பள்ளி நாட்களில் ராஜ் பரத் எனும் நண்பன்அவனது வீட்டில் ஒரு மினி ரேடியோஸ்டேஷன் உருவாக்கி கையில்மைக்கையை தந்தான், அதில் மிமிக்கிரிசெய்து பேசலானேன். பக்கத்து வீட்டுஅக்காளிடம் கத்தினான் "அக்கோவ் .... 100 .3 டியூன் பண்ணுங்க .. க்கா சீக்கிரோங்கேளு " . அவர்களும் உடனே கேட்டு "டேய் ...விஜயகாந்த் வாய்ஸ் மாறியே பேசுறான் .. ஜோரா இருக்குன்னு சொல்றா" என உரக்ககூறினார்கள். இப்படியான சிலஉத்வேகங்களும் பல உசுப்பேற்றல்களும்என்ன செய்யும் என்பதை அனுபவித்துபார்த்தால் நன்றாக புரியும், அதேஉற்சாகத்துடன் போகும்போது களஎதார்த்தம் கொடுக்கும் சம்பட்டி அடிகள்நம்மை செதுக்குவத்திற்கான உளி. அப்படியே ஜம்ப் கட் ஆக 2013 க்குகுதித்தால் DLFல் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த சமயம், இரவு உணவிற்காக கீழுள்ளஉணவகத்திற்கு செல்லபடியிலிறங்கும்போது என் நண்பனிடம்சொன்னேன் "பேசாம RJ வேலையதேடலாம்னு இருக்கேன்.. இந்த IT லாம் செட்ஆகாது போல .." , ஒரு சிறு புன்னகைஓசையுடன் " பேசுனா தான் RJ வேலைசெய்ய முடியும் .. அதுக்கெல்லாம்ப்ரெசென்ஸ் ஆப் மைண்ட் வேணும்" என்றவுடன் சுயக்கேள்விகள் தோன்றின. தொடர்ந்த எங்காவது RJ ஆடிஷன்நிகழ்கிறதா என நோட்டம் விட்டவண்ணம்இருந்தேன். அப்படியாக 2014 ஆம் ஆண்டுஒரு நாள் பீச் அருகிலிருக்கும் ஒரு FM ல்அழைப்பு விட்டிருந்தனர் அது விளையாட்டுதொகுப்பாளருக்கானது (SPORTS PRESENTER), விண்ணப்பித்து பார்ப்போம்என மனவுந்ததலுடன் செய்தேன்; 60 க்கும்மேற்பட்ட பங்கேற்ப்பாளர்களில் 10நபர்களை தேர்வு செய்தனர் அதில் நானும்ஒருவன் . அங்கிருக்கும் தேர்வுக்குழுவினர்ஒருவரிடம் "சார் , RJ ஆகணும்னு ஆசை.. " என இழுத்தவுடன் , சிரித்தார். அந்த ஒருபுன்முறுவல் அவ்வளவே !
முதல் ஷோ இந்தியாவிற்கும்ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலானடெஸ்ட் போட்டி ,2014 டிசம்பர் மாதம்நடைபெற்றது அதற்காக முதல் அழைப்பு, கிரிக்கெட் அப்டேட்ஸ் நிகழ்ச்சியை ஷியாம்என்ற நண்பர் மட்டும்வழிங்கிக்கொண்டிருந்தார், டெஸ்ட் போட்டி5 நாட்கள் ஆகையால் தேர்வு செய்யப்பட்ட10 பேரை தினம் 2 என்ற விகிதத்தில் பேசிமைக்கிற்கு பழக வைக்கலாம் எனநினைத்தார்கள், எனக்கும் இன்னொருநண்பருக்கும் வந்த வாய்ப்பு 5 ஆம் நாள். மிக விறு விறுப்பாக போட்டிசென்றுகொண்டிருந்தது, வீட்டிலிருந்துகிளம்பும் முன் ஊரிலுள்ள எல்லாசிறுவண்டுகளுக்கும் சொல்லிவிட்டேன்"நான் ரேடியோல பேசப்போறேன் .. பேசப்போறேன் .. பேசப்போறேன்". அரைமணிநேரம் முன்னதாகவே வானொலிநிலையத்திற்கு வந்தடைந்தேன், பயபக்தியுடன் ஸ்டூடியோக்குள் சென்றேன். ON AIR என சிவப்பு விளக்கு எறிந்தாள்ஏனோ இன்றுவரை ஒரு இனம்புரியாதபொறுப்பு இருந்துகொண்டே இருக்கிறது. அட சொல்ல மறந்துட்டேன்வானொலிக்கென சில சடங்குகள்இருக்கின்றன, கன்சோலில் இருக்கும்FADER IN கொடுத்தால் நாம்நேரலையிலிருக்கிறோம் என்பதைகுறிக்கும். இது அனைத்தும் RJக்கள்செய்வார்கள் இந்த பாவப்பட்ட ஸ்போர்ட்ஸ்அப்பரசண்டிகள் அருகிலுள்ள கண்ணாடிஅறையில் அமருவர் அங்கு செய்திகளும்வாசிக்கப்படும், ஆகையால் அவர்கள்கொடுக்கும் செய்கையும் அந்த சிவப்பு ON AIR விளக்கே எங்களைப்போன்றோருக்குபச்சை விளக்கு அதன் பின்னர் பெரும்பொறுப்புணர்ச்சி சொற்களாக வந்துவிழும். ஆக ... மேட்சுக்கு வருவோம்,ஒருமணி நேரத்திற்கு 3 நிமிடங்கள் என அந்தநாள் முடியும் வரை அப்டேட் கொடுக்கவேண்டும், விஜய் மற்றும் விராட் கோலிமிக சிறப்பாக விளையாடிகொண்டிருந்தனர், முதல் அப்டேட் ஷியாம்கொடுத்தார். இரண்டாவது அப்டேட்டிற்குஎன்னை தயார் செய்ய சொன்னார் நானும்செய்தேன்.
