Translate

Wednesday, December 31, 2014

வாசிப்பும் நேசிப்பும்

வாசிப்பும் நேசிப்பும்

http://dinaethal.epapr.in/c/4097743

பார்வைப் பெறுமா பாவைக்கூத்து

 பார்வைப் பெறுமா பாவைக்கூத்து

     http://dinaethal.epapr.in/c/4162093


குறும்படம் - உய்கை (திரைக்கதை)

                                                            

      ~~  உய்கை ~~

கதைச்சுருக்கம்:

            ராகுல் , பூஜா கணவன் மனைவி. திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆக, ஒருவரையொருவர் புரிதலுக்கான சூழல் நிகழவில்லை, ராகுல் வேலையெனும் பாரத்தைச் சுமப்பவனாக திகழ்கிறான், பூஜா அவசரத்தின் பிரதிநிதி அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற மனம் கொண்டவள். திருமணமாகி முதல் ஒரு வருடத்தின் இருக்கும் அன்பு மெல்ல மெல்ல சாயம் போகும் துணியாக மாறுகிறது. ஒரு நாள் பூஜா, ராகுலிடம் "இந்த பந்தத்தை முறித்துக்கொள்கிறேன், நான் வேறொருவனை காதலிக்கிறேன் அவனை மறுமணம் செய்யவிருக்கிறேன்" என்றாள். அதிர்ச்சியுட்றான் ராகுல். மேலும் அவள் கேட்பதாக இல்லை, பின்னர் ராகுல் "உன்னக்கு என்ன மகிழ்ச்சி தருமோ , அதை செய் "என்று கூறி ஒரு வேண்டுகோள் வைத்தான், " நீயும் உன் காதலனும் இறுதியாக என்னுடன் இரவு உணவு சாப்பிட வேண்டும், அத்தோடு நீ போகலாம் உன் விருப்பத்தில் குறுக்க நிக்க மாட்டேன்" என்பது தான்.

     பூஜாவும் இதற்கு செவி சாய்தால். மறுநாள் அவள் காதலன் ரூனி வந்தான், மூவரும் உண்ண ஆரம்பிக்கையில் அங்கு நிகழும் சூழல் பூஜாவை பழைய நினைவுகள் தட்டுகிறது அதே போல ராகுலையும் அந்த சூழல் விழிக்க வைக்கிறது, ரூனியின் தீய பேசும் அவன் செயலும் அங்கு தொனிக்கிறது. பூஜாவும் ராகுலும் தங்களது தவறுகளை உணரும் தருணமாக அந்த சூழல் அமைகிறது, அப்போது பூஜா மேஜை மேல் இருக்கும் முற்கரண்டி எடுத்து தன் கழுத்தில் குத்தி மாய்த்துக்கொள்ள பார்க்கிறாள் , சட்டென்று ராகுல் தடுத்து "உன்னோட அவசர புத்தி தான் இவளோ தூரம் வரவெச்சி இருக்கு, தப்பு என் மேலயும் தான் நானும் செத்துட்றேன் "என்று அந்த முற்கரண்டியை தட்டி விட்டான். ஒரு முனையில் ரூனி பீதியில் கதவை திறந்து ஓட தயாராக இருக்க, "என்ன நடக்குது இங்க ??" என்று கெட்ட ரூனிக்கு "சாரி ! ப்லீஸ் வெளிய போய்டு "என கூறினாள் பூஜா.

“ரூனி ச்சா MRS MISS ஆயிட்டா” என்ற மைண்ட் வாய்சோடு கதவை சாத்தி சென்றான். கதவு மெல்ல மூட, பூஜா "என்ன கடவுள் கூட மன்னிக்க மாட்டார், நான் லாயக்கு இல்லாதவ "என அழுதாள்.

"ஆனா நான் மன்னிப்பேன் ; எல்லாருக்கும் ரியலைஸ் பண்ண ஒரு மோமன்ட் வரும் அது இன்னைக்கு வந்திருக்கு, நம்ப மன துன்பங்களுக்கு இது லாஸ்ட் டே .." என ராகுல் கூற,கதவு மெல்ல மூடியது!!!

. காட்சியமைப்பு
   ஓர் அறையில் நிகழும் கதை, அங்கு நிகழும் சூழல் FLASH BACK கொண்டு செல்கிறது, நிகழ் காலத்தில் என்ன வசனம் பேசுகிறார்களோ அதே வசனம் FLASH BACK இல் தொடங்குவார் , FLASH BACK இல் முடியும் வசனம் நிகழ் காலத்தில் தொடங்கும்..

Meaning – உய்கை
         State of redemption, thunbangal neengi athan pin …. 

 Click the below link for screenplay

 


Saturday, December 27, 2014

பாவைக்கூத்திற்கு பார்வைப்படுமா ?

" 'சமீபத்துல ஒரு அனிமேஷன் படம் பார்த்தேன் சார் , அடடா !! என்னமா எடுத்திருக்காங்க , வெளிநாட்டுகாரனால தான் இப்படி யோசிக்க முடியும் சார் !' என்றார் ஒருவர். இதற்கு பதிலாக இன்னொருவர் 'நம்ம தாங்க அனிமேஷன், கார்டூனுக்கெல்லாம் குரு; பாவைக்கூத்து தெரியுமா ?? அட பொம்மலாட்டம் ங்க! பாவைக்கூத்தோட பரிணாம வளர்ச்சி தான் இந்த மாதிரி வேறரூபத்துல இருக்கு' "

      இயல், இசை, நாடகம் என்பது  முத்தமிழ் .நாடகம் எனபது ஆடலால், நடிப்பால் உணர்த்தப்படும் தமிழ். நாடகத்தில் ஓர் அங்கம் 'பாவைக்கூத்து', கிராமியக் கலைகளில் ஒன்று; நமது பாரம்பரியக் கலை. நம்மில் பலருக்கு 'பாவைக்கூத்து' என்ற கலை இருக்கிறதே தெரியாது அதுவும் இக்காலக்கட்டத்தில் சொல்லவா வேண்டும். பாவைக்கூத்தைப் போல் பல கூத்துகள் திரைப்படத்தின் வளர்ச்சியாலும், தொலைக்காட்சியின் ஆதிக்கத்தாலும் குத்து வாங்கி அடிபட்டு போயின. நமது கலையைப் பற்றி அறிவதும் , அதைப் பேணிக் காப்பதும் நம் தலையாய கடமையாகும்.

 பாவைக்கூத்து என்றல் என்ன ?
 உயிரற்ற பாவைகளை உயிருள்ள பாத்திரங்களைப் போல இயக்கி நிகழ்த்தப்படும் கூத்து 'பாவைக்கூத்து', இதை இரண்டு கூத்து முறைகளாக பிரிக்கலாம். ஒன்று 'தோற்பாவைக்கூத்து', இரண்டு 'மரப்பாவைக்கூத்து'.

