பயணத்தினூடே ..
என் கல்லூரி நண்பனின் திருமணம் கடந்த ஞாயிறு தஞ்சை மாவட்டம் காவரப்பட்டு கிராமத்தில் நன்றாக நடந்தேறியது, இதற்கு நானும் இன்னொரு நண்பனும் சனி இரவு புறப்படலாம் என முடிவெடுத்தோம் ஆனால் அவனால் வரயிலவில்லை, நான் மட்டும் தஞ்சை வரை செல்ல வேண்டுமா ? அதுவும் அடியேன் சென்னை வாசி ,எனக்கு வழி தெரியாது எனும் ஒட்டு மொத்த கலக்கம் தொற்றி மனதில் விவாதமானது, இறுதியில் போக வேண்டாமென்ற முடிவை எடுத்தேன், பிறகு நண்பனை நேரில் சந்தித்து சாக்கு சொல்லிவிடலாமென நினைத்துக்கொண்டேன், 9 மணியளவில் ஒரு மனக்குரல் ஒலித்தது 'உனக்கு வாய் இல்லன நாய் தூக்கின்னு போய்டும்..போய்டும்..போய்டும் ' அட எக்கோ லாம் அடிக்குதே என்ற பிரம்மிப்புடன் கிளம்பினேன் கோயம்பேடுக்கு , 10 மணிக்கு சென்றடைந்தேன் அடித்து பிடித்து நடைமேடை 1 ல் தஞ்சை பேருந்து ஒன்று புறப்பட தயாராக இருந்தது, அருகிலிருந்த கன்டக்டரிடம் 'அண்ணே , சீட் இருக்கா ??" என்றேன். 'இருக்கு பா போ .. ஏறு.. ஏறு' என்றார். பத்து தெரு விளக்குகள் முகத்தில் அடித்தார்ப் போல பிரகாசமானது , ஏறி உள்ளே சென்றால் லாஸ்ட் 5 சீட்கள் மட்டுமே காலியாக இருந்தது, தெருவிளக்குகள் சட்டென்று மெழுகுவத்தியனாது, அப்படியே ஜகா வாங்கி வேறு பேருந்தில் ஏறிடலாமெனத் திரும்பினால் '225 ரூபா எடுப்பா, இந்தா டிக்கெட் ..' என்றார் கன்டக்டர். 'நோவ் ... லாஸ்ட் சீட்டு தான் காலியாயிருக்கு , அதவும் தூக்கித் தூக்கி போடும் .. நான் வேற தொலவா போறேன்..' என்றதக்கு 'டிக்கெட்டுக்கு 225 ரூபா கொடு இல்லாட்டி யாரையாவது புடிச்சி கொடுத்துட்டு கிளம்பு' என்றார். கோவம் என் கண்களில் தெரிந்து, உதடு கெட்ட வார்த்தைகளுக்கு ஆயுத்தமானது ஆனால் 'மதுர மல்லி ..மதுர மல்லி.. ' காமெடி நினைவிற்கு வந்து வடிவேலு சிரிக்க வைத்தார், நூதன திருடன் கன்டக்டரிடம் அந்த மானங்கெட்ட டிக்கெட்டை வாங்கி கடைசி சீட்டில் அமர்ந்தேன், பேருந்தும் புறப்பட்டது, எதிர் பாராமல் அல்லது திடீர் பயணம் இப்படி கொடுமையாக தான் அமையும் என்று யோசிக்கையில் ஸ்ப்ரிங்கில் அமர்ந்து ஏக்குவது போல குதித்தேன், இந்த வேகத்தடைக்கேவா என்ற கலக்கத்திலிருக்க மெதுவாக இருக்கும் 2 சீட்டுகளும் நிறைந்தது, என் அருகே இரண்டு சீட்கள் காலியாக இருந்தது கொஞ்சம் வாட்டமாக தூங்கிவிடலாம் என்ற யோசனையில் தண்ணீர் தெளித்தார் போல இரண்டு நபர்கள் ஏறினார்கள், என்னருகே அமர்ந்தனர்,லேசான ஒரு துர்நாற்றம் அடிக்க ஆரம்பித்தது மட்டமான மானிட்டர் சாராயத்தின் வாசனை அது, அவர்களிடமிருந்த என்னிடம் படற ஆரம்பித்தது, 'மச்சா .. மேஸ்திரி தலைல சென்றிங் பலகை போட்டு கடகால் நடல .. என் பேர