Translate

Tuesday, July 29, 2014

நம்பி'கை' வேண்டி

என் கை நகங்களில் அவள் முகங்கள்,
  உள்ளங்கையில் மார்கழிச்  சூடு,
கோர்க்கும் பூவாக விரல்கள்
  என்றும் மணம் வீசும் அதே வாசத்தோடு,
வண்டிகளின் கூச்சலில் என் செவிக்கு
 வளையல்களின் கச்சேரி  தோள்களில் அரங்கேறும் ,
அனுதினமும் அன்னமிடும் கையை
 என் இதய கட்சியின் சின்னம் தான்,
உன் விரல் கேட்க
என் விரல் பேச
ஏனோ  மோதிரமும் கூச்சப்படும்,
அந்த நாளை எப்போ வருமோ ?
கோவிலைப் பார்த்து கேட்டது என் கைகள் ...

Saturday, July 19, 2014

தாயின் அகம் நம் தாயகம்

 
     தாய்நாட்டிற்காக  ராணுவத்தில் கணவனை இழந்த ஒரு தாய் , தனியே வாடியிருக்க தன் ஒரே மகனையும் ராணுவத்தில் சேர்த்து நாட்டிற்காக பெருமை சேர்கிறாள். மகனும் ராணுவத்தில் சேர்ந்தான் நாட்டிற்காக தன் கடமையை ஆற்றிகொண்டிருந்தான். இரண்டு வருடங்கள் ஓடியது ,அது ஒரு போர் காலம்  தன் மகனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. அந்த தாய் மிகவும் வருத்தத்திலும் ஏக்கத்திலும் இருந்தாள், தன் மகனை ஒரு முறை பார்க்க முடியாத என்ற மன குமுறல் அலறிக்கொண்டிருக்க , ஒரு தந்தி வந்தது. " அம்மா , நாளை மதியம் நம் ஊரைக் கடந்து தான் நான் பயணிக்கும் இரயில் செல்லும், நமது ஊர் இரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நிற்கும். நீ வா அம்மா நான் பாக்கணும்" என்று அந்த கடிதத்தில் இருந்தது.
    தாய்க்கு பேரின்பம் , இராணுவத்திற்குப்  போன பிறகு தன் மகனை முதல் கடிதம் அதுவும் இரண்டு ஆண்டுகள் கழித்து . சந்திக்க போகிறாள் அந்த தாய்  அவளுக்குள் கேள்வியும் வருத்தமும் எழுந்து கொண்டேயிருந்தது , தன் மகன்  உண்ணாமல் உறங்காமல் மேலிந்திருப்பானோ ? சிரிப்பானோ ? அழுவானோ ? என்றெல்லாம் யோசிக்க தொடங்கினாள். அன்றிரவு நாளை சந்திக்கும் மகனுக்காக தன் கைபட அவனுக்கு பிடித்த உணவை தயார் செய்கிறாள்.
    காலை விடிந்தது , தட புடலாக உணவு வகைகளைத் தயார் செய்தால் அந்த தாயார். எல்லா உணவையும் ஒரு சூடு பதம் பெற்ற பெட்டியில் போட்டு 11 மணிக்கு இரயில் நிலையத்திற்கு சென்றாள். ஒரு துளி நேரம் கூட அவள் அமரவில்லை காணல் நீர் தோன்றிய தண்டவாளத்தைப் பார்த்துகொண்டிருந்தாள். மதியம் கடந்தது , ஒரு அறிவிப்பு வந்தது ஒலி பெருக்கி மூலம் " ராணுவ இரயில் வர தாமதம் ஆனதால் இங்கு நிற்காது , மன்னிக்கவும்" என செய்தி வெளியானது. இந்த தாயைப்போல் பலரும் தங்களது நேச உறவை இரண்டு நிமிடம் பார்க்க வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தினர். இவள் மட்டும் கலங்கவில்லை தன் மகனைப் பார்ப்போம் என்ற நினைத்தாள். இரயிலின் கூவல் சத்தம் கேட்க்க ஆரம்பித்தது, அங்கு ஒரே பரபரப்பு காணல் நீரைக் கிழித்து இரயில் வர தொடங்கியது.
   தாய் யோசிக்கிறாள் , தன் மகனைப் பார்ப்போம் ஆனால் அவள் தயாரித்த உணவை எப்படி தருவது , இரயிலும்  நெருங்கிக் கொண்டிருந்தது வேகமும் குறைந்த பாடில்லை, முடிந்தவரை வீரர்கள் எல்லாம் வெளியே தொங்கியபடி பயணிக்கிறார்கள் , தங்களது உறவுகளை பார்த்துவிடலாம் என்று. தன் கையில் கொண்டுவந்த உணவு பெட்டியை கிழே வைக்கிறாள், இரயிலும் நடைமேடையை நெருங்கியது அரை வினாடிக்குள் தன் மகனை பார்க்கிறாள் , இரயில் வேகம் சற்று குறைகிறது. மகனும் கை வீச தாயும்  கை வீசிகொள்ள கரை உடைந்து ஓடியது கண்ணீர் தூள்கள். சட்டென்று அவள் இரயில் மீது பாய்கிறாள், இரண்டு பெட்டிக்கு நடுவே விழிகிறாள் பெரிய கூச்சல் , மரண ஓலம், மக்களின் அலறல். இரயில் மெதுவாக நின்றது, அந்த தாய் சென்று மற்ற தாய்க்கும் உறவுக்கும் 5 நிமிடங்கள் தங்களது நேச உறவை சந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தாள்.
   அவள் நினைத்தது தன் மகனை இனி பார்ப்பேனோ இல்லையோ என் உணவை அவன் உண்ணட்டும் இதில் மற்றவர்களும் தங்களது உறவை பார்ப்பார்களே என்ற உணர்வும் சேர்த்து. அந்த மகன் உறைந்து போனான், " அடித்தாயே என் இதயத்தில் அடித்தாயே" என்று அழ யாரோ ஒருவர் அவள் எடுத்து வந்த உணவு பெட்டியைக் கொடுக்க, அவள் இதயச்சூடு அந்த உணவில் இருந்தது.......

