Translate

Sunday, August 10, 2014

லிவ் தி மொமென்ட்


   ஒரு யானையும் அதோட பாகனும் பல டவுன்ல கலெக்ஷன் பண்ணிக்கிட்டு பிசியா சூத்திகிட்டு இருந்தாங்க !, அந்த யானை பெயர் கர்ணா அதோட ஓனர் ஜம்போ. கர்ணா குட்டிய இருக்கும் போது ஜம்போ தான் வளத்தான் அப்பறம் காசு ஆசைல வித்துட்டான் சில வருடம் கழித்து கர்ணாவ வாங்கினவன் அவன வெச்சி நிறைய சம்பாரிச்சிட்டு வெளியூருக்கு நட கட்ட ரெடி ஆனான் அப்போ திரும்ப ஜம்போ கிட்ட கர்ணாவ ப்ரீயா கொடுத்துட்டு போய்டான்.
   இப்போ ஜம்போ , கர்ணா வெச்சி தான் பொழப்ப நடத்துறான், பல நாள் கர்ணாவ பட்டினி போடுவான், இரக்கமே இல்லாம இருப்பான் ஜம்போ ஆனா கர்ணா நன்றியோட அவன் என்ன செஞ்சாலும் பொறுத்துகிட்டு தும்பிக்கையால ஆசிர்வாதமும் , ஈக்கும் கொசுககும் காதுல டாட்டா சொல்லிட்டு , சிரிச்சிட்டே பல பேருக்கு செல்பீ கொடுப்பான்!!

       ஒரு நாள் ஜம்போ "டாய் கர்ணா! உனக்கு நான் எதுவுமே பண்ணது இல்ல , எதாவது   கேளு டா" என்றான்.

 "ஓனர் , எனக்கு ஒரு வாரம் லீவ் வேணும்" ன்னு சொன்னான் கர்ணா.

" தொ டா , என்ன பண்ணபோற ஒரு வாரம் ?" என ஜம்போ கேட்க.

" ஒரே முது வலி ஓனர் , ஒரு வாரம் அப்படியே சுத்திட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த வாரம் வந்து உங்ககிட்ட ஜாயின் பண்ணிடறேன்" என்றான் கர்ணா.

"நான் கொஞ்ச நேரம் குனிஞ்சாலே முது வலிக்குது , நீ லைப் புல்லா குனிஞ்சிட்டே தான் இருக்க, அப்போ செம்மயா முது வலி இருக்கும்  , ஸோ யுவர் லீவ் கிராண்டட்" என ஜம்போ சொல்ல.

" ஓனர் , உங்கள மாதிரி ஆளுங்க தான் IT ல கொடி கட்டி பறகுறாங்க; நீங்க IT க்கு போங்க , செம்ம பிரைன் உங்களுக்கு, ரொம்ப தாங்க்ஸ் ஓனர் " என்றான் கர்ணா.

" அப்படியா !!! உனக்கு இனைல இருந்தே லீவ் , கரெக்டா ஒரு வாரம் கழிச்சு வந்திடனும்"

"சூர். ஓனர் "

கர்ணா மெல்லமாக நடக்க ஆரம்பித்தான், அங்கு வந்த நாய் ஒன்று
" என்னப்பா ஜாலி தான் , ஒரு வாரம் லீவ் .. ஆனா நீ திரும்ப இங்க தானே பிச்ச எடுக்கு வரணும் " என கேலியாக சிரித்து தீர்த்தது.
இதற்கு கர்ணா,
"என்னக்கு அடுத்த ஒவ்வொரு நிமிஷமும் 1 ஹவர் மாதிரி, அடுத்த நிமிஷத்துக்கு வாழப்போறேன். அடுத்த வாரம் வரத்துக்கு என் கணக்கு படி பல மாசங்கள் இருக்கு. கண்ணுக்கு தெரியாத கவலைய யோசிக்ரத விட , கண்ணுக்கு தெரியற சந்தோஷத்த அனுபவிக்கலாம் !!!
பாத்து போடா லூசு நாயே" என்று கர்ணா மகிழ்ச்சியாக நகர்ந்தான்.   

Live the moment !!

No comments:

Post a Comment