சேஞ் பண்றேன்' என்றான் ஒருவன். இன்னொருவன் அதற்கு 'அவன நான் தான் போடுவேன்... நீ வராதே .. நான் தான் ஜெயிலுக்கு போவேன்' என்றான். அவர்கள் கட்டிடத் தொழிலாளர்கள், எனக்கு அவர்கள் ஏது வேண்டுமானாலும் பேசட்டும் பேருந்தின் குலுங்கலில் என் மீதி வாந்தி மட்டும் வேண்டாமென வேண்டினேன். சிறிது நேரத்தில் துர்நாற்றம் மூக்கை காக்கவிற்கு போட்டது போல உணர்வு, ஏன் இப்படியென்று பார்த்தால் இரண்டில் ஒருவன் வாயைப் பிளந்து என் தோளில் தூங்கினான், இப்பொழுது வாந்தி எனக்கு வர ஆர்மபிதது 'டேய் ... நீ குடிச்சதுக்கு , நான் வாந்தியெடுக்கனுமா ..' என்ற முணங்களுடன் அவனை எழுப்பினேன்,சற்று கண்ணசைந்து கண்விழிக்கும் நேரத்தில் வாந்தி வரவில்லை தஞ்சை பழைய பேருந்து நிலையம் வந்தது. விலாசம் தெரியாது ஊர் மட்டும் தான் தெரியும் நண்பன் கொடுத்த உறவினர் அலைப்பேசி எண்ணையும் என்னிடமிருந்து வழுக்கிவிட்டது, அவனும் கல்யாணத்திற்கு ஆயுத்தமாகிக் கொண்டிருப்பான் அதனால் அவனையும் அழைக்கவில்லை, ஒரு தேநீர் அருந்திய பிறகு யோசிக்கலாமென அருகிலுள்ள தேநீர் கடைக்கு சென்றேன், குடித்து முடிந்தாகியது. 'அண்ணே !! காவரப்பட்டு எப்படி போகணும் ??' என்றேன் கடை உரிமையாளரிடம்.
'காசு ஜாஸ்தியா இருந்தா ஆட்டோ ல போலாம், கம்மி யா இருந்த பஸ் ல போலாம்' என்று கூறி நகைத்தார் அந்த அதி காலையில் ஒரு கலாய்ப்பு, நான் எதுவும் பேசாமல் நகர ஆரம்பிதேன். 'தம்பி கோச்சிகிடாதீங்க சும்மா ஒரு கட்ட கொடுத்தேன், என்னக்கு தெரியாது இருங்க கேட்டு சொல்றேன்' என அவரே அக்கம் பக்கத்தில் விசாரித்தார், அந்த வேளையில் ஒருவர் தேநீருக்காக காத்துக் கிடந்தார், நான் அவரை உரக்க குரலில் 'அண்ணே !! கடைக்கு ஆள் வந்து இருக்காங்க, நான் தேடிக்கிறேன் உங்க வியாபாரத்தை பாருங்க'. ' அஞ்சு நிமிசம் ஆகும் சொல்லுங்க .. இந்த வந்துடுறேன் ' என்று மும்மரமாக எனக்காக காவரப்பட்டை தேடிக்கொண்டிருந்தார் , நான் அவர் உள்ளத்தால் தொலைந்து போனேன் ! 'இங்கிருந்து ஒரத்தநாடு பஸ் ஏறுங்க தம்பி, ஒரத்தநாடுல எறக்கி விடுங்க ன்னு கன்டக்டர் கிட்ட சொல்லிகிடுங்க. அப்பறமேட்டு அங்கிருந்து மன்னார்குடி பஸ் ஏறுங்க, காவரப்பட்டு ன்னு சொன்ன கரெக்ட் அஹ இருக்குவாய்ங்க' என்றார். அவரிடம் நான் எதுவும் பேச முடியவில்லை , தலை மட்டும் அசைத்தேன் ஏதோ பேச வேண்டுமென 'என்னால உங்களுக்கு வியாபாரம் போச்சே' இதற்கு அவர் அலட்டி கொள்ளாமல் 'அட போ... பா, உதவி செய்றது ஒரு வரம் அது சின்னதோ பெரியதோ மனுசனுக்கு மனுசேன் உதவாம வேற யாரு ?? பாத்து போ.. பா ' என்றார். மனிதம் இருக்கிறது என்பதை லாவகமாக சொன்னார், அங்கிருந்து குளிப்பதற்கு