11 : 05 ற்கு ஷியாம் " ஹலோ .. வணக்கம்ங்க நான் தான் உங்க ஷ்யாம் சுந்தர் , மேட்ச்ரொம்ப இன்ட்ரெஸ்ட் ஆஹ் போகுது.. முரளிவிஜய் , கோலி சிறப்பா ஆடிக்கிட்டு வராங்க.. 364 ரன்கள் எடுத்தால் வெற்றி ன்றடார்கெட்டோட ஆடிக்கிட்டு வராங்க , இன்னும் இந்த மேட்ச பத்தி பவித்ரன்சொல்லப்போறாரு , ஓவர் டூ பவித்ரன்" என்று ஷியாம் முடிக்க ஏனோ என் பற்கள்மட்டும் கட கட வென ஆடியது, கை கால்கள்உதறியது. யாரடி நீ மோகினி படத்தில்கருணாஸ் பேசியத்தைவிட உதறலோடுபேசினேன். இன்ஜி இடுப்பழகா பாடலில்ரேவதி சொல்வது போல் வெறும் காற்றுமட்டுமே வந்தது. பேசியது மொத்தம் 54வினாடிகளே, என்ன உளறினேன் என்றுஒன்றுமே தெரியவில்லை, ஷியாம்திடீரென என்னை விளக்கி க்ளோஸிங்கொடுத்தார். கண் கலங்க எழும்பிநின்றேன், என் நம்பிக்கையெல்லாம் அந்த54 வினாடிகளில் ஐஸ் கட்டியாக கரையஆரம்பித்தது. எதிர் அறையிலிருந்தஇரண்டு பெண் RJ க்கள் இதைபார்த்துக்கொண்டே இருந்தார். அவர்கள்புருவத்தை உயர்த்தி தலை அசைத்தார்கள், ஏதோ குசு குசுத்தப் பின் கையை வைத்துவாயைப் பொத்தி சிரித்தார்கள். அந்தசிரிப்பை மட்டும் இன்றுவரை என்னால்கடக்கவே இயலவில்லை. அடுத்து வந்தபோட்டிகளிலிருந்து என்னை தனியாகபேசும்படி என் இயக்குனர் கூறினார். லைவ்பயம் பனி போல் விலக ஆரம்பித்தது, முன்னே இருக்கும் மைக் என் நண்பனாகஉருமாறியது.
எப்பொழுதெல்லாம் முக்கியமான இந்தியவிளையாடும் கிரிக்கெட் போட்டிகள்நடக்கிறதோ அழைப்பு வரும் , ஒரு முதிர்மஞ்சளான காலையில் வானொலிநிலையம் வந்தடைந்தேன், வழக்கமாகபேசினேன். அன்று வந்த ஆர்.ஜே ஒருவர்எந்த சிமிக்ஞையுமில்லாமல் FADER OUTசெய்தார், அந்த நேரம் பார்த்து எழுதிவைத்த தாள் கீழே விழுந்தது, கண்ணாடியின் வழியே அவரைவினாடிக்கும் குறைவாக பார்த்தேன், அலறலுடன் சாதித்தாற்போல கையைஉதறி சிரித்திக்கொண்டே இருந்தார்.அவர்நான் பார்ப்பேன் என்று சற்றும்எதிர்பார்க்கவில்லை. அதுவரை அவ்வளவுநேர்த்தியாக பேசியததேயில்லை ,எந்த விததயாரிப்புமில்லாமல் பேசினேன். ஏனோஇனம் புரியாத வெறி ஏறியதாக இருந்தது, பின்பு பேசி முடித்தபின் அவர் எந்த விதசலனமும் இல்லாமல் வேலையைதொடர்ந்தார், அன்றைய நாள் நான்கிளம்பும் முன்பு அவரை பார்த்து பல்தெரியாத வாறு உதடுகள் மட்டும்கன்னத்திற்கு அருகில் சென்றார் போலபுன்முறுவல் செய்தேன். அவ்வளவு தான் ..
எப்படியாவது ஆர். ஜே ஆகிட வேண்டும்என்று அலைந்த நாட்கள் இன்றளவும்நீட்சியாக நீண்டுக் கொண்டே இருக்கிறது,வருகிறவர்கள் போகிறவர்கள் எனஎல்லாரிடமும் வாய்ப்பு கேட்டிருக்கிறேன், அடையாளமற்றவர்களுக்கு உழைப்புமட்டுமே மூல தனம் ,உழைப்பு இன்னும்அதிகம் இருந்திருக்க வேண்டும் போல. தோல்விகள் நிஜங்களாக நகர, காரணங்கள் பின் நிழல்களாகதொடர்வதை பலரிடம் கேட்டிருக்கிறேன். அந்த பலரில் நானும் ஒருவனாக கூடஇருந்ததும் உண்டு. வயதிற்கும் போதுஅவசரமிருப்பதுண்டு , வயதாகும் போதுஞானம் வளருவதுண்டு. ஒரு கட்டத்தில்ஏளன சிரிப்பால் பழகி போன கண்களும்காதுகளும் அதை சன்னமாகவேஉணரத்தொடங்கும். இக்கட்டான சூழல்நம்மில் இருக்கும் இன்னோர் பிரதியைநிஜம் எடுக்கிறது. சுயத்தை இழக்காமல்நம் இலக்குகள் நோக்கி நடந்தோ , ஓடியோ , ஊர்ந்தோ நகர்ந்தால் காலம் சிரிப்பின்அழகை வேறொரு ரூபத்தில் காண்பிக்கவிழையும்.