தோற்பாவைக்கூத்து :
       தோலினால் செய்யப் பெற்ற பாவைகளின் நிழலை மையப்படுத்தி அமைவதால் இப்பெயர் பெற்றது. பல வண்ணங்களில் வரையப்பட்டு விளக்கின் ஒளியில் வெள்ளைத் திரையின் அதன் நிழல் தெரியுமாறு ஆட்டி அசைத்து நிகழ்த்துவது தோற்பாவைக்கூத்தின் முறை. பெரும்பாலும் புராண கதைகளை அரங்கேற்றுவார்கள், கதைகளில் இடம் பெறும் பாத்திரங்களுக்கேற்ப பதப்படுத்தப்பட்ட ஆட்டுத் தோலில் வரையப்பட்டு அதற்குரிய அளவில் வெட்டப்படும், பாவைகளின் கீழே துடுப்பு போல் இணைக்கப்பட்டிருக்கும் அதை பாவையாட்டியின் திறமையான செயல்பாட்டினால் இயக்கம் பெற்று, திரையில் நிழல் வடிவங்களாகப் படிமம் பெறும்.
      பாவைக்கூத்து உயிருள்ள நாடகத்தின் நிழல் வடிவம், இதற்கு பெரியளவில் கலைஞர்களோ மேடையோ தேவைப்படாது, சிறிய இடமிருந்தால் போதுமானது. பாவைகள் பின்னாலிருந்து இயக்கும் கலைஞர்களின் சிந்தனைகளும், எண்ணங்களும் பாவைகள் வழியே வெளிப்படுகின்றன. பாவைகளை உயிருள்ள கதைப் பாத்திரங்களாகவே பார்வையாளர்கள் எண்ணும் அளவிற்கு நேர்த்தியாகத் திகழும்.அக்காலக்கட்டத்தில்  பெரியக் கருத்துக்களை எளிய முறை பிரச்சாரங்களாக மக்களுக்கு சென்று சேர்த்தது தோற்பாவைக்கூத்து. மேலும் சுதந்திர போராட்டத்தின் போது பிரச்சார ஊடகமாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது .
      'அழகி'  படத்தில் 'ஒளியிலே தெரிவது தேவதையா' என்ற பாடலில் தங்கர் பச்சான் அவர்கள் தோற்பாவைக்கூத்தைப்  பயன்படுதிருப்பார்கள் மற்றும் 'தசாவதாரம்' படத்திலும் 'முகுந்தா முகுந்தா' பாடலிலும் காணலாம்.

மரப்பவைக்கூத்து:
       மரத்தை நீரில் நன்றாக ஊறவிட்டு பின்னர் காய வைத்து, கதைப் பாத்திரங்கள் ஆணோ, பெண்ணோ அதற்கேற்ப வடிவம் அமைத்து வண்ணம் பூசுவார்கள். தலைப்பகுதி, உதடு , மூக்கு , கன்னம் போன்றன அமைக்கப்படும் .மார்புப் பகுதியில் துணி சுற்றப்படும். பொம்மையின் முதுகில் 6 அங்குல துவாரம் இடம் பெற்று தலை, கை, கால் ஆகிய உறுப்புகள் ஒரு இணைப்பின் மூலம் இழுத்துக் கட்டப்படும். பொம்மைகளின் உயரம் 1.5 அடி முதல் 3 அடி வரையிருக்கும்.   பொம்மைகளின் இணைப்பில் பிணைக்கப்படும் ஆதாரம் 'சுண்டுக் கயிறு' எனப்படும். பொம்மையின் தலை, கை, கால் , முதுகு ஆகியவற்றில் பிணைக்கப்பட்டுள்ள சுண்டுக் கயிறுகளின் மற்றொரு முனை 1/2 அடி நீளமுள்ள மூங்கில் குச்சிகளில் கட்டப்பெறும் . பாவையாட்டி இக்குச்சிகளைப் பிடித்துக் கொண்டு கயிறுகளை அசைக்க பாவைகள் இயங்கத் தொடங்கும், இதற்கான மேடை பொதுவாக 12 அடி நீள அகலமான மேடையில் 8 அடி உயரத்தில் வேயப்படுகிறது . மேடையின் முன்புறத்தில் பாவைகளை ஆட்டுவதற்கு 1.5 அடி இடைவெளி விட்டுக் கறுப்புத் துணியால் மறைக்கப்படுகிறது, இதனால் பாவையாட்டியின் அசைவுகள் வெளிப்படாது. மரப்பாவைகூத்திற்கும், தோற்பாவைக்கூத்திற்கும் பாவைகள் தான் வேறுபாடே தவிர படைப்பு நிலையில் பெரிய வேறுபாடுகள் இல்லை.திருக்குறளிலும் மரப்பவைகூத்தின் பதிவிருக்கும்.

"நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று."

         சமீபத்தில்  வெளியான கரு. பழனியப்பன் இயக்கிய ' ஜன்னல் ஓரம்' படத்தின் ட்ரைலர்  மரப்பாவைக்கூத்து பாணியில் வெளிவந்திருக்கும். வெகு சில இயக்குனர்கள் மட்டுமே இக்கலையை மறவாமல் படத்தில் கோர்த்து அக்கலைஞர்களுக்கு உரிய இடம் கொடுப்பார்கள் , அது பாராட்டுக்குரியது.

        ஒரு காலக்கட்டத்தில் பாவைக்கூத்து  மக்களின் பொழுதுப்போக்காகவும் , செய்திகளை அவர்களிடையே தெரிவிக்கும் ஊடகமாகவும் செயல்பட்டுள்ளது. இத்தகைய கலைகள் இருகிறதா என்ற கேள்வி இளைய சமூதாயத்திடம் அதிகமுள்ளது  மேலும் இக்கலைகள் அழிவில் இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியாத உண்மை. பாவைக்கூத்துப் போன்ற பல கிராமிய கலைகளையும் அக்கலைஞர்களையும் நாளடைவில் இழந்துவிடக் கூடாது, இக்கலையை பரம்பரை பரம்பரையாக அரங்கேற்றுவோர் குறைந்து கொண்டே வருகிறார்கள், இதை காப்பாற்றுவது நமது கடமையாகும். பாவைக்கூத்தை பள்ளி, கல்லூரிகளின் விழாவில் அரங்கேற்ற வேண்டும் அதுமட்டுமல்லாமல் நல்ல கலைஞர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்று கொடுத்தால் பழையக் கலை புதுக் கலையாக உருமாறும்.
         இப்போதைய ஊடகங்கள் குறும்படம், நடனம் , இசை என ஒவ்வொன்றுக்கு போட்டிகள் வைத்து திகட்டி போயிருக்கும் சூழலில், பாவைக்கூத்திற்கான போட்டிகளோ அல்லது அரை மணிநேரம் அதற்கான நிகழ்ச்சியையோ அடித்தளமாக கொடுத்தால் பாவைக்கூத்து புத்துயிர் பெறும், அக்கலைஞர்களின் திறமைகளை பரைசாற்றும் விதமாக மறு விதையாக அமையும். நலிந்த கிராமிய கலைகளுக்கு சத்துணவு நம் ஊக்கம்  தானே !...
    வரும் 29-ல் சுற்றுலா தொழில் பொருட்காட்சி சென்னை தீவுத் திடலில் தொடங்குகிறது, அதில் பல கிராமிய கலைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, அவசியம் பாவைக்கூத்தின் நேர்த்தியை கண்டு மகிழுங்கள்.

"உயுரற்ற பாவைகளுக்கு ஜீவன் கொடுப்போம்,
கிராமிய கலைகளைக் கொண்டாடுவோம் "

Thursday, December 25, 2014

மேன்மை ஒரு உயரப் பறக்கும் பறவை !!

