"சிந்தையிலுள்ள மையினால் ,
பேனா
சிந்தும் இரத்தம்
வாழ்வின்
சித்தம் ..."
*****************************************
"எழுத்தே,
என்
ஆருயிர் நண்பனே !!
வாழ்விலுள்ள
சந்திப்பிழைகளை யார்
திருத்துவார் ?
முட்டாளே,
என்
அர்தமற்ற நண்பனே !!
மகிழ்ச்சியெனும்
வைட்னர் உள்ளதே !!
நீ
என்றரிவாயோ .... "
*****************************************
"வேண்டாமென்றாலும்
நெருங்கி வரும்
நினைவு,
வேண்டுமென்றாலும்
தூரம் செல்லும்
நிம்மதி !
வரவேற்பரையில்
துன்பம் அமர ,
வாசலில் இன்பம் நிற்கும் !
இன்னல்கள்
மின்னலாய் தாக்கும் ,
மகிழ்ச்சியின்
கண் பொசுங்கும்,
குரோதம்,
வன்மத்தின்
முகங்கள் வினாயெழுப்ப,
குருடனாய்
விடைக் கொடுத்தேன்"
No comments:
Post a Comment