Translate

Wednesday, April 29, 2015

வலியும் வலிமையையும் !


"
சிந்தையிலுள்ள மையினால் ,
பேனா சிந்தும் இரத்தம்
வாழ்வின் சித்தம் ..."

*****************************************
 
"எழுத்தே,
என் ஆருயிர் நண்பனே !!
வாழ்விலுள்ள சந்திப்பிழைகளை யார் திருத்துவார் ?
முட்டாளே,
என் அர்தமற்ற நண்பனே !!
மகிழ்ச்சியெனும் வைட்னர் உள்ளதே !!
நீ என்றரிவாயோ .... "

*****************************************

"வேண்டாமென்றாலும் நெருங்கி வரும் நினைவு,
வேண்டுமென்றாலும் தூரம் செல்லும் நிம்மதி !
வரவேற்பரையில் துன்பம் அமர ,
வாசலில் இன்பம் நிற்கும் !
இன்னல்கள் மின்னலாய் தாக்கும் ,
மகிழ்ச்சியின் கண் பொசுங்கும்,
குரோதம்,
வன்மத்தின் முகங்கள் வினாயெழுப்ப,
குருடனாய் விடைக் கொடுத்தேன்"

Sunday, April 12, 2015

ஓடு

என்ன நடந்தாலும்  நாம் ஓடவேண்டும் !
    மானம் காற்றில் பறக்கும்,
    துன்பம் கழுத்தை நெரிக்கும்,
    உலகம் வியந்து நடிக்கும் !
என்ன நடந்தாலும்  நாம் ஓடவேண்டும் !
     தோல்வியின் முத்தத்தில்,
     வெற்றியின் ஈரம் இருக்கும்,
     முயற்சியேனும் கடலில் நீந்தினால் 
     கரை சேரலாம்,
     கறை நீக்கலாம்,
இன்னும் கொஞ்ச தூரம் தான்,
என்ன நடந்தாலும் 
விடாமுயற்சியோடு ஓடு !!!




Sunday, April 5, 2015

காதலின் ஆவிகள்

காதலை போஸ்ட் மார்டம் செய்வோருக்கு
உடம்பு தானே முக்கியம் !!
காதலை கொலை செய்வோருக்கு
பணம் தானே முக்கியம் !!
காதலை உண்மையில் புரிவோருக்கு
தோல்வி தான் பாக்கியம் !!
ஆம் ,
அது தோல்வியின் உண்மையான வெற்றி !!
பிரதிபலன் எதிர்பாரா மனதிற்கு
காதல் தானே முக்கியம் !!!

காதலின் ஆவிகள் சில பிணம் திண்ணி
கழுகுகளுக்கு கூறும் செய்தி
"உடம்பும் காசும் அல்ல வாழ்க்கை,
காதலின் சுவடுகளை அழிக்க
காலமெனும் அலைவரும் !!
வந்தாலும் அழியாவகையில்
உமது பாவங்கள் சுவடுகளை கல்வெட்டாக்கும்.."

மெரினா மகிழ்ச்சிகள் !!

மெரினா மகிழ்ச்சிகள் !!

     மெரினா என்ற வார்த்தை கேட்டவுடன் நம் மனதில் கடலின் காற்று வீச தொடங்கும், வாரம் ஒரு முறை மெரினாவிற்கு செல்வோம் ,நமது சிறு சிறு மன கசப்புகளை அந்த உப்புக் காற்று இனிப்பாக மாற்ற முயற்சிக்கும் !!
           
              ஒவ்வொரு முறை நான் மெரினாவிற்கு செல்லும் போது 'டிங்கிரி' நினைவுக்கு வருவான், அவனை 2005இல் சந்தித்தேன் மெரினா கிரிக்கெட் கிரவுண்டில், அவனுக்கு அப்பொழுது 9 வயது இருக்கும், வெள்ளை உடுப்புடன் கிரிகெட் பயிற்சிக்கு வருவான் மேலும் மேட்ச் நடக்கும் போது வருவான்.எங்கள் அணியின் 12 வது ஆள் 'டிங்கிரி'. அவனுடைய தந்தையை அப்படி தான் அங்குள்ளவர்கள் அழைப்பார்கள் அத நாள் அவனுடைய அழகான பெயர் மங்கி 'டிங்கிரி' ஆனது. சுனாமிக்கு அம்மா இல்லை என்று பல அம்மக்களை கொண்டு போனது அதில் அவனுடைய  அம்மாவும் ஒன்று. கடலுக்கு அவ்வளவு சோகமிருக்கும் எவ்வளவு உயிர்கள், சோகத்தையெல்லாம் தனக்குள்ளே ஆழ் சுழிக்குள் இழுத்து ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியின் அலையை கொடுக்கும் அதே போல தான் மெரினா நண்பர்களும்.

