Translate

Saturday, March 14, 2015

சூவிங்க் கம்

வெளிப்படையான, நேர்த்தியான படைப்புகள்
சமூகத்திற்கு ஒரு சூவிங்க் கம் போல,
கண்டபடி மெல்லும்
வாய் மனக்க ,
இல்லாத குறையைத் தேடி எல்லோருக்கும் தெரியும்படி காரித் துப்பி,
இருக்கும் நிறையை யாருக்கும் தெரியாமல் முழுங்கும் !
சக்கை ஏதோ ஒரு செருப்பின் கீழ் ஓட்டும்
நிச்சயம் ஓட்டும் !!
அதி மேதாவிகளின் வாயை விட செருப்பு மேல் !!
இந்த நார வாய்கள் வலிக்கும் வரை
வெளிப்படையான, நேர்த்தியான படைப்புகள் வரும் !!

No comments:

Post a Comment