Translate

Thursday, May 1, 2014

வெள்ளை காகிதம் பத்தரமாகலாம் !

    உப்புக் கற்று , நீளமான இரு நீலங்கள்; தங்கம் போல் மின்னும் சூரிய ஒளி; பதமான சூடு நம்மேல் ; மெல்லியே இசை போல் தென்றல் வந்து தீண்டும் ; கொண்டை வைத்த கார்கள் செல்ல ;  யாருமில்லாத அறையின் கடைசியில்  உடைந்த இரும்பு நாற்காலிகள் எங்கள்ளுக்காகக் காத்துக் கொண்டிருக்கும். 

       சென்னை மாநில கல்லூரியில் எம்.சி.ஏ படித்தக் காலம் , இல்லை இல்லை !!! சென்ற காலம். என் துறை நண்பர்கள் யார் என்று இரண்டு வருடங்கள் கழித்து கூட  தெரியாது  எனக்கு, கேவலமான பெருமை அதில். கம்ப்யூட்டர் , கோடிங் , ப்ரோக்ராம், அல்கோரிதம் இதை எல்லாம் கேள்வி கூட பட வில்லை , மூன்று ஆண்டுகள் கழித்தும் தெரியாது புரியாது எனக்கு. என் வகுப்பில் 25 பேர் , என்னக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் வினோத், விடுதலை. விடுதலை ஒரு தெளிந்த நீரோட்டம் , கள்ளம் கபடமில்லாத இதயம், உள்ளே வெளியே  அழகிய தோற்றமுடையவன் . வினோத் என்றல் இனிமை , அவன் கோவப்பட்டு நான் பார்த்ததில்லை, எனக்கும் விடுதலைக்கும் ப்ரோக்ராம் போட்டு ப்ரோக்ராம் சொல்லி குடுத்தான். வினோத் விடுதலை இருவருமே தன்னம்பிக்கையின் இரு கைகள்.
 
      விடுதலை, ஊர் நீடாமங்கலம்; 15 அரீயர்கள் கடைசி பெஞ்சு; ஆசிர்யர்களுக்குப் பிடிக்காத முகம் , எப்போதும் அவனை திட்டிக்க் கொண்டே இருப்பார்கள். ஒரு உண்மை யாருக்கும் சொல்லாதீர்கள்,விடுதலைக்கு தெரிந்தது கூட அவர்களுக்கு தெரியாது. பாவம் அவர்கள். செமினரீல் தூங்கிய மங்கை மடமின் கொறட்டை சத்தம் எனக்கு கேட்கிறது. இங்கிலிஷில் பேசி சப்ஜெக்ட்டைக் கோட்டை விடும் க்லடிசே மேடம். எதற்கு இவர்களை வேலைக்குச் சேர்த்தார்கள் என்று நினைக்கப்படும் வெண்ணிலா மற்றும் மலர்கொடி மேடம்;என்னக்கு டி.சி கொடுத்து அழகு பார்க்க எண்ணிய ரமா மேடம். இவர்கள் இன்று திருந்தி இருப்பார்கள்என்று நம்புகிறேன். ஒரு புத்தகத்தில் எல்லா பக்கங்களும் நல்ல இருக்குமா ? அப்படித்தான் எங்கள் அரசு கல்லூரியும். அதிக பட்சம் 2 மணி நேரம் கூட கிளாஸ் நடக்காது. மேடம்களுக்கு விருபியவர்கள் மட்டும் மார்க் அதிகம் எடுப்பார்கள், எனக்கும் விடுதலைக்கும் அதில் அக்கறையே இருக்காது. ஒரு நாள் நானும் அவனும் நயன்தார விஷாலை சத்யம் ஷூட்டிங்கில் பார்த்தோம் , "நயன்தார செம்ம ஒல்லி   , விஷால் கருப்பு டா மாப்ல " வழியெங்கும் நிற்கும் டிராபிக் போலீசிடம் மட்டும் தான் சொல்லவில்லை.

    15 அரியர்கள் இருந்தும் அவன் கலங்கவில்லை , ஆறாவது செமஸ்டரில் மொத்தமாக அரியர்கள் ஆப்பு வெய்தான்! பீ. எச். பீ கற்று கொண்டான், அவன் இளங்கலை இயற்பியலில் முடித்தவன் , நிறைய சிரமப் பட்டு எம்.சி. ஏ படித்தான். "மாப்ல , எப்படியாவது படிச்சி ஐ. டி ல வேலைக்கு போகணும் டா, நம்பள கேலி செஞ்சவங்களுக்கு நம்பளோட மௌனமான பதிலா இருக்கணும் டா " , என்னை நெகிழ வைத்தது. இன்று விடுதலை முக நூல் நிறுவனத்தின் வழி வரும் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மென்பொருள் உருவக்கியளராக பணி புரிகிறான்.
வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் கூட இவ்வளவு பெரிய இடத்தில் இல்லை, ஆனால் நண்பன்  நினைத்து பார்க்காத தூரத்தில் இருக்கிறான் இன்னும் அதே பழைய விடுதலையாக!

