தாய்நாட்டிற்காக ராணுவத்தில் கணவனை இழந்த ஒரு தாய் , தனியே வாடியிருக்க தன் ஒரே மகனையும் ராணுவத்தில் சேர்த்து நாட்டிற்காக பெருமை சேர்கிறாள். மகனும் ராணுவத்தில் சேர்ந்தான் நாட்டிற்காக தன் கடமையை ஆற்றிகொண்டிருந்தான். இரண்டு வருடங்கள் ஓடியது ,அது ஒரு போர் காலம் தன் மகனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. அந்த தாய் மிகவும் வருத்தத்திலும் ஏக்கத்திலும் இருந்தாள், தன் மகனை ஒரு முறை பார்க்க முடியாத என்ற மன குமுறல் அலறிக்கொண்டிருக்க , ஒரு தந்தி வந்தது. " அம்மா , நாளை மதியம் நம் ஊரைக் கடந்து தான் நான் பயணிக்கும் இரயில் செல்லும், நமது ஊர் இரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நிற்கும். நீ வா அம்மா நான் பாக்கணும்" என்று அந்த கடிதத்தில் இருந்தது.
தாய்க்கு பேரின்பம் , இராணுவத்திற்குப் போன பிறகு தன் மகனை முதல் கடிதம் அதுவும் இரண்டு ஆண்டுகள் கழித்து . சந்திக்க போகிறாள் அந்த தாய் அவளுக்குள் கேள்வியும் வருத்தமும் எழுந்து கொண்டேயிருந்தது , தன் மகன் உண்ணாமல் உறங்காமல் மேலிந்திருப்பானோ ? சிரிப்பானோ ? அழுவானோ ? என்றெல்லாம் யோசிக்க தொடங்கினாள். அன்றிரவு நாளை சந்திக்கும் மகனுக்காக தன் கைபட அவனுக்கு பிடித்த உணவை தயார் செய்கிறாள்.
காலை விடிந்தது , தட புடலாக உணவு வகைகளைத் தயார் செய்தால் அந்த தாயார். எல்லா உணவையும் ஒரு சூடு பதம் பெற்ற பெட்டியில் போட்டு 11 மணிக்கு இரயில் நிலையத்திற்கு சென்றாள். ஒரு துளி நேரம் கூட அவள் அமரவில்லை காணல் நீர் தோன்றிய தண்டவாளத்தைப் பார்த்துகொண்டிருந்தாள். மதியம் கடந்தது , ஒரு அறிவிப்பு வந்தது ஒலி பெருக்கி மூலம் " ராணுவ இரயில் வர தாமதம் ஆனதால் இங்கு நிற்காது , மன்னிக்கவும்" என செய்தி வெளியானது. இந்த தாயைப்போல் பலரும் தங்களது நேச உறவை இரண்டு நிமிடம் பார்க்க வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தினர். இவள் மட்டும் கலங்கவில்லை தன் மகனைப் பார்ப்போம் என்ற நினைத்தாள். இரயிலின் கூவல் சத்தம் கேட்க்க ஆரம்பித்தது, அங்கு ஒரே பரபரப்பு காணல் நீரைக் கிழித்து இரயில் வர தொடங்கியது.
தாய் யோசிக்கிறாள் , தன் மகனைப் பார்ப்போம் ஆனால் அவள் தயாரித்த உணவை எப்படி தருவது , இரயிலும் நெருங்கிக் கொண்டிருந்தது வேகமும் குறைந்த பாடில்லை, முடிந்தவரை வீரர்கள் எல்லாம் வெளியே தொங்கியபடி பயணிக்கிறார்கள் , தங்களது உறவுகளை பார்த்துவிடலாம் என்று. தன் கையில் கொண்டுவந்த உணவு பெட்டியை கிழே வைக்கிறாள், இரயிலும் நடைமேடையை நெருங்கியது அரை வினாடிக்குள் தன் மகனை பார்க்கிறாள் , இரயில் வேகம் சற்று குறைகிறது. மகனும் கை வீச தாயும் கை வீசிகொள்ள கரை உடைந்து ஓடியது கண்ணீர் தூள்கள். சட்டென்று அவள் இரயில் மீது பாய்கிறாள், இரண்டு பெட்டிக்கு நடுவே விழிகிறாள் பெரிய கூச்சல் , மரண ஓலம், மக்களின் அலறல். இரயில் மெதுவாக நின்றது, அந்த தாய் சென்று மற்ற தாய்க்கும் உறவுக்கும் 5 நிமிடங்கள் தங்களது நேச உறவை சந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தாள்.
அவள் நினைத்தது தன் மகனை இனி பார்ப்பேனோ இல்லையோ என் உணவை அவன் உண்ணட்டும் இதில் மற்றவர்களும் தங்களது உறவை பார்ப்பார்களே என்ற உணர்வும் சேர்த்து. அந்த மகன் உறைந்து போனான், " அடித்தாயே என் இதயத்தில் அடித்தாயே" என்று அழ யாரோ ஒருவர் அவள் எடுத்து வந்த உணவு பெட்டியைக் கொடுக்க, அவள் இதயச்சூடு அந்த உணவில் இருந்தது.......
இது அண்ணன் BKK விற்காக
No comments:
Post a Comment