வெற்றியும் தோல்வியும் வானிலை போல மாறிக்கொண்டே இருக்கும், நம்மில் பலர் ஒரு சில முயற்சிகளில் ஈடுபட்டு தோற்றதும் வெறுத்து துவண்டு இருப்போம் அதன் தாக்கம் வடிய சில நாட்கள் ஆகும் இன்னும் சிலர் அடுத்தென்ன என்ற நிலையில் வெற்றியை நோக்கி அம்பை தயார் செய்வர். விடா முயற்சியுடன் நாம் பயணித்தால் ஒரு போர் வீரனின் பாங்கு நம்மிடையே வளரும்.
என் சிறிய பயணத்தில் சில போர் வீரர்களை சந்தித்திருக்கிறேன்.
என் பள்ளி நண்பன் கிருஷ்ண மூர்த்தி , கிச்சு என்று அழைக்கும் எங்கள் நட்பு வட்டாரம். ஒவ்வொரு முறை கிச்சுவை பார்க்கும் போது உறுமெய்ம்மை ஏற்படும், அவன் யாரிடம் பேசினாலும் தேவை அறிந்த பேசும் பாங்கு மேலும் சொல் ஆற்றல் வாய்ந்து தூவும் சாரல் போல் ரம்யமாக இருக்கும். இதெல்லாம் ஒரே நாளில் வருவதன்று அனுபவத்தால் மட்டுமே ஈட்ட முடியும்.
கிச்சு, பதினோராம் வகுப்பு சேர்கையில் கணினி பிரிவு எடுத்தான் பின்னர் குடும்பத்தாரின் விருப்பத்தின் அடிப்படையில் உயிரியல் பிரிவு தேர்வு செய்தான், அவனின் சித்தப்பா மருத்துவர் ஆதலால் இவனையும் மருத்துவ படிப்பிற்கு முயற்சிக்கலாம் என்ற முனைப்பு. அவர்கள் தவறான தேர்வு நிகழ்தினார்களோ என்ற ஐய்யம் எனக்கு இருந்தது அவன் கணிதத்தில் மிகவும் திறமைசாலி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 180 மதிப்பெண் எடுத்தான் இதுவும் ஒரு சான்று, இன்று வரை அவனிடம் இதை பற்றி சொன்னதில்லை. படிக்க வேண்டும் என்ற முனைப்போடு கலை நிகழ்ச்சிகள் என பன்னிரெண்டாம் வகுப்பின் போது எதிலிலும் ஈடுபடவில்லை. ராஜ் பரத் , லக்ஷ்மி நாராயணன் மற்றும் கிச்சு இவர்கள் சேர்ந்தால் பயங்கர ரகளையாக இருக்கும். பள்ளி நாட்களில், நான் கிச்சுவிடம் அந்தளவு நெருக்கமாக பழகியதில்லை இருந்தாலும் அவனை மிகவும் கவனித்துள்ளேன். பன்னிரெண்டாம் தேர்வு நடந்து முடிந்தது பல ஏமாற்றங்கள் காத்துக்கொண்டிருந்தது. மிகவும் குறைவான மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றான், மருத்துவர் எனும் கனவு கடற்கரை மணல் கோபுரமாய் சரிந்தது. அவனது நண்பர்கள் இவனை விட அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சிபெற்றார்கள். கிச்சு சற்று கூட மனம் தளரவில்லை, மறு ஆண்டு மீள் தேர்வு எழுத முயற்சித்தான், மிகவும் தைரியமான முடிவு.
கிச்சு, மீள் தேர்விற்காக முயற்சிக்கும் போது தனது சகாக்கள் கல்லூரிக்கு பிரவேசித்தனர். அப்போது அவனுடைய மன நிலை எப்படி இருந்திருக்கும் தவறான முடிவா இது ? என்ற கலக்கம் அதிகம் படறி இருக்கும். வினோத் என்ற நண்பன் இருந்தான். கரடிவிடம் தனது நண்பன் ராமுவை மாட்ட செய்து தப்பிப்பான் சோமு இந்த கதை நமக்கு தெரியும், இதில் வரும் சோமுவின் முக்கால் வாசி கதாபத்திரம் தான் வினோத். கிச்சுவை ப்ளே ஸ்டேஷனிற்கு அழைத்து சென்று அந்த விளையாட்டிற்கு அடிமை செய்தான். தேர்வு நெருங்கியது, தேர்வும் எழுதினான் கிச்சு.
சோதனையின் வலை கிச்சுவிற்கு தானோ? வருடம் 2005 , மீள் தேர்வில் முந்தைய தேர்வின் மதிப்பெண்ணை விட குறைவு. இடிமேல் இடி, ஆனால் அவன் துவளவில்லை, மீள் திருத்தத்திற்கு முறையிட்டான். அன்றைய அதிமுக அரசு மீள் தேர்வை ரத்து செய்து , பழைய தேர்வு தான் கணக்கில் எடுக்கப்படும் என்ற ஆணை பிறப்பித்தது. சோதனை வலையை சாதனையாக மற்ற ஒரு சந்தர்ப்பம், கோடியில் ஒருவனுக்கு மட்டும் தான் இந்த வைப்பு கிட்டும், மீள் தேர்வின் மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பித்து பழைய சான்றிதழை வாங்கினான் , RMK கல்லூரியில் 2005 ஆம் ஆண்டே சேர்ந்தான்.
இது வெறும் அதிர்ஷ்டமோ தற்செயலோ அல்ல, ஒருவனின் விடா முயற்சிக்கு கிடைத்த கூலி. இத்துடன் இவன் சோதனையின் தொடர்ச்சி பாகம்-2 ஆகா தொடர்ந்தது. ஸ்கை குவெஸ்ட் என்ற MLM இல் சேர்ந்து நட்பு வட்டாரத்தையும் சேர வற்புறுத்தினான் அதில் நானும் ஒருவன் ஆனால் எனக்கு உடன்பாடு இல்லை , நட்பு முறியும் பணத்தினால் என்ற யோசனை எழுந்தது. அதே போல பல நண்பர்களையும் இழந்தான் கிச்சு. ஸ்கை குவெஸ்ட் இல் நன்றாக வளர்ந்தான் மேல நாட்டுக்கும் சென்று வந்தான். இன்னும் காலம் கழிந்தது இவனுடன் இரண்டு பேர் சேர்ந்து ஒரு MLM வியாபாரம் ஆரம்பித்தனர், ஓராண்டு சுமாராக போனது , இதிலும் இவனது சகாக்கள் இவன் பணத்தை ஏமாற்றினார். இத்துணை சம்பவங்கள் ஒரு மனிதனை உரு கொலையா வைக்காதா ? என்ற கேள்வி என்னுள் இருந்தது. விடா முயற்சி எனும் கடைச் சொல்லை படுத்தி , கடினமான உழைப்பினால் இன்று ஒரு பெரிய மென் பொருள் நிறுவனத்தில் TL ஆகா உள்ளான்.
நான் ரசித்த பலருள் ஒருவன் கிச்சு, நீங்கள் இந்த பதிவை வாசித்திருந்தால் நிச்சயம் உங்களுக்கு வெற்றியின் கடவு சொல் தெரிந்திருக்கும் .

No comments:
Post a Comment