கவலை ஒரு ரசம் போன கண்ணாடி
கவலையை தொலைத்து நிம்மதியை தேடும் ஏரளமானோர் உள்ளார்கள், என்னவோ கவலை இவர்களை துரத்தி துரத்தி காதலிக்கும். எவ்வளவு கவலைகள் இருந்தாலும் சிலரிடம் சிரிப்பு மட்டுமே தெரியும், ஒரு வண்ண ஓவியத்தின் பின் புறம் போல. சில நேரங்களில் நான் சிந்தித்ததுண்டு இந்த மனிதர்கள் மனதின் மிக சிறந்த மருத்துவர்கள், இவர்கள் பல நேரங்களில் மற்றவர்களுக்கு சிகிச்சை செய்து குண படுத்துவார்கள். இதை போல் பல மருத்துவர்களை நீங்கள் உங்கள் வாழ்வில் சந்தித்து இருப்பீர்கள் அதை நினைவு கூற இந்த பதிவு ஒரு தூது வல்லரையாக செயல்படும்.
தமிழ் மணி , மிக சிறந்த கபடி வீரன், பாடி பில்டர், பல குரல் கலைஞன் என்று வெவ்வேறு முகங்கள் உண்டு. எல்லோருக்கும் பிடித்த நண்பன் கல்லூரியில். அவனுக்கு பல கவலைகள் இருக்கிறது ஆனால் இதுவரை ஒரு முறை கூட அதை விளம்பரம் செய்ததேயில்லை. எல்லாரையும் மகிழ்வித்து தானும் மிகிழ்ந்தவண்ணம் இருப்பவன் தமிழ் மணி, அவனுக்கு கபடி மூலம் வேலை கிடைக்காமல் போனது இதை பற்றி அவன் எந்த சலனமும் இல்லாமல் அடுத்த வேலை தேடினான். காதல் மணி மணிக்கு சரியாக அடித்ததில்லை கல்லூரி நாட்களில். அம்பதூர் ரவி, சதீஷ் , சிரில், மோகன் மற்றும் நான் விவேக்ஸ் ஷோ ரூமில் எங்களது இளங்கலை இறுதியாண்டு ப்ராஜெக்ட் அங்கே செய்ய நேர்ந்தது, அந்த காலகட்டத்தில் தமிழ் மணிக்கு ராங் கால் ஒன்று வந்தது, அது ஒரு பெண். SMS - குறுஞ்செய்து இலவசம் மற்றும் கட்டணமும் மளிவு , ராங் கால் ரைட் கால் ஆகா மாறியது, இடை விடாமல் SMS உம் பேச்சுமாக இருக்கும் இதையெல்லாம் அவதானித்து இருந்தேன். ஒரு நாள் இருவரும் சந்திக்க முடிவெடுத்தனர், மெரினா பீச் கண்ணகி சிலை. அவள் பச்சை நிற ஆடையிலும் மணி கருப்பு நிற ஆடை என்று முடிவேடுத்திருந்தார்கள் காலம் கனிந்தது. தமிழ் மணி உசார் மணி, முதலில் அவன் அவளை பார்க்க வேண்டும் என்று தன் ஆடை நிறத்தை மாற்றி சிவப்பு நிறத்தில் முதலில் சென்று கண்ணகி சிலை அருகே நின்றான். பச்சை நிற சுடிதார் அணித்து கையில் அலைபேசி அழைப்புக்காக எதிர் பார்த்த சற்றே உடல் பருமனுடன் , வியர்வையில் பவுடர் திட்டு திட்டக மாநிற முகத்தில் இருந்தபடி பஸில் இருந்து இறங்கினாள். தமிழ் மணி அலைபேசி அடித்தது அவன் கனவு கோட்டை இடிந்தது, ஓட்டம் எடுத்தும் நம் உசேன் போல்ட். அந்த பெண்ணிடம் என்னால் இன்று வரயியலவில்லை என்று கிளம்பியவுடன் சொன்னான். " எனக்கு தெரியும் , அந்த சிவப்பு சட்ட நீங்க தானே ? " என பதில் வந்ததும் பீப் தான்.