          நினைவின் கதவை டிங்கிரி மட்டும் அல்ல, 'சைப்பா' மணி , ஜெய்குமார் , அருண் , ராஜா குரு , சக்திவேல் , செந்தில் , நித்யா அண்ணா, முரளி ,சௌத்ரி, ரஞ்சித், டில்லி அண்ணா , 'முள்ளு மண்டை' அசோக், மோகன், உமாபதி, குட்டி, 'பாப்பா' செந்தில் இன்னும் பலர் நினைவின் கதவை உடைத்து வருவார்கள். கிரிக்கெட் எனும் சத்துக்கு பூதம் தான் என்னை இவர்களுடன் இணைத்தது, இதற்கு காரணம் ராஜா முகமத். லயோலா கல்லூரியில் ரோட்டரி கிரிக்கெட் டோர்னமென்ட் பைனல், என்னை ராஜா சார் " டேய் .. லயோலா கிரௌண்ட் க்கு வந்துரு ரோட்டரி பைனல்ஸ், லெவன் இல்ல டா , டோஸ் போட்டாச்சு சீக்கிரம் வா"  என்றார் அலைபேசியில், அடித்து பிடித்து முப்பது நிமிடங்களில் சென்றேன், அங்கே முதன் முறையாக ஜெயகுமார் , உமாபதியை சந்தித்தேன்.நாங்கள் ஜி. எப். எஸ் அணிக்கு ஆடினோம் அது ஸ்ரீனிவாசன் அண்ணன் தான் உரிமையாளர் அவரும் பதினொன்றில் ஒருவர். நான் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தேன், ஜெயகுமார் பேட்டிங் செய்ய போனான், அவன் அடித்த கவர் டிரைவ் , இன்னும் கண்களில் நிற்கிறது. என்னால் மிக உறுதியாக சொல்ல முடியும் ஜெய் ஒரு பெரிய வீரனாக வந்திருக்க வேண்டும் , அவனுடைய பில்டிங் சென்னையில் யாரும் நிகரில்லை. நாங்கள் 174 ரன்கள் எடுத்தோம் IOB இற்கு எதிராக, முதல் ஓவர் உமாபதி வீசினான் நான் மிட் ஆனில் நின்னேன், நான் ஓரளவிற்கு பந்து வீசுவேன் என்ற நினைப்பு அந்த ஓவரில் ஓவர் ஆனது, உம்பதி மிக நேர்த்தியாக மிக வேகமாக வீசினான். அந்த போட்டியில் நாங்கள் தோற்றோம் ஆனால் நான் ஜெய் , உமா நட்பை ஜெய்த்தேன். இன்று உமாபதி நம்மிடம் இல்லை ஆனால் அவன் பௌலிங் எங்கள் நினைவுகளில். பின்னர் என்னை நித்யா அண்ணா மாநில கல்லூரிக்கு கொண்ட வந்தார், என்னக்கு MCA அவர் தான் சேர்த்து விட்டார் அதற்கு காரணம் கிரிக்கெட் மற்றும் நட்பு. நாங்கள் பெரும்பாலும் எல்லா போட்டிகளிலும் தோர்ப்போம், ஒரு நிமிடம் யாராவது அமைதியாகவோ வருத்தத்தில் இருந்தால் உடனே சிரிப்பு சத்தமும் கிண்டலும் ஆரம்பிக்கும், வயிறு வலிக்கும் வரை சிரிப்போம் !!!