விடுதி போல தேடினேன் எல்லாம் ஒரு நாள் வாடகை தான் என்று கூறினார்கள், ஒரு நகராட்சி குளியலறையும் கழிவறையும் இருந்தது அங்கு சென்றேன் ஐந்து ரூபாய் மட்டுமே கொடுத்து உள்ளே சென்றேன், குளித்தால் இன்னும் அழுக்கு வந்து சேரும் என்பது போல சேர் கலந்து , பாசி மண்டிக் கிடந்தது அப்படியும் பலர் அங்கு புழங்கினர் , சரி நானும் அவர்களைப் போல் தானே என நினைத்து நனைந்தேன் அந்த துருப் பிடித்த குவளையின் தண்ணீரில்; ஒரு வழியாக குளித்து வெளியே வந்து , 5 ரூபாய் கொடுத்தவரிடம் கேட்டேன் 'ஏன் தலைவரே , பாத்ரூமும் கக்கூசும் சுத்தமாவே இல்லையே, கழுவுவீங்களா மாட்டீங்களா ??" என்றதற்கு 'சுடுகாடு கக்கூசும் ,பாத்ரூமும் அப்படி தான் இருக்கும்' என்றார். ஆச்சர்யம் கலந்த ஏமாற்றத்துடன் 'அடங்க.. ஹலோ முதலயே சொல்ல வேண்டியது தானே'. 'இங்க போனதுலயே நீ தான் காசு கொடுத்த அதான் ' என்று அவன் சொன்னான். அந்த இடத்தைவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் நடந்தேன், சிறிது நேரத்தில் அதை யோசித்து சிரிப்பு வந்தது சிரித்துக்கொண்டே நகர்ந்தேன், அதுவும் தண்ணீர் தானே ! அவர்களும் மனிதர்கள் தானே !!. ஷவெரில் குளித்தால் இந்த அனுபவம் வாய்க்குமா என்ற ஆசுவாசத்துடன் நடந்தேன், நான் திடீரென திரும்பி நகராட்சி குளியல் அறையருகே சென்றேன் அந்த நபரிடம் கையில் பத்து ரூபாயை திணித்தேன், 'என்ன பா திரும்பவும் போ போரியா ?? ' என்றார். 'இல்ல .. ஏற்க்கனவே ரெண்டு தடவ போய்ட்டேன் அப்போ காசு கொடுக்க மறந்துட்டேன், முடிஞ்சா கொஞ்சம் சுத்தம் பண்ணுங்க என்று கூறி நடையை பேருந்து நிலையத்திற்கு சாத்தினேன், அந்த நபரின் முகத்தில் சலனமே இல்லை காசை மேஜையில் வைத்து குளியலறையும் கக்கூசையுமே பார்த்தான்.
ஒரத்தநாடு பேருந்தில் ஏறினேன், காவரப்பட்டு செல்லும் வழி இரண்டு மூன்று நபர்களிடம் கேட்டு தெரிந்துக் கொண்டேன், தெற்கத்திய மக்கள் பலர் பேசும் தமிழும் ,மரியாதையும், பண்பும் சென்னை வாசிகளை ஒரு தராசில் வைக்க தோன்றியது.செல்லும் வழியெல்லாம் பூமியில் பச்சை நிறம் பெயிண்ட் பூசியவாறு இருந்தது, கம்மாய் , பம்ப்பு செட், வாட்டம் காட்டிய நன்செய் நிலம், பயிர்கள், வைக்கோல்கள்,உர மூட்டைகள், ஏறுப் பூட்டிய மாட்டு வண்டி, ஓலை வீடும் ஓடு வீடும், ட்ராக்டர் சத்தம், சீரான காற்று; பேருந்து பள்ளத்திலும் மேட்டிலும் இறங்கியபோது கூட சூழலின் காட்சிகள் சமம் செய்தது. ஒரத்தநாடு இறங்கி மன்னார்குடி பேருந்து பிடித்தேன், 'அண்ணே ! காவரப்பட்டு ஒரு டிக்கெட் கொடுங்க' என நடத்துனரிடம் கேட்டேன். அவர் என்னை பார்த்து 'எ. எம். ஆர். கே கல்யாண மண்டபம் போறீங்களா' என்றார்.