 இது அண்ணன் BKK விற்காக
  

இளைஞனின் குரல் // பாடல்

சரணம்
அட ..
நாங்க போடாத கோலமா
தொடர் முயற்சியின் தாளமா
வரையபடாத ஓவியம் தான் 
நாளைக்கு காவியம் தான்

பல்லவி 1 :
வெற்றிய தேடி நாம போறோம் ;
ஏனோ தோல்வி நம்ல தேடி வரும்
கூட அனுபவத்தையும் கூட்டி தரும்
காலையும் மாலையா மாறும்
எங்க திறமை நேத்து பிரியாணியா நாறும்.

பல்லவி 2 :
அம்புலன்சுக்கே வழி எங்க கிடக்கு  ,
வாய்ப்புக்கு எங்கடா அட்ரஸ் இருக்கு
கிடச்சா அடிச்சு நொறுக்கு ,
அதுவரை புத்திய சார்ப்பா நறுக்கு ,
நாங்க சுத்தி திரியும்  கிறுக்கு

பல்லவி 3 :
கனவு  நிசமாக  டிசைன் பண்ணுவோம்
உழைப்ப மட்டுமே திண்ணுவோம்
நட்சத்திரமா மின்னுவோம்
 பாசிட்டிவ்வாவே எண்ணுவோம் !!

சரணம்
அட ..
நாங்க போடாத கோலமா
தொடர் முயற்சியின் தாளமா
வரையபடாத ஓவியம் தான் 
நாளைக்கு காவியம் தான் ...

தேர்தல் கமிஷனா இல்ல கமிஷனா??






