Translate

Wednesday, March 4, 2015

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 6

            
 தெளிவே உயர்வு !


              இளமையில் தெளிவு மிகவும் தொலைவு, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முடியுமா ? தெளிவில்லா மனதில் முடிவு எடுக்க முடியுமா ? தோல்விகளைச் சுமக்கும்  மூட்டையாக அனுபவங்கள் திகழும் அதிலிருந்து லேசாக தெளிவு தண்ணிப் பாம்பைப் போல் தலைக் காட்டும் ஆனால் வெகு சிலர் மட்டுமே தீர்க்கமாகவும் நிதானமாகவும் முடிவெடுப்பார்கள் இதனால் அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்ல இயலாது , அவர்கள் மற்றவர்களின் அனுபவத்தைச் சிந்திக்கும் சிந்தியலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இளமையில் தெளிவு ஒரு வரம் அதற்கு நாம் பொறுமை, எந்த தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு நிதானம் வேண்டும் இப்படி பட்டவர்களை நாம் சந்தித்திருப்போம் , நீங்கள் படிக்க போகும் நபர்களும் இந்த சாயலில் இருப்பார்கள் , இவர்களை வாசிக்கும் பொழுதும் உங்கள் வட்டாரத்தின் ஒரு நண்பரோ உறவினரோ நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன்.
      தேவ பிரகாஷ் ,லயோலா கல்லூரி நண்பன் கணித பிரிவு. மிகவும் அருமையாக படிப்பான், பனிரெண்டாம் வகுப்பில் 1134 மதிப்பெண்கள் வாங்கினான். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த BE யின் மோகம் அதிகரித்தது, 700 மதிப்பெண் வாங்கினவன் தேர்வில் தோல்வியுற்றவன் இப்படி தங்களால் பொறியியல் தாக்கு பிடிக்க முடியுமா என்று சற்றே சிந்திக்காமல் பெருமைக்காகவும் தன் நண்பர்கள் பொறியியல் தேர்வுசெய்துள்ளர்கள் என்பதாலும் , பெற்றோர்களின் கட்டாயத்தாலும் தெளிவில்லாத முடிவு எடுத்து அவதிப்பட்டவர்கள் ஏராளம், இச் சூழலில் 1134 மதிப்பெண் எடுத்து இளங்கலை கணிதம் தேர்வு செய்தான் தேவா, அவனது பெற்றோர்கள் BE என்ற முடிவில் இருந்தார்கள் ஆனால் அவனது முடிவில் தெளிவும் தீர்கமமும் இருந்தது. ஒரு நாள் தேவாவிடம் "ஏண்டா உனக்கு ஈசிய இன்ஜினியரிங்  சீட் கெடச்சிருக்கும் அதுவும் அண்ணா யூனிவர்சிட்டிலயே கெடச்சிருக்குமே? " என ஒரு நண்பன் கேட்டான். அதற்கு தேவா "பாதிபேரு BE ன்னு விழறாங்க யோசிக்காமலே , நமக்குன்னு ஒரு விஷன் வேணும் டா எனக்கு மாத்ஸ் பிடிக்கும் அதானல இங்க அப்பளை பண்ணேன் " என்று சொன்னது எனக்கு இந்த வயதில் தெளிவா என வியந்தேன். மிக நன்றாக படிக்கக்கூடியவன் தேவா எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களையும் நல்ல மதிப்பெண் வாங்க வைத்தான், மூன்றாண்டு முடியும்  தருவையில் எல்லோரும் காம்பஸ் இன்டர்வ்யுவிற்கு தயாரானார்கள் இவன் மட்டும் போகவில்லை, சென்றிருந்தால் . டி கம்பனிகளுக்கு பெருத்த லாபம் வாய்த்திருக்கும். எல்லாரும் MCA MBA என மேற்படிபிற்கு வித விதமான கூடங்களில் சேர்ந்து TANCET மற்றும் சில நுழைவு தேர்வுக்கு தயாரானார்கள், இதற்கெல்லாம் அவன் போகாமல் முதல் மதிப்பெண் வாங்கும் அறிவு அவனிடம் இருந்தது. அந்த சூழலில் அவனிடம் நான் " என்ன மச்சா என்னதான் பிளான் பண்ற ? MCA வும் இல்ல MBA வும் இல்ல ன்ற ஆனா TANCET க்கு மட்டும் ஏன் அப்பளை பண்ண ? "
அதற்கு "மச்சா வீட்ல ஒரே தொல்ல MCA ன்னு சொல்றாங்க , எனக்கு சுத்தமா பிடிக்கல சும்மா பேருக்கு அப்பளை பண்ணேன். எப்படியும் நெகடிவ் ஸ்கோர் அதனால தப்பு தப்பா எழுதிட்ட மார்க் கம்மி ஆயிடும் அப்பரம் வீட்ல என் இஷ்டத்துக்கு விட்ருவாங்க " என்றான்.
"என்ன தாண்ட உன் இஷ்டம் ?" என நான் கேட்க்க
"மச்சா , Msc maths பண்ணனும் , ஸ்கூல் பசங்களுக்கு கிளாஸ் எடுக்கணும் .. எல்லாருக்கும் நல்ல கல்விய சொல்லிக்கொடுக்கணும் " என்றான்
அன்று அவனிடம் இருந்த நட்பு மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தியது, இன்று அவன் சொன்னது போல ஒரு பள்ளியில் கணக்கு வாத்தியாராக மிகவும் மகிழ்ச்சியின் ஒளியாக இருக்கிறான். அவன் நினைத்தால் கல்லூரிக்கு கூட சென்று வகுப்பு எடுக்கலாம் ஆனால் தெளிவாக இருந்து சமூகத்திற்கு ஏணியாக இருக்கிறான்.
தேவா ஒரு புரட்சி தான் ..!
   
