிய
தெளிவு !!! இன்று
லண்டனில் வேலை
செய்கிறான் சபா,
அந்த பெயருக்கு
அவ்வளவு புத்துணர்ச்சி
ஆம் !!!
சபாவைப் போல்
உங்கள் வட்டாரத்தில்
யாரோ ஒருவர்
தெளிவாக இருக்ககூடும்
அவர்களை
நினைவுக் கோலம்
போடுங்கள் உங்கள்
மனதின் வாசலில்
புத்துணர்ச்சியுடன் நிற்பார்கள்!
தெளிவே
உயர்வு !!
Subscribe to:
Comments (Atom)