நல்ல சினிமா, வான் கோப் / ட்ரொட்ஸ்கி மருது ஓவியங்கள், பீத்தோவன் 9th
சிம்பொனி, பிடித்த பாடல்கள், சில மூட்டையில் புத்தகங்கள், நெருங்கிய
நண்பனிடம் 2 நிமிட உரையாடல், நண்பனின் பழைய புகைப்படம், அம்மாவின் டீ,
மிதிவண்டியில் நீண்ட பயணம், பேருந்தில் ஜன்னல் சீட், பழைய பாதுகை, மை பேணா,
கிறுக்கிய பழைய பேப்பர், பிராபஜனின் குமாரசாமியின் பகல் பொழுது சிறுகதை,
யாரும் பார்க்காத போது சத்தம் போட்டு அழுவது, மேகம் நகர தெரியும் நிலா,
முகமறியாதவன் சிரிப்பு, வேகமாக வந்து ஸ்டாண்ட் எடுங்க ன்னு சொல்பவரின்
குரல், முச்சந்தி விநாயகரிடம் உச்சு கொட்டும் பள்ளி குழந்தை, மரங்களினூடே
வெயிலின் கீற்று, ரமலான் மாதம் மசூதியின் ஒலி பெருக்கியில் ஒளிரும்
வேண்டுதல்கள், கற்பூர இலையின் வாசம்,
என (,) கம்மாக்கள் நிறைந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கலக்கம்/தோல்வி/வருத்தம்/ஏக்கம் என பல வருமாயின்...
என (,) கம்மாக்கள் நிறைந்த ஒவ்வொருவரின் வாழ்க்கையில் கலக்கம்/தோல்வி/வருத்தம்/ஏக்கம் என பல வருமாயின்...
மேலே* இட்டுள்ளவையில் இரண்டோ மூன்றோ கிடைத்தால் போதும் ...
வாழ்க்கை ஒரு மாயப்பெட்டியின் ஒளிந்திருக்கும் ஆச்சர்யம்!!
many tiny things can lift you in many ways !!
*உங்களுக்கு தகுந்தாற் போல
வாழ்க்கை ஒரு மாயப்பெட்டியின் ஒளிந்திருக்கும் ஆச்சர்யம்!!
many tiny things can lift you in many ways !!
*உங்களுக்கு தகுந்தாற் போல