     தேவாவைப் பற்றி கூறினால் ஜான் சபாஸ்டின் மனதின் வாசலில் நின்று என் நினைவில் கோலம் போடுகிறான், ஜான் சபா என்ற 'சபா' இந்த பெயரில் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி இருக்கும், அவன் சோகமாக இருந்ததே இல்லை மற்றவர்கள் சோகமாக இருந்தாலும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவான். என்றும் புன்னகை இசையின் சபா எங்கள் சபா. பொருளாதரத்தில் சற்று பின்னடைவுடன் இருந்தது சபாவின் குடும்பம், இவன் சம்பாரித்து தான் எல்லாம் செய்யவேண்டிய சூழ்நிலை.தெளிவான முடிவு படிப்பின் தொடக்கத்திலயே "நான் வேலைக்கு போய்டுவேன் மச்சி நமக்கு PG லாம் வேண்டாம்" என்ற சொல் எங்களுக்கு இன்னும் எதிரொலிக்கிறது. சிறு வயதிலே குடும்ப நிலையறியும் மனமும் குணமும் சிலருக்கே! கல்லூரி படிப்பும் முடிந்தது , வேலைத் தேடி இவன் நிம்மதியை தொலைத்தான், அயராத உழைப்பில் சத்யம் கம்பெனியில் வேலை கிடைத்தது ஹைதராபாத் சென்றான் மூன்று மாதங்கள் நன்றாக சென்றது, மதமானால் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவான், திடீரென்று சத்யம் கம்பெனி கடனில் மூழ்கியது , இராமலிங்க ராஜு செய்த தவறு அப்பாவி சபாவை பாதித்தது. பாதிக்கும் மேற்ப்பட்டோரை வேலையிலிருந்து நீக்கினர் அதில் சபாவும் ஒருவன். முற்றிலும் உடைந்தான் ஆனால் நோருங்கவில்லை, தெளிவாக இருந்தான் வீட்டில் தன் வேலை போனதை சொல்லவில்லை, ஒரு மாதம் வேலை தேடினான் நண்பர்கள் உதவினார்கள், சம்பளம் என்று கடன் வாங்கிய பணத்தை வீட்டிற்கு அனுப்பினான், சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு வேலை கிடைத்தது.இன்று இன்போசிசில் பணிபுரிகிறான் தன் குடும்ப பொருளாதார சூழலையும் உயர்த்தினான். இதையெல்லாம் விட தான் காதலித்த பெண்ணையே திருமணமும் செய்தான் இது பெரிய தெளிவு !!! இன்று லண்டனில் வேலை செய்கிறான் சபா, அந்த பெயருக்கு அவ்வளவு புத்துணர்ச்சி ஆம் !!! சபாவைப் போல் உங்கள் வட்டாரத்தில் யாரோ ஒருவர் தெளிவாக இருக்ககூடும் அவர்களை நினைவுக் கோலம் போடுங்கள் உங்கள் மனதின் வாசலில் புத்துணர்ச்சியுடன் நிற்பார்கள்!

தெளிவே உயர்வு !!

No comments:

Post a Comment