Translate

Wednesday, December 23, 2015

வெள்ளத் தனைய மலர்நீட்டம் // திரைக்கதை


 வெள்ளத் தனைய மலர்நீட்டம் // திரைக்கதை 

இந்த படம் ஒரு தனி மனிதனின் கொள்கை சார்ந்தது மேலும் தற்போதிய சூழலில் அவன் சிலந்தி வலையில் சிக்கிக் கொள்ளும் சிறு உயிரினமாகிறான், இறுதியில் அவன் சராசரியாக தோற்றாலும் ஆனால் அசாதாரண கொள்கையில் கோலோச்சினான்..

Ad films // Screenplays

மாடு.. நாடு..கேடு ..

ஒரு நிமிட குறும்படம், மாட்டு இறைச்சி தடையும் சகிப்புத்தன்மை இல்லாமை பற்றியும்..
மாடு.. நாடு..கேடு ..


பாவி !

ஆற்றில் நீச்சல் பயின்று ,
நதியில் எதிர் நீச்சல் கற்று,
கடலில் உள்நீச்சல் தேர்ந்து,
இறுதியில்
பெண்ணின் கண்ணீரில்
மூழ்குகிறான்,
ஆண் பாவி ...

போதுமன்றோ !

முயற்சிகளனைத்தும் அயர்ச்சியாயின்,
துயரத்தின் உயரம் அதிகமாயின்,
சுற்றமும் உன்னை ஒதுக்குமாயின்,
உறக்கமே கனவாயின்,
தோல்வியின் கீறல்கள் கிழிக்குமாயின்;
குருதிச் சூடு குறையுமோ ?
குறிக்கோள் ஒரு கலைஞனின் இயற்கைக்கோளாயின்;
ரணம் ஆறாவிட்டால்
நம்பிக்கையெனும் மருந்து போதுமன்றோ !!

Wednesday, November 25, 2015

தூ ஜானேவாளி ...

தூ ஜானேவாளி ...

முடிவில்லா தொடர்கதைகள்
மின் தொடரில்,
தமிழுக்காக காத்திருப்பதில்லை
ரயில் நிலையத்தின் ஹிந்தியும் புரியும்
அது மட்டுமே புரியும் பலருக்கு,
மஞ்சள் ஒளியின் பிரகாசம்,
நடைமேடையில்
ஓட வைக்கும் !
மன உஷ்ணங்கள்
தணிந்தோடும் சன்னலினூடே
அதற்கு தானோ அவ்வளவு சன்னல்கள் !
காற்று உள்ளே வந்து வெளியே செல்வது போல்
காலம் பின் நோக்கி
முன் நகரவைக்கும் சாளரமன்றோ!
ஒவ்வொரு பெட்டிகளினிடையே எழும் இசையில்,
நொறுக்குத் தீனி விற்பவரின் ராகம்
நாக்குகளுக்கு மோகம் !
நகக் கண்கள் கொண்ட குயில்கள்
பாடி நம்மிடம் கேட்பது யாசகமல்ல
பாராட்டின் மறுவடிவம் நாணயமாய் !
முடிவில்லா தொடர்கதைகள்
மின் தொடரில்,
திருநங்கையின் குரல்களைக்
கேட்காத ஹெட்செட் காதுகளும்,
சமூகம் தலைக்குனிந்தே இருக்கிறது
அலைப்பேசியில்,
கூன் விழிந்தாலும் ஆச்சர்யமில்லை !
மேப் புக், முப்பது நாட்களில் ஹிந்தி , ட்ரைன் டைம்
விற்கும் மனிதர் காணாமல் போனார்
அலைபேசியால் !
நடுவயதினர் அரசியல் பேசி,
நட்பை பூசி மணக்கும் நேரம் இறங்குவரையே !
வேடிக்கைப் பார்ப்போம் படியில் தொங்குபவர்களை
வேர்கடலை தோல்கள் மட்டுமே உரிப்போம் !!
குழந்தையின் அழுகை,
முதியவரின் சிரிப்பு,
பான்பராக் வாசம்,
ஆட்கள் தேவை ஒட்டிய கிழிந்த தாள்கள்,
கல்லூரியின் பெருமை சொல்லும் கிறுக்கல்கள்,
சாராய நெடி,
கருவாடும் வாடும்
வெண்டார் பெட்டியின் சண்டையில்,
மழையில் மூடாத கதவுகள்,
சாரல் தெளித்த காலி இருக்கை,
யாருமில்லாத சன்னல் ஓரம்
பிடித்த புத்தகம்,
ஓய்வில்லாத முகங்கள்
வாழ்வின் தெம்பைச் சொல்லும்
முடிவில்லா தொடர்கதைகள்
மிளிரும் மின் தொடரில் !!!!!

Sunday, November 15, 2015

சொல்லத் தோணுது...



                            அப்படத்தின் காதலை இணைக்கும் பாலம் Somerset Maugham novel, இயக்குனரோ அல்லது உதவி இயக்குனரின் இலக்கிய ஆளுமை என்பதில் அதிலே புலப்படும்.இந்த படம் ஓர் உண்மை கதை என்பதை ஒவ்வொரு காட்சி படிமம் உறுதி செய்யும். காதல் தோல்வியின் உணர்வின் பிரதிபலிப்பு உடைந்த கண்ணாடி மனதின் துகள்கள் சொல்லும், அவ்வுணர்விற்கு விதவை கோலத்தின் வண்ணம் பூசாமல், பூ வைத்து அழகு பார்த்திருப்பார் இயக்குனர், தமிழ் திரையுலகில் மிக முக்கியமானவர். இந்த படம் தோல்வியை தழுவியது, நேர்த்தியாக திரைக்கதை அமைக்கவில்லை, ஒரே பாணி தான் என்று பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், அப்படம் ஓர் உணர்வின் குவியலே! இன்று தொழில்நுட்பம் நம் உறுவுகளை நொடிப் பொழுதில் அருகே அழைத்து சென்றாலும் அவர்களின் மனதை புரிந்துணரும் நேரம் தூரமே!! ஒரு இன்லண்ட் கடிதம் அல்லது போஸ்ட் கார்டு உறவுகளை அர்த்தப்படுத்தும், அப்படியொரு முக்கியமான கருவியாக கடிதங்கள் இப்படத்தில் முக்கிய பங்கு வகிக்கும், இந்தக் காலத்தில் இப்படியொரு கதையை சிந்திக்க துளி கூட வாய்ப்பில்லை அதனால் தான் பீரியட் படங்கள் வருகிறோதோ. வெற்றிமாறன், மிஷ்கின் இப்படத்தின் உதவி இயக்குனர்கள், படத்திலும் சில காட்சிகளில் தோன்றுவார்கள். எவ்வளவு முறை பார்த்தாலும் AR இன் இசை புதிதுப் போல தோன்றும், வாலியின் வரிகள் வலியின் தீரா தைலம். இப்படத்தை கட்டமைத்தவர் கதிர் சார். கவிதை எழுத இயற்கையும் சூழலும் தேவையில்லை மனதிற்கு பிடித்த படைப்புகளைப் பார்த்தாலும் தான்..
"காதல் வைரஸ்" பரவாத மனசில்லை ..

Sunday, November 8, 2015

Beef na Beep uh Dhanae // screenplay

 Beef na Beep uh dhane


இரண்டு நிமிட குறும்பட திரைக்கதை மாட்டு இறைச்சி தடைக்ககா எழுதப்பட்டது.

Saturday, November 7, 2015

நீர்த்துளி .. உயிர்த்துளி.. // 2 mins short film


 நீர்த்துளி .. உயிர்த்துளி..




          இந்த 2 நிமிட குறும்படம் தண்ணீர் சேமிப்பை பற்றி பரப்புரை செய்யும், இந்த குறும்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் கதை கூறும்,
கதை :
ஒரு ஈரத் துணி காய்ந்து கொண்டிருக்கிறது அருகேயுள்ள காலியான தண்ணீர் பாட்டில் காற்றில் ஆடிக்கொண்டிருக்க, காற்றின் விசை தாங்காமல் கீழே விழுந்து மூடி பிரிந்து அந்த ஈரத் துணியின் கீழ் தங்கியது, பின்னர் ஈரமுள்ள துணியின் சொட்டுச் சொட்டாக விழும் நீர்த்துளிகள் அந்த மூடியில் சேர்கிறது, துணியும் உலர்ந்துவிட ஒரு கோழிக் குஞ்சு மூடியில் உள்ள தண்ணீரைக் குடிக்கிறது.
       இதில் ஈரத் துணி என்பது மழை காலம், கேமரா மேலிருந்து கீழ் வரும், மழை வானிலிருந்து வருவதாக பாவித்து அமைக்கப்பட்டது.இயற்க்கை நீர் நிலைகள் தான் அந்த தண்ணீர் பாட்டில் மூடி, இயற்கையான சேமிப்பு நடந்துக் கொண்டே இருக்கிறது. நாம் மழை நீர் சேமிப்பை கூட சீராக செய்ய மறுக்கிறோம் சேமிக்கவே மறக்கிறோம் அதை அந்த ஈரத் துணியிலிருந்து சிதறும் நீர்த்துளிகள் சொல்லும். உலர்ந்த துணி வெயில் காலமாக பாவித்து கேமரா கீழிருந்து மேல் செல்லும்(Vaporization), இறுதியில் கோழிக் குஞ்சு உயிரினங்களை சித்தரிக்கும்.





மாடா // Screenplay

Comedy Genre - MADAA

மாடா-Screenplay

Sunday, November 1, 2015

ஈயும் தேனீயும் ..

ஈயும் தேனீயும்..

