Translate

Sunday, June 1, 2014

மகிழ்ச்சியின் துளிகள்

இவர்கள் மொத்தம் 8 உறுபினர்களாக எங்களது வீதிக்கு ஆதார் இல்லாத ஆதாரங்களாக திரிந்து கொண்டிருந்தார்கள்.  அண்டை  வீட்டில் லப்ரடோர் என்ற ஒரு பணக்கார வகை பிராணியை வாங்கினார், வீதியில் இருக்கும் ஆதரவற்ற ஜீவன்களின் பசியின் குரல்  கேட்டுக்கொண்டே இருந்ததால்  தனது லாப் ஆல் தூங்கமுடிய வில்லை என்பதால்  மாநகராட்சி வண்டியில் அந்த ஆதரவற்ற 5 ஜீவன்களை துன்புறுத்தி சவாரி செய்யவைத்த  காக்கிகளுக்கு 500 ரூபாய் லாபம், எனக்கு  மகிழ்ச்சியின் நஷ்டம் !
       என் RX 100 சத்தம் இவர்களுக்கு பொறை வாசமாக மாறும், 8 பேரும் வால்களை விசிறி போல் வீசுவார்கள் ,பக்கத்துக்கு வீட்டு நாயின் சட்டை பிடித்து மீதமுள்ள 3 ஜீவன்களுக்கு  RX 100 சத்தத்தை கேட்கவைத்தேன், ஒரு மன அமைதி கிடைத்தது. இந்த வாரம் இரண்டு புதிய உறுப்பினர் சேர்ந்தார்கள் . கடவுள் நம் மனதை  மகிழ்ச்சியின்    துளியால்  தினமும் தெளித்துகொண்டே இருக்கிறார் ஆனால் சிலரே உணர்வார்கள். நான் உணர்கிறேன் , நீங்களும் உணருங்கள் ஆதரவற்ற இந்த ஜீவன்கள் போல் பல வீதியில் உண்டு . 2 ரூபாய் பொறை, மனசுக்குள் மகிழ்ச்சியின் நிறை !
        சின்ன வண்டு தன் தாயிடம் பாலை உண்ணும்போது வாழ்கையின் பல அர்த்தங்களை உணர வைத்தது , அவனால் கால் ஊனக் கூட முடியவில்லை ஆனால் அவன் தன் தாயிடம் விளையாடியபோது என் மழலையை உணர்த்தினான்; இந்த படம் உங்களையும் மயிலிறகாய் வருடும் என நம்புகிறேன்; நீங்கள் இனி உங்கள்  வீதி ஜீவன்களை பார்த்தல்  உங்கள் வண்டி சத்தம் பொறை வாசமாக மாற வேண்டுகிறேன், உங்கள்ளுக்கு தெரியும் ஆனால் ஞாபகம் ஊட்டுகிறேன்.
     என் மகிழ்ச்சியின் துளிகள் உங்களிடம் தெளிக்கிறேன், நீங்கள் மற்றவர்களுக்கு மழையாய் தூவுங்கள் !!!!
  

No comments:

Post a Comment