சௌந்தர்  : தேர்தல் ஆணையம் ஒரு கார் விடாம பணத்தை சர்ச் பண்றாங்க பா, வீடியோ வும் எடுக்குறாங்க !! நிறைய முறைகேடுகளைத் தவிர்க்கலாம்!!

பிரேம் : அட நீங்க வேற , பணம் பட்டுவாடா பண்றவன் உஷாரா தனி தனிய பைக் ல பண்ணிடுவான்; இப்போ வட்டிக்கு வாங்கிட்டு போரவந்தா மாற்றான் , அடப்பாவிங்களா ன்னு சொல்றவங்கள  விட்ருவாங்க ,அப்பாவிங்கள தான் பிடிப்பாங்க !!! இது அவங்க வழக்கம் ஆச்சே !!!

நடிப்பு நீடிப்பா ??



விவேக்  : இனிமே விஜயகாந்த் சினிமா வுல நடிக்கவே மாட்டாரம்ல

வடிவேலு  : அட ... சினிமா வுல மட்டும் தான் பா !!!

கூன்ஸ் (Goons)


ராஜா  : என்னாங்க !! இத்தன பேரு முதுகு வலி ன்னு வந்து இருக்காங்க ???

மணி : அவங்க எல்லாம்  புதுசா ADMK ல சேந்தவங்கலாம்....

வோட்டு இங்க பாட்டு






ராமு    : என்ன அண்ணே !! இந்த நேரத்துல ??
சோமு  : விரலுக்கு பொட்டு வெச்சுட்டு வரேன் !!
ராமு   : புரியலயே !!
சோமு   : vote போட்டேன் பா.. !!
ராமு  : சூப்பர் சிங்கர் தான் முடிஞ்சிடுச்சே !! :-)
சோமு   : இது நாட்டுக்காக டா , பாட்டுக்கு இல்ல !!

Saturday, July 12, 2014

முயற்சி


ஒரு ஐ. டி நிறுவனம் அதில் இரண்டு நண்பர்கள் இருவருக்குமே அங்கு வேலை செய்ய விருப்பமில்லை, வேண்டா வெறுப்பாக வேலை செய்துவந்தார்கள்.
'அங்க வேல இருக்கானு கேக்காதீங்க, அங்க நிச்சயமா வேல இல்ல - யாரோ ஒருத்தரோட மைண்ட் வாய்ஸ்'

அவர்கள் ராஜனும் , அருளும் !!

அருள், ஆர். ஜே (Radio Jockey) ஆகா வேண்டும் என்ற ஆசையும் குறிக்கோளும் மற்றும் திறமையோடு இருப்பவன். ராஜனுக்கு சந்தோசம் , மகிழ்ச்சி மட்டுமே குறிக்கோள்.

"டேய் ராஜன், நாளைக்கு ஆர்.ஜே செலக்ஷன் டா மயிலாப்பூர் கிட்ட , நான் போறேன் " என்றான் அருள்.

"சூப்பர் டா , அடுத்த லவ் குரு நீ தான்" என ராஜன் சொன்னதும்.

" அடிங்க , டாய் மொக்க டுப்பாக்கி ... நான், யாரு லவ்வர் இப்போ யாரோட இருக்கானா பேசபோறேன்.. நான் சமூகத்துல இருக்கிற அவலத்த சீரியஸ் ஆவும் ஜோக்கவும் சொல்ல போறேன் டா" .

" டாய் வாழ எல மூஞ்சி.. , எப்படியோ நல்ல பண்ணு " என்று வாழ்த்தினான் ராஜன்.