                அது ஒரு அடர்ந்த காடு, அதில் புன்னை மரங்கள் அதிகம். பலவகையான மா மரங்கள் நிறைந்திருந்தன, வரிசையாக நெட்டிலிங்க மரங்கள் உயர்ந்திருந்தன எங்கும் கண்டிராத செயலை மரங்களே அந்தக் காட்டின் அடையாளம். வில்வ மரங்கள், ஆங்காங்கே செம்மரங்கள்  மிகவும் பெரிதாக இருந்தது, முற்புதர்களும் சப்பாத்தி கள்ளிகளும் படர்ந்து இருந்தன.சில மூங்கில்கள் முளைத்து பெரிய குத்தாக மாறி இருந்தது. பல வண்ண பூக்கள் மிளிரும் காடு அது. அல்லி மலர்கள் சிறிய குளத்தில் தண்ணீருக்கான அடையாளமே தெரியாமல் நிறைந்திருக்கும். அனிச்சம் பூ அதன் வண்ணமெங்கும் ஒளிரும், ஊமத்தம் பூ , எருக்கம் பூ, செங்கருகாலி, செம்மல், சிலந்தி , வாகை என பல வகை பூக்களைக்  கொண்டு எழில்மிகு வண்ணச் சுடராய் திகழ்ந்தது, அதன் அடர்த்தியால் வெயில் திருட்டுத்தனமாக நுழைவது போலவே இருக்கும், உச்சி வேளையில் வெளிச்சமிகு பைப்புகளை நட்டு வைத்தது போல சூரிய ஒளி விழும் பார்க்கையில் மனம் எழும்.
      மிகவும் அமைதி தொனித்த சூழலில், அணில்களின் கீச் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும், தேனீக்களின் உய் ஓசையும், குயில்களின் கூவல்களும், சிறு பூச்சிகளின் சப்தங்களும், காற்றில் அசையும் இலைகளின் சலசலப்பும், மூங்கில்கள் உராய்ந்து எழுப்பும் கர்ர் ஒலி என எல்லாமுமே நவீன சிம்போனியாக இருந்தது. இப்படியாக இருக்க ஒரு தேனீயும், ஈயும் தனித்தனியாக பறந்து காட்டிற்கு  வெளியே வந்தது, இரண்டும் ஒரு செடியின் கிளையில் அமர்ந்து அதே கணத்தில் பார்த்துக்கொண்டது. இது சரியில்லாத காடு இங்கு தனக்கு பிடிக்கவில்லை வேறு வழியில்லாமல் இங்கு இருக்கிறேன் என புலம்பித்தள்ளியது ஈ, தேனீ  இதை எல்லாம் கேட்டுக்கொண்டு கோபமான முகத்துடன் "இது சரியில்லாத காடா ??.." என்றுரைக்கும் போதே ஈ பீதியில் இருக்க, சிறிய நிசப்பதத்திற்கு பிறகு "மிக மிக கேவலமான காடு என்று சொல்.." என்று கூறி  தேனீ  சிரித்தது, அதனூடே ஈயும் இளித்து இருவரும் நட்பு பாராட்டினர்.
         ஈயின் ராஜாவும், தேனீயின் ராஜாவும் மிக கெடு பிடியானவை, தினமும் அதிக இனிப்பும், தேனும் எடுத்து வர வேண்டுமென தொந்தரவும் நச்சரிப்பும் செய்து கொண்டே இருக்கும், ராஜாக்கள் கீழ் பணி புரிவோர் ராஜாவை விட சர்வாதிகார அடக்கு முறைகள்  வீரியமாக இருக்கும். வருகிற இரண்டு நாட்கள் வெப்ப சலனம்  அதிகமாக இருக்குமென ஊகத்தில் அனைத்து உயிரனும் வெளியே வரவில்லை இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியே ஒரு செடியின் கிளையின் மேல் அமர்ந்திருந்தன ஈயும் தேனீயும். இப்படி பட்ட இடத்திலிருந்து இரண்டு நாட்கள்  எங்காவது சுற்ற வேண்டும் என பெரிய திட்டம் தீட்டின, அவ்வாறே அங்கிருந்து கிளம்பவும் செய்தன. இருவரும் இரண்டு நாட்களில் திரும்பியாகவே வேண்டும், அங்கு இருக்கும் ஈயின் ராஜாவும், தேனீயின் ராஜாவும் தினமும் எண்ணிக்கை விவரம் எடுப்பது வழக்கம்,குறைந்தால் அந்த சம்மந்தப்பட்ட குடும்பத்தை துன்புறுத்துவது தான் சட்டம், இரண்டு நாட்கள் மட்டும் அனைவரும் உள்ளே இருப்பதால் எண்ணிக்கை தொல்லையிருக்காது.
                  எங்கு சென்றாலும் இருவருக்கும் தங்களது கானகத்திற்கு திரும்பும் வழி தெரியும், பயணம் தொடங்கியது காற்றின் திசை எங்கோ அதே திசையாக பரவசித்து சிறு இறக்கையைக் கொண்டு பறக்க ஆரம்பித்தன , குடியரசு தினத்திலும் சுதந்திர தினத்திலும் சாகசம் செய்யும் விமானம் போல இரண்டும் பறந்தன . ஒரு கட்டத்தில் அவர்கள் சேர்ந்த இடம் அலையாத்திக் காடு, எழில் மிகு தாவரங்களும் , பூக்களும் பல வகை பறவைகள்  சங்கமிக்கும் சதுப்பு நில பகுதி, நிலமும் கடலும் சேரும் பகுதிகள் அலையாத்திக் காடுகள் என்பர். ஈக்கு பெரும் மகிழ்ச்சி அப்படிப்பட்ட இடத்தை அதற்கு முன்பு பார்த்ததே இல்லை, சுற்றிக்கொண்டும் சுழற்றிக்கொண்டும் இருந்தது, தேனீயும் வேறொரு உணர்ச்சிப் பெருக்குடன் திகழ்ந்தது. பல வண்ணப் பூக்களின் அமர்ந்து தேனைப் பருகி குதூகலத்துடன் அந்த நாளைக் கடத்தினர். அடுத்த நாள் முழுக்க பயணமும் வழியில் கடக்கும் வண்டுகளிடமும், வண்ணத்துப் பூச்சியிடமும் நல்ல இயற்கையான இடத்தைக் கேட்டு இருவரும் தொடர்ந்தனர். அப்படியே தங்களின் மகிழ்ச்சிக்கான நேரம் சிறிதென உணர்ந்தனர்.இருக்கும் நேரம் குறைவே,பின் தங்களது காட்டிற்கு திரும்பியாக வேண்டும் என கூறி கவலைப்பட்டது ஈ. அதற்கு தேனீ " அடேய் .. ஈ நண்பா ஒரு டம்பளர் ல தண்ணி கம்மியா இருக்கன்னு பாக்கரதவிட இவளோ ஜாஸ்தியா இருக்கே ன்னு நெனச்சிக்கலாம்" என்ற லெக்ச்சருடன் பறந்தது.
         இருவரும் இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியின் உச்சமாக கடக்க எண்ணி பறக்கும் போது ஒரு வண்டு எதிரே உள்ள மரத்தில் மோதி அடிபட்டு கீழே விழுந்தது, அதை கண்ட ஈயும் தேனீயும் அதை காப்பாற்ற நினைத்து, உடனடியாக முதலுதவி செய்து அந்த வண்டைத் தூக்கி மர பொந்தில் அமரவைத்தது, அது கண் விழிக்கும் வரை காத்துக் கொண்டிருந்தன, வண்டு விழித்ததும் கண் கலங்க ஆரம்பித்தது " என் சொந்தங்கள் யாரும் அருகே கூட வரவில்லை, பார்த்தும் அப்படியே சென்றனர், நீங்கள் வரவில்லை என்றால் என் உயிர் பிரிந்திருக்கும்" என்றது."ஒன்னியும் கவல வேணாம், நீங்க நல்லா இருக்கீங்க.. வரவா " என சிரித்து தேனீ  வசூல் ராஜா கமலைப் போல் சொன்னது, ஈயும் சிரித்து அங்கிருந்து இருவரும் விடைப் பெற்றனர். அவர்கள் கிளம்பும் போது வண்டு " யு ஆர் குட் சமராட்டியன் " என கத்தி நன்றியைத் தெரிவித்தது.
          இருட்டியது,பசி இருவரையும் பறக்க வைக்காமல் ஓர் இடத்தில் நிற்க வைத்தது.தேனீ சென்று தன் சக்தியால் தேனைக் கொண்டு வந்து ஈக்கு கொடுத்தது, ஈயும் தேனீயும் பசி தீர்த்து, பறக்க முற்பட்ட போது கண் தெரியாத தும்பி ஒன்று செடியின் கீழ் அமர்ந்திருந்தது,அதைப் பார்த்த ஈ அருகே சென்று "ஏன் இங்கிருக்கற ??, எங்காவது கொண்டு போய் விடணுமா?? " என்றபின் தனக்கு கண் பார்வை இல்லை, பசிக்கிறது என்று சொன்னது தும்பி. தேனீ உடனே அங்குமிங்கும் சென்று கொஞ்சம் மலரின் தேனை சேகரித்து அந்த தும்பிக்கு கொடுத்தது. தும்பி மளமளவென அருந்தி தனது பசியைத்  தீர்த்து மறு பேச்சே இல்லாமல் இருக்க, சற்று நேரத்தில் இருவரும் நன்றி எதிர்பாராமல் தங்களது கானகத்திற்கு பறந்தனர்.
              நீண்ட பயணத்தின் முடிவில் அவர்களது காட்டிற்கு அருகே வந்தடைந்தனர், அப்போது தங்களின் பயணத்தின் போது  நடந்த அனுபவங்களையெல்லாம் பகிர்ந்து வாழ்கையின் சித்தாந்தத்தை மெச்சினர். "அந்த வண்டுக்காகத் தான் நாம பயணம் பண்ணோமோ  , அத காப்பாத்த தானோ ன்னு நெனைக்குறேன், ரொம்ப மன நிம்மதியா இருக்கு" என தேனீ கூறியது.
" தேனீ நண்பா.., குருட்டுத் தும்பிக்காகத் தான் கடவுள் அந்த வண்ட அடிப்பட வெச்சி, நம்ம நேரத்த கடத்த வெச்சாரு. இல்லனா அந்த இருட்டுல போய் இருக்க முடியாதுல.." என ஈ சொன்னது.
முழு வாழ்வின் தொடுவானத்தில் ஒவ்வொரு செயலும் அர்த்தமுடையது தானோ! இருவரும் நிறைவான பயணத்தை முடித்து  நீங்கா விடை பெற்று தங்களது கானகத்தை அடைந்தனர்.

Tuesday, September 29, 2015

என் இதயச் சூட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் RX 100 பயணம்...

என் இதயச் சூட்டிலிருந்து ஒன்றரை மணி நேரம் RX 100 பயணம்...

                    இந்த நிகழ்வும் உணர்வும் உங்களுக்கு வாய்திருக்குமானால் என்னை போல நீங்களும் ஓர் அதிர்ஷடசாலி, நான் பணி புரிந்த நிறுவனத்திலிருந்து இன்று விடைப் பெற்றேன், கடைசி நாள் என்று சொல்ல மனது இடம் கொடுக்கவில்லை, பிரிவின் தொடக்கம் என உரக்கச் சொன்னது ;கொஞ்சலான முத்தம் கொடுக்கும் பொய்யை விட பளீர் அரை விழும் உண்மை மெச்சத்தக்கது; இந்த ஒன்றரை மணி நேரம் RX 100 ல் ஒன்றரை ஆண்டு பணி புரிந்த நிகழ்வுகள், நினைவுகள் ,குறும்படங்கள் எடுத்த நாட்கள், சிரித்த , சண்டையிட்ட, அழுத உணர்வகள் ஒவ்வொரு க்ஷணமும் எதிரில் வரும் விளக்குகள் போல மின்னிக் கொண்டிருந்தது. சௌந்தரிடமும் தீனாவிடமும் மூவரும் சரவண பவனில் ஒரு காபி குடித்து படித்த பிடித்த கதையை , புத்தகத்தின் விமர்சனத்தை பேசிக்கொண்டே ஆறிப்போன காபியில் விழுத்த ஈயாய் ஆனேன் இன்று. நட்பின் சான்றை சமிக்ஞையில் சொல்லி கொடுத்த சௌந்தர், பிரேம், சர்வதா, திவ்யா, தினேஷ், வினோத் என நீளும் சிந்தனையில் டைடல் சிக்னலை கடக்க சற்றே சிவப்பு தெரிந்தது. நான் எடுத்த முடிவு சரியா என சிவப்பு அறிகுறி சொல்கிறதா என்று எண்ணுகையில் பச்சை விளக்கு பளீரிட்டது, என் RX 100 உறுமி என்னை அசைப்போடு என்று சொன்னது,சிலரிடம் பேசியதே இல்லை ஆனால் இன்று வந்து வெகு நாள் பழகினாற்போல் பேசின நண்பர்கள் என்ன சொல்வது ? மனது சொன்னது ' நீ அதிர்ஷ்டசாலி' புன்முறுவலுடன் நகர்ந்தேன் புழுதியில் நினைவுகளை தூசி தட்டி;
நான் எழுதும் கிறுக்கல்களை, குறும்படங்களை, அர்தமற்ற வானொலி பேச்சுகளை வெகுவாக பாராட்டி என்னை மிகவும் ஊக்குவித்த நண்பன் பிரகாஷ் , நான் எழுதியது அவனுக்கு முதலில் அனுப்புவேன், உடனே படித்து அவனின் நண்பர்களனைவருக்கும் பகிர்ந்துவிடுவான், அவனை பிரியும் போது குரல் தழுதழுக்கிறது, உண்மையான நண்பனின் பிரிவில் கண்கள் ஈரமானது அதிசியமில்லை, ஒரு மேலாளர் போலில்லாமல் நண்பனாய் பேசிப் பழகிய யாசர் இன்று மாலை 6 மணிவரை என் மனதை மாற்ற முயற்சி செய்து நான் வெற்றி பெற்றேன் ஆனால் அவரின் அன்பில் தோற்றுப்போனேன்.திவ்யா, தினேஷ் அன்பளிப்பாக கொடுத்த 'திருடன் மணியம்பிள்ளை' , மை பேனா வை யோசித்து சேத்பட் சிக்னலையும் கடந்தபோது அவர்கள் என் மனதை களவாடினார்கள் என இதயத்தில் ஒரு ஹோர்ன் அடித்தது, அப்படியே சிந்தனையோட்டத்துடன் செல்கையில் ஒரு ஆட்டோவில் " ஆகாசத்த நான் பாக்குறேன் .." என்ற பாடல் ஒலிக்க சர்வதா ஞாபகத்திற்கு வந்தாள், அவள் பாடிய பாரதியின் பாடல்கள்,வாதங்கள், எனக்காக இன்று எல்லைரையும் திரட்டியது, 20 நாட்களே பழகிய பென்னி 20 வருடம் பழகினார்போல தெளித்த அன்பு; சண்முகம், இலக்கிய படைப்பின் ஆளுமையை, உலக திரைப்படங்களை என பல்வேறு கருத்தக்களை தெளிவாக வேறு சிந்தியலில் சொல்லும் தம்பி, லெமன் டீயில் இருக்கும் புதினா வாசம் சொல்லும் எங்கள் நட்பின் சுவாசம், வெகு சில நாட்களே பேசிய ராதாவும் ஜெயந்தியும் 'ரூட்ட மாத்து' எனும் புத்தகம் கொடுத்த திகைக்க வைத்தனர்.என் கதைகளை வெகுவாக மெச்சிய சுந்தர் அண்ணா, யாமினி அவர்களின் பாராட்டுகளை பெற்ற நொடிகள், என நீங்கா நினைவுடன் சாம், வினோத், சரவணன்,கார்த்தி, ஜூட், மோகனா, நிதி, விஜயனின் நனைந்து கொண்டே சென்றேன் கெல்லிஸ் சிக்னலில் கண்கள் ஈரமாய் நீர் ஊற்றுப் போல் கசிய அருகிலிருந்த பஜாஜ் M 80 அண்ணா " ஏன்பா .. RX 100 னா ஸ்பீட் ஆஹ் தான் போவிய ?? கண்ணுல பார் தண்ணி .. தொடச்சிக்கோ " என்றார் ..
" ஆமா அண்ணா .. கொஞ்சம் ஸ்பீடு தான் " என்றேன்
அவர் காலத்தின் அசரீரி... கண்களை துடைத்து கனமான மனதுடன் வீடருகே வந்தேன். தொடர் வண்டி அருகே செல்லும் வீதியில் என் RX 100 ஐ நிறுத்தி, தொடர் வண்டி செல்ல... இவ்வளவு நினைவின் குவியல்கள் , அன்பு இதையங்கள், நெகிழியற்ற முகங்கள், பேச நினைத்து ஈடேறாத நபர்கள் , பேசிய நபர்கள் என பல படிமங்கள் தொடர் வண்டி வராத நிசப்தத்தில் கூச்சல் போட்டன .....
"பாதைகள் தொலைந்த பின்னும்
பயணங்கள் முடிக்க மறுக்கிறதே!
தேடிச் சென்றாலும்
சிறகுகள் உடைந்து போகிறதே !
எதுவுமில்லை நிரந்தரமென புரிகிறதே!
இதுவும் கடந்து போகிறதே !!"
நீங்களும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள் இத்தகைய நட்பின் கூடாரத்தில் ...