        நன்றாக பள்ளி , கல்லூரி படிப்பை படித்தால் நல்ல வேலை கிடைக்கும் அதன் பின் கை நிறைய சம்பாதிக்கலாம் இப்படியே வாழ்கையை ஓட்டலாம் என்பது  நம்முடைய அடிப்படை தீர்மானம் இதை தப்பு கூறவில்லை, நன்றாக சம்பாதித்தல் மேன்மை வருமா ? இல்லை இன்னும் பேராசை வருமா ? மேன்மை குணம் சிலரின் நற்பண்பு , சிறுமை குணம் பலருடைய பேராசையின் ஆணி வேர். நம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்கிறோம், தினம் தினம் புலம்பும் விஷயம் மேலாளர்கள் , உயர் அதிகாரிகளின் ஆதிக்கம். நமது  உழைப்பை சுரண்டி அவர்கள் சட்டைப் பையில் போடும் பலர் அலுவலகத்தில் இருக்கின்றனர், இவர்களின் இயலாமை மிகவும் வருத்தம் அளிக்கும். இப்படி பட்ட உலகத்தில் மேன்மையான உயர் அதிகாரிகள் அபூர்வம் தான், பேருந்து பயணங்களில் காணும் மனிதர்களைப் போல என் சில வேலை பயணங்களில் பல மேலாளர்களை கடந்துள்ளேன். இதை வாசித்தால் உங்கள் வாழ்வில் சந்தித்த அந்த மேன்மை மனிதர்கள் முகம் சற்றே நினைவை தட்டும்.

              கஜன் , என்னுடைய முதல் சிறிய மென்பொருள் நிறுவனத்தின் TL (குழு தலைவர்) . இவரின் குணாதிசயம் வியப்பிகுரியது. மிகவும் திறைமை வாய்ந்தவர். VB யை தன் சட்டைப் பையில் போட்டு திரிவார். அவர் வைத்திருக்கும் அலைபேசி எண் இறுதியில் 7744 என்று முடியும் அதே போல் அவர் இருசக்கர , நான்கு சக்கர வாகனம் எல்லாம் 7744 தான், மிகவும் வித்தியாசமான மனிதர். நான் அரட்டை அடிக்கும் போது எண் குரல் உய்ரந்திருக்கும் எல்லோரையும் கிண்டல் செய்து நேரம் போகும் அவரும் நன்றாக சிரிப்பார் , என்னக்கு VB என்றால் என்ன கூட தெரியாது அவர் வேலை கொடுத்தால் ஊமையாக மாறிவிடுவேன் அதை "பேசும்போது மட்டும் வாய் அப்படி இருக்கு வேல கொடுத்த வாய் இருக்கனே தெரியல" என்று சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. அவரும் நானும் RX 100 பைத்தியங்கள், நாள் பூர்த்தியாக பைக் தான் பேசுவோம். கஜன் அந்த சமயத்தில் காதலித்து இருந்தார் திருமணத்திற்கு தேதி பாத்துக்கொண்டிருன்தனர் அவர் வீட்டார். நான் ஒரு மனகசப்பின் பேரிலும், வேலை சுத்தமாக தெரியவில்லை எனக்கு ஸ்ரீநாத் என் நண்பன் அவன் என்னக்கு அதீத உதவி செய்தான் ஒன்னுமே தெரியாமல் கூனி குறகி போனேன், வேலையை விட்டேன் ஒரே ஒரு மின் அஞ்சல் வேலையே விடுகிறேன் என்று. கஜன் சாருக்கு எனக்கு போன் பண்ண வேண்டும் என்று அவசியம் இல்லை தொடர்ந்து ஐந்து நாள் அழைத்தார் ஆனால் நான் பேசவே இல்லை. ஸ்ரீநாத் என்னிடம் "டேய் கஜன் உன்ன வர சொல்லறாரு டா, ஈசியா கத்துக்கலாம்" அப்படியும் நான் எதுவும் சொல்லவில்லை. இரண்டு மதம் போனது வேறு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், கஜன் சாரிடம் போன் வந்தது "டேய் , எனக்கு திருச்சில மரேஜ் நீ அவசியம் வரணும்" என்று சொன்னார். நான் மிகவும் கனத்த நேரம் அது, ஒருவர் எவ்வளவு மேன்மையின் உச்சமாக இருந்தால் மதிக்காத என்னை தன் திருமணத்திற்கு அழைப்பர். அவரின் மேன்மை குணத்திற்கு இன்னும் பல தூரம் செல்வார் கஜன்.
  
      அசோக் , நான் பணிபுரிந்த இன்னொரு மென்பொருள்  நிறுவனத்தின் மேலாளர். வெகு சிலர் மட்டுமே நம் விழியன் கரு மணியைவிட்டு அகல மாட்டார் அதில் அசோக்கும் ஒருவர், மனித நேயத்தின் உச்சம். அவரிடம் அவ்வளவாக உரையடினதில்லை, அந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணி புரிந்தார், வேலையை விட்டு செல்லும் இறுதி நாட்களில் மட்டுமே நான் அவரிடம் உரையாடினேன். அவரின் நிறுவனத்தின் இறுதி நாளில் கண் கலங்கி வெளியே சென்றார், சில மாதங்கள் முன்பு என் குழுவில் இருக்கும் ஒரு நபர் மிக முக்கியமான பைல் ஒன்றை டெலீட் செய்தான் , ஒரு விரோதத்தின் காரணமாக அதை செய்தான். அது ப்ரொடக்ஷன் டேட்டா என்று சொல்வார்கள் , டெலீட் செய்து அன்று தான் அன்சைட் மேலாளருக்கு அந்த டேட்டாவை கொடுத்து ப்ரோஜக்ட் வாங்க முடியும்.
ஷ்யாம் என்ற நண்பர் தான் கண்டு பிடித்தார்  "டேட்டா மிஸ்ஸிங் அசோக் " என்றார், உடனடியாக விசாரித்தோம் எப்படி இது போனது யாரோ டெலீட் செய்திருகிறார்கள் என்பது தெரியவந்தது அவரின் பெயரும் வெளிவந்தது, அது டெலீட் செய்த ஆளின் பெர்யல்ல வேறொருவருடையது. தனிமனித காழ்புணர்ச்சி காரணமாக வேறொருவருடைய  ஐ டி யில் இருந்து டெலீட் செய்தான் அந்த தியாகி, பின்னர் குற்றவாளியே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
       அந்த நம்பரை வேலையிலிருந்து நீக்கும் படி மேலிடம் சொன்னது. வேலையில் இருந்து நீக்கப்பட்டது நியாயம் , ஆனால் அவன் எதிர்காலம் திடீர் என்று எங்கே செல்வான், அசோக் அந்த நபரை அழைத்து ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தார், " பழைச மறந்துரு , நல்லா வேல செய்யு" என்று அந்த குற்றவாளிக்கு சொன்னார். இது மேன்மையின் உச்சம், அசோக் சார் அவன் எதிர்காலத்தையும் குடும்பத்தையும் பார்த்தார், அவருக்கு என்ன என்று இருந்திருக்கலாம், மனிதநேயம் என்பது அசோக் சார் போல சிலரிடம் தென்படும். 
          இன்று வேறு மென்பொருள் நிறுவனத்தில் மிக உயரிய இடத்தில் இருக்கிறார், எங்கு சென்றாலும் மேன் மக்கள் மேன் மக்களே !!

