அவளை எண்ணும்போதெல்லாம் மனதில் மயிலிறகுடன் முற்கள் சேர்ந்து வருடி
கீறுவது போல ஓர் பாதிப்பு, பங்கஜம் அத்தை ஒரு காலத்தில் என் வீட்டிற்கு
பக்கத்து வீடு, என் பால்யம் முடிவதற்குள் அங்கிருந்து நான் வேறிடத்திற்கு
நகர்ந்தேன் ஆனால் அத்தை என்னுள் பட்டா போட்டு அமர்ந்திருந்தாள்.அவளது கணவன்
பழனிசாமி இறந்து 15 ஆண்டுகள் கடந்தது, அவர் இருக்கும் போதே குடியும்
குடியுமாக தான் இருந்தார்,அவர்களுக்கு விழுதுகள் இல்லை. வாழ்க்கையின்
வெற்றிடத்தில் அத்தைக்கு வந்த வாய்ப்பு மழலைகள், சிறார்களின்
ஆய்யை அகற்றி ஹாயா ஆயா வேலை, அதீத மகிழ்ச்சியுடன் பணி புரிந்தாள். ஒவ்வொரு
முறை அந்த பள்ளியையும் ,வீட்டையும் கடக்கையில் அவளது கீழ் பல்லில்லாத
சிரிப்பு அகத்தில் மின்னலாய் தோன்றும்.
வருடத்திற்கு ஒருமுறை அவளை நான் சந்தித்தால் அரிது ஆனால் அவள் எப்படியாயினும் ஒவ்வொரு சனவரி மாதம் எனக்கு பிடித்த ஆசை சாக்லெட்டுடன் பார்க்க வருவாள் அன்றும் நான் இருக்க மாட்டேன், ஆசை சாக்லெட் எங்கும் கிடைக்காது இதற்காக வேப்பேரியில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து வாங்கி வருவாள். கசங்கிய நெகிழிப் பையில் பத்து முதல் பதினைந்து ஆசை சாக்லேட்டுகள் இருக்கும் அவள் சென்றபின்னும் அந்த ஆசையில் அன்பின் பசை ஒட்டிருக்கும்.காலத்திற்கு கால் உள்ளதால் என்னவோ இவ்வளவு வேகமான ஓட்டம், அத்தையின் அகவை கருதி பள்ளியிலிருந்து ஒய்வு கொடுத்தனர், வெறுமையின் ஆதிக்கம் ஓங்க பிழைப்பிற்காக மணி கோர்த்தல் , வீட்டு வேலை என நேரத்தை மிதி அடியாக மிதித்து.
ஒரு நாள் தபால் அலுவலகத்தில் நீண்ட வரிசையில் முதியோர் ஓய்வூதியத்திற்காக காத்துக் கொண்டிருந்தது பங்கஜம் அத்தை, அவளருகே சென்று " அத்த .. " என அகவ
"எலே .. மூக்கான்" என்று என் கன்னத்தை தடவினால், அவள் விரல்கள் தவில் வசிக்கும் கலைஞனின் விரல்கள் போல ஏதோ கனமான துணி சுற்றப் பற்றிருந்தது.
"இது என்ன அத்த .." என்றதற்கு
"மணி கோக்கையில கண்ணு தெரியாம குத்திடறேன் .. அந்த காயம் தான்" என்றாள்.
என் கண் மணியில் அந்த ஊசி குத்தியது ஒன்றும் வெளிபடுத்தாமல் " பாத்து அத்த ..." என நகர்கையில், முன் நிற்கும் அம்மாவை தன் சற்று நேரத்தில் திரும்புவேன் என்றுரைத்து என்னை அருகிலுள்ள கடைக்கு கூட்டிச் சென்றாள், 5 ஸ்டார் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள்." இங்க ஆசை சாக்லேட் கிட்டாது , பொறவு வாங்கியாறேன்.. வர்ட்டா .." என கூறி நடையை வேகப்படுத்தினாள் வரிசையை பிடிக்க, டப் .. டப் என்ற ரப்பர் செருப்பின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது அவள் சென்றபின்னும் கூட, அந்த பாத வெடிப்புகள் கூறும் அன்பின் பாதையை. என் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் 5 ஸ்டார் சாக்லேட் இன்றும் காட்சி படிமம், அன்பின் சின்னம்.
ஆசை சாக்லெட்டை பிரிக்கும் போது பாசத்தின் சுவை பசையாய் இதயத்தில் ஈரமாக இருக்கும் .இன்று அத்தைக்கு 66 அகவை பூர்த்தி, அவளுக்கு பிடித்த சாம்பார் வடையுடன் ..........

No comments:
Post a Comment