Translate

Saturday, May 17, 2014

December 6, 1992


   அது பலரக்கு மாலைப் போட்ட ஒரு மாலை , எல்லோரும் அங்கும் இங்கும் ஆகா உயிரைப் பிடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள்.
      
       எழிலுக்கு தங்கச்சி பாப்பா பிறந்திருக்கிறது அவன் அப்பா மருத்துவமனையில் இருக்கிறார், "டேய் சிவா  இங்க அண்ணி நல்ல இருக்கு பாப்பாக்கு தன் எதோ இன்பெக்ஷன்னு சொல்றாங்க , எழில கூட்டிகிட்டு ஹாச்பிதிரிக்கு வரியா ? " என எழிலின் அப்பா பீ.பீ நம்பருக்கு அழைக்க "கிளம்பி வறேன் ண்ணே " என்று சொன்னார் சிவா.  ஐந்து வயது சிறுவன் எழில் அவன் சித்தப்பா சிவா இருவரும் திருவல்லிக்கேணியில் உள்ள கோஷா மருத்துவமனைக்கு விரைந்து  கொண்டிருந்தார்கள். அது ஒரு மதியம், பெடல் வைத்த  டிவிஎஸ் 50யில் இருவரும் பயணித்தார்கள் , சிவா பெட்ரோல் போடா ஓரங்கட்டினர், "இந்தா தம்பி ஒரு லிட்டர் போடுப்பா" என்றார்,
"20 ரூபாயிக்கு சில்லரை இல்ல ணா " என்றான் பெட்ரோல் பங்க்கு பையன், "சரி 20 ரூபாய்க்கும் போடு.., ஆறு மாசத்துக்கு முன்னாடி தான் ஒரு ரூபா ஏத்திநீங்க, இப்போ 16 ரூபாயில இருக்கு இப்படியே போன 50 ரூப ஆயிடும் போல "  என்றார் சிவா சலிப்புடன். அமைதியாக கவனித்த எழில் "எப்போ ஹாஸ்பிட்டல் வரும் சித்தப்பா ?" என்று நச்சரித்தான் "தொ வந்துரும் டா " என்றார் சிவா.
       மருத்துவமனையில் நுழைந்தனர், சிவா எழிலைக் கூடிக்கொண்டு வார்டுக்கு நுழைய, அப்போது ஒரு நர்ஸ் ஒரு பிஞ்சு விரல் கொண்ட சிசுவை எடுத்துக்கொண்டு சென்றார், கண்கள் சிவக்க அழுது கொண்டே வந்தார் எழிலின் தந்தை, " என்னாச்சு ண்ணா .. ண்ணா " பதட்டத்துடன் சிவா. "போயிடுச்சு டா பாப்பா" என மெலிந்த குரலுடன் கண்ணீர் கன்னத்திலிருந்து தரையை முத்தமிட்டது. சிவாவும் அழ தொடங்கினார்,
"பத்து மாத கனவு வீட்டில்
 வாடகை இல்லாமல் இருந்து
 இருந்த வீட்டை பார்க்க விருப்பமில்லையோ"
      என்று  மனதின் அறையில் எதிரொலித்தது இதை பார்த்த எல்லோருக்கும். எழிலின் அப்பா சுதாரித்துக்கொண்டு "சிவா , எதோ கலவரமா நீ எழில் கூட்டிட்டு போ நான் இங்க இவள பாத்துக்குறேன், சீக்கிரமா போ டா " என்று சொல்லி எழிலை கட்டித் தழுவினார். ஒன்னும் புரியவில்லை எழிலுக்கு நம் மக்களைப் போல். " ண்ணா நான் இருக்கேன் இங்க" என்ற சிவா சொல்ல, முஸ்லிமுக்கும் ஹிந்துக்களுக்கும் எதோ சண்ட டா , நிலவரம் சரியில்ல நீ கிளம்பு டா" என்று சொன்னார் எழிலின் அப்பா. வருத்தப்பட்டு டிவிஎஸ் ஸ்டார்ட் செய்து எழிலை முன்னே உட்கார வைத்து கிளம்பினார் சிவா.