'கல்யாணத்துக்கு போறேன், அங்க ஒரு கல்யாண மண்டபம் தான் இருக்கா' என்று வினவியதற்கு 'ஆமாம் ...' என நிதானமாக சொன்னார் அவர். இன்னொரு நண்பனின் குறும் செய்தி அதை சதப்படுத்தியது, கல்யாண மண்டபம் சென்றடையும் போது காலை 8.45, என் நண்பனின் நிழற்படம் பெரிய பதாகையில் சிரிப்புடன் ஜொலித்திருந்தான், உள்ளே சென்றால் தவிலும் நாதஸ்வர கலைஞர் மட்டும் வாசித்திருந்தார், அவர்களை தவிர்த்து நான் தான் இரண்டாவதாக அங்கு நுழைகிறேன் எனக்கு முன்னர் ஒரு தாத்தா இருந்தார், 'என்னடா .. மச்சா 9 டூ 10.30 ன்னு சொன்னான் இங்க யாருமே இல்லையே' என்ற முணு முணுப்புடன் பேன் கிழே அமர்ந்தேன். சிறிது நேரம் கழித்து தான் தெரியும் முகுர்த்தம் 10.30 யிலிருந்து 12.00 வரை என, கூட்டம் அவ்வளவு அதிகமாக வர ஆரம்பித்தது தலைவர் படத்தின் முதல் ஷோ வைப்போல், அங்கு இன்னொரு நண்பனை சந்திதேன் சந்தோஷ் வெகு காலம் கழித்து; ஊர் கதையை பேசி நேரம் போனது, திருமணம் முடிந்தது புகைப்படகாரர்களுக்கு 'கொஞ்சம் ரைட், கொஞ்சம் லெப்ட்' என சொல்லுவதற்காகவும் நண்பனுக்கு வாழ்த்து சொல்லவும் மேடை ஏறினேன் , இரண்டும் இனிதே முடிந்தது. பந்தியில் அமர்ந்தவாரே சந்தோஷ் என்னை கும்பகோணத்தில் விடுவதாக சொன்னான் , இலகுவாக செல்லலாம் என்று சரி என்றேன், கிளம்பலாமேன்றால் இன்னொரு நண்பன் இம்ரான் வருகை புரிந்தான் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்திதேன் அவனை, அவன் பங்கிற்கு ஓர் பரிசை மாப்பிளைக்கு கொடுத்து பின்னர் அவன் என்னை திருச்சியில் விடுவாதாக சொன்னான் ,அங்கிருந்து சொகுசு பேருந்து ஏதாவது இருக்கும் என எண்ணினேன் அப்படியே சந்தோஷுக்கு விடைக் கொடுத்து நானும் இம்ரானும் கிளம்பினோம்.
புல்லட் இம்ரானுக்கு கச்சிதமாக பொருந்தியது, 'வண்டி செம்மைய இருக்கா மாமா' என்றேன், 'இரவல் வாங்கினா எல்லா செமையா தான் இருக்கும் மாம்ஸ்' என ஒரு போடு போட்டான். காவரப்படிலிருந்து திருச்சிக்கு பயணம் 60 கிலோ மீட்டர், அவனை நான் சரியாக 6 ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறேன் இங்கு வருவானென நினைக்க கூட இல்லை. சிறிது தூரம் பேசினோம் பின்னர் காற்று பேச ஆரம்பித்தது, எதிர் காற்று பலமாக வீசியது. அப்படியும் விடாமல் சுடும் 2 மணி வெயிலில் பாச மழையைப் பொழிந்தோம். இம்ரான் என்னை ஓட்டும்மாறு சொன்னான், நோன்பில் இருந்ததனால் கலைத்து போயிருந்தான், நான் சிறு தூரம் ஓட்டினேன் காற்று புல்லட்டை ஒரு பக்கமாக இழுக்கும் போது தான் இம்ரானின் கஷ்டம் புரிந்தது. அவனிடம் பயணம் செய்த 1 மணி நேரம் காற்றால் எதுவும் பேச முடியவில்லை ஆனால் அதே காற்று எங்களின் கல்லூரி நாட்களின் சருகை நினைவில் கிளப்பிக் கொண்டே இருந்தது, மெரினா பீச் , விக்டோரியா ஹாஸ்டல் , பொது பணித்துறை கான்டீன் என அங்கங்கு கொண்டு சென்றது. திருச்சி பேருந்து நிலையம் வந்தடைந்தோம் அவனுக்கு விடைக் கொடுக்கும் முன்பு என்னை வற்புறுத்தி மாசா வாங்கிக் கொடுத்தான் அதில் காற்றின் வாசம் நிறைந்திருந்தது.
