"மூன்று பறவைகள் அங்கொரு இங்கொரு மரமாக கூடு கட்டித் தனி தனியே வாழ்ந்து கொண்டு இருத்தன, அதில் இரண்டு பறவைகள் வஞ்சகம் கொண்டது மீதம் உள்ள ஒன்று அப்பாவி நல்ல மனசு கொண்டது. ஒரு நாள் மூன்று பறவையுமே இரை தேடி பயணப்பட்டது , வெகு தூரம் சென்றன , சூரியன் தண்ணீரில் மூழ்கும் காட்சி, தாகத்துக்கு இனிப்பான தண்ணீர் , இரைக்கு பஞ்சமில்லாமல் விதைகளும், ஆங்காங்கே ஆயிரகணக்கில் புழுக்களும் , பக்கத்தில் பெரிய ஆலமரம் அங்கு இவர்களைப் போல் யாரும் இல்லை. மூவருக்கும் ஒரே சந்தோசம் , மகிழ்ச்சியின் கரையில் மனதை ஈரப்படுதினர்.
வஞ்சக பறவையில் ஒன்று சொன்னது " இன்னைக்கு நம்ம கூட்டுக்கு போயிடலாம் , அங்க இருக்குற கொஞ்சம் வைக்கோல், குச்சி எல்லாம் எடுத்துகிட்டு வந்திடலாம் , அது நமக்கு ராசின்னு நினைகிறேன்" என்றதும் , சரி என்று மீதி இரண்டுமே சொன்னது. அனைவருமே இருட்டிய பின்னர் வந்து சேர்ந்தனர் , தங்களது கூட்டிற்கு சென்றனர். வஞ்சக பறவைகள் தனி தனியே திட்டம் தீட்டினர் , தனக்கு மட்டுமே அந்த இடத்திற்கு வழி தெரியும் என்று நினைத்தது , விடியலுக்கு முன்னரே கிளம்பிவிட வேண்டும் என யோசித்தனர். இரண்டுமே இரவு முழுக்க உறங்கவில்லை, விடியலுக்கு முன்னர் வஞ்சகத்தில் ஒன்று வெளியே வந்தது , மற்றொன்றும் அதே நேரத்தில் வெளியே வர, ஒரே வியப்பு . வஞ்சகத்தில் ஒன்று கேட்டது " இந்த நேரத்துல என்னா பா ??? " அதற்க்கு மற்றொன்று "சும்மானகாட்டியும் காத்து வர்ல அதான் !!!, சரி நீ என்னாத்துக்கு இந்த நேரத்துல அதுவும் குச்சி வைகொலோட" , " அதே காத்து இங்கையும் வர்ல , அப்பறம் எக்ஸ்சர்சைஸ் பண்லாம் ம்முனு " என்றது முதல் வஞ்சக பறவை.
இரண்டிற்குமே தங்களது திட்டம் புலப் பட்டது, "நாம தனியா எஸ்கேப் ஆயிறலாம், இந்த டம்மிய (அப்பாவி பறவை) விட்டுட்டு போயிறலாம் , நாமளே அவளோதையும் அனுபவிக்கலாம்" என ஒன்று சொல்ல, இரண்டு வஞ்சகமுமே கிளம்பியது. சூரிய கதிர் மரங்களின் மீது ஊடுருவ அப்பாவி பறவை எழுந்தது, இரண்டு பறவைகளையும் அழைத்துக் கொண்டே இருந்தது, அண்டிய மரத்திலிருந்து யாருமே வரவில்லை, கிளையில் அமர்ந்து பார்த்தால் இரண்டு பறவையின் கூடுகள் களைந்து இருந்தது. அப்பாவி பறவைக்கு திக்கு தெரியவில்லை, முன் இரவில் வந்த வழியும் தெரியவில்லை, அவர்களைத் தேடி சென்றது திசை தெரியாமல் புறப்பட்டது , சில மைல் கடந்தது, இதன் இறக்கைக்கு சக்தி இல்லை, தண்ணீர் தாகத்தின் உச்சியில், பக்கத்தில் உள்ள ஒரு மர கிளையில் அமர்ந்தது , வெகு தூரத்தில் ஒரு வேடன் தனது கூட்டாளிகளை வலையில் கட்டி சிறகுகள் சிதற குருதி சொட்ட நடந்தான். ஆப்பாவி பறவை கதறி கதறி அழுதது , அந்த வேடன் நடந்த பாதையில் , தனது கூட்டாளிகளின் குருதியில் தனது கண்ணீரைக் கலந்தது. மன முறிவுடன் தனது வெற்றிக்கு திரும்பியபோது , வழயில் ஒரு ஏறி , முழுக்க நவ தானியங்கள் கொட்டி கிடக்க , அப்பாவி பறவை தண்ணீரை குடித்து, தானியங்களை உண்ணும் போது " அவங்க ரெண்டு பேரும் இருந்த சந்தோசமா சாப்ட்டு இருப்பங்க ல" என்று தனது மனசு பேசியதை, செத்து போன வஞ்சக பறவையின் காதிற்கு கேட்டிருக்குமா ?? "
நம்மிடையே இந்த பெயரில்லா வஞ்சகங்கள் நிறைய பேர் உண்டு;
நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்,
அவங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு கூட நல்லது தான் நினைப்பார்கள்,
அது தீமையாகவே நினைக்கமாட்டார்கள்,
நல்ல மனசுக்கு நல்லதே தான் நடக்கும் !!