Translate

Sunday, October 5, 2014

சலவைக்கு போட்ட மனசு.


     பெரும்பாலும் மக்கள் நமக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் ஆனால் சிலர் மட்டும் எதற்கும் கவலைப்படாமல் தனக்கு என்ன வாய்த்ததோ அது போதும் என்று நகர்வார்கள். அவர்களுக்கு நல்லது கெட்டது  தெரியாமல் இருக்கும் மனசு, யாராவது அவர்களை கிண்டல் செய்தாலோ , ஏமாற்றினாளோ அவர்களின் வருத்தம் அறவே இருக்காது.
இதைபோல் நம் பயணத்தில் பலரை சந்தித்திருப்போம்.

    பிரவீன் , என் பள்ளி நண்பன். யாரையும் தவறாக எண்ணாத மனது. எல்லோரும் இவன் மீது உரிமை கொண்டாடி கேலி செய்வார்கள், இதை அவன் "நம்ப நண்பன் தானடா அவன் " என்று மெய்சிலிர்க்கும் பதிலை கொடுப்பான். இந்த மனது யாருக்கு வாய்க்கும். பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் போது பள்ளியில் அறிவியல் கண் காட்சியொன்று நடந்தது, அதற்கு தோரணை மற்றும் பல அலங்கார பொருள் வாங்க வேண்டும் என்று என்னிடம் ஜமீல் சார்(கணினி வாத்தியார்) கூறினார் இதை கேட்ட பிரவீன் எங்களின் தோழி மேனகா ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு என்னை தேடினான், அப்போது நான் வேறு ஒரு அலுவல் வேலையாக பள்ளியிலேயே இருந்தேன் , நான் பான்சி ஸ்டோர் சென்றேன் என்று நினைத்து  என்னை தேடி மேனகாவின் ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு பள்ளியை விட்டு கண்காணிப்பாளரிடம் செய்தி கூறி வெளியே சென்றான். சைக்கிள் கூட அவனுக்கு செரியாக ஓட்ட தெரியாது, முதல் முதலில் மோட்டார் சைக்கிள் அனுபவம் ஒரே குஷி தான் அவனுக்கு. ஸ்கூட்டியின் கியர் எங்கே என்று ஓட்டிக்கொண்டே தேடினான், அக்செலரேட்டர் மிகவும் அதிகமாக திருப்பி விட்டான், பின் பிரேக் தான் பிடிக்கும் என்று சொல்லி கொடுத்திருக்கிறாள் மேனகா ஆனால் நம் அறிவாளி பிரவீன் முன் பிரேக்கை பிடித்திருக்கிறான். அன்று பார்த்து அந்த இடத்தில தார் ரோடு போட கோபுரம் போல் கருங்கற்களை கொட்டி இருந்தனர், அதில் முட்டி வண்டியை நிறுத்திடலாம் என்று நினைத்து விட்டான் வண்டியை இதை பார்த்த மக்கள் யாவரும் சர்கஸ் பார்த்த திருப்தி, டெரிமினேட்டர்-2 வில் கடைசி காட்சியில் அர்னோல்ட் முகம் போல் பள்ளிக்கு திரும்பி வந்தான். கை , முகம் ஒரே ரத்தக்களறி. இதில் பெரும் வேடிக்கை வண்டியை வரும் போது ஒட்டி வந்தான். எல்லாரும் பதைத்தனர், மேனகாவின் அழுகை மட்டும் அடங்கவில்லை, பிரவீன் அவளிடம் சென்று " எனக்கு உண்டான காயம் தன்னால ஆறிடும்.." என்று கூற
"டேய் , பண்ணி .. என் பைக் போச்சு டா " இந்த வரிகள் மேனகா கூறுகையில் இன்று கூட சிரிப்பை அடக்க முடியவில்லை.
     வெள்ளந்தி மனிதருள் பிரவீனும் ஒருவன் , எல்லவற்றையும் சுலபமாக நினைக்கும் மனசு சலவைக்கு போட்ட மனசு தான், பிரவீன் இன்று பெரிய தகவல் தொழில்நுட்பத்தில் பணி புரிகிறான். சமீபத்தில் திருமணனும் முடிந்தது மகிழ்ச்சியாக உள்ளன்.

       கபிலன், இவர் என் பழைய அலுவலக தோழர் என் உடன் பிறவா சகோதரர். நான் சந்தித்த மிக சிறந்த மனிதர், இவரும் சலவை மனசுக்காரர். உள்ளே ஒன்று வைத்து வெளியே பேசும் மனிதர்கள் தான் அதிகம் , என்றுமே ஒரே பேச்சு இவரிடம். கபிலன் எனக்கு அறிமுகம் செய்த புத்தகம் ஏராளம், குழந்தையின் நுனி விரல் பிடித்து நடை பழகுவது போல என்னை இலக்கியத்துக்கு அறிமுகம் செய்தார், இவரின் ஊக்குவிப்பால் தான் என் முதல் கட்டுரை வெளியே வந்தது, மனம் திறந்து பாராட்ட கூடிய மனிதர் கபிலன்.
      அவர் குழந்தையின் பிறந்த நாள் வந்தது, தனது நெருங்கிய நண்பரிடம் DSLR கேமரா வாங்கினார், பிறந்த நாள் முழுவதும் படம் பிடித்தார் மறு நாள் கேமராவை கொடுக்க வேண்டும், மாறாக கேமரா கிழே விழுந்து நொறுங்கியது அவர் ஸ்தம்பித்து போனார். என்னிடம் தான் முதலில் சொன்னார், " என் நண்பருடைய நம்பிக்கைய உடச்சிட்டேன் பவித்ரன் " என்று கூறி அழ ஆரம்பித்தார், அவரால் அதற்கான பணத்தையோ அல்ல புதிதாக வாங்கி தந்திருக்க முடியும் ஆனால் அவரின் உணர்வு எவ்வளவு உணமையானது என அன்று உணர்ந்தேன்.

     இதை போன்ற சலவை மனசுக்கரர்கள் உங்கள் வட்டாரத்தில் இருப்பார்கள், இவர்களை பார்த்தல் நன்றாக பாராட்டுங்கள் இவர்களெல்லாம் மிகவும் அரிது.      

No comments:

Post a Comment