தமிழ் மணி கூடே இருந்தால் நேரம் எங்கே போகும் என்று தெரியாது, என் வகுப்பில் ஒரு முக்கிய புள்ளி, எல்லாரையும் மகிழ வைப்பான். சமீபத்தில் தான் திருமணம் நடந்தது, TCS கம்பனில் நல்ல மதிப்புடன் மிமிகிரி மணியாக சுகமாக இருக்கிறான்.
ராஜேஷ், கல்லூரியில் அனைவருக்கும் மிக முக்கிய நண்பன். பரங்கிமலையின் ஜோதி மட்டும் இல்ல இவன் ஒரு சுடர் என்று கூட சொல்லலாம். ஆழ்ந்த கவலைகளை உள்ளே வைத்து முகத்தில் சிரிப்போடு இருப்பான். எங்கள் வகுப்பின் சந்தானம் , டைமிங் காமெடியில் இவனை அடிக்கவே முடியாது. ராஜேஷ் ஒரு இடத்தில இருந்தால் அங்கு எல்லோருமே சிரித்துகொண்டு தான் இருக்க வேண்டும். சிறந்த கால் பந்து வீரன், பல தோல்விகள் சுமந்தாலும் அதை யாரிடமும் பகிர்ந்ததில்லை.
வகுப்பில் மிகவும் சுமாராக தான் படிப்பான், தன் கடின உழைப்பின் பயனால் இன்று ஸ்கோப் நிறுவனத்தில் TL ஆகா இருக்கிறான். வேலையை கவலையுடன் சேர்க்க மாட்டன் , கவலையை வேலையுடன் சேர்க்க மாட்டன். இவனைப் பார்த்தல் நமக்கு ஒரு உத்வேகம் வரும், முன்னேற்றம் என்றால் வெற்றியும் தோல்வியும் பிரித்து பார்ப்பது அது ராஜேஷிடம் அதிகம். என் முதல் நாள் கல்லூரி எனது குரல் காற்றில் கரைந்து சென்றது ராஜேஷிடமும் தமிழ் மணியிடம் அதை எப்போதும் அசைபோடும் பழக்கம் எனக்கு.
ஓராண்டுக்கு முன்னர் ராஜேஷுக்கு திருமணம் நடந்தது , நான் அருகில் இருந்தேன் அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாகவும் , நெகிழ்ச்சியாகவும் இருந்தது.
அடுத்து என் நினைவில் வருவது மகேஷ், நான் முன்னர் சொன்ன வாறு இத்தகைய குணாதிசியம் கொண்ட நபர்கள் எல்லோரையும் வெகு சீக்கிரமாக நட்பின் வலையில் ஒரு சிறிய மீனைப் போல் சிக்க வைப்பார்கள். உதையா அவனுடைய நெருங்கிய நண்பன் இருவரும் இரட்டையர்கள் போல சுற்றி திரிவார்கள். எனக்கு மகேஷின் மேல் நல்ல அபிமானம் உண்டு, இரண்டாம் ஆண்டு இறுதியில் தான் நெருங்கி பழக வாய்ப்பு கிடைத்தது. எவ்வளவு பிரெச்சனை இருந்தாலும் ஒரு சலனமே இல்லாமல் தனக்குள்ளே பேசி தீர்ப்பான்.
இளங்கலை படிப்பு முடிந்தவுடன், மேல் படிப்புக்கு ஐயர்லாந்து சென்றான், இனிதே படிப்பை தொடங்கி நன்றே தேர்வுகளை எதிர் கொண்டான். நேரம் அவன் மேல் கருப்பு சாயத்தை பூச ஆசைப்பட்டது , சில குடும்ப சூழலால் படிப்பை தொடரமுடியாமல் இந்தியா திரும்பினான். இந்த சம்பவம் வேற யாராவது வாழ்வில் நடந்திருந்தால் அவர்கள் ஸ்தம்பித்து இருப்பார்கள், ஆனால் மகேஷ் "விடு மாமா, அடுத்தத பாப்போம் " என்று தைரியத்தின் சொல் நம்பிக்கையின் நாவின் இருந்தது வந்தது. மகேஷும் கவலையை ஒரு ரசம் போன கண்ணாடியாக பார்த்தான்.
இந்த மாதிரியான நண்பர்கள் உங்கள் அருகாமையிலும் இருப்பார்கள் சற்றே உணர்ந்து பார்த்தால் தெரிவார்கள் நம் முன்னே மகிழ்ச்சியோடு..
தொடரும் ....

No comments:
Post a Comment