Translate

Thursday, December 25, 2014

மேன்மை ஒரு உயரப் பறக்கும் பறவை !!

        நன்றாக பள்ளி , கல்லூரி படிப்பை படித்தால் நல்ல வேலை கிடைக்கும் அதன் பின் கை நிறைய சம்பாதிக்கலாம் இப்படியே வாழ்கையை ஓட்டலாம் என்பது  நம்முடைய அடிப்படை தீர்மானம் இதை தப்பு கூறவில்லை, நன்றாக சம்பாதித்தல் மேன்மை வருமா ? இல்லை இன்னும் பேராசை வருமா ? மேன்மை குணம் சிலரின் நற்பண்பு , சிறுமை குணம் பலருடைய பேராசையின் ஆணி வேர். நம் அன்றாட வாழ்வில் வேலைக்கு செல்கிறோம், தினம் தினம் புலம்பும் விஷயம் மேலாளர்கள் , உயர் அதிகாரிகளின் ஆதிக்கம். நமது  உழைப்பை சுரண்டி அவர்கள் சட்டைப் பையில் போடும் பலர் அலுவலகத்தில் இருக்கின்றனர், இவர்களின் இயலாமை மிகவும் வருத்தம் அளிக்கும். இப்படி பட்ட உலகத்தில் மேன்மையான உயர் அதிகாரிகள் அபூர்வம் தான், பேருந்து பயணங்களில் காணும் மனிதர்களைப் போல என் சில வேலை பயணங்களில் பல மேலாளர்களை கடந்துள்ளேன். இதை வாசித்தால் உங்கள் வாழ்வில் சந்தித்த அந்த மேன்மை மனிதர்கள் முகம் சற்றே நினைவை தட்டும்.

              கஜன் , என்னுடைய முதல் சிறிய மென்பொருள் நிறுவனத்தின் TL (குழு தலைவர்) . இவரின் குணாதிசயம் வியப்பிகுரியது. மிகவும் திறைமை வாய்ந்தவர். VB யை தன் சட்டைப் பையில் போட்டு திரிவார். அவர் வைத்திருக்கும் அலைபேசி எண் இறுதியில் 7744 என்று முடியும் அதே போல் அவர் இருசக்கர , நான்கு சக்கர வாகனம் எல்லாம் 7744 தான், மிகவும் வித்தியாசமான மனிதர். நான் அரட்டை அடிக்கும் போது எண் குரல் உய்ரந்திருக்கும் எல்லோரையும் கிண்டல் செய்து நேரம் போகும் அவரும் நன்றாக சிரிப்பார் , என்னக்கு VB என்றால் என்ன கூட தெரியாது அவர் வேலை கொடுத்தால் ஊமையாக மாறிவிடுவேன் அதை "பேசும்போது மட்டும் வாய் அப்படி இருக்கு வேல கொடுத்த வாய் இருக்கனே தெரியல" என்று சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. அவரும் நானும் RX 100 பைத்தியங்கள், நாள் பூர்த்தியாக பைக் தான் பேசுவோம். கஜன் அந்த சமயத்தில் காதலித்து இருந்தார் திருமணத்திற்கு தேதி பாத்துக்கொண்டிருன்தனர் அவர் வீட்டார். நான் ஒரு மனகசப்பின் பேரிலும், வேலை சுத்தமாக தெரியவில்லை எனக்கு ஸ்ரீநாத் என் நண்பன் அவன் என்னக்கு அதீத உதவி செய்தான் ஒன்னுமே தெரியாமல் கூனி குறகி போனேன், வேலையை விட்டேன் ஒரே ஒரு மின் அஞ்சல் வேலையே விடுகிறேன் என்று. கஜன் சாருக்கு எனக்கு போன் பண்ண வேண்டும் என்று அவசியம் இல்லை தொடர்ந்து ஐந்து நாள் அழைத்தார் ஆனால் நான் பேசவே இல்லை. ஸ்ரீநாத் என்னிடம் "டேய் கஜன் உன்ன வர சொல்லறாரு டா, ஈசியா கத்துக்கலாம்" அப்படியும் நான் எதுவும் சொல்லவில்லை. இரண்டு மதம் போனது வேறு வேலை தேடிக்கொண்டிருந்த சமயம், கஜன் சாரிடம் போன் வந்தது "டேய் , எனக்கு திருச்சில மரேஜ் நீ அவசியம் வரணும்" என்று சொன்னார். நான் மிகவும் கனத்த நேரம் அது, ஒருவர் எவ்வளவு மேன்மையின் உச்சமாக இருந்தால் மதிக்காத என்னை தன் திருமணத்திற்கு அழைப்பர். அவரின் மேன்மை குணத்திற்கு இன்னும் பல தூரம் செல்வார் கஜன்.
  
