Translate

Saturday, May 17, 2014

முடிவு

   அவன் பெயர் இன்பம் , பழைய வாடகை வீட்டில் இருந்து புது வடகை வீட்டிற்கு குடி புகுந்தான், அவனது பழையவீடு மிகவும் மோசமானது எப்போது விழும் என்று தெரியாது, தனியாக வாழ்ந்தான் மகிழ்ச்சியோடு சுதந்திரமாக இருந்தான் வாடகை கம்மிதான், புது வீடு மிகவும் அழகானது, வலுவானது , அக்கம் பக்கத்தில் நிறைய மக்கள், வாடகை கொஞ்சம் அதிகம். இங்குள்ள பல மக்கள் வெகு காலமாக வசிக்கிறார்கள் , இவனை வாய் வழி நன்றாக உபசரித்து உள்ளத்தில் திட்டினார்கள் . "இவன் மட்டும் எப்படி கம்மி வாடகைக்கு வருவான் நாம் இவனை விட அதிகம் காசு கொடுக்கிறோம் அதே வீட்டிற்கு" ..
ஒரு நாள் இந்த மக்களின் குணம் அறிந்தான், துன்புற்றான், பழைய வீடே தேவலை என அவன் மனது சத்தமாக கூறியது ஆனால் காதிற்கு கேட்கவில்லை ஏனெனில் அவன் ஊனமுற்றவன் , திரும்பவும் வீடு பார்க்க முடியாது. காலத்தால் ரணம் ஆறினாலும் தழும்பைச் சொரியும் உலகம் இது.
பழய வீட்டில் தனியாக இருந்தாலும் நிறைய மக்கள் இருபதுபோல் ஒரு உணர்வு , புது வீட்டில் நிறைய மக்கள் இருந்தாலும் தன்னம் தனியே இருப்பது போல் ஒரு நிகழ்வு ! இந்த உலகம் அவனை பிளாட்போர்மிர்க்கோ , மரத்தடி நிழலையோ தேடவைக்கும் என்பதை நன்றாக உணர்ந்தான் அதற்காக அவன் பயப்பட வில்லை , ஒன்னுமே இல்லாத காந்தி சிரிக்கும் தாளுக்கு இப்படி அழுகிறார்களே என்று யோசித்தான் !!!
தப்பான முடிவு நம்மை எழச் செய்யும் என்று எண்ணினான்
இந்த இன்பம். துன்பமாக இருந்தாலும் இந்த நிலையில்லா வாழ்வில்
துன்பம் எவ்வளவு நாளைக்கு ? ஏதோ ஒரு நாளை இன்பமான விடியலாக இருக்கும்.
அவன் தப்பான முடிவையும் முழுமையாக ஏற்று அது காலத்தின் கூற்று தானே என எண்ணி !!
விசையோடு செல்கிறான் , எப்போதாவது ஒரு நல்ல மர நிழலோ , சுத்தமான பிளாட்போர்மோ கிடைக்கும் என்ற நல்ல முடிவுடன் .........

தப்பான முடிவு நம்மை எழச் செய்யும்; கலங்காதே !!!

No comments:

Post a Comment