      இதே நிறுவனத்தில்  சாம் மற்றும் வினோத் என சில மேலாளர்கள் உள்ளனர், இவர்கள் அசோகின் மறு படிமம். உதவி எனும் செயலை செய்து மார் தட்டிக் கொள்ளும் இந்த சமூகத்தில்,  இவர்கள் மற்றவர்க்கு செய்த உதவி ஊமையாகும் அவர்களது மேன்மை ஒலி பெருக்கியாய் மனதில் மார்கழி இசையாய் கேட்கும்! நாம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டால் நான் என்ற கொம்பு வரும், வினோத் 8 ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறார், கணினிக்கும் இவர்க்கும் தொடர்பே இல்லாத தொழிற் சார்ந்த பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தார் ஆனால் அவருக்கு தகவல் தொழில்நுட்பம் அழைத்தது. கணினி படித்தவர்களை விட இவருக்கு அதன் அடிப்படையும் நுணுக்கங்களும் தெரியும், எல்லாம் தன் முயற்சியால் கற்றுக்கொண்டார்.நாம் ஒரு சிறிய வேலை செய்தாலும் அதற்கான அங்கீகாரத்தை பெற்று தருவார்.
       இந்த உலகில் ஒருவரை ஒருவர் கீழே தள்ளி மேல வரும் மனிதர்களிடையே அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் மிக அதிகம், மற்றவரின் வளர்ச்சியை கண்டு மகிழ்வார் அதனிலும் அந்த வளர்ச்சிக்கு இவர் தான் காரணமுமாக இருப்பார். இவருக்கு அவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் யாரிடமும் சென்று சோகத்தை பகிர்ந்தது இல்லை, ஏன் மற்றவர்களை சோகத்தில் ஆழ்தவேண்டும் என்று மேன்மையின் உணர்வு தான்.
      சாம், உண்மையான ஆத்மா . அவரைப்போல் தேடி உதவும் குணம் மிக அரிது. எழில் என்ற நபர் சாம் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனம் சென்றான்,அவன் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்தான், சாம் அடிக்கடி அவனுக்கு அலை பேசியில் அழைத்து நலம் விசாரிப்பார், மேலும் அவன் அவதியை கண்டு திரும்ப இவர் நிறுவனத்திலேயே மீண்டும் வேலைக்கு ஏற்ப்பாடு செய்தார் அதுவும் எழில் நல்ல சம்பளத்திற்கு வந்தான் இதற்கு சாம் மிக சிரமப்பட்டு சண்டையிட்டு அவனை வேலைக்கு சேர்த்தார். இன்று வரை அதை சாம் யாரிடமும் சொன்னதில்லை. மேலும் அவர் மாதமாதம் ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு தனது சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுப்பார், இவரைப் போன்று ஒரு ஜீவன் பார்ப்பது மிக அரிது !! மேன்மையின் உச்சம் சாம், வினோத்.

      மேன்மை ஒரு பண்பு , இதை நிச்சயம் நம் உறகளிடமோ நண்பர்களிடமோ கண்டிருப்போம், இதை வாசித்திருந்தால் உங்கள் வாழ்கையின் மேனமையான மனிதர்களைப் பற்றி யோசனை தட்டி இருக்கும், நாமும் மேன்மையெனும் பண்பை காணமட்டும் இல்லாமல் கடைப்பிடிப்போம் !!

  
   

Sunday, December 21, 2014

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 5

வாழ்கை வாழ்வதற்கே !

      நாளொருவண்ணம் ஒவ்வொரு கவலையின் புலம்பல் பலரிடம் காணலாம், அவர்களை தவறு சொல்லி பயனில்லை. ஆசைகளும் , பொறுப்புகளும் கூடினால் மனதின் சத்தம் புலம்பலாக மாறும். இப்படி பட்ட ஓசை நிறைந்த அண்டத்தில் வாழ்கையை வாழும் சில இறகுகள் நம் நடை பாதையில் பார்த்திருப்போம். ஒரு சில இறகுகள் என் கல்தடங்களில் வழிகளாக !!

         தீபக், லயோலா  கல்லூரி கணிதப் பிரிவின் நண்பன். இயல்பாக எல்லோரிடம்மும் பழகும் குணம் உண்டு.இவன்  படிப்பில் சற்று மந்தம், வகுப்பு தேர்வோ அல்லது ஆண்டு தேர்விலோ தான் படித்தது வரவில்லை என்றால் அவன் மனதில் வரும் முதல் கேள்வி "இது நம்ப சிலபஸா?" எல்லா நண்பர்களும் "செம்மைய பண்ணேன் டா","இல்ல மச்சி நெக்ஸ்ட் செம் தான் ", "அப்படா மச்சி சொல்லி கொடுதாண்டா", "இந்த புண்ணியவான் ஆன்சர் சொன்னான்" என எல்லோரும் வெவ்வேறு தொனியில் சொல்வார்கள் இது ஒவ்வொரு தேர்விற்கும் வருத்தம் சந்தோசம் என தொனி மாறிக்கொண்டே இருக்கும். தீபக் என்றும் ஒரே பதில் தான் "பாத்துக்கலாம் மச்சான்". அவனுக்கு நன்றாக முயன்று படிப்பான் ஆனால் அது மதிப்பெண்ணுக்கு ஏன் தெரியவில்லை என்பது தெரியாது. தேர்வில் எளிதாக யாரையாவது பார்த்து எழுத வாய்ப்பு கிடைத்தாலும் அதை கஷ்டப்பட்டு மகேஷுக்கு கொண்டு சேர்ப்பதில் அதிக கவனம் அவனுக்கு. மகேஷ் அவனுக்கு நெருங்கிய நண்பன். தீபக் இதுவரை புலம்பி பார்த்ததில்லை, கடினமான நேரத்திலும் சிரிப்பு ஒன்று தான் பதிலாக இருக்கும்.
          தான் கிடைத்ததை வைத்து மகிழ்ச்சியோடு வாழும் ஆத்மா, இது நிச்சியம் வாழ்கையை இலகுவாக நினைத்தால் மட்டுமே அது வரும். வருத்தம் வந்தாலும் சீக்கிரம் தன் சிரிப்பின் வழியில் விடை கொடுப்பான். தீபக் வாழ்கையை வாழும் நண்பன், எதுக்கும் துவளாமல் தன்பிக்கையை தோளில் சுமந்து இன்றும் சிரித்துகொண்டே ஓடிகிறான். படித்தால் தான் நம்பிக்கை என்ற மாயை அதிகம் புழங்கும் வேளையில் வாழ்கையை வாழ்ந்தால் போதும் தன்னம்பிக்கை நம்முடன் வாழ ஆசைப்படும் என்பதற்கு உதாரணம் தீபக்.

