


ஐ . டி காரன் (I.T.Kaaran)
https://www.youtube.com/watch?v=YGNTYKyVgCY
இந்த குறும் படம் தகவல் தொழில் நுட்ப தோழர்களை மையப் புள்ளியாக வைத்து எடுக்கப்பட்டது , சமூதாயம் இவர்களை சாடி தன் ஆதங்கத்தை தீர்ப்பவாறு கதை அமைக்கப்பட்டது, அது சில நேரங்களில் உண்மையும் கூட. குறையை கூவி கூவி ஒலி பெருக்கியீன்றி கத்தும் சிலர் ஏன் நிறையை செய்கை கூட செய்வதில்லை !
கீழே போகும் உணவும் ,தண்ணீரும் நம் உறுப்புக்களும் ஒன்று தான், இந்த படத்தின் இறுதி துளிகள் அதை பேசாமல் சொல்லும்.உயிருடன் இருக்கும் போது அண்ண தானம் பிறகு உறுப்பு தானம் என்ற கருத்தை வலியுறுத்தும் இந்த குறும் படம்.
(வேறு கோணம் :
இறுதிக் காட்சியின் போது தனது உணவை பிச்சைக்காரருக்கு வழங்கி விட்டு தன் உறுப்பு தான அடையாள அட்டையை தவறவிடுகிறார் கதையின் மாந்தர், அதை எடுத்து கொடுக்கிறார் அவர் மற்றும் பணத்தையும் நிராகரிக்கிறார்.
விளக்கம் - இங்கு பிச்சைக்காரர் கடவுளாக சித்தரிக்க படுகிறது , மனிதனானவன் உணவை வழங்கும் போது ஏற்கிறார். அண்ண தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார், அதன் பின்னர் விழும் உறுப்புதான அடையாள அட்டை மனிதனின் உறுப்பாக திகழ்கிறது. "கிழே போகும் உடலோடு உறுப்பை ஏன் மண் ஆக்குகிறாய் மானுடமே ? மற்றவர்களுக்கு உறுப்பை கொடு வாழ்வை வீழ்ந்தப்பின்னும்" என்ற கடவுளின் அறிவுரைக்கு மனிதன் " நல்ல அறிவுரை கடவுளே" என்று பணம் கொடுக்கிறான் மனிதன்.
அதற்கு கடவுள் " என்னையும் உன்னை போல் கூலிக்காரனாக்காதே!" என்று பணத்தை நிராகரிக்கிறார். )
வாழவைப்போம் இருக்கும்போதே !!
வாழ்வோம் வீழ்ந்தப்பின்னும் !!


No comments:
Post a Comment