    தெருக்களில் யாரும் இல்லை , ஆங்காங்கே மக்கள் ஓடிக்கொண்டு இருக்க, வண்டி பாரதியார் சாலையை கடந்தது, 30 க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய சகோதரர்கள் வழி மறித்து சிவாவையும் எழிலையும்   அறுப்பு போட வண்டியை மடக்கினர். " உன் பேரு என்னடா " என்றார் ஒருவர், சிவா என்று சொன்னதும் , எழிலை தள்ளிவிட்டு சிவாவின் சட்டையை கிழித்து அடிக்க தொடங்கினர், எழில் " சித்தப்பா சித்தப்பா என அழ ஆரம்பிக்க" இதையும் போடணும் டா என ஒரு சகோதரர் கூற, சிவா எல்லோர் காலையும் தன் குருதி சிந்த பிடித்து " சார் சார் பச்சை குழந்த சார் விற்றுங்க சார் ...." என இரத்தமும் கண்ணீரும அபிஷேகமானது. தொலைவில் இருந்து மூச்ரைக்க ஓடி வந்த ஒரு சகோதரர் " ஹே .. யாரோ செஞ்சதுக்க இவங்க என்னடா பண்ணுவாங்க" என சிவாவையும் எழிலையும் பத்திரப்படுத்த முயற்சித்தார், அவருக்கு பயங்கரமான அரை விழுந்தது, " நம்ம எவ்ளோ குழந்த அனாதனு  தெரியுமா உனக்கு, நாடு முழுக்க பிண வாட எவ்வளோ அத்தர் போடுவ" என்றார் ஒருவர். " என்ன கொன்னுட்டு இவங்க ரெண்டு போரையும் எதாவது செய்ங்க டா " என்றார். போராடி சிவாவையும் எழிலையும் காப்பாற்றினார். "சார், இவன் தங்கச்சி செத்துபோச்சி சார், மனசுல புல்லா ரத்தம் இப்போ உடம்புலயும்,  இவன பத்திரமா கூட்டிட்டு போனும் சார் " என்று அழுதார் சிவா. அந்த நபர் " நீங்க வாங்க உங்கள நான் பத்திரமா உங்க ஏரியா வுல செகிரேன்" என்றார் சொன்னவாறு சேர்த்தார் அவர் பெயர் அப்துல்லா. சிவாவும் எழிலும் பத்திரமாக வீடு வந்தனர். இரத்தத்தோட வந்த சிவாவைப் பார்த்து அனைவரும் பதட்டமாயினர், சிவா எல்லோரிடம் இவர் தான் காப்பாற்றினார் என்று பெருமையாக கூறினார் குடிக்க அவருக்கு தண்ணீரும் குடுத்தார் .
     கிளம்பிய அப்துல்லா விடம் " சார் நான் அந்த முனை வரைக்கும் வறேன் எங்க மிருகங்க எதாவது உங்கள பண்ண போது " என்றார் சிவா.

    "ராமரும் அல்லா வும் வாழும் பிணங்களுக்கு எப்போ உயிர் ஊட்ட போறங்கன்னு தெரியல சிவா "  என்று சென்றார் அப்துல்லா .....
  "சிவாவும் அப்துல்லா தான் , அப்துல்லா வும் சிவா தான் மனிதநேயத்தில் "

" நானும் நீயும் பக்கத்து வீடுகரர்கள்
      வாடகை இல்லாமல் இருந்தோம்
      இருந்த வீட்டை யார் யாரோ
      சொந்தம் கொண்டடுகிறார்களே
       இது யாருக்கும் சொந்தமில்லை
        என்பதே உண்மை "

   







No comments:

Post a Comment