இம்ரானின் திடீர் சந்திப்பு என்னை நெகிழ வைக்க, மாசா அருகும்போது ஒரு முதிய வயது அம்மா அமர்ந்திருந்தார். அவருக்கு இம்ரான் இரண்டு இட்லி வாங்குவதற்காக சென்றான் 3.30 மணிக்கு இட்லி இல்லை எனினும் ஒரு கடையில் கிடைத்தது, அந்த முதிய அம்மாவிற்கு கொடுத்தான். இம்ரான் அங்கிருந்து முசூரி எனும் ஊரிற்கு சென்று வண்டியை தெரிந்தவர்களிடம் கொடுத்து தருமபுரி செல்லவேண்டும் ஆகையால் என்னை புது பேருந்து நிலையம் போகும் பேருந்தில் ஏற்றினான், படிக்கட்டில் ஏறும் போது அந்த முதிய அம்மா எங்களை நோக்கி ஓடி வந்தால் நானும் பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன், இன்னும் காசு கொடு என்பாளோ என்ற ஊகத்தில் இருக்கையில் அவள் எங்களருகே வந்து 'அப்பா.. சாமி ... என் பக்கத்துல ஒரு அம்மா இருக்கு அதுக்கு இந்த இரண்டு இட்லில ஒன்னு கொடுக்கவா' என்றாள். என் கண் கலங்கியது 'சரி .. கொடுங்க என்றோம் ' அவளும் சென்றாள். இம்ரானும் நெகிழ்ந்தான், நேரமாகையால் அவனை கிளம்பச் சொன்னேன், மெதுவாக கிளம்பினான். என் மனம் கேட்கவில்லை இன்னொரு இரண்டு இட்லி வங்கி அந்த அம்மாவிடம் கொடுத்தேன், அவர்கள் அதைப் பிரித்து பகிர்ந்தனர். மனம் நெகிழ புது பேருந்து நிலையம் வந்தடைந்தேன்.
அவர்களிடத்தில் இருந்த அறம் பெரிது,அதை எண்ணியவாரே சென்றேன் சட்டென்று துன்பங்கள் சில்லரையானது . ஓர் எதிர் பாரா பயணம் நமக்கு மனிதர்களையும் மனிதத்தையும் காட்டும் என்பது எவ்வளவு உண்மை, பேராசை கன்டக்டர், குடிகாரன் , டீ கடை அண்ணன், வழி போக்கர்கள், கழிவறை பொறுப்பாளன்,சந்தோஷ் , இம்ரான் மற்றும் முதிய அம்மா என நிறைய அனுபவத்தின் மூட்டையோடு சென்னை பேருந்திற்காக தேடுகையில் தெய்வம் போல ஒருவர் வந்தார்
'தம்பி ... சென்னையா ?? 'என்றார் . நான் தலை அசைத்தேன்.
'ஏ.சி . பஸ் வாங்க . 'என்றார்.
'அண்ணே .. மணி இப்போ 4 ஆகுது 10.30 கெல்லாம் போகணும் அதுக்கேத்தாமாதிரி சொல்லுங்க'
'அட ... 9 மணிக்கு ரீச் ஆயிடும் பா .. புதுசா நீ ' என்றார்.
பெரிய பேருந்து நின்றது ஏறுவதற்கு முன்பு 350 ரூபாய் பயணத்திற்கு 20 ரூபாய் டிப்ஸ் என வாங்கிக்கொண்டனர், "வர மோது தான் பயங்கரமான சொதப்பல் இப்பயாவது சரியா போவோம்" என்ற மைண்ட் வாய்சுடன் உள்ளே சென்றால் நான் தான் முதல் ஆள், சரியாக 5.00 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டது, எனக்குளே சிரித்துக் கொண்டு இந்த பயணத்தில் நடந்ததை அசைப் போட்டு சென்றேன் .

No comments:
Post a Comment