"அருள் , பள்ளியில் நன்றாக மிமிகிரி செய்வான், நல்ல பேசுவான். இந்த திறமைக்கு ஏதோ ஒரு ரேடியோவில பேசுவான் " என்று மனதில் நினைத்து வீடு சென்றான் ராஜன்.
அன்றிரவு அருள் தூங்கவில்லை நல்ல ஸ்கிரிப்ட் பண்ணனும் என்று நினைத்து ரஜினி , கார்த்திக் , பாரதி ராஜா வாய்சையும் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் ரெடி செய்தான் அதுமட்டும் அல்ல பொறியியலை பற்றி ஒரு ச்பீச்சையும் தயார் பண்ணினான். அவன் கண்ணில் கனவு , எதிர் பார்ப்பு , திறமைக்கு ஏற்ற வாய்ப்பு கிடைக்கும் நம்பிக்கையில் சிறிது நேரம் உறங்கி அடுத்தநாளில் ஆர் . ஜெ வாக மாறினான் (கங்கா படி படியா சந்திரமுகியா மாறின மாதிரி).

வண்டி சத்தம் உர்ர்ர்ர்ர் ன்னு கேக்க, ரேடியோ சென்டறுக்கு சென்றான் அருள்.
" என் பேரு அருள், நேத்து கூட கால் பண்ணேனே"
Yes Arul, please be seated, 500 /- RS க்கு DD எடுத்துட்டு வந்தீங்களா" என்றது ஒரு பெண் குரல் .
" இல்லைங்க மேடம் ".

"Arul நீங்க எடுத்துட்டு வாங்க that's registration purpose, நாங்க ஆர் . ஜெ கோர்ஸ் offer பண்றோம் , அதுல ஜாயின் பண்ணுங்க , கோர்ஸ் பீஸ் ஜெஸ்ட் 48,900 /- RS தான் "

அப்பு கமல் லவ் பைலியர் பி.ஜி. எம் கேட்டுக் கொண்டே இருக்க...

" தொ வறேன் மேடம்" என்று கிளம்பினான் அருள்.

ராஜன் கால் செய்தான் , அருள் எடுக்கவில்லை .
இதவேற அவன் கிட்ட சொல்லி மனசு கஷ்டபடுத்தனுமா என நினைத்து விரக்தியோடு வீடு திரும்பினான்.

வந்ததும் அசரீரீப் போல ஒரு திருக்குறள் அவன் கண்ணில் பட்டது,

"உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து"

' இந்த குறலுக்கு அர்த்தம் நீங்களே தேடி புரிஞ்சிகோங்க'

அடுத்த வாய்ப்புக்கு பல ஸ்கிரிப்ட்டுகளை எழுத தொடங்கினான்....




"முயற்சியே வெற்றியின் முதல் படி, பார்வையாளருக்கும் பங்கேற்ப்பாலருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது...."

Friday, July 4, 2014

சேராதத் துளிகள் ..

கரு மேகங்கள் சூழ  
வெளிச்சம் இருட்டாக மாற
கோடிக்கணக்கான மேளங்கள் இசைக்க
நொடிக்கு மின்சார ஒளி வர
முதல் துளி பூமியை முத்தமிட துடிக்க
தன் சோகங்களையெல்லாம் கொட்டியது போல மேகம் பொழிய ,
அருவி போல் ஊற்றும் மழை நீர் ,
உருண்டோட வழியில்லாமல்
பச்சை இல்லாமல்
உயிரினமில்லாமல்
ஆரில்லாமல்
நதியில்லமல்,
நாதியில்லாத பாலைவன மணலில் புதையப் போகிறது
என்பது தெரியாது அந்த மழை துளிகளுக்கு....
எழுத்தாளர்களும் அந்த மழை துளி போல் தான் !!!!

Wednesday, July 2, 2014

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 1


     ஒரு நாள் மாலை கிண்டியிலிருந்து ட்ரைன் மூலம் சென்ட்ரலுக்கு வந்துகொண்டிருந்தேன், மாம்பலம் ஸ்டேஷன் கடந்தது,  கோடம்பாக்கமும் வந்தது.ஜன்னல் ஓரத்திலிருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கையில் நான் பார்த்த இல்லை நான் இருந்த பெட்ரம் ஹால், என் நண்பர்கள் வசித்த ஹாஸ்டல், விளையாடிய மைதானம் எல்லாம் பின்னோக்கி சென்றது , என் நினைவுகளும் பின்நோக்க ஆரம்பித்தது ,

என் நிஜத்தின் பிம்பங்கள் உங்களுக்காக!!