                தீபக் போல இன்னொரு நண்பன் நரேஷ், நாங்கள் ஒரே வகுப்பு. இதற்கும் கலங்காத ஜீவன், நரேஷின் வாழ்கையில் கவலையை காணவில்லை போஸ்டர் ஒட்டியே இருக்கும்.அவன் இதுவரை முகம் வாடி பார்த்ததில்லை, நிச்சயம் ஒவ்வொருவருக்கும் பல எண்ணங்கள் உதிக்கும் அது கைகூடாவிட்டால் கவலையாக மாறலாம், எண்ணங்கள் முளைத்து அதன் தன்மை வெற்றியோ தோல்வியோ யோசிக்காமல் நகர்ந்தால் வாழ்கையை வாழ இயலும், இதை நரேஷிடம் காணலாம்.
          29 c பஸ்சில் தான் நரேஷ், பிரிட்டோ , சித்தார்த் , அலெக்ஸ் இவர்களுடன் நானும் கல்லூரிக்கு பயணிப்போம். இதில் ஐவருமே கணித வகுப்பு என்பது குறுபிடதக்கது. பஸ் பயணத்தில் மற்ற பிரிவைச் சார்ந்த நண்பர்களும் வருவார்கள், மூன்று ஆண்டுகளில் நரேஷ் ஒரு நாள் கூட முகம் சுளித்து வந்ததோ தன் துன்பங்களை கூறுவது என எதுவும் சொன்னதில்லை. எல்லோராலும் அவனுக்கு நன் மதிப்பு உண்டு அதற்கு ஒரே காரணி கவலையை காணவில்லை போஸ்டர் ஒட்டியது தான், எப்பொழுதும் அவனிடம் விலை மதிப்பில்லாத ஆபரணம் இருக்கும் 'புன்னகை'. வாழ்கையை வாழும் நண்பன்.
         நரேஷை சொல்லும்போது பால் எழிலழகன் சொல்லாமல் இருக்க முடியாது, கல்லூரிக்கு மீஞ்சூரில் இருந்து பயணித்து வருவான் சற்று தூரம் தான் ஆனால் முகம் சுளித்ததில்லை. வாழ்கை வாழ்வதற்கே என்பதற்கு மிக சிறந்த சான்று பால். அவன் உள்ளத்தில் அவ்வளவு குமுறல்கள் இருந்தாலும் எதிரே இருப்பவர்களுக்கு அது வெளிப்படாது. எங்கள் வகுப்பில் எல்லோரும் மேற்படிபிற்கு கணினி மற்றும் வியாபார ரீதியில் படிக்க சென்றார்கள் இன்னும் சிலர் வேலைக்கு பயணித்தார்கள், பால் ஒரு நடத்தற குடும்பத்தின் பிரதிநிதி, பணம் நிறைக்க செல்லும் மக்களிடம் சற்றே விலகி மனம்  நிறைக்க மனிதர்களைப்பற்றி சென்னை பல்கலைகழகத்தில் படித்தான்(Msc.Anthrapology). இந்த துணிவும் தனம்பிக்கையும் சிலருக்கே வரும், இது அற்புதமான படிப்பு. எங்கள் வகுப்பில் மொத்தம் 80 மாணவர்கள் அவர்களில் ஒரே ஒருவன் வேறு தொனியில் சென்றான் அது பால், தன் பாதையில் எவ்வளவு இன்னல்கள் இருந்தாலும் சிரித்து கடப்பவர்கள் பட்டியலில் பாலும் ஒருவன்.
   பல சமயங்களில் சூழல் கடினமாக இருந்தாலும் தங்களிடம் தனபிக்கையும் புன்னகையும் இருந்தால் வாழ்கை வாழ்வதற்கே என்பதற்கு அற்புதமான சான்று பால் எழில் !!!
         நம் வாழ்வில் இது போன்ற நண்பர்கள் ஏராளம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வது நம் மனதின் தாராளம். நமக்கு அவன் என்னடா என்ற நினைப்பிலே இது போல பல நண்பனை அலட்சிய படுத்துவோம். சிலவற்றை நம் ஈகோ விழுங்கி விடும், இவர்களை போன்ற நண்பர்கள் உங்கள் வட்டாரத்தில் இருப்பார்கள் மேலே உள்ள பதிவை வாசித்திருந்தால் கட்டாயம் உங்கள் நண்பனின் முகம் தெரிந்திருக்கும்.

            

Saturday, December 20, 2014

என் அலுவலகத்தில் .......


           என் அலுவலகத்தில் சுமார் 4000 க்கும் மேல் வேலைசெய்கிறார்கள் ,இரண்டு வாரங்களுக்கு முன்பு அலுவலகத்தால் ஒரு கலைநிகழ்ச்சி ட்ரேட் சென்டர் நந்தனத்தில் நடைபெற்றது, அது பிரத்யேகமாக எங்கள் அலுவலகத்தில் பணிபுரியோருக்கு மட்டும் தான். மொத்தம் நான்கு அணிகளாக பிரிந்து போட்டிகள் நடைபெற்றன அதில் நடனம், குறும்படங்கள், நவீன நாகரீக நடை என்று பட்டையை கிளப்பினார்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள். இதை விட தனியார் தொலைகாட்சியின் தொகுப்பாளினி முழு நிகழ்ச்சியும் நன்றாக தொகுத்து வழங்கினார் மேலும் பிரபல பாடகி ஒருவர் அருமையாக பாடி பார்வையாளர்களை உற்சாகபபடுத்தினார். குளிரூட்டியால் நிரம்பிய கூடம் அது, எல்லோரும் குளிர்ந்து நடனத்தையும் மற்ற நிகழ்ச்சிகளை கண்டு மகிழ்ந்தனர்.
பாட்டு, நடனம் என மேடையில் ஓட கிழே பார்வையாளர்கள் கூட்டம் கூட்டாமாக நடனமாடி சந்தோஷப்பட்டனர், அதை பார்க்கவும் பரவசமாக இருந்தது. குறிப்பாக நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் நுழைவாயிலில் ஒத்தை அடி மேளம் ஏற்ப்பாடு செய்திருந்தனர் உங்களுக்கு புரியும் படி சொன்னால் ' சாவு மோளம் ' , இதற்கு ஆணும் பெண்ணும் ஆடின ஆட்டம் வேறு தினுசாக இருந்தது.