Quotes


  • Feb 30 says Taste your sweat via hard work in AC Hall !
  • Bliss can seen by blind heart !
  • Happiness only for insane but majority are sane !
  • Failed to try considered as humungous failure !
  • We became insane with long intervals of horrible sanity !
  • Near or far , start that matters !
  • Get up one more time ! 
  • Next is the best answer in toughest circumstances..
  • Every seed is an inspiration of trying !
  • Blind dreams are always vision less !
  • Rough waves make you better sailor !
  • Beauty of lies lies in true lies make others happy !!
  • Sculptor’s lost tools recovered by night but no light! 
  • Mistakes are inevitable but second time it's punishable
  • silence will be loud during patience!
  • Happiness will knock your door by every second do open it !!
  • Surpassed half the speed breakers in life then why you fear for small patches ?
  • Laughing face hide sad smilies inside ...
  • Luckless creatures are lucky for Bad times !!
  • Can be Betrayed but never be destroyed !
  • Tilt up or down, Fire always rise up .. 
  • Bonkers around don't be sane !!
  • Just try one more time..
  • Be an intellectual by heart !
  • Even you passed, memories will fail to fade !!

Thursday, September 17, 2015

Monologue for Feature film audition

Scene :1 Scene: Husband a typical psycho gave poison to his divorced wife where she haven't aware and he speaks his world of law 

Version 1:

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.  (Shouts)

புரியல ல (Sigh - giggles) .. என் அன்பே புரியல..(sigh - arrogant giggle )


இந்தா  ஜூஸ் .. ஆச்சர்யமா பாக்குற !! (innocently speaks) , என் உடம்புக்கு எப்போ பசி எடுக்கும்னு தெரியும் டி..(speaks with authority)

கண்ணுல இருக்கிற கரு மணி நீ, நான் அந்த வெள்ளை; அதுல ஒரு கீறல் பட்டாலும் பார்வை தெரியும் ஆனா கற்பு ல.. சீ... கருப்பு ல பட்டுச்சி... குருடன்(laughs) .. குருடன்(laughs) ... நான் குருடன் (shouts)

ஐயோ .. நீ .. குடி பட்டு .. நீ .. குடி.. (slowly he says)

என் அன்பு கற்பு மாதிரி டி, அத ஊர் முழுக்க கூவி கூவி வித்துடீயே...

வெயில் போல காயுமே .... (Biting his teeth and speaks with loud shout)

எது சரின்னு தெரிஞ்சும் .. தப்பா ஆக்கிட்டியே ... முதுகிலேம்பு இல்லாத புழு வெயில்ல சுட்டு சூடு ஏற மாதிரி , என் அமுதான அன்பு உன்ன கொஞ்சம் கொஞ்சமா நஞ்சா ஏறப்போது..
(killer laugh) ஏறிடுச்சி ..(teeth biting speech)

{Wife started to sink}

கண்ணுக்கு மை வைக்க தெரியுது , மனசுல பொறுமைய வைக்க தெரில (hitting the mosquito which comes near her).. நான் பாரு உன்கிட்ட இவளோ பொறுமைய இருக்கேன்.. inch inch ah செய்றேன் யாருக்காக ?? உனக்காக .. ...
இன்னைக்கு  Court ல special marriage act 1954 , under the section 13-B, 13-D nnu ... பஸ் நம்பர் மாதிரி  சொல்லும்போது  அப்படியே james horner symphony வாசிச்சா போல இருந்துது  .. அடடே (like tasting a sweet )அப்பப்பா ...

{Wife sinking}

என்னென்னு தெரியல நிறைய பேசுனும்ன்னு தோணுது .. ஏதோ அனைறது ,பிரக்சம்ன்னு சொல்லுவாங்களே .. நீ கூட என் .. sorry நம்ப வீட்டுக்கு வந்து ஏத்துனியா கொளுத்துனியா ன்னு தெரியல..

இன்னும் கொஞ்சம் நாளுல நானும் வருவேன் அங்கேயாவது ..........

அன்ப வலி நினைக்கிற ஒவ்வொவொரு ஆறறிவுக்கும் உன் சாவு சொல்லித்தராத பாடம் ..

ஐயோ ... நீ .. குடி பட்டு .. நீ குடி ...
ஐயோ ... நீ .. மடி  பட்டு .. மாமா மடி லயே மடி .. நீ மடி ...

{Wife sinked}

************************************************************************
 
Version2:

Why this to me ???? (anger)

தலைல Road Roller ஓடிகிட்டே இருக்கு.. , நல்ல தார காச்சி ஊத்திட்டே நீ (with smile)

(He sipping a juice but not getting into the throat)

தாகமா இருக்கா ?? எனக்கும் தான் ..

"எனக்கு ஒன்னும் நாளும் என் ஒடம்பு தாங்கும் ஆனா உன் உடம்பு தாங்கும்மா ...."(mimicry in kamal voice)
{Laughs}

நீயே குடி ...

'மாங்கல்யம் தந்து நானே.. நவஜீவன கேது நாம்..
"சர்வ மங்கள மாங்கல்யே" (Keech voice as Iyer) ன்னு கேட்டது எக்கோ வா கேடுக்குட்டே இருக்கு(sudden shift to angry voice)..

இன்னைக்கு கோர்ட்ல (Under the hindu marriage act , divorce ordered) சொன்னப்பவே ..    நல்ல (Pause) பட்டு வேட்டி ..பட்டு சொக்கா போட்டு ,சும்மா ஜம்முன்னு பன்னீர் தெளுச்சி , பந்தாவா ரோஜாப் பூ மாலை ஆள் உயருதுக்கு மாட்டி பாடையில ஏத்தி சங்கு ஊதனா மாதிரி ஒரு feel (giggles) .

(she stares at him)

அட ஜூஸ் கேக்க மாட்டேன்…. நீயே குடி ஆனா பேசறத மட்டும் கேளு…

எனக்கு பசிக்குதே ன்னு நெனச்ச விட உனக்கு பசிக்குமே நெனச்சது தான் அதிகம்,
என் ஒவ்வொரு மூச்சுலையும் உன் பேச்சு தான், பசிய அடக்கலாம், கோவத்த அடக்கலாம் ஏன் ஒண்ணுக்க கூட அடக்கலாம்.. அன்ப அடக்க முடியாது ,
அன்பு பல்லூன் இருக்கிற காத்து மாதிரி எப்படியாவது கசிஞ்சிரும் .. கசிஞ்சி .. உருகி .பித்து பிடுச்சி காதலிச்சதுக்கு ,
நல்லா பண்ணமா.... நீ  ரொம்ப நல்லா பண்ணே (Kala master) 

(She sinking)
In men’s world women are the rulers (Loudly)

செரியா Rule பண்ணல Unruled பக்கம் மாதிரி Blank ஆயிடும் (Laughs a loud),

உனக்கு கொடுத்த ஜூஸ் என் அன்பும் பாசமும் பரிவும் அது கூடயே விஷமும் (Teeth biting)
நிம்மதியா செத்து போ .. பூவும் பொட்டோட..(Teeth Bite)

Iam the god of my own hell ……(Shouts)      

****************************************************************
 
 Version 3:

பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.(twice) (different modulation)

சரியா சொன்னீங்க பாட்டி (clapping.. clapping) Wah !!! Wah !! Wah !! ...

இவளுங்கோ அந்த Innocent ah இருந்த பரவா ல, Innocent ah நடிக்கிரளுங்கலே பாட்டி (cries)...

உன் தாகம் எனக்கு தெரியும் ..(Sarcastically)

இந்த ஜூஸ் ..
{She gets it}

 ஒரு சின்ன கதை சொல்றேன் கேட்டுகிட்டே குடிப்பியான்.(Kind of delivering to a child)

ஒரு பெரிய தோட்டம், அதுல ஆண் தேனீ பெண் தேனீ  ரெண்டுபேரும் ஒன்னு தான்னு அந்த ஆண் தேனீ நெனச்சிதான், தினமும் ஆண் தேனீ எல்லா பூ கிட்ட இருந்தும் நல்ல தேன எடுத்துட்டு, அது குடிக்காம, தேன் கூடு கட்டாம, பெண் தேனீக்கு கொடுக்குமா அப்படி எல்லாம் நல்லதையும் அதுக்கு செய்யுமாம்.திடீர்ன்னு ஒரு நாள் அந்த பெண் தேனீ 
"இவளோ நாள் என்ன நல்லா பதுக்கிற மாதிரி நடிக்கிற, நீ கொண்டு வந்த தேன் லாம் விஷப் பூவோடது .. என்ன முதல குடிக்க வெச்சிட்டு அப்பறம் உயிரோட இருந்தா நீ குடிக்கலாம் தான் உன் எண்ணம்" அப்படின்னு சம்மந்தமே இல்லாம திட்டிட்டு பிரிஞ்சிடுச்சி (Sad tone)... அந்த ஆண் தேனீ அழுது அழுது வீனா போச்சு ...

இந்த கதைல யார் மேல தப்பு ??
விற்று... விற்று ... சொல்லவேணாம் .. விற்று ...

ஓம குண்டதுல இருந்த புகை உன் கண்ண கலங்க வைக்கும் ன்னு .. எந்த சடங்கும் வைக்காம தாலி கட்னவன் நான் .. கோர்ட் நீ பேசுன பேச்சு spray பண்ணாத Ansthesia ,

Sorry  .. Disturb பண்றேன் .. நீ குடி ...

அது பண்ணேன் இது பண்ணேன் ன்னு சொல்லி காமிக்க விரும்பல….

நீ கடைசி வரைக்கும் என் அன்ப வலியா தான் பாத்த ,

விடு….

{she started to sink}

அந்த பைதிக்கார ஆண் தேனீ இல்ல நான் .. கொடூர தேனீ (Teeth bite) ஆனா உன் கிட்ட சொபிட்(soft)
இந்த கொடூர தேனீ உண்மையாவே விஷப் பூ இருந்து விஷம் எடுத்து அந்த ஜூஸ் கலந்திடுச்சீ ... (Teeth bite)

செத்துப் போ .. (giggles)


+ or - 3 secs // short film



2 mins short film on anti smoking campaign,


சொல்லத் தோணுது...

