தினமும் என் மனதில் தோன்றும் கவலை , நான் ஏன் இங்கு வேலைக்கு சேர்ந்தேன்
என்று; கொசு அடிப்பது போல் மனதை அடித்துவிட்டு மின்தொடருக்காக
காத்துக்கொண்டிருந்தேன் பெரம்பூர் லோக்கோ இரயில் நிலையத்தில்.முன் தினம்
பார்த்த இரயில் நிலையம் போல இல்லை, மிகவும் சுத்தமாக இருந்தது குப்பைகள்
அகற்றப்பட்டு தூய்மையாக இருந்தது.வியப்படைந்தேன்,இந்த இரயில் நிலையத்தில்
இரண்டு நடைமேடைகள் உள்ளது இரண்டிலும் காந்தியடிகளின் பதாகை கட்டி
வைக்கப்பட்டு காற்றில் அதில் உள்ள எழுத்துக்கள் "சவாச் பாரத் - தூய்மை
பாரதம்" ஆடி கொண்டிருந்தது இந்த புரட்டாசியில்.மனதில் உள்ள மத குப்பையை
யார் சுத்தம் செய்வார்? மதம் எனும் ஆழ் கிணற்றை யார் தூர் வாருவார் ? என்று
யோசித்து முடித்தவுடன் மின்தொடரின் ஒலி காதைத் துளைத்தது, சென்னை
சென்ட்ரல் மார்க்கம் செல்லவிருந்தது. வெண்டார் என்று சொல்லக்கூடிய சிறு
வியாபாரிகள் தங்களது வியாபார மூட்டைகளுடன், மீன் குடைகளுடன்
அமர்ந்திருந்தனர் அந்த பெட்டியில் நான் ஏறினேன். சிலர் வாய் நிறைய "பாண்
பராக், மாவா" என்ற புகையிலை வஸ்துக்களை மென்றவாறு உமிழ் நீரை தங்கள்
அருகில் துப்பினார்கள், இந்த வஸ்துக்களை தடை செய்தார்களே என்று
யோசிக்கையில் அல்லாவுதீன் விளைக்கை தேய்ப்பது போல் பெரும்பாலானோர் தங்கள்
அலை பேசியை தேய்த்து சிரிக்கின்றனர் , கோவப்படுகின்றனர் என பல பாவனைகளை
பார்க்க நேர்ந்தது. தவறு செய்தவர்கள் மட்டும் தலைகுனியவில்லை இன்று
பாதிக்கும் மேற்பட்டோர் தவறு செய்தார்களா? என்று என் எண்ணங்கள் கேள்வி
கேக்கையில் "சென்ட்ரல் வந்துடுச்சி , நீ மூடினு பார்க் டவுன் ஸ்டேஷன் நடைய
கட்றியா ? " என்று எனது மைண்ட் வாய்ஸ் நறுக்கென்று கொட்டியது.
சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து பார்க் டவுன் பறக்கும் இரயில் நிலையத்திற்கு சென்றடைவது ஒரு சாகசம் தான். மூன்று முனை பூந்தமல்லி நெடுஞ்சாலை கடக்க படாத ஓட்டம் எடுக்க வேண்டும், சுரங்கப்பாதையில் கடக்க வேண்டுமானால் நமக்கு மூக்கடைப்பு அல்லது சுவாச கோளறு ஏற்பட்டிருக்க வேண்டும் , அது சுரங்கபாதையா அல்ல சுரங்க கழிப்பறையா ?
எனக்கு மூக்கடைப்போ , சுவாச கோளாறோ இல்லை ஆதலால் ஓட்டம் எடுத்தேன் , பல்லவன் மேம்பாலத்தில் என் கால்கள் மூவுருளிகளைத் தாண்டி சென்றன.
"சவாச் பாரத்" பணிக்கு கல்லூரி மாணவர்கள் எங்கோ செல்ல விரைகிறார்கள், மற்ற கூட்டம் கூட தீ மெதிப்பது போன்று பதற்றமாக நடந்தார்கள். மேம்பாலத்தில் ஒரு தொழிலாளி மூன்று சக்கர மிதி வண்டியில் கட்டைகளை ஏற்றி இழுக்க முடியாமல் இழுத்தவாறு ஏறினார், நான் வேகமாக சென்று உதவி செய்யலாம் என்று விரைவதற்குள் என்னைப்போல் ஒரு சாமான்யன், அகவை 40 இருக்கும் அவருக்கு அந்த தொழிலாளிக்கு உதவி செய்தார் மற்றவர்கள் தீ மெதித்தனர். மேட்டை கடந்து மிதி வண்டி சம பகுதிக்கு வந்தடைந்தது, தொழிலாளி தன் கையை உயற்றி அந்த சமான்யனிடம் உடல் மொழியில் நன்றி சொன்னார், இவரும் அதை ஏற்று ஒரு சின்ன சிரிப்பு செய்து பார்க் டவுன் நிலையத்திற்கு சென்றார். யார் கண்களுக்கும் இந்த தொழிலாளி தெரியவில்லையே என்று நகர்கையில் ஒருவர் அந்த சாமான்யனை நோக்கி விரைந்து சென்று " சார் !! ரொம்ப நல்ல செயல் செஞ்சீங்க , மகிழ்ச்சி" என்று பாராட்டி சென்றார்.
அந்த சாமான்யனின் முகத்தில் ஒரு மகிழ்ச்சி எந்த பணத்தாலும் கொடுக்க முடியாது அதை, இந்த சின்ன பாராட்டு அவரை மேலும் பல உதவிகளை செய்யவைக்கும் . எதிர் பாராத உதவிக்கு எதிர் பாரா பாராட்டு அலாதியானது. மனம் வந்து பாராட்டுவோம், பணம் தேவையில்லை மனம் இருந்தால் போதும்.
யார் கண்களுக்கும் இந்த சாமான்யனின் செயலை பாராட்ட தெரியவில்லையே என்னையும் சேர்த்து தான்.
இந்த அவதானிப்போடு நகர்ந்தேன் ...

No comments:
Post a Comment