" இந்தியாவிற்கு 6 ஓட்டங்கள் தேவை இன்னும் ஒரே பந்து மீதமுள்ள நிலையில், தோனி கடைசிப் பந்தை எதிரிநோக்கி களத்தில் ! விளாசுவரா ? விடுவாரா ? என எதிர்பார்ப்பு பின்னி பெடலெடுக்க !! இல்லாத நகங்களைக் கடித்து , இருக்கை முனையில் இருகை ஒலியோடு பரபரப்பு எதிரொலிக்கும். தோனியின் உலங்கூர்தி() அடியால் பந்து வானோக்கி நிற்கும் மின் விளக்குகளை நலம் விசாரித்து , அரங்கிற்கு வெளியே விழும். இந்த தருணத்தில் , கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் ஆரவாரமும் , மகிழ்ச்சியும் தெருக்களில் பட்டாசாக , இனிப்பாக வெளிப்படும். தேசிய ஒருமைப்பாடு இதில் தானே தெரிகிறது"
கிரிக்கெட்டுக்கு தமிழில் துடுப்பாட்டம் என்று பொருள். இந்திய மக்களின் நாடி, குருதியெங்கும் பல ஓட்டங்கள் எடுத்து கிரிக்கெட் ஓடிக்கொண்டே இருகின்றது. தொலைகாட்சியில் பார்க்கும் போதே தொலைவில் இருக்கும் சச்சினுக்கு நம் மக்கள் அறிவுரை கூறுவார்கள்.
ஒவ்வொரு தெருக்களிலும் உடைந்த கண்ணாடி ஜன்னல்கள் எண்ணில் அடங்காது, கிரிக்கெட்டை முறையே பயின்று நாமும் சாதிக்க வேண்டும் என்று பல இளைங்கர்கள் இருக்கிறார்கள். டெல்லி , மும்பை , கொல்கத்தா , சென்னை என முக்கிய நகரங்களில் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் () மிக அதிகம். ஓவ்வொரு மாநில கிரிக்கெட் வாரியம் இத்தகையப் பயிற்சி முகாம்களை தனது கட்டுபாட்டில் வைத்திருக்கிறதா ? யார் நடத்துகிறார்கள் ? பார்ப்போம் விரிவாக.
சென்னையைப் பொறுத்தவரை கிரிக்கெட்டிற்கு பெரிய வரவேற்பு உண்டு. எல்லா பெற்றோர்களுக்கும் தன மகன் தோனி , சச்சின் போல உருவாக வேண்டும் என்பது கனவு. கடந்த 10 ஆண்டுககளில் கிரிக்கெட் பயிற்சி நாய் குடைப் போல் பெருத்துக் கொண்டே இருக்கிறது. 2004 ஆம் ஆண்டு கிரிக்கெட் பயற்சிக்கு வெகு சில பெற்றோர்கள் விருப்பமுடன் பணம் செலுத்தி தனது பிள்ளைகளைச் சேர்த்தனர். ஆனால், இன்றோ 70 சதவிகிதம் பெற்றோர்கள் தனது பிள்ளைக்கு மட்டைப் பிடிக்க ஆர்வமுள்ளதோ ! இல்லையோ ! கிரிக்கெட் பயிற்சிக்கு அதிக பணம் செலுத்தி சேர்கின்றனர். பத்தில் எட்டு பள்ளிகூடத்தில் இன்று கிரிக்கெட் பயிற்சி முகாம் நடந்து கொண்டிருகிறது , இதில் அந்த பள்ளிச் சார்ந்தப் பிள்ளைகள் மட்டும் அல்லாமல் மற்ற இளைஞர்களும் பயிற்சி பெறுவர். குறைந்தது 30 முதல் 100 வரை எண்ணிகையில் இருப்பார்கள், பயிற்சியலர்களே உரிமையாளராக திகழ்வார். இக்காலகட்டத்தில் இது பெரிய வியாபாரமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கோடை ஆரம்பித்தவுடன் கிரிக்கெட் பயிற்சி முகாம்கள் நடதுபவர்க்கு பண மழை தான் ! ஒரு பக்கம் ஐ.பி.எல் பார்த்து ஆர்வத்துடன் சேர்வார்கள் ;விடுமுறையை கிரிக்கெட்டுடன் கழிக்க ; விளையாட்டின் மோகத்தால் பெரிய அளவில் விளையாட வேண்டும் என்று பல இளைஞர்கள் சேர விரும்புவார்கள். இதை நன்கே உணர்ந்த ஒரு கூட்டம் தங்களது கிரிக்கெட் பயிற்சி முகாமிற்கு விளம்பரம் செய்வார்கள் , 45 முதல் 60 நாட்கள் வரை இந்த பயிற்சி நடை பெரும் . ஒரு நபரிடம் இருந்து தலா 6000/- முதல் 8000/- வரை கட்டணம் வசூலிப்பார்கள்.அது மட்டுமல்லாமல் , மேலும் நடைபெறும் போட்டிகளுக்கு தனி கட்டணம். எங்கோ ஒரு மூலையில் தான் கிரிக்கெட் பயிற்சி முறையாகவும் நியாமாகவும் நடகின்றது, உண்மையில் வசூல் ராஜா முகாம்கள் அதிகம். பெற்றோர்கள் விசாரித்து கிரிக்கெட் பயிற்சிக்கு தங்களது பிள்ளைகளை சேர்ப்பது நல்லது.எங்கு ஆர்வம் மிக அதிகம் உள்ளதோ , அங்கு தான் ஏமாற்ற்றம் கிலோ கணக்கில் இருக்கும் , ஏமாற்ற்றுபவர்கள் டன் கணக்கில் இருப்பார்கள் இது நிதர்சனமான உண்மை. தமிழக அளவில் விளையாட வைப்பதாக வாக்குறுதி கூறி பணம் பறிக்கும் பயிற்சியாளர்கள் அதிகம், தமிழக அளவில் விளையாட பல தேர்வுமுரைகள் உண்டு, எல்லா வயதிற்கும் உற்பட்டோர் தேர்வு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் (உ-14, உ -16, உ - 19, உ-22, உ -25 ) , இதை (TNCA) தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும்.தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட அளவில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களும் இத்தேர்வில் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு பிரிவிக்கும் 20 வீரர்கள் மட்டும் தான். பணத்திற்காக திறமையை கொலை செய்யும் கொலையாளிகள் உள்ளனர்.
TNCA தமிழ் நாடு கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் பயிற்சிக்கு விதிமுறைகளை விதிக்க வேண்டும் அதாவது எல்லா பயிற்சி முகாமும் TNCA வுடன் பதிவு செய்ய வேண்டும்; கட்டணம் படிமுறைவீதம் கொண்டு வரவேண்டும்; தகுதி வாய்ந்த பயிற்சியாளர்கள் இருக்க வேண்டும் . முதலியவற்றை நெறி படுத்தினால் பலரின் கனவையும் , பணத்தையும் பாதுகாக்கலாம். கிரிக்கெட்டின் தாகத்தால் நேரத்தையும் , செல்வத்தையும் செலவழித்து வரண்டு போன திறமைசாளிகள் வெயிலில் காயும் மட்டைகள் தான் !!!

No comments:
Post a Comment