குழந்தை அலான் காப்பாற்றினான் சிரியன் அகதிகளை, ஐ.நா செய்யாதது அவன் மரணம் செய்தது , ஈர மண் சொல்லும் அவன் பால் வாசனையை;இன வெறியின் பொறி தீ எழுப்ப குளிர் காய்கிறது ஏகாதிபத்தியம், அதிகாரத்தை சொல்வார்கள் லிட்டில் பாய் , பாட் பாய், 20 ஆண்டுகள் வியட்நாமின் கதறல் யாருக்கு கேட்டது ??...சிரியன் அகதிகள் மூச்சுவிடுவார்கள் அலானின் மூச்சால் ..
அகதிகளின் இன வரலாற்றில் ,19 ஆம் நூன்றாண்டில் ருஷ்யாவிலிருந்து டுகோபோர் என்ற இனத்திற்காக போராடி அவர்களை பாதுகாப்பாக கனடா அனுப்பியவர்; இதற்காக இவர் எழுதிய நாவல் "RESCURRECATION" இதன் மூலம் ஈட்டிய 13000 ரூபேளை கொடுத்து காப்பாற்றியவர். மதவாதிகளால் இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் , உயிர் வதைக்கும் ஆட்பட்டவர்கள் டுகொபோர்ஸ்.
இந்த இனம் இன்று வாழ்கிறது என்றால் அதற்கு காரணம் " லியோ டால்ஸ்டாய்". 600 ஏக்கர் விவசாயத்துக்கு தனம் தந்த பிரபு.
தமிழ் சமூகத்தில் அலான் போல எவ்வளவு உயிர் மாண்டிருக்கும் கள்ளப் படகில் ரமேஸ்வரத்திலிருந்து ஆஸ்ட்ரேலிய செல்கையில் ,1990 களில் இலங்கையிலிருந்து அகதியாய் வந்தவர்களுக்கு இன்றும் ஒரு அடையாள அட்டை இல்லை; பெரும்பாலான நாடுகள் 5 ஆண்டுகளுக்கு மேல் அந்த நாட்டில் வாழ்ந்தால் குடியிருப்பு (domicile) ஆனால் இங்கு ... யாருக்கு தெரியும் மண்டபம் காம்பில் 70,000 இலங்கை தமிழர்கள், இன்னும் கும்முடிபூண்டி , திருச்சி என 50,000 துக்கும் மேற்பட்டோர், பெரும்பாலும் அடையாளம் இல்லாமல்.
டால்ஸ்டாய் ,அலான் போல எங்களுக்கு எண்ணிலடங்கமால் பெயர்களிருந்தாலும் ஊடகம் விடுவதில்லையே ...
செங்கொடி, முத்துக்குமார் யாரென்றே தெரியாத மக்களுக்கு என்ன சொல்வது ..

அன்பின் கதவு மனிதம் தானே !!

Saturday, September 5, 2015

கோடம்பாக்கத்தின் நுழைவாயில் குறும்படங்கள்!

கோடம்பாக்கத்தின் நுழைவாயில் குறும்படங்கள்!



 " ஸ்டார்ட் ... கேமரா ... ஆக்க்ஷன்... டேக் ஒ. கே"
" ஆர்டிஸ்ட மார்க்குக்கு வர சொல்லுங்க, ஒரு க்ளோஸ் அப் எடுத்துக்கலாம்"
"கட் ..கட் .. பீல்ட் கிளியர் பண்ணுங்களேம்பா ..."
" வாயமட்டும் அசைக்க சொல்லு.. டப்பிங் ல பாத்துக்கலாம்  "

                 இவ்வாறு ஏக போக வசனங்கள் ;முனைக்கு முனைத் திருப்புமுனையாக ஏதோ ஒரு  தெருமுனையில் குறும்படம் எடுத்துக் கொண்டிருப்பதை நாம் அன்றாடம் கவனித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது பத்தில் ஆறு பேரிடம் டிஜிட்டல் கேமரா உள்ளது, இல்லாதவர்கள் தின வாடகைக்கு கேமராவும் இதர உபகரணங்களின் கொண்டு குறும்படங்கள் இயக்குகிறார்கள்,   இன்னும் சிலர் மொபைல் கேமராவில் கூட குறும்படம் எடுக்கிறார்கள்.

                இந்த அளப்பறியா ஆர்வத்திற்கு நவீன தொழில்நுட்பமும், சமூக வலைதளங்களும் , இணையமும், ஊடகங்களும் மற்றும் குறும்படம் மூலமாக பெரிய திரைக்கு சென்றவர்களும் முக்கிய காரணிகள். சமீப காலமாக, ஊடகங்கள் நடத்தும் குறும்பட போட்டிகளின் வாயிலாக பலரின் சினிமா ஈர்ப்பை காண முடிகிறது. இன்றைய சூழலில், குறும்படங்களின் பங்கு திரைத்துறையிலும் சமூக விழிப்புணர்வைப் பிரதிபலிக்கும் வகையிலும் இருக்கும் பாங்கை நம்மால் மறுக்கமுடியாது.பெருங்கட்டுரையை வாசிக்க தயங்குபவர்கள் கூட ஒரு குறும்படத்தை பார்த்து விடுவார்கள். தமிழகத்தில் ஒரு நாளில் சராசரியாக நூற்றிற்கும் மேற்பட்ட குறும்படங்கள் இணையத்தில் சேர்க்கப்படுகிறது. இதிலிருந்து சிறந்த படைப்புக்கள் சமூக வலைதளத்தில் பகிர்தலால்   பிரபலமடைய, அதில் பணிபுரிந்தவர்களுக்கு அதன் மூலம் பெரிய திரைக்கு வாய்ப்பு கிடைக்கிறது.கடந்த 6 ஆண்டுகளில் தமிழ் சினமாவின் வளர்ச்சியைப் பார்க்கும்போது குறும்படங்களினால் வந்த இயக்குனர்களின் பங்களிப்பு அதிகமே. இதனால், வெள்ளித் திரையில் பல வெற்றி படம் கொடுத்து இயக்குனர்களும் தங்களது  படைப்புகளின் தரத்தை உயர்த்துகிறார்கள். கு.மு/கு.பி (குறும்படங்களின் வருகைக்கு முன்/பின்) என்று கூட எடுத்துக் கொள்ளலாம் ஆக மொத்தத்தில் நல்ல போட்டியும் நேர்த்தியான படைப்புகளின் வித்தே இன்றைய சூழல்.

குறும்படங்கள் வாய்ப்பின் சாளரம் :

                குறும்படங்களின் அங்கீகாரத்தால், கோடம்பாக்கத்தின் வரவேற்பறையில் நுழைந்த இயக்குனர்கள் சிலர் இருப்பினும் வருகைக்காக பலர் இருக்கிறார்கள்,  பத்து அல்லது பதினைந்து நிமிடத்திற்குள் புதுமையான கதைகள், வித்தியாசமான களம் என கற்பனை குதிரைக்கு கடிவாளம் இல்லாத சிந்தனையாளர்கள் - கார்த்திக் சுப்பாராஜ் , நளன் குமாரசாமி, பாலாஜி மோகன், பாலாஜி தரணிதரன், ராம் குமார் ,அல்போன்ஸ் புத்திரன் என பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் தனித்தனியே 15 க்கும் மேற்பட்ட வெவ்வேறு பாணியில் குறும்படங்களை இயக்கியுள்ளனர். 'ஜிகர்தண்டா' இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ் தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து குறும்படங்களின் உந்துதலால் முறையாக சில பயிற்சி எடுத்து திரைபடத்தின் நுண்ணியியலை புரிந்து பல குறும்படங்களை இயக்கியுள்ளார். அதில், சில ஆங்கில படமும் அடங்கும், 'சூது கவ்வும்' இயக்கிய நளன் ரியல் எஸ்டேட் பணியிலிருந்து குறும்படங்கள் இயக்கியவர், தனியார் தொலைக்காட்சியின் போட்டிக்காக ஆரம்பித்த அவரின் பயணம் இன்று மிக முக்கியமான திரைக்கதையாசிரியராக உருவெடுத்துள்ளார். ஒரு காலக்கட்டத்தில் திரைப்படம் இயக்க முதலில் உதவி இயக்குனராக இருந்து தொழிலைக் கற்று நேர்த்தியான கதையை உருவாக்கி, நடிகர்கள் ஒப்புக்கொண்டு தயாரிப்பாளரைப்  பிடிப்பதற்குள் ஒரு வழியாகிவிடுவார்கள், ஆனால் இன்று குறும்படங்கள் நம் திறமைகளை எளிதாக எல்லாரிடமும் சேர்த்துவிடும், அப்படியாக வந்தது பாலாஜி மோகன் இயக்கிய 'காதலில் சொதப்புவது எப்படி' , முதலில் குறும்படமாக வெளிவந்தது பின் மக்களிடம் இணையத்தில் பெரிய வரவேற்பு வந்தமையால் பின்னர் முழு நீள திரைப்படமானது. பாலாஜி மோகனின் வெற்றி மற்ற குறும்படங்கள் இயக்குனர்களை உற்சாகப்படுதியது, 'பண்ணையாரும் பத்மினியும்','நேரம்','முண்டாசுப்பட்டி' என கனிசமான படங்கள் வெளிவந்தது.இப்படியாக குறும்படங்களும் அதன் இயக்குனர்களின் எழுச்சி இருப்பதற்கு கனிசமான குறும்படம் இயக்கிய அனுபவமும், விடா முயற்சியும்,விழா ஊக்கமும் தான் வெற்றியின் சாவி, இரண்டு குறும்படங்கள் இயக்கியவுடன் திரைப்படத்தை இயக்கிவிடலாம் என்ற மாயை பலருக்கு இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.

குறும்படங்கள் நவீன இலக்கியம் :


             குறும்படங்கள் பத்து நிமிடம் பொழுதுபோக்கு என்பதை மீறி சமூக அவலத்தை, விழிப்புணர்வை, பொதுவுடமையை, மனிதத்தை, அநீதியை என மூன்றாவது கண்ணாகவும் விழிக்கிறது. எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய 'கர்ணமோட்சம்' என்ற குறும்படம் முரளி மனோகர் இயக்கினார், இந்த படம் குறும்படங்கள் பிரிவில் 2010 ல் தேசிய விருது பெற்றது. கூத்துக்கலையும், கலைஞனும் இன்றைய உலகக் கண்ணாடியில் எப்படி தெரிகிறார்கள் என்பதை தெளிவாகச் சொல்லும் படம்,குறும்படத்தை இயக்குபவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டும்.

            சந்தோஷ் சிவன் இயக்கிய கன்னட குறும்படம், 'பிராரம்பா' 2008 ல் சிறந்த ஊக்கமூட்டும் படிப்பினை கொண்ட படம் என்று அங்கீகரித்து தேசிய விருது பெற்றது, இதில் பிரபு தேவா,சரோஜா தேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்கள், எய்ட்ஸ் விழிப்புணவிற்கான பரப்புரை, மனதை கனக்க வைக்கும் படம் . 'ஆரண்ய காண்டம்'  படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா 2005 ல் இயக்கிய படம் 'பெக்கி'(Becky), இது ஒரு நிமிட படம் ,ஆனால் அதில் சொல்லப்படும் உணர்வுகள் மாற்றுத்திறனாளிகள் மீது நமது பார்வை சட்டென மாறும்.நடிகரும் இயக்குனருமான ஆர்.பாண்டியராஜன் இயக்கிய குறும்படங்கள் உலகளவில் பெரும் பாராட்டு பெற்றது, 'மகன்' குழந்தைகளுக்கான திரைப்பட விழாவில் சிறந்த படமாக 2004ல் தேர்வு செய்யப்பட்டது, 2006 ல் 'இரு துளிகள்' போலியோ விழிப்புணவிற்கான படம், 2009 ல் 'அழகு' என்ற படம் உடலுறுப்பு தானத்தின் பரப்புரை; சமீபத்தில்  எடுத்த 'மண் பானை' ஐரோப்பாவில் நடந்த குறும்பட திருவிழாவில் சிறந்த படம் மற்றும் இயக்குனர்கான விருதும் வழங்கப்பட்டது,குறும்படங்கள் வாயிலாக சமூக மேம்பாட்டை உரக்கச் சொன்னது பாராட்டுக்குரியது. நல்ல சிறுகதையோ , கவிதையோ வாசிப்பது போன்ற உணர்வு  இத்தககைய குறும்படங்கள் தருகின்றன.

         90 களின் இறுதியில் பாலு மகேந்திரா அவர்கள், சின்னத்திரையில் பெரிய மாற்றத்தை விதைத்தார் 'கதை நேரம்' வாயிலாக,6 சிறுகதைகளை 20 நிமிட குறும்படமாக எடுத்தார்,  குறிப்பிடும் படியாக சுஜாதாவின் சிறுகதை 'நிலம்', சுந்தர ராமசாமியின் 'பிரசாதம்', ஜெயந்தனின் 'காயம்' என இக்கதைகள் வாசித்தோருக்கு வரப்பிரசாதமாக செல்லுலாயிடில் பதிவு செய்தார். இப்படியாக படைப்புகள் இன்றளுவும் பேசபட அச்சாரமாக இருப்பது கலை, இலக்கியம் மீதுள்ள தீரா காதலும் சமூக பொறுப்புணர்வும் மட்டுமே, மேலும் இவ்வாறான குறும்படங்கள் பார்க்கையில் சமூகம் சார்ந்த கேள்வி பதிலை, விழிப்புணர்வை இலகுவாக பெரிய படத்தில் கோர்க்கலாம், இன்றைய தினத்தில் காதல்/நகைச்சுவை,திகில்/நகைச்சுவை என மீண்டும் மீண்டும் அதே மாதிரியான குறும்படங்களையே பெரும்பாலும் காண முடிகிறது, ஒரு  நல்ல சிறுகதையை யாரும் குறும்படமாக எடுக்க முற்படுவதில்லை இவ்வாறான முயற்சிகள் தொடுங்கும் என்று நம்புவோம்.

குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு...

                  குறும்படங்கள் எடுப்பவர்களுக்கு சினிமா பயிற்சியும், வாசிப்பும், இலக்கிய பரிச்சயமும் மிகவும் முக்கியம். நிறைய பேருக்கு இவை இல்லாததை அவர்கள் எடுக்கும் படங்கள் சொல்லும். சிறிய பயிற்சி முகாம்களோ வகுப்புகளோ நடந்துக் கொண்டிருக்கிறது, அதில் சினிமா குறித்து முழுமையாக கற்றுக் கொடுப்பது சாத்தியமில்லாதது. ஆனால், இத்தகைய முகாம்களில் சினிமா குறித்த ஒரு பரிச்சயமும் தெளிவும் வரக்கூடும். சிறந்த நாவல்களையும், சிறுகதைகளையும், இலக்கியத்தையும்  வாசிக்க வேண்டும். வாசிப்பு தன்மை திரைக்கதை எழுதுவதற்கு ஊன்றுகோலாக இருக்கும். டேவிட் மமெட் (David Mamet) குறிபிடத்தக்க நாடக ஆசிரியர், திரைப்படம் பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளார், முடிந்தால் இணையத்தில் அவரின் படைப்புக்களை வாசியுங்கள், சுஜாதா எழுதிய 'திரைகதை எழுதுவது எப்படி' என்ற புத்தகம் திரைக்கதை எழுத மிகவும் உதவும்.

                  சென்னை அண்ணா நூலகத்தில் உலகில் தலைச் சிறந்த திரைப்படங்களின் திரைக்கதைகள் புத்தகமாக இருக்கிறது,தேர்ந்தெடுத்து வாசித்தால் திரைக்கதையின் பாணி புரியவரும், திரைக்கதையின் இரு பிரிவுகளான நேரியல்(Linear), நேரியல்சாரா(Non-Linear) திரைகதையின் ஆழத்தை உணரமுடியும். திரைக்கதை எழுத கற்றுக்கொண்டால் எந்த கதையையும் படமாக்கலாம். குறிப்பாக புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' எனும் சிறுகதை 'உதிரிப்பூக்கள்' என  மகேந்திரன் 70mm ல் எழுத்தோவியத்தை உயிரூட்டினார், அதன் திரைக்கதை புத்தகமாக மகேந்திரன் வெளியிட்டுள்ளார். ஒரு சிறுகதையை படமாக்குவது எப்படி ? திரைக்கதை எழுதுவதன் நுணுக்கத்தை எளிமையாக தெரிந்துக்கொள்ளலாம். உலக படங்கள் பார்ப்பதனூடே நம் சிந்தனையின் அளவு கோல் புலப்படும் மேலும் கதை சொல்லுதலின் அடிப்படை புரியும். வுட்டி அல்லன் (Woody Allen), குவாண்டின் டாரண்டினோ(Quatin Tarintino), மரியோ புசோ (Mario Puzo), பிட்ரிக்கோ பெல்லினி(Fedriko Fellini), அகிரா குரோசவா(Akiro kurosawa), சத்யஜித் ரே (Sathayjith Ray) இன்னும் சிறந்த படைப்பாளிகள் ஏராளம் அவர்களின் படங்களைத் தேடிப் பாருங்கள், சினிமா மொழியை தாமே கற்கலாம்.

            குறும்படங்கள் வாய்ப்பிற்கான ஆதார் அட்டை. தயாரிப்பாளரை சந்திக்க கிடைத்த துருப்புச் சீட்டு. திரைக்கதை எழுதி , காட்சிக்கு காட்சி கதை சொல்லும் முறையை மீறி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் குறும்படங்களை வைத்தே அந்த இயக்குனரை  கணித்து விடுகின்றார்கள்  தயாரிப்பாளர்கள். உதவி இயக்குனர்களாக வாய்ப்புத் தேடி வருபவர்களிடம் முதல் வினா 'எத்தனை குறும்படம் இயக்கியிருக்கீறீர்கள்', முன்னர் மேற்கோடிட்ட படி  கடந்த 6 ஆண்டுகளில் தமிழ் சினிமா தொழில்நுட்பத்திலும், தரத்திலும் உலகளவில் விளங்குவதற்கு புதிய இரத்தங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. படம் எடுப்பது கூட்டு முயற்சி. ஆகவே, எல்லாப் பிரிவிலும் தெரிந்து வைத்துக்கொண்டு மேலும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் இத்துறையில் மிளிர முடியும்.புதுமையும் தனித்துவம் இருந்தால் குறும்படத்தை அஸ்திவாரமாகக் கொண்டு முழு நீள திரைப்படத்தை இயக்கலாம்.

                                       "வெற்றி தூரமில்லை
                                        உழைப்பும், முயற்சியும் அருகிலிருந்தால் !!"

Sunday, August 30, 2015

பங்கஜம் அத்தை

       அவளை எண்ணும்போதெல்லாம் மனதில் மயிலிறகுடன் முற்கள் சேர்ந்து வருடி கீறுவது போல ஓர் பாதிப்பு, பங்கஜம் அத்தை ஒரு காலத்தில் என் வீட்டிற்கு பக்கத்து வீடு, என் பால்யம் முடிவதற்குள் அங்கிருந்து நான் வேறிடத்திற்கு நகர்ந்தேன் ஆனால் அத்தை என்னுள் பட்டா போட்டு அமர்ந்திருந்தாள்.அவளது கணவன் பழனிசாமி இறந்து 15 ஆண்டுகள் கடந்தது, அவர் இருக்கும் போதே குடியும் குடியுமாக தான் இருந்தார்,அவர்களுக்கு விழுதுகள் இல்லை. வாழ்க்கையின் வெற்றிடத்தில் அத்தைக்கு வந்த வாய்ப்பு மழலைகள், சிறார்களின் ஆய்யை அகற்றி ஹாயா ஆயா வேலை, அதீத மகிழ்ச்சியுடன் பணி புரிந்தாள். ஒவ்வொரு முறை அந்த பள்ளியையும் ,வீட்டையும் கடக்கையில் அவளது கீழ் பல்லில்லாத சிரிப்பு அகத்தில் மின்னலாய் தோன்றும்.
வருடத்திற்கு ஒருமுறை அவளை நான் சந்தித்தால் அரிது ஆனால் அவள் எப்படியாயினும் ஒவ்வொரு சனவரி மாதம் எனக்கு பிடித்த ஆசை சாக்லெட்டுடன் பார்க்க வருவாள் அன்றும் நான் இருக்க மாட்டேன், ஆசை சாக்லெட் எங்கும் கிடைக்காது இதற்காக வேப்பேரியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து வாங்கி வருவாள். கசங்கிய நெகிழிப் பையில் பத்து முதல் பதினைந்து ஆசை சாக்லேட்டுகள் இருக்கும் அவள் சென்றபின்னும் அந்த ஆசையில் அன்பின் பசை ஒட்டிருக்கும்.காலத்திற்கு கால் உள்ளதால் என்னவோ இவ்வளவு வேகமான ஓட்டம், அத்தையின் அகவை கருதி பள்ளியிலிருந்து ஒய்வு கொடுத்தனர், வெறுமையின் ஆதிக்கம் ஓங்க பிழைப்பிற்காக மணி கோர்த்தல் , வீட்டு வேலை என நேரத்தை மிதி அடியாக மிதித்து.
ஒரு நாள் தபால் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் முதியோர் ஓய்வூதியத்திற்காக காத்துக் கொண்டிருந்தது பங்கஜம் அத்தை, அவளருகே சென்று " அத்த .. " என அகவ
"எலே .. மூக்கான்" என்று என் கன்னத்தை தடவினால், அவள் விரல்கள் தவில் வசிக்கும் கலைஞனின் விரல்கள் போல ஏதோ கனமான துணி சுற்றப் பற்றிருந்தது.
"இது என்ன அத்த .." என்றதற்கு
"மணி கோக்கையில கண்ணு தெரியாம குத்திடறேன் .. அந்த காயம் தான்" என்றாள்.
என் கண் மணியில் அந்த ஊசி குத்தியது ஒன்றும் வெளிபடுத்தாமல் " பாத்து அத்த ..." என நகர்கையில், முன் நிற்கும் அம்மாவை தன் சற்று நேரத்தில் திரும்புவேன் என்றுரைத்து என்னை அருகிலுள்ள கடைக்கு கூட்டிச் சென்றாள், 5 ஸ்டார் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள்." இங்க ஆசை சாக்லேட் கிட்டாது , பொறவு வாங்கியாறேன்.. வர்ட்டா .." என கூறி நடையை வேகப்படுத்தினாள் வரிசையை பிடிக்க, டப் .. டப் என்ற ரப்பர் செருப்பின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது அவள் சென்றபின்னும் கூட, அந்த பாத வெடிப்புகள் கூறும் அன்பின் பாதையை. என் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் 5 ஸ்டார் சாக்லேட் இன்றும் காட்சி படிமம், அன்பின் சின்னம்.
ஆசை சாக்லெட்டை பிரிக்கும் போது பாசத்தின் சுவை பசையாய் இதயத்தில் ஈரமாக இருக்கும் .இன்று அத்தைக்கு 66 அகவை பூர்த்தி, அவளுக்கு பிடித்த சாம்பார் வடையுடன் ..........

Friday, July 31, 2015

காலம்!! காலம்!!.... கலாம்

இசுலாத்தின் ஏசுவே உங்களை
ஒவ்வொரு வினாடிக்கு ஓர் முறை
ஒவ்வொரு இளைஞனுள் உயிர்த்தெழுவாய் !!
இன்று மோகன்தாஸ் கரம்சந்த் இருந்தால்
கலாமாக இருக்க ஆசை மட்டுமே பட்டிருப்பார்,
பூமியை பார்த்தவனை
ஆகாசத்தை பார்க்கவைத்தாயே ,
எங்களிடம் கனவுப் பாலை பருக வைத்'தாயே'!!
உங்கள் எண்ணத்தின் வானில்
இந்தியாயெனும் பிறை வளரும்,
ஐய்யம் வேண்டாம் அயர்ந்து உறங்குங்கள்
உங்கள் உள்ளொளியின் பிரகாசம் உறங்காது !!
விதைத்தவர் உறங்'கலாம்'
விதை உறங்காது ........

Monday, July 27, 2015

பேனா !

உன்னை தோழனென்பதா ?
அதற்குமேலாக ஊனென்பதா ?
நான் என்ன சொன்னாலும்,
திட்டினாலும்,
கொஞ்சினாலும்,
அதை வடிகட்டாமல் வடிவமாக்குகிறாயே,
உன் கூர் முனையால் தாளை முத்தமிடும் போது
அது பரிசுத்த காதலாக மாறுகிறது
என் உள்ளத்தில்..
இதை எழுதும் க்ஷணத்தில் கூட
இதயத்தின் நரம்பில் எழுதுவது போல திகழ்கிறது,
சில நேரங்களில்
நானா,
பேனா !
என சிந்திக்கும் வண்ணம் என்னுள் ஒளிருகிறாய்
தானா
நான் எழுதும் பேனா !!!

ஈர விழி

ஈர விழிகளுக்குத் தெரியும்
சொரணையின் தன்மையை,
இருப்பினும்
ரோஷமில்லாமல்,
வழியெங்கும் ஈரமாக்கும் ஆவியான சம்பவங்களுக்கு !!

சிக்னல்

பலர் பச்சையை எதிபார்த்து
சிறுநீர் கழிக்கும் கார்களும்,
வியர்வை சிந்தும் ஹெல்மட்டுகளும்,
நேரம் எப்பொழுதும் அவசரமாக சுற்றுவதில்லை
நமக்கு நிதானமில்லை என சொல்கிறது எழுப்பும் ஒலி
மாசுக்கு பஞ்சமில்லை அங்கு....
சிலர் சிவப்பை எதிர்பார்த்து
வாய்ப்பாடு புத்தகத்தை வாய் விட்டு
விற்கும் சிறுவனும்,
தலைத் தொங்கிய கைக்குழந்தை
தாயின் வயிற்றை நிரப்பும்
தன் உணவை விடுத்து,
காருக்குள்ளே  வெயில் படாமலிருக்க
வெளியே கால் சுட தட்டிக்கொண்டிருப்பான்,
பசிக்கு பஞ்சமில்லை இங்கு..... 
மங்கலமான மஞ்சள் பலருக்கு,
சிலருக்கு மங்கலாக மாறும் !!
சிவப்பு, பச்சை , மஞ்சள் மாறினாலும்
சிலரின் நிலை மாறவில்லையே !!!!

