Translate

Friday, August 8, 2014

ஹைக்கூ // பள்ளி


கையில் கடிகாரம் இல்லை
  மகிழ்ச்சியின் நேரம் தெரியும்,
 பள்ளி மணி ஓசை !

மழையே வா ,
 கடவுளை வேண்டும்
விவசாயி பள்ளி மாணவன் !

காலைப் போட்டாலும் போடாவிட்டாலும் ,
  காலில் போடுவார்
தமிழய்யா !!

வகுப்பு தேர்வு, மர மண்டைகளின்
  வினாக்களைச் சுமக்கும் ,
மர பெஞ்சுகள் !!

கணக்கு பரீட்சை,
  பச்சைக் குத்தும் மோகம்
 பார்முலாக்கள் !!

படிக்காத வாண்டுக்கு
  ஆசிரியரின் ஆசீர்வாதம்
நறுக்கென கொட்டு !

No comments:

Post a Comment