Translate

Tuesday, May 13, 2014

மொக்க ஆடு

      "ஞாயிறு காலை , ஒரு தெருவுல இரண்டு ஆடுகள் எதிர் எதிரே நடந்து அதில் வந்தது , ஒன்று மோசமான ரவுடி ஆடு  , இன்னொன்று மொக்க ஆடு பயந்த சுபாவம். ஒன்றேக்கொன்று நெருங்கி கொண்டு வந்தது , மொக்க ஆடு ரவுடி ஆட்டைப் பார்த்து பயந்து ஒதுங்கியது. ரவுடி ஆட்டுக்கு தன் ஹீரோயிசத்தை காண்பித்தே ஆகா வேண்டும் என்ற முடிவு, மொக்க ஆட்டை முறைத்து  தன் தலையை ஆட்டி , புழுதி பறக்க காலைத் தரையோடு சீறியது. மொக்க ஆடோ " நம்ப இன்னைக்கி கைமா தான்" என்று மைன்ட் வாய்சு ஓட இதுவும் ஓட ஆரம்பித்தது.
    ரவடி ஆடு , மொக்க ஆட்டை துரத்து துரதென விரட்டி கொண்டே இருந்தது , நாக்கு தள்ள வாயில் நுரை தப்ப மொக்க ஆடு ரத்த காவுக்கு பயந்து உசேன் போல்ட் ஐ விட வேகம் பிடித்தது, ரவுடி ஆடும் சலைத்த வாரு இல்லை. சாமர்த்தியமாக மொக்க ஆடு ஒரு வீட்டின் பின்புறம் மறைந்து கொண்டது, ரவுடி ஆடு பயங்கரமா கான்டாச்சு அங்கும் இங்கும் தேடிய பின்னர் தன் வழி பார்த்து சென்றது. மொக்க ஆடு     தப்பித்தது , அப்படி ஒரு நிம்மதி , அப்படி ஒரு சந்தோசம்  அதன் கண்களில்  "கடவுளே நன்றி நன்றி " என தன் மொழியில் "மே .. மே .. மே .."  கூறியது.
   சரி தப்பித்தோம் வெளியே செல்லலாம் என்று பார்த்து, வந்த வழி வந்தால் கதவு மூடிக்கிடந்தது . அதனால் முன் பக்கமாக நகர்ந்தால் பெரிய கடை, அன்வர் மட்டன் ஸ்டால் என்கிற  போர்டு இருக்க  . தன்னைப் போல ஒரு உடல் ஆணியில் தொங்கிக்கொண்டிருந்தது. மொக்க ஆடு பின் ஜகா வாங்க அன்வர் பார்த்தான் " யா அல்லா உன் கருணையே கருணை " என்றான்! .. .."
   மொக்க ஆடு , அந்த ரவுடி ஆட்டை அதிர்திருந்தால் ஒரு சிறு அடியோட தப்பித்து அடுத்த முறை பக்கா ஆடாக மாறி இருந்திருக்கும்...

    மோசமான ரவுடி ஆடு நம் சில பிரச்சனைகளும் , சூழ்சிகளும்; இதை கண்டு பயந்து ஓடி தப்பித்தோம் என்று எண்ணி கடவுளுக்கு உடனே நன்றி சொல்வோம் இறுதியில் பல  பிரச்சனைகளின் கூடாரத்தில் சிக்கி கொள்வோம். 
 ஓடாமல் எந்த பிரச்சனையானாலும் எதிர் நிற்போம், கால் உடைந்தாலும்  தவழுவோம் இறுதியில் வெற்றியும் காண்போம் நிச்சியமாக , கண்டிப்பாக !!! 
  நானும் அந்த மொக்க ஆடு தான்  :-( !

No comments:

Post a Comment