உழைப்பைத் தின்னுவார்கள் இன்பமாய் செரிக்கும்....
உதைய பிரகாஷ் , என் நெருங்கிய நண்பன். லயோலா கல்லூரியில் அவனை அறிமுகம் செய்தது. உதையா மிடல் கிளாஸ் குடும்பம் தான் , எனக்கு தெரிந்தவரையில் மூன்றாண்டு பீஸை அவனே சம்பாரித்து கட்டிகொண்டான், திறமைசாலி எல்லோரிடமும் நன்றாக பழகுவான். முதல் ஆண்டில் இருந்தே பார்ட் டைம் வேலை செய்துகொண்டே படிப்பான். என் கிளாசில் மொத்தம் 80 உருப்படிகள் இதில் பாதிக்கும் மேர்பாட்டோர்க்கு உதயா தான் முதல் சம்பளம் வாங்கி கொண்டுதான். இன்போசிஸ் கம்பனிக்கு நங்கள் ரெக்ரூட்மெண்ட் () செய்து கொடுப்போம் .
இந்த கம்பனிக்கு ஒரு இடைத்தரகர் போல ஒரு சிறிய கம்பெனி செயல் பட்டது (Meta I). இவர்களிடம் உதையாவுக்கு அறிமுகம் கிடைத்தது கல்லூரியின் 2 ஆம் ஆண்டில், கடுமையாக உழைத்தான் அதே சமயம் படிக்கவும் செய்தான், வீட்டு வாடகை கட்டினான் என சொல்லிக் கொண்டேபோகலாம். இவன் மட்டும் சம்பாதிக்கவில்லை எங்களையும் அவன் சம்பாதிக்க வைத்தான். உதயாவும் நாங்களும் சுத்தாத ஊரே கிடையாது. நாக்பூர் , அசாம் , வைசாக் , கேரளா என நிறைய மாநிலங்கள் சென்றுள்ளோம். தமிழ் நாட்டில் போகாத காலேஜே இல்லை, எங்கள் வேலை கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட் , மாணவர்களுக்கு
விண்ணப்பம் முதல் வினா தாள் வரை கொடுப்போம் சில நேரம் பதிலையும் கூட. ஒரு கல்லூரிக்கு கேம்பஸ் நடத்தவேண்டும் என்றால் நாங்கள் சென்னை டீம் அதாவது லயோலா ப்ரெண்ட்சும் அவர்களுடைய ப்ரெண்ட்சும் என 40 பேர் போவோம் , ஒரே கூத்தாக இருக்கும். உதயா தான் எங்களுக்கு லீட். அவன் தான் பிளான் செய்வான் யாருக்கு என்ன வேலையென்று. அவன் உழைப்பு தான் இந்த வேலையை எங்கள் நண்பர் பிரதர் பெல்லார்மின் தொடர்ந்தார்.
19 வயதில் வீடு வாடகை , தன படிப்பு செலவு என அவனே உழைத்து பார்த்துக்கொண்டான். 2 செம் பீஸ் கட்டவேண்டும் அவன் ஒரு மதம் கால் சென்டரில் நைட் ஷிபிட் செய்து காலையில் கல்லூரிக்கு வருவான் , கண்கள் சிவந்து கனவுகள் விழித்து இருக்கும். மூன்றாவது ஆண்டு முடிவில் 75 % எடுத்து தேர்ச்சிப் பெற்றான் அதுமட்டும் இல்லை லயோல காம்பஸ் இன்டர்வயுவில் TCS வேலை கிடைத்தது , அங்கும் கடுமையாக உழைத்தான் வேறு ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்தான், இப்பொழுது TL ஆகா இருக்கிறான்.
உதயா மாதிரியான ஆட்கள் மிகவும் குறைவு , கஷ்டம் புரிந்து நடப்பது சிறப்பு தான். உதயா உழைப்பின் உதயம் , இப்பொழுது அவன் JK வின் தீவிர கருத்துக்களின் ஈர்த்து பெரிய சிந்தனைவாதியாக உள்ளான்.
உதையவை சொன்னதும் ரூபனை சொல்லாமல் இருக்க முடியாது, ரூபன் கிறிஸ்டோபர் நாளைய IAS , இவன் எங்கள் கிளாசின் சைலண்ட் ஹீரோ. BSC படிக்கும் போதே இந்திரா காந்தி பல்கலை கழகத்தில் BA வும் கரஸில் படித்துக்கொண்டிருந்தான். அதீத திறமையும் பொறுப்பும் உடையவன் உதையாவிற்கும் ரூபனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.
ரூபன் மிகவும் திறமைசாலி , அவனை நாங்கள் எல்லோரும் அம்பி என்று சொல்லுவார்கள். என்னடா அவனே வாலண்டியரா எல்லாத்துக்கும் போறான் என்று நாங்கள் கிண்டலாக கேட்டதுண்டு , இப்போது தான் புரிந்தது அது லீடர்ஷிப் என்று.
கொட்டிவாக்கத்தில் அந்தோனி பள்ளியில் நாங்கள் அறிவியல் கண்காட்சி ஒருங்கிணைத்து அந்த மாணவர்களுக்காக நடத்தினோம், ரூபன் அதில் முக்கிய பங்கு வகித்தான், மற்றவர்களுக்காக அனுதினமும் உழைப்பவன். யாராவது நல்லது செய்தார்கள் அல்லது திறமையான செயலை செய்தார்களே ஆனால் முதலாவதாக பாராட்டுவது ரூபன்.
எங்கள் மூன்றாம் ஆண்டில் கல்லூரி சுற்றுலா, சென்னையில் இருந்து பெங்களூர் சென்றோம். பெங்களூர் டூர், எ டு ஈஸட் ரூபன் தான் ஏற்பாடு செய்தான், அவ்வளவு உழைத்தான் , எங்கள் சார்கள் கூட ஜாலியாக இருந்தார்கள் இவன் ஹோட்டல் முதலிய எல்லா வேலைகளையும் ஏற்பாட்டையும் செய்தான், இதிலே டூரும் முடிந்தது.
என்னடா என்ஜாய் பண்ணவே இல்ல நீ என்று கேட்டால் , சலனமே இல்லாமல் சிரிப்பான், ஒரு உழைக்கும் ஜீவன்.
இன்று பல கம்பனிகள் மாரி இன்று ஒரு பெரிய IT நிறுவனத்தில் PL ஆகா இருக்கிறான், நாளை IAS ஆகா மாறுவான் என்பது என் நம்பிக்கை.
இதே போல் நாம் அன்றாடம் உழைக்கும் நண்பர்களையும் உறவினர்களையும் கடக்கிறோம் ஆனால் இவர்களை காலத்தால் மறக்கிறோம்.
தொடரும் ..