Friday, July 3, 2015

பயணத்தினூடே ..‏

பயணத்தினூடே ..

     என் கல்லூரி நண்பனின் திருமணம் கடந்த ஞாயிறு தஞ்சை மாவட்டம் காவரப்பட்டு கிராமத்தில் நன்றாக நடந்தேறியது, இதற்கு நானும் இன்னொரு நண்பனும் சனி இரவு புறப்படலாம் என முடிவெடுத்தோம் ஆனால் அவனால் வரயிலவில்லை, நான் மட்டும் தஞ்சை வரை செல்ல வேண்டுமா ? அதுவும் அடியேன் சென்னை வாசி ,எனக்கு வழி தெரியாது  எனும் ஒட்டு மொத்த கலக்கம் தொற்றி மனதில் விவாதமானது, இறுதியில் போக வேண்டாமென்ற முடிவை எடுத்தேன், பிறகு  நண்பனை  நேரில் சந்தித்து சாக்கு சொல்லிவிடலாமென நினைத்துக்கொண்டேன், 9 மணியளவில் ஒரு மனக்குரல் ஒலித்தது  'உனக்கு வாய் இல்லன நாய் தூக்கின்னு போய்டும்..போய்டும்..போய்டும் ' அட எக்கோ லாம் அடிக்குதே என்ற பிரம்மிப்புடன் கிளம்பினேன் கோயம்பேடுக்கு , 10 மணிக்கு சென்றடைந்தேன் அடித்து பிடித்து நடைமேடை 1 ல்  தஞ்சை பேருந்து ஒன்று புறப்பட தயாராக இருந்தது, அருகிலிருந்த கன்டக்டரிடம் 'அண்ணே , சீட் இருக்கா ??" என்றேன்.  'இருக்கு பா போ .. ஏறு.. ஏறு' என்றார். பத்து தெரு விளக்குகள் முகத்தில் அடித்தார்ப் போல பிரகாசமானது , ஏறி உள்ளே சென்றால் லாஸ்ட் 5 சீட்கள் மட்டுமே காலியாக இருந்தது, தெருவிளக்குகள் சட்டென்று மெழுகுவத்தியனாது, அப்படியே ஜகா வாங்கி வேறு பேருந்தில் ஏறிடலாமெனத் திரும்பினால் '225 ரூபா எடுப்பா, இந்தா டிக்கெட் ..' என்றார் கன்டக்டர்.  'நோவ் ... லாஸ்ட் சீட்டு தான் காலியாயிருக்கு , அதவும் தூக்கித் தூக்கி போடும் .. நான் வேற தொலவா போறேன்..' என்றதக்கு 'டிக்கெட்டுக்கு 225 ரூபா கொடு இல்லாட்டி யாரையாவது புடிச்சி கொடுத்துட்டு கிளம்பு' என்றார். கோவம் என் கண்களில் தெரிந்து, உதடு  கெட்ட வார்த்தைகளுக்கு ஆயுத்தமானது ஆனால் 'மதுர மல்லி ..மதுர மல்லி.. ' காமெடி நினைவிற்கு வந்து வடிவேலு சிரிக்க வைத்தார், நூதன திருடன் கன்டக்டரிடம் அந்த மானங்கெட்ட டிக்கெட்டை வாங்கி கடைசி சீட்டில் அமர்ந்தேன், பேருந்தும் புறப்பட்டது, எதிர் பாராமல் அல்லது திடீர் பயணம் இப்படி கொடுமையாக தான் அமையும் என்று யோசிக்கையில் ஸ்ப்ரிங்கில் அமர்ந்து ஏக்குவது போல குதித்தேன், இந்த வேகத்தடைக்கேவா என்ற கலக்கத்திலிருக்க மெதுவாக இருக்கும் 2 சீட்டுகளும் நிறைந்தது, என் அருகே இரண்டு சீட்கள் காலியாக இருந்தது கொஞ்சம் வாட்டமாக தூங்கிவிடலாம் என்ற யோசனையில் தண்ணீர் தெளித்தார் போல இரண்டு நபர்கள் ஏறினார்கள், என்னருகே அமர்ந்தனர்,லேசான ஒரு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது மட்டமான மானிட்டர் சாராயத்தின் வாசனை அது, அவர்களிடமிருந்த என்னிடம் படற ஆரம்பித்தது, 'மச்சா .. மேஸ்திரி தலைல சென்றிங் பலகை போட்டு கடகால் நடல .. என் பேர சேஞ் பண்றேன்'  என்றான் ஒருவன். இன்னொருவன் அதற்கு 'அவன நான் தான் போடுவேன்... நீ வராதே .. நான் தான் ஜெயிலுக்கு போவேன்' என்றான். அவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள், எனக்கு அவர்கள் ஏது வேண்டுமானாலும் பேசட்டும் பேருந்தின் குலுங்கலில் என் மீதி வாந்தி மட்டும் வேண்டாமென வேண்டினேன். சிறிது நேரத்தில் துர்நாற்றம் மூக்கை காக்கவிற்கு போட்டது போல உணர்வு, ஏன் இப்படியென்று பார்த்தால் இரண்டில் ஒருவன் வாயைப் பிளந்து என் தோளில் தூங்கினான், இப்பொழுது வாந்தி எனக்கு வர ஆர்மபிதது 'டேய் ... நீ குடிச்சதுக்கு , நான் வாந்தியெடுக்கனுமா ..' என்ற முணங்களுடன் அவனை எழுப்பினேன்,சற்று கண்ணசைந்து கண்விழிக்கும் நேரத்தில் வாந்தி வரவில்லை தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்தது.          விலாசம் தெரியாது ஊர் மட்டும் தான் தெரியும்  நண்பன் கொடுத்த உறவினர் அலைப்பேசி எண்ணையும் என்னிடமிருந்து வழுக்கிவிட்டது, அவனும் கல்யாணத்திற்கு ஆயுத்தமாகிக் கொண்டிருப்பான் அதனால் அவனையும் அழைக்கவில்லை, ஒரு தேநீர் அருந்திய பிறகு யோசிக்கலாமென அருகிலுள்ள தேநீர் கடைக்கு சென்றேன், குடித்து முடிந்தாகியது. 'அண்ணே !! காவரப்பட்டு எப்படி போகணும் ??' என்றேன் கடை உரிமையாளரிடம்.
'காசு ஜாஸ்தியா இருந்தா ஆட்டோ ல போலாம், கம்மி யா இருந்த பஸ் ல போலாம்' என்று கூறி நகைத்தார் அந்த அதி காலையில் ஒரு கலாய்ப்பு, நான் எதுவும் பேசாமல் நகர ஆரம்பிதேன். 'தம்பி கோச்சிகிடாதீங்க சும்மா ஒரு கட்ட கொடுத்தேன், என்னக்கு தெரியாது இருங்க கேட்டு சொல்றேன்' என அவரே அக்கம் பக்கத்தில் விசாரித்தார், அந்த வேளையில் ஒருவர் தேநீருக்காக காத்துக் கிடந்தார், நான் அவரை உரக்க குரலில் 'அண்ணே !! கடைக்கு ஆள் வந்து இருக்காங்க, நான் தேடிக்கிறேன் உங்க வியாபாரத்தை பாருங்க'. ' அஞ்சு நிமிசம் ஆகும் சொல்லுங்க .. இந்த வந்துடுறேன் ' என்று மும்மரமாக எனக்காக காவரப்பட்டை தேடிக்கொண்டிருந்தார் , நான் அவர் உள்ளத்தால் தொலைந்து போனேன் !   'இங்கிருந்து ஒரத்தநாடு பஸ் ஏறுங்க தம்பி, ஒரத்தநாடுல  எறக்கி விடுங்க ன்னு கன்டக்டர் கிட்ட சொல்லிகிடுங்க. அப்பறமேட்டு அங்கிருந்து மன்னார்குடி பஸ் ஏறுங்க, காவரப்பட்டு ன்னு சொன்ன கரெக்ட் அஹ இருக்குவாய்ங்க' என்றார்.   அவரிடம் நான் எதுவும் பேச முடியவில்லை , தலை மட்டும் அசைத்தேன் ஏதோ பேச வேண்டுமென 'என்னால உங்களுக்கு வியாபாரம் போச்சே' இதற்கு அவர் அலட்டி கொள்ளாமல் 'அட போ... பா, உதவி செய்றது ஒரு வரம் அது சின்னதோ பெரியதோ மனுசனுக்கு மனுசேன் உதவாம வேற யாரு ?? பாத்து போ.. பா '  என்றார்.         மனிதம் இருக்கிறது என்பதை லாவகமாக சொன்னார், அங்கிருந்து குளிப்பதற்கு விடுதி போல தேடினேன் எல்லாம் ஒரு நாள் வாடகை தான் என்று கூறினார்கள், ஒரு நகராட்சி குளியலறையும் கழிவறையும் இருந்தது அங்கு சென்றேன் ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்து உள்ளே சென்றேன், குளித்தால் இன்னும் அழுக்கு வந்து சேரும் என்பது போல சேர் கலந்து , பாசி மண்டிக் கிடந்தது அப்படியும் பலர் அங்கு புழங்கினர் , சரி நானும் அவர்களைப் போல் தானே என நினைத்து நனைந்தேன் அந்த துருப் பிடித்த குவளையின் தண்ணீரில்; ஒரு வழியாக குளித்து வெளியே வந்து , 5 ரூபாய் கொடுத்தவரிடம் கேட்டேன் 'ஏன் தலைவரே , பாத்ரூமும் கக்கூசும் சுத்தமாவே இல்லையே, கழுவுவீங்களா  மாட்டீங்களா ??" என்றதற்கு  'சுடுகாடு கக்கூசும் ,பாத்ரூமும் அப்படி தான் இருக்கும்' என்றார்.  ஆச்சர்யம் கலந்த ஏமாற்றத்துடன் 'அடங்க.. ஹலோ முதலயே சொல்ல வேண்டியது தானே'.  'இங்க போனதுலயே நீ தான் காசு கொடுத்த அதான் ' என்று அவன் சொன்னான்.  அந்த இடத்தைவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன், சிறிது நேரத்தில் அதை யோசித்து சிரிப்பு வந்தது சிரித்துக்கொண்டே நகர்ந்தேன், அதுவும் தண்ணீர் தானே ! அவர்களும் மனிதர்கள் தானே !!. ஷவெரில் குளித்தால் இந்த அனுபவம் வாய்க்குமா என்ற ஆசுவாசத்துடன் நடந்தேன், நான் திடீரென திரும்பி நகராட்சி குளியல் அறையருகே சென்றேன் அந்த நபரிடம் கையில் பத்து ரூபாயை திணித்தேன், 'என்ன பா திரும்பவும் போ போரியா ?? ' என்றார். 'இல்ல .. ஏற்க்கனவே ரெண்டு தடவ போய்ட்டேன் அப்போ காசு கொடுக்க மறந்துட்டேன், முடிஞ்சா கொஞ்சம் சுத்தம் பண்ணுங்க என்று கூறி நடையை பேருந்து நிலையத்திற்கு சாத்தினேன், அந்த நபரின் முகத்தில் சலனமே இல்லை காசை மேஜையில் வைத்து குளியலறையும் கக்கூசையுமே பார்த்தான்.