        கல்லூரி கிரிக்கெட் போட்டிக்காக பெங்களூர் சென்றோம், சென்னை சென்ட்ரலில் இருந்து ரவுசு ஆரம்பித்தது, 'மோட்டிவேஷன் ஸ்பீச்' ராஜ குரு கொடுக்க ஆரம்பித்தான், " நம்ப தான் கப் அடிக்கிறோம் எல்லாரையும் ஓடவிட்றோம்.. கம்மோன் பாய்ஸ்.." என்று உற்சாகத்தின் உச்சத்தில் பேசினான், அருண் கேப்டன் அவர் சார்பில் ஒரு சொற்ப்பொழிவு எல்லோரும் அவர் அவர்கள் சார்பில் ஒன்று சொல்ல, வீரவேல் சொன்ன வசனம் இன்றும் எதிரொலிக்கிறது " மச்சி நம்ப கைலையும் பால் இருக்கு பேட் உம் இருக்கு புரிதா !! " அதற்கு ராஜ குரு "என்ன டா இவன் பனியன் இருக்கு ஜட்டி இருக்கு ன்னு சொல்றான் " அருகிலிருக்கும் எல்லோரும் சிரித்தனர், சிரிப்பு வெடிகள் அனையவே இல்லை. மொத்தம் மூன்று  போட்டிகள், முதல் போட்டி "கம்மோன் பாய்ஸ் அந்த வெறி இருக்கணும் விட்றாதீங்க" என ராஜ குரு கர்ஜிக்க, பெங்களுர் சேவியர் கல்லேஜ் எதிரே தோற்றோம் அது ஒரு நல்ல தோல்வி தான் பின்னர் பச்சையப்பன் கல்லூரி எதிராக இதில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆகா வேண்டும் , போட்டியின் முன்னர் "கம்மோன் பாய்ஸ், அந்த வெறி இருக்கணும் விட்றாதீங்க .."  என திரும்பவும் ராஜ குரு. படு தோல்வி அடைந்தோம் , நான் மட்டுமே மூன்று கேட்ச்கள் விட்டேன், மூன்றாவது கேட்ச் விடும் போது வெளியே இருந்து "விக்கி .. கேட்ச் பிடிக்காத அது நம்ப காலேஜ்க்கு கௌரவதி கிடையாது..." விட்டவுடன் "மச்சான் காலேஜ் கௌரவத்த காப்பாத்திட்டான் டா" என்று திரும்பவும் ஒலித்தது, யாரா அது என பார்த்தால் ராஜ குரு !! வெளியே வந்து கேட்டேன் "மச்சா ராஜு, நீயும் கலாசிட்டுயே டா .." அதற்கு "இல்ல மச்சான் எப்படியும் நீ விற்றுவ சரி உன்ன காப்பாத்தலாமேன்னு தான் " என்றவுடன் தோற்ற சோகம் சிரிப்பால் அடித்து விரட்டப் பட்டது. மூன்றாவது மேட்ச் முன்னர் "கம்மோன் பாய்ஸ் அந்த வெறி இருக்கணும் விட்றாதீங்க லாஸ்ட் மேட்ச் ல நம்ப யாருன்னு காமிங்க" என்று குரு சூளுரைத்தான், நித்யா அண்ணா ஓபனிங் சென்றார் முதல் பாலிலே வெளியே வந்தார். "கம்மோன் நித்யா சீக்கிரம் வந்துட்டான் என் செல்லம் பேச்சி துணைக்கு ஆளில்லா வா.. வா"  என்றான் வீர வேல். அந்த போட்டியிலும் படு தோல்வி, அப்போதும் ராஜ குரு "கம்மோன் பாய்ஸ் அந்த வெறி இருக்கணும் நம்ப ட்ரைன  விட்ர கூடாது சீக்கிரம் வாங்க " என்றவுடன் எல்லோரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டோம், இதில் செந்திலும் நானும் தான் பாவம், செந்தில் அவ்வளவு ரன் அடித்தது கூட இல்லை ஆனால் பெளலிங்கில் விட்டான், அப்படி அந்த பெங்களுர் பயணம் முடிந்தது.

        வீர வேல் ஒரு சம்சா திருடன், ஒரு நாள் டீ கடையில் கண்ணாடி பெட்டிக்குள் மூன்றே மூன்று சம்சா தான் இருந்தது அதை திருடி சாபிட்டான், வீர வேல் " மாஸ்டர் , மொத்தம் அஞ்சு டீ.." என்றான் , "அப்போ சம்சா க்கு யாரு காசு தருவா" என மாஸ்டர் சொன்னார், அதற்கு வீர வேல் "நாங்க எங்க சம்சா சாப்டோம் ".