"ஆண்டவரே என்னை மன்னியுங்கள் எனது பொய்களுக்காக!!"
ஐம்பது சிறார்களுக்கு உணவு வழங்கினார்கள் அது மிகவும் பாராட்ட வேண்டும் , இதைத் தவிர வேறு எதுவும் சொல்லிக்கொள்ள முடியவில்லை. தொகுப்பாளினி செய்த அட்டூழியம் மிகவும் அதிகம் அதில் ஒன்று "எதின்னி பேருக்கு கல்யாணம் ஆகல ??? " தேவையில்லாத கேள்விகளும் பதில்களும் முகத்தை சுளிக்க வைத்தது.
எங்கள் அலுவலக பணிகள் வெவ்வேறு மாடிகளில் ஒரே வளாகத்தில் இயங்கும் அதில் காப்பாளர்களாக பணி புரிவோர் 100 க்கும் மேல் இருப்பார்கள் .எல்லோரும் ஒரிசா, வங்காளம் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் , அவர்களும் அந்த அரங்கில் இருந்தனர். இதில் வெளியே காவல் காக்க வேண்டும் உள்ளே வரக்கூடாது என்ற கட்டளையாக இருந்தது , சில விநாடி நானும் அந்த செக்யூரிட்டி ஆகா இருந்திருக்கலாமோ என்று நினைப்பு.
அப்படியும் ஒரு பெண் செக்யூரிட்டி, ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தவள், நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் ஏக்கம், தானும் இவர்களைப் போல் பங்குபெற வேண்டும் என்று, வறுமையில் அவள் கண் மை கலைந்ததை உணர்ந்தேன் சிறிது நேரத்திலே தலைமை கண்காணிப்பாளர் ஒருவர் அந்த பெண்ணைத் திட்டி அரங்கிற்கு வெளியே தள்ளினார்.
" சார் ! சார் !! இந்த டான்ஸ் மட்டும் பாத்துட்டு போய்டறேன்" என்றது இன்று வரை என்னக்கு ஒலித்துக்கொண்டே இருக்கிறது
இரட்டை அர்த்தம் கொண்ட வசனங்கள் தேவயில்லாமல் நேரத்தை விழுங்கியது. இந்த செக்யூரிட்டி களுக்கு ஒரு 5 நிமிடம் தங்கள் திறமைக்கு கொடுத்திருந்தால் ஒருங்கினைப்பாளர்களின் பாவம் சிறிது கழிந்திருக்கும்.
சாவிற்கு முன் தன் துயரை மறைக்க ஆடும் தோழர்களைப் பார்த்து "என்ன கீழ்த்தரம்" என்று வினவுவோர் அன்று அதே மேளத்திற்கு ஆடியது கேலி கூத்து தான் அதில் பெண்கள் அதிகம் என்பது வியப்பே !!
தோழர்களே ! உங்கள் அலுவலகத்தில் இதை போன்று நிகழ்ச்சி நடக்குமானால் நம் கண்ணிற்கு தெரியாத வண்ணங்களுக்கு உயிர் கொடுங்கள்...

ஐ . டி காரன் // குறும்படம்

ஐ . டி காரன் (I.T.Kaaran)

இந்த குறும் படம் தகவல் தொழில் நுட்ப தோழர்களை மையப் புள்ளியாக வைத்து எடுக்கப்பட்டது , சமூதாயம் இவர்களை சாடி தன் ஆதங்கத்தை தீர்ப்பவாறு கதை அமைக்கப்பட்டது, அது உண்மையும் கூட. குறையை கூவி கூவி ஒலி…
00:05:01
Added on 30-11-2014

அன்பு தோழர்களுக்கு வணக்கம்..


https://www.youtube.com/watch?v=YGNTYKyVgCY

         இந்த குறும் படம் தகவல் தொழில் நுட்ப தோழர்களை மையப் புள்ளியாக வைத்து எடுக்கப்பட்டது , சமூதாயம் இவர்களை சாடி தன் ஆதங்கத்தை தீர்ப்பவாறு கதை அமைக்கப்பட்டது, அது சில நேரங்களில் உண்மையும் கூட. குறையை கூவி கூவி ஒலி பெருக்கியீன்றி கத்தும் சிலர் ஏன் நிறையை செய்கை கூட செய்வதில்லை !

    கீழே போகும் உணவும் ,தண்ணீரும் நம் உறுப்புக்களும் ஒன்று தான், இந்த படத்தின் இறுதி துளிகள் அதை பேசாமல் சொல்லும்.உயிருடன் இருக்கும் போது அண்ண  தானம் பிறகு உறுப்பு தானம் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த குறும் படம்.

(வேறு கோணம் :

  இறுதிக் காட்சியின் போது தனது உணவை பிச்சைக்காரருக்கு வழங்கி விட்டு தன் உறுப்பு தான அடையாள அட்டையை தவறவிடுகிறார் கதையின் மாந்தர்,  அதை எடுத்து கொடுக்கிறார் அவர் மற்றும் பணத்தையும் நிராகரிக்கிறார்.

விளக்கம் - இங்கு பிச்சைக்காரர் கடவுளாக சித்தரிக்க படுகிறது , மனிதனானவன் உணவை வழங்கும் போது ஏற்கிறார். அண்ண தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், அதன் பின்னர் விழும் உறுப்புதான அடையாள அட்டை மனிதனின் உறுப்பாக திகழ்கிறது. "கிழே போகும் உடலோடு உறுப்பை ஏன் மண் ஆக்குகிறாய் மானுடமே ? மற்றவர்களுக்கு உறுப்பை கொடு வாழ்வை வீழ்ந்தப்பின்னும்" என்ற கடவுளின் அறிவுரைக்கு மனிதன் " நல்ல அறிவுரை கடவுளே" என்று பணம் கொடுக்கிறான் மனிதன்.
அதற்கு கடவுள் " என்னையும் உன்னை போல் கூலிக்காரனாக்காதே!" என்று பணத்தை நிராகரிக்கிறார். )

வாழவைப்போம் இருக்கும்போதே !!
வாழ்வோம் வீழ்ந்தப்பின்னும் !!

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 4


மாற்றம் இல்லா சிரிப்பு சிறப்பு தான் !

    வாழ்கையெனும் தோட்டத்தில் வெவ்வேறு மலர்கள் பூத்திருக்கும், சில நேரங்களில் மகிழ்ச்சியும் சில சமயங்களில் இன்னல்களும் மாறி மாறி பூக்கும் காலத்திற்கேற்ப இதன் முரணாக எல்லா தருணங்களிலும் ஒரே சிரிப்பை வைத்து மகிழ்ச்சியையும் கொண்டாடி, ஒரே சிரிப்பை வைத்து இன்னல்களை சமாளிப்பது வெகு குறைவு என்றே கருதலாம்.இத்தகைய மாந்தர்கள் உங்கள் வாழ்வில் அவசியம் உலாவியிருப்பர்கள் அதை நினைவு கூற நான் பயணித்த சிலர் உங்களுக்கு உதவுவார்கள் என நினைக்கிறேன்.

      மணிமாறன் எங்கள் கணிதத்துரையின் ஜே.எஸ் ( J S ) மூன்றாமாண்டின் போது தேர்வு செய்யப்பட்டான், எல்லோருடனும் ஒரே சிரிப்பு தான் அவன் கலக்கத்தில் இருந்தாலும் ஒரு குழந்தையின் புன்சிரிப்பு தொனித்து கொண்டிருக்கும். கணித துறையில் சுமார் 75 பேர் இருப்போம் அனைவருமே ஒரு கூட்டு பறவை போல வெளியே யாரிடமும் விட்டுக் கொள்ளாமல் இருப்போம், நான் சொன்னது போல மூன்றாமாண்டில் ஜே.எஸ் தேர்தல் வந்தது அந்த க்ஷணத்தில் இன்னொரு நெருங்கிய நண்பன் சபாஸ்டின் மணிக்கு எதிரே நின்றான், அது இருவருக்குமே நெருடலான நிகழ்வு. மணியும் சபாவும் நல்ல நண்பர்கள், இந்த தேர்தலில் கணித துறையின் அணைத்து மாணவர்களிடமும் வாக்கு திரட்ட வேண்டும். மணி கல்லூரி விடுதியில் தங்கியிருந்தான் அவன் ஊர் மதுரை, சபாவின் வீடு அருகில் தான், தேர்தலின் முடிவில் மணி வாக்கு அதிகம் பெற்று வெற்றி பெற்றான். மணிக்கு தெரியும் விடுதி மாணாக்கர்களின் வாக்கு வந்துவிடும் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று, ஆனால் அவனுக்கு மனதில் பெரும் சோகம் பீடித்துக் கொண்டிருந்தது அதை என்னிடம் பகிர்ந்தான் "மச்சா நான் தோத்தா பரவாயில்ல ஆனா சபா தோத்துட்ட அவன நான் எப்படி பார்பேன் " என கவலையுடன் சிரித்தான் ;"டேய் நீ அவன இந்த எலக்ஷன் ல மட்டும் தோக்கடிக்க மாட்டே" என்று மனதுக்குள் நினைத்துள்ளேன்.
    வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே சிரிப்பு தான் மணிக்கு அது வியப்புக்குரியது, அவன் யாரை சந்தித்தாலும் அந்த சிரிப்பு எல்லோரையும் கவரும், இன்று மணி அதே சிரிக்கும் நல்ல மனதோடு யாரையோ மகிழ்வித்து கொண்டிருப்பான். சன் டிவி யில் HR ஆகா பணிபுரிகிறான், அவன் மகனின் சிரிப்பு மணியின் மனதில் தெரிந்தது ஒரு நிழற்படத்தில்.