           ஒரத்தநாடு பேருந்தில் ஏறினேன், காவரப்பட்டு செல்லும் வழி இரண்டு மூன்று நபர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டேன், தெற்கத்திய மக்கள் பலர் பேசும் தமிழும் ,மரியாதையும், பண்பும் சென்னை வாசிகளை ஒரு தராசில் வைக்க தோன்றியது.செல்லும் வழியெல்லாம் பூமியில் பச்சை நிறம் பெயிண்ட் பூசியவாறு இருந்தது, கம்மாய் , பம்ப்பு செட், வாட்டம் காட்டிய நன்செய் நிலம், பயிர்கள், வைக்கோல்கள்,உர மூட்டைகள், ஏறுப் பூட்டிய மாட்டு வண்டி, ஓலை வீடும் ஓடு வீடும், ட்ராக்டர் சத்தம், சீரான காற்று; பேருந்து பள்ளத்திலும் மேட்டிலும் இறங்கியபோது கூட சூழலின் காட்சிகள் சமம் செய்தது. ஒரத்தநாடு இறங்கி மன்னார்குடி பேருந்து பிடித்தேன், 'அண்ணே ! காவரப்பட்டு ஒரு டிக்கெட் கொடுங்க' என நடத்துனரிடம் கேட்டேன். அவர் என்னை பார்த்து 'எ. எம். ஆர். கே கல்யாண மண்டபம் போறீங்களா' என்றார்.
  'கல்யாணத்துக்கு போறேன், அங்க ஒரு கல்யாண மண்டபம் தான் இருக்கா'  என்று வினவியதற்கு 'ஆமாம் ...' என நிதானமாக சொன்னார் அவர்.     இன்னொரு நண்பனின் குறும் செய்தி அதை சதப்படுத்தியது, கல்யாண மண்டபம் சென்றடையும் போது காலை 8.45, என் நண்பனின் நிழற்படம் பெரிய பதாகையில் சிரிப்புடன் ஜொலித்திருந்தான், உள்ளே சென்றால் தவிலும் நாதஸ்வர கலைஞர் மட்டும் வாசித்திருந்தார், அவர்களை தவிர்த்து நான் தான் இரண்டாவதாக அங்கு நுழைகிறேன் எனக்கு முன்னர் ஒரு தாத்தா இருந்தார், 'என்னடா .. மச்சா 9 டூ 10.30 ன்னு சொன்னான் இங்க யாருமே இல்லையே' என்ற முணு முணுப்புடன் பேன் கிழே அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து தான் தெரியும் முகுர்த்தம் 10.30 யிலிருந்து 12.00 வரை என, கூட்டம் அவ்வளவு அதிகமாக வர ஆரம்பித்தது தலைவர் படத்தின் முதல் ஷோ வைப்போல், அங்கு இன்னொரு நண்பனை சந்திதேன் சந்தோஷ் வெகு காலம் கழித்து; ஊர் கதையை பேசி நேரம் போனது, திருமணம் முடிந்தது புகைப்படகாரர்களுக்கு 'கொஞ்சம் ரைட், கொஞ்சம் லெப்ட்' என சொல்லுவதற்காகவும் நண்பனுக்கு வாழ்த்து சொல்லவும் மேடை ஏறினேன் , இரண்டும் இனிதே முடிந்தது. பந்தியில் அமர்ந்தவாரே சந்தோஷ் என்னை கும்பகோணத்தில் விடுவதாக சொன்னான் , இலகுவாக செல்லலாம் என்று சரி  என்றேன், கிளம்பலாமேன்றால்  இன்னொரு நண்பன் இம்ரான் வருகை புரிந்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திதேன் அவனை, அவன் பங்கிற்கு ஓர் பரிசை மாப்பிளைக்கு கொடுத்து  பின்னர் அவன் என்னை திருச்சியில் விடுவாதாக சொன்னான் ,அங்கிருந்து சொகுசு பேருந்து ஏதாவது இருக்கும் என எண்ணினேன் அப்படியே சந்தோஷுக்கு விடைக் கொடுத்து நானும் இம்ரானும் கிளம்பினோம்.
      புல்லட் இம்ரானுக்கு கச்சிதமாக பொருந்தியது, 'வண்டி செம்மைய இருக்கா மாமா' என்றேன், 'இரவல் வாங்கினா எல்லா செமையா தான் இருக்கும் மாம்ஸ்' என ஒரு போடு போட்டான். காவரப்படிலிருந்து திருச்சிக்கு பயணம் 60 கிலோ மீட்டர், அவனை நான் சரியாக 6 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறேன் இங்கு வருவானென நினைக்க கூட இல்லை. சிறிது தூரம் பேசினோம் பின்னர் காற்று பேச ஆரம்பித்தது, எதிர் காற்று பலமாக வீசியது. அப்படியும் விடாமல் சுடும் 2 மணி வெயிலில் பாச மழையைப் பொழிந்தோம். இம்ரான் என்னை ஓட்டும்மாறு சொன்னான், நோன்பில் இருந்ததனால் கலைத்து போயிருந்தான், நான் சிறு தூரம் ஓட்டினேன் காற்று புல்லட்டை ஒரு பக்கமாக இழுக்கும் போது தான் இம்ரானின் கஷ்டம் புரிந்தது. அவனிடம் பயணம் செய்த 1 மணி நேரம் காற்றால் எதுவும் பேச முடியவில்லை ஆனால் அதே காற்று எங்களின் கல்லூரி நாட்களின் சருகை நினைவில் கிளப்பிக் கொண்டே இருந்தது, மெரினா பீச் , விக்டோரியா ஹாஸ்டல் , பொது பணித்துறை கான்டீன் என அங்கங்கு கொண்டு சென்றது. திருச்சி பேருந்து நிலையம் வந்தடைந்தோம் அவனுக்கு விடைக் கொடுக்கும் முன்பு என்னை வற்புறுத்தி மாசா வாங்கிக் கொடுத்தான் அதில் காற்றின் வாசம் நிறைந்திருந்தது.
      இம்ரானின் திடீர் சந்திப்பு என்னை நெகிழ வைக்க, மாசா அருகும்போது ஒரு முதிய வயது அம்மா அமர்ந்திருந்தார். அவருக்கு இம்ரான் இரண்டு இட்லி வாங்குவதற்காக சென்றான் 3.30 மணிக்கு இட்லி இல்லை எனினும் ஒரு கடையில் கிடைத்தது, அந்த முதிய அம்மாவிற்கு கொடுத்தான். இம்ரான் அங்கிருந்து முசூரி எனும் ஊரிற்கு சென்று வண்டியை தெரிந்தவர்களிடம் கொடுத்து தருமபுரி செல்லவேண்டும் ஆகையால் என்னை புது பேருந்து நிலையம் போகும் பேருந்தில் ஏற்றினான், படிக்கட்டில் ஏறும் போது அந்த முதிய அம்மா எங்களை நோக்கி ஓடி வந்தால் நானும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன், இன்னும் காசு கொடு என்பாளோ என்ற ஊகத்தில் இருக்கையில் அவள் எங்களருகே வந்து 'அப்பா.. சாமி ... என் பக்கத்துல ஒரு அம்மா இருக்கு அதுக்கு இந்த இரண்டு இட்லில ஒன்னு கொடுக்கவா' என்றாள். என் கண் கலங்கியது 'சரி .. கொடுங்க என்றோம் ' அவளும் சென்றாள். இம்ரானும் நெகிழ்ந்தான், நேரமாகையால் அவனை கிளம்பச் சொன்னேன், மெதுவாக கிளம்பினான். என் மனம் கேட்கவில்லை இன்னொரு இரண்டு இட்லி வங்கி அந்த அம்மாவிடம் கொடுத்தேன், அவர்கள் அதைப் பிரித்து பகிர்ந்தனர். மனம் நெகிழ புது பேருந்து நிலையம் வந்தடைந்தேன்.
           அவர்களிடத்தில் இருந்த அறம் பெரிது,அதை எண்ணியவாரே சென்றேன் சட்டென்று துன்பங்கள் சில்லரையானது . ஓர் எதிர் பாரா பயணம் நமக்கு மனிதர்களையும் மனிதத்தையும் காட்டும் என்பது எவ்வளவு உண்மை, பேராசை கன்டக்டர், குடிகாரன் , டீ கடை அண்ணன், வழி போக்கர்கள், கழிவறை பொறுப்பாளன்,சந்தோஷ் , இம்ரான் மற்றும் முதிய அம்மா என நிறைய அனுபவத்தின் மூட்டையோடு சென்னை பேருந்திற்காக தேடுகையில் தெய்வம் போல   ஒருவர் வந்தார்
'தம்பி ... சென்னையா ?? 'என்றார் . நான் தலை அசைத்தேன்.
'ஏ.சி . பஸ் வாங்க . 'என்றார்.
'அண்ணே .. மணி இப்போ 4 ஆகுது 10.30 கெல்லாம் போகணும் அதுக்கேத்தாமாதிரி சொல்லுங்க'
'அட ... 9 மணிக்கு ரீச் ஆயிடும் பா .. புதுசா நீ ' என்றார்.
பெரிய பேருந்து நின்றது ஏறுவதற்கு முன்பு 350 ரூபாய் பயணத்திற்கு 20 ரூபாய் டிப்ஸ் என வாங்கிக்கொண்டனர், "வர மோது தான் பயங்கரமான சொதப்பல் இப்பயாவது சரியா போவோம்" என்ற மைண்ட் வாய்சுடன் உள்ளே சென்றால் நான் தான் முதல் ஆள், சரியாக 5.00 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது, எனக்குளே சிரித்துக் கொண்டு இந்த பயணத்தில் நடந்ததை அசைப் போட்டு சென்றேன் .

Saturday, May 30, 2015

சரியான இளிச்சவாயன் !! ....

சரியான இளிச்சவாயன் ....

      'திருவல்லிகேணியிலிருந்து எண்ணூருக்கு போவது சிரமம் தான் அதைவிட வெயில் வேளையில் புழதி மழையோடு மோட்டார் சைக்கிளில் செல்வது மிகவும் கோரம், வேறென்ன செய்வது போய்தானாகாணும், ஏ. சி மெக்கனிக்னா சில்லுனே இருக்குமா, உழைச்சு வியர்வை நாத்தம் வந்தா தான் சாம்பார் வாசனைய நுகர முடியும்'.

"ஹலோ ...ஹலோ சார்.. கூப்டே இருக்கன்.. எங்கயோ யோசனையா இருக்கீங்க, சரி... எவளோ லிட்டர் "
" ஏதோ ஞாபகத்தில இருந்துட்டேன்... ஒரு லிட்டர் போடு பா".
"ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு ......."
"சார்.. போன் இங்க பேசக் கூடாது."
"சரி .. பா , இந்த நூறு ரூபா ,மீதி கொடு .."
"இந்தாங்க... "

            மோட்டார் சைக்கில் சற்றே நகரத்தில் நகர "ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு .......  சார்.. ஏ.சி மெக்கானிக் சுந்தர் பேசுறேன் சார் ... இன்னும் ஒன் ஹவர் ல வந்துடறேன்" .
           சுந்தரின் வண்டி இப்படியே மெதுவாக நகர்கிறது, குளிரூட்டியை பழுது பார்த்து வரும் பணமே போதுமானது என்ற சிந்தனையில் செல்கிறது இவர் வண்டி, இவருக்கு மனதில் குளிரூட்டியிருப்பதால் அகப் புழுக்கம் நேராது. எண்ணூரை அடைந்தார், பெரிய மாடி வீடு மூன்று குளிர் சாதன இயந்திரத்தை ஒரு மணிநேரத்தில் சீர் செய்தார், அதன் உரிமையாளருக்கோ அலவற்ற மகிழ்ச்சியுடன்,
"சுந்தர் , ரொம்ப தேங்க்ஸ்... குழந்தைங்க வெயில தாங்க மாட்டேன்கிறாங்க.. கரெக்ட் ஆ ஹெல்ப் பண்ணீங்க.."
"சார்...நான் குழந்தைய இருக்கும் போது  ஃபேனுக்கே வழி இல்ல, இந்த காலத்துல ஏ. சி யும் ஜாஸ்தி ஆயிடுச்சு லேசி யும் ஜாஸ்தி ஆயிடுச்சி, குழந்தைங்கள நம்ம தான் சார் சொகுசு வாழ்கைக்கு பழக்கப் படுதுறோம்.."
"போதும் பா.. சுந்தர் , எவலோன்னு சொல்லு " என அயர்ந்து சொன்னார் உரிமையாளர்.
"200 ரூபா கொடுங்க சார்"
அதிர்ச்சியான உய்ரிமையாளர் " வீட்ட பாத்தே காசு கேக்கற கும்பல் அதிகம் , நீ என்ன டா னா இவளோ கம்மியா கேக்குர ??"
"இது போதும் சார், நான் செய்த வேலைக்கு இது சரியா இருக்கும் சார்.."

             சுந்தரிடம் 200 ரூபாய் கொடுத்தார், அதை வாங்கிக் கொண்டு அவரும் எந்த தவறு செய்யாத வண்டியை இரண்டிற்கு மூன்றுமுறை  உதைத்து அங்கிருந்து கிளம்பினார். சிறிது தூரம் கடந்தப் பின் வழி தெரியவில்லை, அங்கங்கே உள்ளவர்களிடம் கேட்டு கேட்டு சென்றுக் கொண்டிருந்தார், திடீரென நடந்து சென்ற ஒருவர் மயங்கி கீழே விழுந்தார், சுந்தர் கடந்த செல்கையில், அதை கவனித்து சட்டென்று வண்டியை நிறுத்தி அந்த நபரைத் தூக்கினார், உதவிக்கு கூட யாருமில்லை, மயங்கிய ஆள் சலனமற்று கிடந்தார். அவரைத் தூக்கி வண்டி மேல் அமரவைத்தார், ஆனால் பயனில்லை சரிந்து சரிந்து விழ முற்பட்டார் அவர். வண்டியை நேராக நிறுத்தி விட்டு மயங்கியவரை அதன் மேல் உட்கார்ந்தவாரே பெட்ரோல் டான்க் மேல் தலை சாய்த்து படுக்க வைத்தார்.