     2004 ஆம் ஆண்டு நூறில் ஒரு கணித மேதையகப் போகிறோமா இல்ல பூஜியும் கண்டுபிடித்தவருக்கு பெருமை சேர்க்க போறோமா ? என்ற பல சில கலையாத கனவுகளோட 83 உருப்படிகளும் வலது கால் வைத்து உள்ளே வந்தோம் , மகா பிரபு படத்தில் சரத் குமார் பைக்கில் சுகன்யாவிற்கு சண்டை போடுவார் எங்கள் கல்லூரியில் அப்போது மெயின் பில்டிங்கை கட்டுவார்கள் , அந்த மெயின் பிலிடிங்கில் தான் எங்கள் முதல் ஆண்டு இனிதே தொடங்கியது. சிலர் பள்ளியில் நன்றாக படித்திருப்பார்கள், விளையாட்டில் சிறந்து விளங்கிருப்பர்கள், நல்ல பேசுபவர்கள் என நிறைய திறமை கொண்டவர்களாக இருப்பார்கள்  இன்னும் சிலர் பெரிய ரவுடி என்ற கெத்தோடு வாழ்ந்திருப்பார்கள்  இவர்கள் எல்லோரும் ஒரு அறையில் இருந்தால், அது தன் 04-MT கிளாஸ் ரூம் .....

கிளாஸ் ரெப்புகலும் சேட்டைகளும் ....
     கமலக் கண்ணன் ஒரு தீ போல , கேள்வி முடிவதற்குள் விடை இருக்கும் , அவன் தான் கிளாஸ் ரெப், அவ்வளவு திறமைசாலி. கருப்பா களைய இருப்பான். ஒரு ஸ்ட்ரிக்ட் ஆபிசர்  , ஒரு நாள் அவன் லேட் ஆக வந்தான் அதாவது ஒரு 3 நிமிடங்கள் இருக்கும்,    அப்போது எங்கள் வாத்தியார் விக்டர் வந்தார் அட்டென்டென்ஸ் எடுத்துக் கொண்டிருந்தார்.
 " எக்ஸ்க்யுஸ் மீ சார்" என்றான்.
" லேட் ஆகா வந்ததுக்கு காலேஜ் ஹ மூணு ரவுண்டு சுத்திட்டு வா" என்ற விக்டர் சார்.
ஒரு 25 நிடங்கள் கழித்து , மூச்சிரைக்க வியர்வை சொட்ட
"ஓடிட்டேன் சார் " என்று சொன்னான் கமல்.
விக்டர் சார் முகத்தில் ஒரு சலனம் " டாய் ஓடினிய ?"
"எஸ் சார்"
அன்று விக்டர் சார் முகம் சின்னதனது .
உண்மையில் அவன் மூன்று ரவுண்டு ஓடினான். ஒரு ரவுண்டு 2 மைல் இருக்கும், அவன் பள்ளி காலத்தில் தமிழக அளவில் NCC யில் மெடல் வகியவன் என்று பிரெண்ட்ஸ் சொல்லுவாங்க. .
கமல் கூடயே செல்வா, சிரில், ஜோசப் , சரண் என்று ஐந்து பெரும் பஞ்ச பாண்டவர்கள் போல,  எப்போதும் ஒன்றாக இருப்பார்கள்.
"மச்சா காக்க காக்க குரூப் வந்துடனுங்க டா" என்று பசங்க சொல்லி கேட்டு இருகிறேன். எதாவது பான்க்ஷன் சொன்ன இவங்க அஞ்சு பேரும் ஒரே மாதிரி டிரஸ் ல வருவாங்க.. சுருக்கமா சொல்லனும்னா இவங்க தனி தீவு மாதிரி யாரயும் தொந்தரவு செய்ய மாட்டங்க , கமல் தான் இந்த குரூப் டிரைவர் , நாலு பேருக்கும் நல்லா அட்வைஸ் பண்ணுவா  போல , நல்ல பிரெண்ட்ஸ் .. இப்போ எங்கயோ எல்லாருக்கும் கல்யாணம் ஆயிட்டு சந்தோசமா இருக்காங்க.....

  அனுக்ஷன் ரெண்டாவது வருஷ கிளாஸ் ரெப், அவன் பேரு ராஞ்சு (சின்ன வயசுல ராஜா ராஞ்சு ன்னு ஒரு சீரியல் தமிழ் டப் பண்ணி மெட்ரோ சேனல் போடுவாங்க , அதுல ராஞ்சுன்ன்னு  ஒரு சுட்டி கொன்றங்கு வரும் , இப்போ உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நேனைகிரேன் , அவன் எப்படி கிளாஸ் ரெப் ஆனா இன்னைக்கி வரைக்கும் ஒரு வியப்பு தான். எப்பவுமே சந்தோசமா சிரிசிகிட்டு சில மொக்க ஆடுங்கள அழ வேசிகிட்டு இருப்பன், இன்னொரு விஷயம் சொல்ல மறந்துட்டேன் இவன் மாற்றான் !! என்ன புரியலையா ?
சபாஸ்டின் இவனோட தேவா இல்ல சூர்யா ன்னு கூட சொல்லலாம், மாற்றன் படத்துல சூர்யா ரெட்டை மாதிரி இவனுங்க எப்பயுமே ஒன்ன தான் இருப்பானுங்க.
  ஒரு நாள் பிசிக்ஸ் கிளாஸ் ராஜேஷ் சார் வந்தாரு , அனுக்ஷன் தான் கிளாஸ் ரெப், என்ன பண்ணான் , அவன் அட்டெண்டென்ஸ் கொடுத்தான் , கிளாஸ் கட் அடிக்க முடிவு செஞ்சான். சார் அட்டெண்டென்ஸ் முடிச்சிட்டு போர்டு பக்கம் திரும்பி எழுத ஆரம்பிச்சாரு , மெயின் பில்டிங் கிளாஸ் எல்லாம் மூணுக்கு மேல என்ட்ரன்ஸ் இருக்கும் , அனுக்ஷன் லாஸ்ட் பென்ச்ல இருந்து தான் மெதுவா பூனை மாதிரி வெளிய போனான். அவன் எப்படியும் ரெண்டு என்ட்ரன்ஸ் கடக்கணும், குனிஞ்சிகிட்டே போனான், ராஜேஷ் சார் நிக்கிற இடத்திலிருந்து ஒரு என்ட்ரன்ஸ் சரியா தெரியும்,
அனுக்ஷன் ரொம்ப நேரமவே வெளிய பதுங்கி கிடந்தான் , திடீர்னு பொறுமை இழந்து ஓடிட்டான் .
ராஜேஷ் சார் பாத்துட்டாரு  " டாய் .. டாய் ... யாரு அவன் ??? டாய் " ..
அனுக்ஷன் துண்ட காணும் துணிய காணும் ன்னு மான் கராத்தே பண்ணிட்டன்.
ராஜேஷ் சார் அட்டெண்டென்ஸ்  பாத்துட்டு அனுக்ஷன் தான் அந்த ஓடுகாலி ன்னு கண்டு பிடிச்சாரு.
"யாரு கிளாஸ் ரெப் " என கேட்டார் சார் .
எல்லோரும் கோரஸ் ஹ "அனுக்ஷன்" என்றோம்..
" இந்த கிளாஸ் விளங்கிடும்" என்றார்.
இதில் வியப்பு என்ன ன்னு கேட்ட , அடுத்த நாள் சார் கேட்ட கேள்விக்கு அனுக்ஷன் சொன்ன பதில் தான்,
அவன் காத பிடிச்சி திருவி கேட்டார் ராஜேஷ் சார் " தொரை எங்க ஓடுநீங்க ?"
வலியோடு " சார் .. சார் .. உங்களுக்கு சாக் பீஸ் எடுக்க போனேன் சார்" என்றான் .. எல்லோரும் சிரிச்சோம். இந்த மாதிரி 3 வருஷத்துல ஏகப்பட்ட சேட்ட பண்ணி இருக்கான். ஒரு நாள் அனுக்ஷன் என்கிட்ட
"மச்சி எப்படி வந்த ன்னு கேட்டான் " .
"மாமா நான் ஒரு கிரீன் கலர் ரெடி பண்ண பைக் வெச்சிருக்கான் டா" ன்னு சொன்னேன் .
"மச்சி ப்ளீஸ் ஒரே ஒரு ரவுண்டு குட்ரா" ன்னு அனுக்ஷன் சொல்ல .
"ஹ்ம்ம் , சரி ஒ.கே , போட்டு பைக் எடுத்துட்டு வரேன்" நான் சொன்னேன் .
எதிர்பார்ப்பு மின்ன , அனுக்ஷன் மைண்ட் வாய்ஸ் என்னக்கு கேட்டுச்சு "இன்னிக்கி எப்படி யாவது பைக்க முறுக்கி பாஸ்ட் ஹ போகணும், பைக் நாசமா போனாலும் பரவா இல்ல"..
இப்போ நீங்க இந்த பாட்ட மைண்ட்ல ஓடுங்க "ரேக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்"
ஸ்லோ மோஷன் ல நான் சைக்கிள் மேதுச்சிட்டு வரத பாத்த அனுக்ஷன் மூஞ்சி  புஸ்வானம் அணையறது போல இருந்துச்ச....
கவலைகளை மறக்கறதுக்கு அவன் கிட்ட தான் ட்யூஷன் போகணும் , எல்லாரையும் சிரிக்க வேசுகிட்டே இருப்பான்.
 "கப்பல வேல பத்தாயிரம் சம்பளம் " ன்னு கவுண்டமணி ஒரு படுத்துல சொல்ற மாதிரி , இப்போ கப்பல் ல வேல செய்றான் , சுருக்கமா சொல்லணும் னா கப்பல் டிரைவர் ன்னு நெனைகிறேன் ....