    மணிமாறன் சிரிப்பின் ஆழம் போல் இன்னொரு நண்பன் காலின்ஸ் இவன் சிரிப்பு முற்றிலும் சிறப்பு, எந்த எதிர் பார்ப்பும் இல்லாத முறுவல். அவன் ஒரு குழந்தை போல தேவை இல்லாமல் சண்டைக்கு இழுப்பான், "என்னடா பிரச்சனை ?" என்று கேட்டால், "போன மாசம் கலாச்ச ல அதுக்கு" என்பான். இந்த வார்த்தை சொன்னவுடன் மச்சா சாரி டா என்று சிரிப்பான், களங்கமே இல்லாமல் இருக்கும் அந்த சிரிப்பு.
நம்மில் எத்துனை நபர்களுக்கு இந்த சிரிப்பு வாய்க்கும் உள்ளே ஒன்று வெய்த்து வெளியே தான் சிரிப்போம்.

              ஒரு நாள் காலின்ஸ் கழுத்தில் நெக் பேண்ட் அணிந்து வந்தான், "என்னடா மச்சா இது" என்று ஆண்டோ கேட்டான். கழுத்து வலி என்று காலின்ஸ் கூற , அன்று வகுப்பு ஆரம்பிக்க அது  எங்கள் கணித ஆசிரியர் விக்டர் தேவதாஸ் வகுப்பு, மிகவும் கண்டிப்பானவர். அந்த நேரத்தில் ஜீசஸ் , அல்லா , பிள்ளையார் என எல்லா கடவுளையும் துணைக்கு அழைப்போம் "சாமி இந்த ஆள் என்ன எதாவது கேள்வி கேட்டு பதில் தெரியலனா , என்னோட செத்துப்போன தாத்தாவோட தாத்தாவையும் தா ன்னு திட்டுவான், என்னை கேக்க கூடாது பா " வேண்டுவோம், அன்றைக்கு காலின்ஸ் க்கு அடிச்சுது ஜாக்பாட் விக்டர் சார் கல்லின்சை கேள்வி கேட்டார் அதற்கு அவன் தன் தலையை  ஹை ஸ்பீட் காட்சிபோல (SLOW BY * 3X) திருப்பினான்.
" என்னடா காலின்ஸ், வேல செய்யாத டேபிள் பேன் மாதிரி திருப்புற, நல்லா நடிக்கிற " என்றார். காலின்ஸ் க்கு எங்கு இருந்து அந்த ஆவேசம் வந்தது என்று தெரியவில்லை "சார் ! என் வலி எனக்கு தான் தெரியும், உங்களுக்கு வந்தா தான் தெரியும்" என்று கூறினான். கழுத்து வலி கூட அமர்தாஞ்சன் போட்டால் இரண்டு நாளில் போய்விடும்,ஆனால் கல்லின்சின் இந்த ஆவேச வலி மூன்று ஆண்டுகள் தொடர்ந்தது. விக்டர் சார் பெரிய பிரச்சனையாக உருவாக்கினார், தினமும் தன் சொல் எனும் குண்டு ஊசியால் கல்லின்சின் கழுத்தை குத்தி குத்தி விளையாடுவார்.

         இன்று காலின்ஸ் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான், என்றாவது நட்பு வட்டாரம் கூடினால் அவன் சிரிப்பை எங்கள் மனதில் சிறை பிடிப்போம் !!! காலின்சின் சிரிப்பு இன்றும் ஒரு மலரின் புன்னைகை போல் ஒரே வண்ணம் தான், உங்கள் வட்டத்திலும் காலின்ஸ் , மணி போல கள்ளமில்லா சிரிக்கும் நண்பர்கள் இருப்பார்கள். இவர்களை நீங்கள் படிக்கும் போதே உங்கள் நட்பின் சிரிப்பு மனதிற்குள் பூக்கும் !!
  
      காலின்சை சொல்லும்போது சிரில் சில்வஸ்டர் பிரவீன் என்ற நண்பனும் பிளாஷ் கட்டில் வந்து செல்கிறேன். சிறிலின் சிரிப்பு தனி அவனும் கணித பிரிவு தான் எல்லோரிடமும் கனிவான சிரிப்புடன் இருக்கும் சுபாவம் கொண்டவன். சிரிப்பு எனும் மத்தாப்பு என்றும் அவன் முகத்தில், சிரில் ஒரு புன்னகை போராளி என்று சொல்லலாம், எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே முடித்துவிடுவான் , சிரிப்பு வித்வான்.அவனுக்கு இருக்கும் மன நெருக்கடியின் அடி மிக நீளம் அதன் வலியும் நீளம், இதுவரை சிரில் முகம் சோர்ந்தோ அல்ல ஒப்பாரி வைத்து தன் துன்பங்களை விளம்பரம் செய்ததில்லை இது மிகவும் அறிய குணாதிசயம், இன்றிய உலகில் எதாவது சோகமாக சொன்னால் சாதகமாக நடக்கும் என்கிற சூழலில் சிரில் ஒரு புத்துணர்ச்சியான லிரில் சோப்பு !!!
           சிரில் சிரிப்பை வாசிக்கும் போது உங்களின் நண்பனின் சிரிப்பும் நினைவுக்கு வந்தால் சிரில் ,மணிமாறன் மற்றும் காலின்ஸ்  க்கு மகிழ்ச்சி !!!
     
   
     

Thursday, December 18, 2014

வாசிப்பும் நேசிப்பும் !!

" நீங்கள் யாரையாவது கடந்த ஆண்டு எத்தனை படம் பார்த்தீர்கள் ?" என்று கேட்டால், அதற்கு பெரும்பான்மையாக பல எண்களைக் கூறுவார்கள் ஆனால்  " நீங்கள் கடந்த ஆண்டு எத்தனை புத்தகம் வாசித்தீர்கள் " என்று கேட்டால் பலரிடம் பூஜியம் கூட பதிலாக வரும்.