      வினோத் , பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை கணினி பயின்று இங்கு வந்தான் முதுகலைக்காக, ஊர் திருவண்ணாமலை ! இளங்கலை படிப்பு முதல் முதுகலை வரை அவனே வேலை செய்து படித்தான். வீட்டில் காசு எதிர் பார்க்கவே இல்லை ; நன்றாக படிப்பான் எல்லோருக்கும் சொல்லி கொடுப்பான். நானும் அவனும் ஒரு நாள் முழுக்க அரசியல் பேசுவோம் , கல்லூரி நூலகத்தில் எல்லா நாள் இதழையும் படித்து முடித்துவிட்டு , ஒரு டீ அருந்தி ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசிக்கொண்டே இருப்போம் . PWD காண்டீனில் 15 ருபாய் மினி சாப்பாடு சாப்பிட்டு "மாமா பாமக ஏன் இப்படி பண்றானுங்க " என ஆரம்பித்து ஒபாமா வரை ஓடும் !
      வினோத் , வகுப்பில் எல்லோருக்கும் பிடித்தவன் , ஒரு செம்ல அக்கௌண்ட்ஸ் பரீட்சை , கோவில் அன்னதானம் செய்வதுபோல் எல்லோரையும் உட்ட்காரவெய்து சொல்லி கொடுத்தான் , அனைவரும் 80 மார்க்கும் மேலாக எடுத்தார்கள். நானும் அவனும் பட்ட படிப்பு சான்றிதழ் வாங்குவதை கம்யூனிஸ்ட் போல புறக்கணித்தோம். மேடம்கள் எல்லாம் எனக்கு  சாபம் கொடுத்தார்கள், அதுவும் வேடிக்கையாகவே இருந்தது . இன்று வினோத் அவன் சிறு வயதில் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து ஒரு ஆண் குட்டி இருக்கு இப்போ , IBM பெங்களூர்ல மென்பொருள் உருவக்கியளராக பணி புரிகிறான்.

           ன்னொரு நண்பன் இம்ரான் இவனும் MCA தான், இம்ரான் என்ற பெயர் ஒலித்தால் எனக்குள் ஒரு அமைதி வரும் அது ஏன் என்று உங்களுக்கு புலப்படும் என நம்புகிறேன். தர்மபுரி மாவட்டத்தை சார்ந்தவன் இம்ரான் பாஷா. எவ்வளவு பெரிய காரியத்தையும் முடித்து அவன் தான் முடிதான என நமக்கு சந்தேகம் வரும் , எல்லாவற்றையும் சிறப்பாக முடித்து அலட்டிக் கொள்ளாத ஜீவன். நன்றாக படிப்பான் ஆனால் இதுவரை அவனது மதிப்பெண்களை யாரிடமும் சொன்னதில்லை அது குறைவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டாம், எல்லா படங்களிலும் 75 % க்கும் மேல் இருக்கும் அவனின் மதிப்பெண்கள். சரி ! ஏன் அவன் வெளியே சொல்லி பறைசாட்டாமல் இருக்கிறான் என்பதற்கு , இம்ரானின் நண்பர்கள் நாங்கள் பாஸ் மார்க் கூட எடுக்க  மாட்டோம் எங்கே எங்கள் மனது வலிக்குமோ என்ற எண்ணத்தில் சொன்னதில்லை அவன். நண்பர்கள் வட்டாரத்தில் " மச்சா நீ நல்ல வந்துடுவடா " என்ற  சொற்கள் அவனின் மேன்மையின் புனித மேகம் அது மழையாக வரும் போது அளவற்ற மகிழ்ச்சி. இம்ரான் IT கனவு இல்லை , வியாபாரம் தான்.எல்லோரும் " ஏண்டா மாப்ள ரிஸ்க் எடுக்கற , எதாவது IT கம்பனில வேலைக்கு போ நல்ல சம்பளம் டா மாப்ள" என்று சொன்னபோதிலும் வியாபாரத்தை தன் குறிகோளாகக் கொண்டு முன் சென்றான்.
      கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மகிந்திரா பைக்களுக்கு டீலர்ஷிப் எடுத்தான் தர்மபுரியில், எப்படி ஒரு கணினி மாணவன் வேறு திசையில் செல்கிறான், அப்படி செல்ல வேண்டுமாயின் அதற்கு எவ்வளவு தீர்க்கமான சிந்தியல் தேவை , தன்னம்பிக்கை தேவை அது நிறையவே இருந்தது இம்ரானிடம். பின்னர் மகிந்திரா ஷோ ரூம் வைத்தான் மெதுவாக வியாபாரம் இருந்தது ஆனாலும் துவளவில்லை போராடினான் விடாமுயற்சியின் பிரதிபலிப்பு இன்று அவன் ஷோ ரூம் பெரியளவில் தர்மபுரியில் புகழ் பெற்று வளர்ந்திருக்கிறது அதுமட்டும் அல்லாது சர்வீஸ் சென்டரும் அங்கே நிறுவினான், இவ்வளவு செய்தும் ஒரு வெள்ளை காகிதமாக எதுவும் செய்யாது  போலவே இருப்பான். யாரும் இம்ரான் இந்தளவிற்கு வருவான் என்று நினைக்கவில்லை அவர்கள் எல்லோர்க்கும் பதிலடி தன் வளர்ச்சியில் சொன்னான்.
    அமைதியாகவும் அளப்பரையிள்ளமலும் இருந்தால் நாமும் இம்ரானாகலாம்.
    
      மூவரும் கிராமங்களில் இருந்து வந்து சென்னையில் இறங்கி  , தனம்பிக்கை மட்டுமே மூலதனமாக வைத்து உழைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தின் இசை அறிந்த  யுவன்கள் !!
 வெள்ளை காகிதம் பத்தரமாகலாம் அவசரப்பட்டு  கசக்காதீர் ...
  

No comments:

Post a Comment