     வெங்கடேஷ் மூன்றாவது வருஷ கிளாஸ் ரெப் , ஒள்ளிய , வெள்ளைய வெகுளியா பேசுவான். ஆனா இவன் வேலைய ரூபன் தான் செஞ்சான், ரூபன் கமல் போல தான் ஆனா இவன் தீவு மாதிரி இல்ல ஒரு நாடு மாதிரி, எல்லார் கிட்டயும் பேசிக்கிட்டு இருப்பன், ஒரு ப்ரொபசர் லுக் அப்பவே. வெங்கி க்கு ப்ராக்சீ ரூபன்.
      வெங்கி நல்ல காரெக்டர் , அவன் பாத்தாலே , அவன் செய்றது சீரியஸ் ஹ இருந்தாலும் நமக்கு காமெடி ஹ இருக்கும். காலேஜுக்கு அவன் சைக்கிள் ல தான் வருவான்.
இப்போ பெரிய ஐ .டி ல வெளி ஊர்ல வேல செய்றேன். நேரியாய் நேரம் அவன் நூலகத்துல இருப்பான் , படிக்கிற பசங்களோட இருந்து நெறைய கத்துகிட்டான்,  உழைப்பே உயர்வுக்கு எடுத்துக்காட்டு வெங்கி ...

.... தொடரும்