உன்னை
தோழனென்பதா ?
அதற்குமேலாக
ஊனென்பதா ?
நான்
என்ன சொன்னாலும்,
திட்டினாலும்,
கொஞ்சினாலும்,
அதை
வடிகட்டாமல் வடிவமாக்குகிறாயே,
உன்
கூர் முனையால்
தாளை முத்தமிடும்
போது
அது
பரிசுத்த காதலாக
மாறுகிறது
என்
உள்ளத்தில்..
இதை
எழுதும் க்ஷணத்தில்
கூட
இதயத்தின்
நரம்பில்
எழுதுவது போல
திகழ்கிறது,
சில
நேரங்களில்
நானா,
பேனா !
என
சிந்திக்கும் வண்ணம்
என்னுள் ஒளிருகிறாய்
தானா
நான்
எழுதும் பேனா !!!
No comments:
Post a Comment