        ஆட்டோ பிடிக்க ஓடினார், அப்பொழுது ஒரு வண்டியின் சத்தம் கேட்டது யாரவது வருகிறார்களா என்று திரும்பிப் பார்த்தார்.
"யோவ் ..தத்தி... வரட்டுமா ..." என்று மயங்கியவன் சுந்தர் வண்டியை எடுத்து பறந்தான்.
அவன் திருடன் என்று சுந்தருக்கு அப்போது தான் புலப்பட்டது, அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அங்கே சற்று நேரம் நின்றார். கொஞ்ச தூரம் நடந்து தெரு முனையில் ஆட்டோ ஓட்டுனர்களிடம் சொன்னார் , அவர்கள் காவல் நிலைத்திற்கு ஏவி விட்டனர்.
தட்டுத் தடுமாறி சுங்கச்சாவடி வந்து சேர்ந்தார், 6 D பேருந்தில் ஏறினார் திருவல்லிகேனிக்கு பயணச் சீட்டு வாங்கி தன்னை சீட் பண்ணியவன் பெட்ரோல் இல்லாமல் எங்கே நிற்கிறானோ என்று கவலைப்பட்டார் நம் சுந்தர்.

    "கண்ணகி செல ஸ்டாப்பிங் இறங்கு ..." என் கண்டக்டர் கத்த, சுந்தர் இறங்கி வீடிற்கு நடக்க ஆரம்பித்தார்.ஆட்டோக்காரன் வண்டியை மெதுவாக இவரிடம் நெருங்கி "சவாரி வரியா சார் ?? " என்றான்.
"இல்ல பா, பெல்ஸ் ரோடு முனைல தான் மான்ஷன் ... வேற யாரையாவது கேளுங்க.." என சிரித்து நகர்ந்தார் சுந்தர்.
எங்கு பார்த்தாலும் தன் வண்டி ஞாபகமாகவே இருந்தது , பெல்ஸ் ரோட்டில் இரு சக்கர வாகன விற்கும்/வாங்கும் கடையில் அந்த திருடன் சுந்தரின் வண்டியை விற்றுக் கொண்டிருந்தான், அதை பார்த்து சுந்தர் "என்ன பிரம்மை பா இது , நம்ப வண்டியும் திருட்னவனும் இங்க.. " என்ற முனகலுடன் அந்த கடையை கடந்தார்.

        கொஞ்ச தூரம் சென்று ஏதோ ஒரு நினைவில் திரும்பி பார்க்க அதே திருடன் மற்றும் அவரது வண்டி. மிகவும் சாதரணமாக , பதட்டப் படாமல் அவனருகே சென்றார். சுந்தரப் பார்த்தவுடன் அவன் ஓட முற்ப்பட்டான், உடும்புப் பிடியாக அவனைப் பிடித்தார் சுந்தர்.
"தம்பி ... ஓடி நீயே காம்ச்சி கொடுத்திடாதே திருடன்னு, இந்த வண்டிய வித்து நீயே காசு எடுத்துக்கோ" என்றார்.
அந்தத் திருடன் திகைத்துப் போனான், " ஏன் இப்படி ... " என வடிவேலு பாணியில் திருடன் கேட்க்க.

      "உன்ன பிடிசிக் கொடுத்தா நீ செஞ்ச ஆக்டிங் வெளிய வரும் , உண்மையா மயங்கி விழுறவங்கள யாரும் காப்பாத்த மாட்டங்க,
அதுவும் இல்லாம சந்தர்ப்பம் தான் திருடனாக்குது ஆனா நம்ப திருந்த சந்தர்ப்பம் கொடுக்கறது இல்ல ..., இனிமே ........."
என்று கூறி நகர்ந்தார் சுந்தர்.

அந்தத் திருடன் முனங்கினான் "சரியான இளிச்சவாயன் ....."

         அது சுந்தர் காதில் விழுந்தது , திரும்பி அவனருகே வந்து சொன்னார்  " நானும் இந்த பைக்க திருட்னவன் தான் 4 வருஷம் முன்னாடி , இந்த பைக் ஓனர் எனக்கு இதே தான் சொன்னாரு  'நல்லவன் எப்பவுமே சரியான இளிச்சவாயன், ஆனா அவன் நல்லவன் ... போடா திருந்து போ'  அதே தான் உனக்கு சொல்றன் 'திருந்து போ' "

               திருடனின் கண்களில் திருடன் வேடம் கலைந்தது, வண்டியை சுந்தரிடம் கொடுத்து அவர் சொன்னதை வாங்கிச் சென்றான் இளிச்சவாயனாக.

Wednesday, May 27, 2015

இளங்கோ எப்போது மலையாளியானான் ??? !!!

இளங்கோ எப்போது மலையாளியானான் !!

 நிசப்தத்தின் உச்சம், வியர்வையின் மிச்சம். கீழே சில நகத் துகள்கள் தரையை நட்சத்திரம் போல் அலங்கரிக்க,

 "யாருப்பா இங்க இளங்கோ ??"
" சார்.." என்று கை மேல உயர்ந்தது.
"நீங்க டாட் நெட் ஆ ஜாவா வா ???"
"டாட் நெட்"
"அந்த ரூம்க்கு போங்க,  சோழா ன்னு எழுதிருக்கும் " என்று அந்த நபர் கூறி நகர்ந்தார்.

இளங்கோவின் கண்கள் பயத்திலிருந்தது அதனுடன் நகக் கண்களும் பதட்டத்திலிருந்தது, கண்ணாடி கதவை திறக்கும் போது வாயைத் திறந்து பதில் சொல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்டு என்பதாவது இண்டர்வ்யுவிலாவது வேலை கிடைக்க வேண்டும் என்று
"மே ஐ கம் இன் சார்.. ???"
"எஸ் ... ப்ளீஸ்" என்றது ஒரு பெருத்த உருவம்
"சிட் டவுன் !!"
"சார் !! மை ரெசுமே!!" என்று இளங்கோ நீட்ட, கேள்விகள் ஆரம்பித்தது. எல்லாம் படித்தது தான் ஆனால் அந்த நேரத்தில் நினைவிற்கு வரவில்லை வந்ததெல்லாம் படிக்கும் காலத்தில் புரிந்து படித்திருந்தால் சிரத்தையுடன் கவனித்திருந்தால் இந்த நேரத்தில் தலை சொறியாமல் இருந்திருக்கலாம் என்பது மட்டுமே.
"என்ன இளங்கோ எல்லாத்துக்கும் ஒரே வார்த்தைல பதில் சொல்றீங்க , எஸ் ஆர் நோ ன்னு , இந்த மாதிரி ஒரே வார்த்தை மட்டும் பேசினீங்கனா யாருக்கும் உபயோகம் இல்ல. நீங்க தெரியாம MCA படிச்சிடீங்க, உங்களுக்கு சப்ஜெக்ட் நாலெட்ஜ் சுத்தம்மா இல்ல, சாரி டு சே ஆனா இதான் பாக்ட்" என்று அந்த உருவம் இளங்கோவின் மனதைச் சிதைத்து.

    "தேங்க்ஸ் சார் " என இளங்கோ வெளியே நடக்க ஆரம்பித்தான், அந்த நபர் சொன்னது நிதர்சனமான உண்மை என அவனுக்கு தெரியும், ஆனால் தன் தந்தைக்கு தெரியவில்லை இவனுக்கு உகந்த படிப்பில்லை என்று,நடந்துக் கொண்டே இருந்தான் போகும் வழியில் நகராட்சி பூங்கா இருந்தது அதனுள் சென்றான், மூன்று மணி வெயிலின் சூடு அந்த சிமெண்ட் பெஞ்சில் மேல் படுத்தான், அங்குள்ள பச்சை பச்சையான  செடி கொடிகளை பார்த்தே தனுக்கு பத்திரிகையாளன் ஆகா வேண்டும் என்ற கனவும் பச்சைப் பசேலென்று தழைத்ததை அந்த இலைகளில் கண்டான், ஆனால் கணினி படித்துவிட்டு யாராவது பத்திரிகையில் தன்னை சேர்ப்பார்களா என்ற கேள்வியும் மாலை வேளையில் உதித்தது, இந்த வேலையும் போனதா என்று வீட்டில் கேட்ப்பார்களே அதன் கவலையும் சேர்ந்து மிக்சியில் அறையும் சட்னியாய் உழன்று விட்டத்தைப் பார்த்தான்.

    சட்டென்று ஒரு குடிகாரன் இளங்கோவைத் தட்டி, தள்ளாடிக் கொண்டே "டேய் .. இந்த என் பெஞ்சு ஏந்திரி.." என்றான்.
இளங்கோ எந்த பதில் சொல்லாமல் எழுந்தான் எதுவும் பேசாமல் நகர ஆரம்பித்தான்.
அந்த குடிகாரன் என்ன நினைத்தானோ திடீரென "டேய் .. தம்பி! இங்க வா !!" என்றான்
அருகில் வந்தான் இளங்கோ.

        "என் போதைக்கு நீ குடிக்க முடியுமா ?? இல்ல உன் பசிக்கு நான் துன்ன முடியுமா?? உன் வாழ்க்கைய வாழு போ ... தூர போ ..." என்றான் குடிகாரன்.
பூங்காவிலிருந்து வெளியேறினான் இளங்கோ, நடக்கும் வழியெங்கும் அந்த குடிக்கரனின் சொற்கள், "வாழு போ" எவ்வளவு உண்மை. தீர்த்தத்தை குடித்தால் கூட ஒருவன் இந்த அளவுக்கு எதார்த்தத்தை சொல்ல முடியுமா ஆனால் டாஸ் மாக் நேக்கா சொன்னது, அந்த நொடியிலிருந்து ஒரு பெரிய தெளிவு கிடைத்தது. சில மணி நேரம் முன் ஒருவர் என்னை பின் தள்ளினார் இன்னொருவர் படிக்கட்டுகள் அருகே தான் இருக்கிறது என்று உரைத்தார். வீட்டில் எல்லாம் தூங்கியவுடன் செல்லலாம் காலையில் என் முடிவை சொல்லலாம் என தாமதமான மின் தொடரில் ஏறினான்.
      ஒரு சில சொற்கள் நம்மை எழ வைக்கிறது என்பதை அசைப் போட்டு யாருமில்லாத ஜன்னல் ஓரத்தில் தலையை சாய்த்து எதிர் காற்றை நோக்கினான்.தான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது அதில் சொற்ப மக்களே இறங்கினர், ரயில் சென்றப் பின் இரும்புப் பாதையைக் கடந்தனர், இறுதி பெட்டியில் ஏறியதால் இவன் பின்னே நடந்து வந்திருந்தான் இவன் முன்னே ஒருவர் நடந்துக் கொண்டிருந்தார்.  இரும்புப் பாதையை அவர் கடக்க முற்பட்டார் அப்போது மறு புறம் வேகமாக ஒலியில்லாமல்  ரயில் வந்துக் கொண்டிருந்தது அதை இளங்கோ பார்த்தான் அவரும் பார்ப்பார் என்று எண்ணினான் ஆனால் அவர் எதோ ஒரு நினைப்பில் முன்னோக்கி சென்றார்.

   "அண்ணாணா .... பாஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அண்ணாணா ட்ரைன்ன்ன்"  ஒரே அலறல் இளங்கோவிடமிருந்து.
அந்த சொற்கள் அவரை திரும்பி பார்க்க வைத்தது, சட்டென்று பின் வாங்கினார், ரயில் கடந்தது வேகமாக. மெதுவாக வந்தான் இளங்கோ.
"அண்ணே ... என்ன.. ணே இனி பாத்து வாங்க.."
"அனுஜா ....நண்ணி... சாரி !! தேங்க்ஸ்"
"மலையாளம் புரில பரவா ல உங்க கண்ணுல புரியுது"
"ட்ரைன்  வந்நது ஸ்ரேடிச்சில்லா ..."
"சரி .. விடுங்க ..பாத்து போங்க அண்ணே !!"
"என்ட குட்டிகள் இந்த பிஸ்கெட்டை கழிக்கும் ... வளர நண்ணி" கண் கலங்க சொல்லி நகர ஆரம்பித்தார் திடீரென்று நின்று
"நீ என்ட அச்ச்சனப் போலே ....." என்று அழுதார்.

சில சொற்கள் நம்மை பின்னும் தள்ளும், முன்னும் தள்ளும் மனிதனாகவும் மாற்றும் இன்னும் சில நேரத்தில் மலையாளியாக்கும்.

இளங்கோ மலையாளியானான் !!!!