      அசோக் , நான் பணிபுரிந்த இன்னொரு மென்பொருள்  நிறுவனத்தின் மேலாளர். வெகு சிலர் மட்டுமே நம் விழியன் கரு மணியைவிட்டு அகல மாட்டார் அதில் அசோக்கும் ஒருவர், மனித நேயத்தின் உச்சம். அவரிடம் அவ்வளவாக உரையடினதில்லை, அந்த நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணி புரிந்தார், வேலையை விட்டு செல்லும் இறுதி நாட்களில் மட்டுமே நான் அவரிடம் உரையாடினேன். அவரின் நிறுவனத்தின் இறுதி நாளில் கண் கலங்கி வெளியே சென்றார், சில மாதங்கள் முன்பு என் குழுவில் இருக்கும் ஒரு நபர் மிக முக்கியமான பைல் ஒன்றை டெலீட் செய்தான் , ஒரு விரோதத்தின் காரணமாக அதை செய்தான். அது ப்ரொடக்ஷன் டேட்டா என்று சொல்வார்கள் , டெலீட் செய்து அன்று தான் அன்சைட் மேலாளருக்கு அந்த டேட்டாவை கொடுத்து ப்ரோஜக்ட் வாங்க முடியும்.
ஷ்யாம் என்ற நண்பர் தான் கண்டு பிடித்தார்  "டேட்டா மிஸ்ஸிங் அசோக் " என்றார், உடனடியாக விசாரித்தோம் எப்படி இது போனது யாரோ டெலீட் செய்திருகிறார்கள் என்பது தெரியவந்தது அவரின் பெயரும் வெளிவந்தது, அது டெலீட் செய்த ஆளின் பெர்யல்ல வேறொருவருடையது. தனிமனித காழ்புணர்ச்சி காரணமாக வேறொருவருடைய  ஐ டி யில் இருந்து டெலீட் செய்தான் அந்த தியாகி, பின்னர் குற்றவாளியே தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டான்.
       அந்த நம்பரை வேலையிலிருந்து நீக்கும் படி மேலிடம் சொன்னது. வேலையில் இருந்து நீக்கப்பட்டது நியாயம் , ஆனால் அவன் எதிர்காலம் திடீர் என்று எங்கே செல்வான், அசோக் அந்த நபரை அழைத்து ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்தார், " பழைச மறந்துரு , நல்லா வேல செய்யு" என்று அந்த குற்றவாளிக்கு சொன்னார். இது மேன்மையின் உச்சம், அசோக் சார் அவன் எதிர்காலத்தையும் குடும்பத்தையும் பார்த்தார், அவருக்கு என்ன என்று இருந்திருக்கலாம், மனிதநேயம் என்பது அசோக் சார் போல சிலரிடம் தென்படும். 
          இன்று வேறு மென்பொருள் நிறுவனத்தில் மிக உயரிய இடத்தில் இருக்கிறார், எங்கு சென்றாலும் மேன் மக்கள் மேன் மக்களே !!

      இதே நிறுவனத்தில்  சாம் மற்றும் வினோத் என சில மேலாளர்கள் உள்ளனர், இவர்கள் அசோகின் மறு படிமம். உதவி எனும் செயலை செய்து மார் தட்டிக் கொள்ளும் இந்த சமூகத்தில்,  இவர்கள் மற்றவர்க்கு செய்த உதவி ஊமையாகும் அவர்களது மேன்மை ஒலி பெருக்கியாய் மனதில் மார்கழி இசையாய் கேட்கும்! நாம் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்துவிட்டால் நான் என்ற கொம்பு வரும், வினோத் 8 ஆண்டுகளாக இங்கு பணிபுரிகிறார், கணினிக்கும் இவர்க்கும் தொடர்பே இல்லாத தொழிற் சார்ந்த பொறியியல் துறையை தேர்ந்தெடுத்தார் ஆனால் அவருக்கு தகவல் தொழில்நுட்பம் அழைத்தது. கணினி படித்தவர்களை விட இவருக்கு அதன் அடிப்படையும் நுணுக்கங்களும் தெரியும், எல்லாம் தன் முயற்சியால் கற்றுக்கொண்டார்.நாம் ஒரு சிறிய வேலை செய்தாலும் அதற்கான அங்கீகாரத்தை பெற்று தருவார்.
       இந்த உலகில் ஒருவரை ஒருவர் கீழே தள்ளி மேல வரும் மனிதர்களிடையே அதுவும் தகவல் தொழில்நுட்பத்தில் மிக அதிகம், மற்றவரின் வளர்ச்சியை கண்டு மகிழ்வார் அதனிலும் அந்த வளர்ச்சிக்கு இவர் தான் காரணமுமாக இருப்பார். இவருக்கு அவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் யாரிடமும் சென்று சோகத்தை பகிர்ந்தது இல்லை, ஏன் மற்றவர்களை சோகத்தில் ஆழ்தவேண்டும் என்று மேன்மையின் உணர்வு தான்.
      சாம், உண்மையான ஆத்மா . அவரைப்போல் தேடி உதவும் குணம் மிக அரிது. எழில் என்ற நபர் சாம் வேலை செய்த நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனம் சென்றான்,அவன் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்தான், சாம் அடிக்கடி அவனுக்கு அலை பேசியில் அழைத்து நலம் விசாரிப்பார், மேலும் அவன் அவதியை கண்டு திரும்ப இவர் நிறுவனத்திலேயே மீண்டும் வேலைக்கு ஏற்ப்பாடு செய்தார் அதுவும் எழில் நல்ல சம்பளத்திற்கு வந்தான் இதற்கு சாம் மிக சிரமப்பட்டு சண்டையிட்டு அவனை வேலைக்கு சேர்த்தார். இன்று வரை அதை சாம் யாரிடமும் சொன்னதில்லை. மேலும் அவர் மாதமாதம் ஒரு ஆதரவற்ற இல்லத்திற்கு தனது சம்பளத்தில் ஒரு பகுதியை கொடுப்பார், இவரைப் போன்று ஒரு ஜீவன் பார்ப்பது மிக அரிது !! மேன்மையின் உச்சம் சாம், வினோத்.

      மேன்மை ஒரு பண்பு , இதை நிச்சயம் நம் உறகளிடமோ நண்பர்களிடமோ கண்டிருப்போம், இதை வாசித்திருந்தால் உங்கள் வாழ்கையின் மேனமையான மனிதர்களைப் பற்றி யோசனை தட்டி இருக்கும், நாமும் மேன்மையெனும் பண்பை காணமட்டும் இல்லாமல் கடைப்பிடிப்போம் !!

  
   

No comments:

Post a Comment