         நம்மிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துக் கொண்டே வருகிறது. முப்பது ஆண்டுக்கு முன் இருந்த வாசிப்பின் எழுச்சியை இன்று காணமுடியவில்லை. இந்த தலைமுறையில் வாசிக்கும் வழக்கமும் பழக்கமும் மிக குறைவே ! இன்றைய நவீன தொழில் நுட்பங்கள் புத்தகத்தின் சுவாசத்தை அடைக்கச் செய்கிறது, வாசிப்பு இன்று முச்சு திணறலுடன் போராடுகிறது.சமீபத்தில் இயக்குனர் பாலா அவர்கள் இயக்கிய "பரதேசி" திரைப்படம், பி.ஹச். டானியல் எழுதிய "ரெட் டீ" , தமிழில் இரா. முருகவேள் மொழி பெயர்த்தார் -"எரியும் பனிக்காடு"; நாவல் திரைப்படமாக மாற்றுவதற்கு தனி திறன் வேண்டும், ஒரு நல்ல வாசிப்பே அதற்கு சான்று. நாம் படித்த நாவலோ , சிறுகதையோ திரையில் வெளிவருமேயானால் அந்த திரைக்கதையின் படிமங்களை முன்னரே பார்த்தது போன்று தோன்றும் , ஆம் ! ஒரு சிறுகதை அல்லது நாவலை வாசிக்கும் போது நாம் இணை ஆசிரியனாக உயர்கிறோம், திரைக்கதையை மனதில் ஓட விடுகிறோம் , அதனூடே பயணமும் செய்கிறோம் , நல்ல படைப்பை வாசிக்கையில் இந்த மகத்தான அனுபவத்தை நீங்களும் பெறலாம்.

         தமிழகத்தில் ஆண்டாண்டிற்கு பல புத்தக சந்தைகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. குறிப்பாக சென்னையில் மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்வார்கள், இதில் அதிக விற்பனையாவது சோதிடம் சமயற்குறிப்பு புத்தகம் மட்டுமே. நம்மிடையே பல எழுத்தாளர்களின் அருமையான படைப்புகள் உள்ளன அதைத் தேடி தேடி வாசிப்போம்.  வாசிப்பால் நமக்கு நிறைய பயன்கள் உள்ளன , நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அங்கு பங்கேற்ப்பாளராகிறோம், அதே தொலைக்காட்சியைப் பார்க்கையில் பார்வையாளராகிறோம். பங்கேற்ப்பாளருக்கும் பார்வையாளருக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
   வாசிப்பின் பயன் :
  #  நம் சிந்தனை மேலோங்கும் .
  #  நம் சொல் திறன் வளரும் .
  #  நாம் எந்த தலைப்பிலும் பேச தயாராவோம்.
  #  மன அழுத்தத்தைக் குறைக்கும்  .
  #  கற்பனை வளம் அதிகரிக்கும்
  #  தனிமையை தகர்த்துவிடும் ; இப்படி இன்னும் பல..
       புத்தகம் ஒரு நண்பனைப் போல ஆழ்ந்த வாசிப்பில் அதனூடே எழுத்தாளர் நண்பனாக உரையாடுவது புலப்படும், இந்த தருணத்தை உணர வாசியுங்கள், மேன்மையடையுங்கள். புத்தக வாசிப்பின் மூலம் ஒரு மனிதன் மனதை கணிக்க முடியும் என்பதற்கான உண்மைச் சான்று 'சதாம் ஹுசைன்'.
      அமெரிக்க அரசு சதாமை கைது செய்தனர், அவரிடம் விசாரணை ஆரம்பித்தது ஆனால் அவர் பேசவே இல்லை, அவரின் அமைதியால் ஏதாவது சூட்சியுள்ளதா என்று ஐயமுற்றார்கள்;வெறுத்த அதிகாரிகள் அராப் பிரதிநிதி ஒருவரை வரவழைத்து விசாரிக்க வைத்தனர். அப்படியும் சதாம் மௌனம் காத்தார், பின்னர் அந்த பிரதிநிதி, அவரின் மனநிலை அறிய சதாமிடம் " உங்களுக்கு வேண்டுமானால் அருகே இருக்கும் நூலகத்தை பயன்படுத்துங்கள் " என்றார்.
      மறுநாள் அதிகாரிகள் நூலகத்தில் விசாரிக்கையில், சதாம் ஒரு புத்தகம் வாசித்திருக்கிறார் என தெரியவந்தது . அது 'எர்னஸ்ட் ஹெம்மிங்க்வே' எழுதிய 'தி ஓல்ட் மேன் அன்ட் சீ ' (The Old man and sea) என்ற நாவல். இந்த நாவலின் சுருக்கும் "வாழ் நாளில் எப்படியாவது திமிங்கலம் பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் மீனவன் ஒருவன், முயன்று முயன்று வயதோடியது, முதிர்வும்   வந்தது. தனது வயோதிக காலத்தில் கடலுக்கு செல்கிறார் அன்று தனது வலையில் திமிங்கலம்  மாட்டிக் கொள்கிறது. கட்டுமரத்தில் இருந்தவாரே அதனோடு போராடினார் அந்த கிழவர், கட்டுமரமும் சுக்குநூறானது. கடலில் போராட்டம் நீண்டது, இறுதியில் திமிங்கலம் கரை ஒதுங்கி உயிருக்கு போராடியவாறு இருக்க, மறு புறம் கிழவரும் கரை ஒதுங்கினார்" என்று கதை முடியும். இந்த புத்தகத்தின் வாயிலாக தான் இறுதிவரை போராடுவேன் , வீழ்ந்தாலும் எதிரியை இறுதிவரை போராட வைப்பேன் என்று அமெரிக்க அரசிற்கு சொல்லாமல் சொன்னார் சதாம்.
        நம் பயணங்களில் அலைபேசியில் நேரம் செலவழிப்பதை விட ஒரு நல்ல படைப்பை வாசித்தால் அந்த நேரம் முழுமை பெரும், எழுத்தாளரின் மையிக்கு அர்த்தம் கிடைக்கும். வலம்புரி ஜான் சொன்னது போல "மைனராக இருந்த மானுடம்
 புத்தகங்களின் அறிமுகத்திற்கு பிறகு தான் மேஜரானது". மைனராக இருக்கும் சமூகமும் மேஜாரக மாறும் வாசிப்பின் நேசத்தை உணர்ந்தால். புத்தகங்கள் தொடர் வண்டியைப் போல இன்றைய தலைமுறைக்கும்  வரும் தலைமுறைக்கும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் இலகுவாக கொடுத்து செல்லும்.
       சி.சு செல்லப்பா, சா. கந்தசாமி, எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஜெயகாந்தன், சுஜாதா , நாஞ்சில் நாடன், சுந்தர ராமசாமி, மௌனி , புதுமைபித்தன், கல்கி என்று பல எழுத்தளர்களின் ஈடுயிணையில்லாத முத்தான படைப்புகள் உள்ளது மேலும் அன்டான் செகோவ், தஸ்தோவெச்கி, டால்ஸ்டாய் , புஷ்கின் , ட்வைன் ,கோபோ அபே போன்ற பலரின் படைப்புகளைத் தேடி தேடி வாசியுங்கள். ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

வரும் புத்தகக் சந்தையில் சிறந்த படைப்பை வாங்குங்கள் , வாசியுங்கள்!
வசிக்கும் பழக்கம் வளரட்டும் ;
வளரும் தலைமுறை செழிக்கட்டும் !

"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு"