இடுக்கண் களைவதாம் நட்பு ...
நட்பில்லாமல் நாட்கள் இல்லை, நாட்களில்லாமல் நட்பில்லை. துன்பங்களில் ரத்த சொந்தங்கள் தள்ளி நின்றாலும் நம் துன்பங்களை அள்ளி வீசும் JCP இயந்திரம், வாழ்கையின் புரிதல் நட்பால் ஏற்படும் ஒவ்வொரு கட்டத்தில். நட்பெனும் வாசல் அன்பெனும் தோரணையில் நம்மை வரவேற்கும், நண்பனின் மனம் உழன்று அழும் போது நட்பிற்கு மட்டுமே அது கேட்கும், கடினமான சமையங்களில் சம்மன் இல்லாமல் ஆஜர் ஆகும் நட்பு. இது போல வெவ்வேறு உவமைகள் கூறிக் கொண்டே செல்லலாம், இந்த தொடர் உங்களின் நட்பின் சிறந்த நிகழ்வை கண்ணாடி பிம்பமாக காட்டும் என நம்புகிறேன்!
எனது வகுப்பு தோழர் ராயப்பன், ஆசிரியர் படிப்பு முடித்து இளங்கலை கணிதம் சேர்ந்திருந்தார், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் வாழ்ந்தார் ராயப்பன்.கல்லூரி படிப்பு செலவிற்காக பகுதி நேரமாக ஒரு கடையில் வேலைப் பார்த்தார். அவரால் ஒரு வேலை சாப்பிடும் அளவிற்கு தான் பணமிருக்கும் நான்கு இட்லிகள் வாங்கி , காலை இரண்டு இட்டிலிகளும் மீதம் இவரைப் பார்த்து இறக்கப் பட்டு கெடாமல் இரவுவரை இருக்கும்.தண்ணீர் எனும் அடியாளை வைத்து இவர் பசியை தற்காலிகமாக அடிப்பார். எங்கள் கல்லூரியில் வருமையிலுள்ள மாணவர்களுக்கு என்று நிதி ஒதுக்கப்படும், அதில் ராயப்பன் தன் பெயர் கொடுத்தும் இல்லை யாராவது பரிந்துரை செய்தாலும் அவர் நிராகரித்து விடுவார், ஒரு நண்பன் கேட்டான் " ஏன் ராயப்பன் 'புவர் பாய்ஸ் பண்ட்' வாங்கல" என்பதற்கு, "என்னைவிட யாராவது கஷ்டப்பட்ரவங்களுக்கு உதவியா இருக்கும் " என்றார். அந்த மனிதனின் குணத்திற்கு வறுமை அழுது அழியும்!. ராயப்பன் முதல் நான்கு செமஸ்டர்களில் முதன்மை பாடமான கணிதத்தில் 100/100, அன்று வரை எங்கள் துறையில் யாரும் இதை நிகழ்த்தியது கிடையாது. ஐந்தாவது செமஸ்டர் வகுப்புகள் ஆரம்ப நிலையில் ராயப்பனை காணவில்லை அவர் எங்கே சென்றார் எப்படி இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை.இளம் பருவம் பெண்கள் மகிழ்ச்சி சிரிப்பு என்று கடந்த காலம் ராயப்பனை பற்றி பேசுவோம் பரிதாபப்படுவோம் அவ்வளவு தான், சிலர் மட்டும் தோழர் ராயப்பனை கண்டு பிடித்தார்கள், அவர் உடல் நலக் குறைவால் பாண்டிச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மாதமாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் இருந்தார். 20 வயது தான் இவர்களுக்கு அன்று ஆனால் நட்பின் முதுமையும் தெளிவும் மிகுந்தவர்கள். ஜான் அல்போன்ஸ் , திலிப் சந்தோஷ், ரவீந்திரன் , பெல்லார்மின் , ஹேமந்த் , கமல் , செல்வா, ஜாக் பிரதர், ஜூலியஸ், தேவா மற்றும் ஷங்கர் ராம், இவர்கள் ராயப்பனுக்காக பாண்டிச்சேரிக்கு விரைந்தார்கள், பண உதவி செய்தார்கள் அதைவிட நல்ல மன தெம்பு கொடுத்தார்கள். இது ஒரு நாளில் முடியவில்லை திலிப் அவ்வப்போது சென்று ராயப்பனை சந்திப்பான், பின்னர் உடல் நலனுடன் திரும்பியபின் அவரால் ஐந்தாவது செம் வரவும், எழுதவும் முடியவில்லை; நண்பர்கள் அனைவரும் கணித துறையின் முன்னணி பேராசிரியர் விக்டர் அவர்களிடம் நிலைமையை கூறி ராயப்பனை ஆறாவது செம்மிற்கு அனுமதி கேட்டு அவரை வரவழைத்தனர். எந்த பிரதிபலனையும் எதிர் பார்க்காமல் நண்பனுக்காக எதையும் செய்யும் பலருடன் என் நாட்கள் கடந்தது. இன்று ராயயப்பன் அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிப்புரிகிறார், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் அவரைவிட இவர்களுக்கு (ஜான் அல்போன்ஸ் , திலிப் சந்தோஷ், ரவீந்திரன் , பெல்லார்மின் , ஹேமந்த் , கமல் , செல்வா, ஜாக் பிரதர், ஜூலியஸ், தேவா மற்றும் ஷங்கர் ராம்) தான் மகிழ்ச்சி அதிகம்...
என்னை முற்றிலும் உலுக்கிய நிகழ்வு, ஒரு நண்பன் இருந்தான்,அவனாலும் கல்லூரி படிப்பிற்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை அவன் யாரிடமும் கூறவில்லை, பாதர் ஒருவருக்கு மட்டும் தெரியும் அவர் பல தெரிந்தவர்களிடம் பண உதவி கேட்டார் இறுதியில் யாரோ ஒருவர் மூன்றாண்டுக்கும் அவரே மொத்த செலவையும் ஏற்கிறார் என்றானது. யாருக்கும் தெரியாது அந்த நண்பன் ச்பான்சரில் படிக்கிறான் என்று. அவன் நன்றாக படித்தான் தேர்ச்சியும் ஆனான், நாட்கள் சென்றது அந்த நண்பனுக்காக ஸ்பான்சர் செய்தது எங்கள் அருகிலிருக்கும் இன்னொரு நண்பன். இன்று வரை அவன் இதை யாரிடமும் சொன்னது கிடையாது எனக்கு இந்த செய்தி அன்றே பாதர் மூலம் தெரியும். எப்படி ஒருவன் தன் வகுப்பு நண்பன் ஒருவனுக்கு உதவி செய்து அதற்கும் அவனுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று மூன்றாண்டுகள் இருந்திருக்க முடியும். இந்த சம்பவம் மூலம் அவனிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். தன் சக தோழனுக்கு என்ற ரீதியில், செய்யும் உதவி நம் நினைவிலே இருக்கக்கூடாது. இந்த பண்பும் பெருந்தன்மையும் நண்பனிடம் மட்டும் காண முடியும், எல்லா உறவுகளும் ஒரு பிரதிபலன் எதிர் பார்த்து வரும் ஆனால் நட்பு மட்டும் எதுவும் எதிர் பார்க்காது. அந்த நண்பன் எங்கள் வகுப்பை அலங்கரிக்கிறான் நட்பின் கோலமாக !!!!
இன்னொரு நிகழ்வு - ஜான் சபா, வேலை தேடும் முனைப்பில் இருந்தான் மூன்றாம் ஆண்டு முடிவில். காம்பஸ் இன்டர்வ்யு வில் அவன் சிரமப்பட்டு இருந்தான், நானும் அவனும் சதர்லாந்து கால் சென்டர் இன்டர்ய்வு விற்கு செல்ல ஆயுத்தம் ஆனோம், பெட்ராம் ஹால் என்று சொல்லகூடிய பெரிய அரங்கில் நடந்துக் கொண்டிருந்தது. வெளியே நின்றோம் உள்ளே செல்லவில்லை நான் சொன்னேன்
" நம்பளால சதர்லாந்து பொழைக்கலாமா ? அது நம்ப அவங்களுக்கு பிச்ச போட்றா மாதிரி இருக்கும்"
இதற்கு " சரியா சொன்னே மச்சி " என்றான் சபா.
"மச்சி டாஸ் போட்டு பாக்கலாம்" என்று சொல்லி முடிவெடுக்க, தலை விழுந்தால் இன்டர்வ்யுவிற்கு போகிறோம் பூ விழுந்தால் கான்டீன் இந்த நிலையில் சபா ஒரு ரூபாய் நாணயத்தை சுண்ட, அட என்ன தான் விழுந்திற்கு பாப்போம் என ஆர்வத்தில் புதைந்த மண்ணில் இருக்கும் நாணயத்தில் பார்த்தல் தலை ! ஒரே அதிர்ச்சி என் மைண்ட் வாய்ஸ் சொன்னது "உள்ள போனாலும் பைல் ஆகா போறோம் என்னடா ஒரு சாம்பார் ரைஸ் கூட சாப்ட விட மாற்றியே ஆண்டவா " என புலம்ப.
சபா சொன்னான் " மச்சி பெஸ்ட் அப் த்ரீ போடலாம் டா "
"மச்சி நீ தான் டா என் உயிர் ப்ரெண்ட்" என்றேன்.
பின்னரும் தலை தான் விழுந்தது நாங்கள் பூ விழும் வரை விடவில்லை அன்று காண்டீனில் சாம்பார் ரைஸ் சாபிடாமல் செல்லவில்லை.
இப்படி சபாவிற்கும் எனக்கும் இன்டர்வ்யு அலர்ஜி, பின்னர் தீவிரமாக தகவல் தொழில்நுட்பத்தில் வேலை தேடினான், ஆப்டிடுயூட் தேர்வில் மிகவும் சிரமப்பட்டான் . நண்பன் ஜான் அல்போன்ஸ் மற்றும் உதயா இருவரும் சபாவிற்கு சொல்லிக் கொடுத்தார்கள், அவர்கள் இருவரும் பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்து இருந்தது. ஆப் காம்பஸ் அண்ணா யூனிவர்சிட்டியில் நடந்தது, அப்போது உதயாவும் ஜானும் தேர்வை எடுத்துக்கொண்டனர் சபாவிற்காக.இருவரும் சபா அருகே அமர்ந்து ஆப்டிடுயூட் தேர்வு விடைகளை சொல்லிக் கொடுத்தனர். தனக்கு வேலைக் கிடைத்துவிட்டது கல்லூரியும் முடிவுற்றது இனி என்ன என்றில்லாமல் நண்பனும் நன்றாக வரவேண்டும் என்று நினைக்கும் எண்ணம் சொந்தங்களை விட நண்பனுக்கு அதிகம் என்பது மறுக்க முடியாத உண்மை. இன்று சபா , ஜான் , உதயா அவர்கள் மனதைப்போல நன்றாக இருக்கிறார்கள்.
நம் துன்பங்களில் காலிங் பெல் அடிக்காமல் அதை கண்டறியும் துப்பறியும் சாம்பு நண்பர்கள், மேற் கூறிய நிகழ்வுகளைப் போல் உங்கள் வாழ்விலும் நடந்திருக்கும் அதை அசை போடுவதற்கு இது சுவிங் கம் ஆகா இருக்கும் என்று நம்புகிறேன்.

No comments:
Post a Comment