Translate

Thursday, May 15, 2014

தோல்வியின் வெற்றிகள்

    நாம் ஏதோ ஒரு செயலில் தோற்றுவிட்டோம் என்று அவ்வபோது நினைத்து கொண்டிருகிருக்கும் போது நம்மை புரிந்த இதயங்கள் நம் மனதின் உன்னதமான வெற்றியை இருளில் ஒளிரும் திரைஅரங்குப் போல பல வண்ணங்களில் கட்டுவர். தோல்வியின் தருணத்தில் நம் கண்களுக்கு யார் நம்மிடம் இருகிறார்கள் என்று சற்று கூட தெரியாது, இத்தருணம் தான் நாம் விழித்து சில உள்ளங்களின் மனதை வெற்றி பெற்றுள்ளோம் என்பதை உணர வேண்டும் !
    நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்பத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன், அங்குள்ளவர்களெல்லாம் விசித்திரமாகவே இருந்தார்கள் , தேநீர் அருந்தும்போது கூட ஆங்கிலம், போலி வேடம் என பல கேவலங்கள் அதில் ஒரு சில வைரங்களை நான் பார்த்தேன் அது ஒரே மாதிரி மின்னிக் கொண்டே இருக்கும். எனக்கு தெரிந்த நபர் பெயர் எழில் , அவர் ஒரு தலையாக காதலில் இருந்தார் , அந்த பெண்ணிடம் பேச கூட தைரியம் இல்லை அவருக்கு காலச் சூழல் அவரை தன் காதலை வெளிபடுத்த வைத்தது . அந்த பெண் பெயர் மதி , அவளும் எழிலை ஒரு தலையாக பார்த்து கொண்டிருந்தாள் , எழில் தன் காதலைச் சொல்லும்போது அவளும் செவி சைதாள். இருவரும் கண்ணியமாக காதலித்தனர், இதற்க்கு பெரிதும் உதவி செய்த நண்பர்கள் கோபி , வினோத் , சௌந்தர் , பிரேம் , தீனா மற்றும் பலர். எழிலை விட இவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.இந்த ஐந்து பேர் மட்டும் தான் உள்ளத்திலும் வாயிலும் ஒரே மாதிரி பேசுவார்கள், அந்த அலுவலகதில் மதி எழில் காதலைப் பார்த்து பொறமை பட்டனர் , சபித்தவர்கள் ஏராளம் , அது தானே நியானம் இந்த உலகிற்கு.
    காதல் கண்ணிந்து பழமாகும் போது மதி வீட்டில் இவர்கள் காதலுக்கு ஒப்புக் கொள்ளவில்லை வழக்கம் போல் பிரிக்க முயற்சித்தனர் ஆனால் மதி பிடி கொடுக்கவில்லை. ஒரு நாள் "மாப்பிளை பார்க்க வராங்க நீ கிளம்பி ஊருக்கு வா" என மதியின் தாய் அழைக்க , மதி ஒரு முடிவோடு இருந்தாள் இதற்க்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று எண்ணி ஊருக்கு கிளம்பினாள். எழில் தான் ரயில் ஏற்றினான் நம்பி " பாத்து பேசு டி, சண்ட போடாத பத்துக்கோ" என ரயில் நகரும்போது கூவிக் கொண்டே இருந்தான். " இந்த பையன லாம் எவன் கல்யாணம் பண்ணுவ , அட போங்க நீங்க" என்று கூறினாள் மதி .
   இறுதியில் மதி சென்னை திரும்பவே இல்லை , பெட்ட்றோர் பார்த்த பையனோடு திருமணம் நடந்தது. எழில் எழிலற்று போனான் என்னாலும் எதுவும் செய்ய முடியவில்லை, கோபியின் தோளில் சாய்ந்து தேம்பி தேம்பி அவன் அழுதது என் கண் முன்னே இன்றும் நிற்கிறது. கோபி சமாதனம் படுத்தினார் " நாங்க இருக்கோம் டா , உன் நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும்" அவர் கண் கலங்கி சொன்னது கோபி ஒரு மாசற்ற தென்றலாக தெரிந்தார். எழில் வேலையே விட்டு செல்வதற்கு இருந்தான் , அப்போது சௌந்தர் தேம்பி அழுதது நட்பின் புனிதத்தை நான் வெளி இருந்து உணர்ந்தேன், தீனா எழிலை எப்படியாவது சோகத்தில் இருந்து மீட்ட வேண்டும் என்ற முயற்சியும், இறுதியில் அவனும் கண் கலங்கினான் எழில் வேலையை விட்டு செல்லும் போது . பிரேம் , வினோத் எப்படி எப்படியோ முயற்சி செய்து அவனை வேலை வீட்டு போக வேண்டாம் என்று தடுத்தனர்.
   எழில் குடி , தம் என் தீய பழக்கங்களின் கையில் விலங்கை மாட்டிக்கொண்டான், அவனுக்கு காதல் தோல்வி மட்டும் தான் கண்ணுக்கு தெரிந்தது , அவன் இதனை நண்பர்களின் மனதை வெற்றி பெற்றுள்ளான் என்பதை உணர வில்லை. நாம் இறந்த பிறகு தான் நம் முன்னே அழுவார்கள், அப்போது என்ன தெரியப்போது . எழில் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ இந்த மாதிரி உண்மையான மனிதர்கள் சம்பாரித்து வைத்திருக்கிறான், இப்போது எழில் எங்கே என்று தெரியவில்லை ஆனால் நன்றாக தான் இருக்கிறான்.
     கோபி , சௌந்தர், தீனா , பிரேம் , வினோத் என இந்த மாதிரியான நண்பர்கள் நம் ஒவ்வொரு வாழ்க்கையிலையும் இருகிறார்கள். பிரிவில் தான் நாம் இவர்களை தெளிவாக மனதில் பார்ப்போம். என்னை பொறுத்த வரை இவர்கள் ஹீரோக்கள் , இன்னொரு இதயத்துக்காக இவர்கள் துடித்தார்கள்.
     இந்த மாதிரியான ஹீரோக்கள் தான் நம் தோல்வியின் வெற்றிகள்.  

No comments:

Post a Comment