"டேய் திருடறது தான் திருடர பத்து சம்சால ஒன்னு திருடனா தெரியாது மூணு ஒன்னு திருடனா எப்படி டா" என சிரித்துக்கொண்டே கொண்டே சொன்னார் மாஸ்டர். இப்படி மெரினா நண்பர்கள் அருகில் இருந்தாலே நேரம் ராக்கெட்டில் ஏறும். நண்பனுக்காக என்ன வேணாலும் செய்வோம் நாங்கள் என்று சொல்லுவார்கள் ஆனால் அதை செய்தவர்கள் மெரினா நண்பர்கள், ப்ரெசிடெண்ட் கிருஷ்ணாவின் தந்தைக்கு திடீர் என உடம்பு செரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அடுத்து 20 நிமிடங்களில் நண்பர்கள் அங்கு இருந்தார்கள், இது காந்தி சிரிக்கும் நோட்டுகளுடன் இல்லை உறுதுணையின் பாட்டுடன். அன்று யாரோ ஒருவர் ஹார்ட் அட்டாக் வந்து ஆட்டோவில் இருந்தார் அவர் கூட அவரது மனைவி அழுது கொண்டே "டாக்டர் கூப்டுங்க ..." என்றார் , ராஜ குரு அவரை தூக்கியபோது அவன் கையில் அவரது மலம் , சிறுநீர். அதை பொருட் படுத்தாமல் ஓடினான். அந்த க்ஷணம் ராஜ குருவும் மெரினா நண்பர்கள் வேறு உயரத்திற்கு சென்றார்கள். நண்பனுக்காக மட்டும் இல்லை யாருக்காகவும் நாங்கள் இருப்போம், சிரித்துக்கொண்டே இருக்கும் மனதில் தான் கடவுள் இருப்பார் என்பது எவ்வளவு உண்மை.
முரளி பெரிய தமிழகத்தில் கிரிக்கெட்டர் அவன் தன் நண்பன் செந்திலின் பிரச்சனையில் சண்டைப் போட்டது," பிரிண்டு குடுப்பம் என் குடுப்பம் விக்கி ... என்னக்கு எவ்வளவு அடி ஊன்தாலும் பரவா ல நான் பாத்துடுவேன்" என்றான் முரளி. நட்பிற்கு எடுத்துக் காட்டு மெரினா நண்பர்கள். 'சைப்பா' மணி , செந்திலின் அண்ணன் எனது முதல் நண்பன் மாநில கல்லூரியில், பார்க்க நடிகர் சூர்யா போல இருப்பான். அவன் நேரத்தின் திருடன் அவனிடம் இருந்தால் நேரத்தை பிக் பாக்கெட் செய்வான், அறிந்தும் அறியாமலும் என்ற படத்திலும் நடித்தான். எங்கோ சென்றிருக்க வேண்டும் ஆனால் சிபாரிசும் வாரிசும் தான் இங்கு ஆதிக்கம், மணியும் ஒரு unsung மெரினா ஹீரோ. மெரினா நண்பர்கள் உணவு இல்லாமல் கூட இருக்கலாம் ஆனால் கிரிக்கெட் இல்லாமல் இருக்க முடியாது. எல்லோரும் நிச்சயம் தெற்கு மண்டலத்திற்காக ஆட தகுதி பெற்றவர்கள் ஆனால் அங்கிருந்து யாரும் இடம் பெறவில்லை, முரளி, ஜெய் , அசோக் , 'சூலை' மணி  என பலர் பெரிய கிரிக்கெட் ஆட முடியாமல் போனது காலம் காரணமில்லை மேற்தட்டு மக்கள் அவர்களுக்குளே போட்டப் பாலம் தான் !!

      இப்படி பல இன்னல்கள், தடைகள் இருந்தாலும் மெரினா நண்பர்கள் சிரிப்பும் மகிழ்ச்சியும் விழி போல வழி முழவதும் சுற்றத்தினர்க்கு நம்பிக்கையாக இருக்கும், மெரினா விற்கு சென்றால் இவர்கள் நினைவுகள் என்னுள் அலை போல புன்னகையாக மோதும் ....
மெரினாவின் மகிழ்ச்சிகள் அலாதி !!!!