ஒரு எறும்பு பெரிய சர்க்கரை கல்லை சுமக்க முடியாமல் சுமந்து சென்று கொண்டிருக்க, ஓரமாக இன்னொரு எறும்பு "ஹலோ ரமேஷ்" என்றது, தன் சுமையை இறக்கி வைத்து "ஹலோ சுரேஷ் ! என்ன பா சும்மா படுத்துகுட்டு கால் மேல கால் போட்டு ஹாய் யா இருக்க".
அட போ ரமேஷ் , "என் சொந்தகாரங்க வெள்ளத்துல செத்துட்டாங்க" .
எப்படி என ரமேஷ் எறும்பு கேட்டான் ?
" ஒரு ராட்ச்சஸ மனுஷன் கிணற கவுத்துட்டான், அதுல என் லவ்வர் ஆஷா , மச்சான் ராஜா எல்லாம் அடிச்சிக்கிட்டு போய்ட்டாங்க" என அழுதது சுரேஷ் எறும்பு.
அட பாவமே ! கிணறுனா என்ன பா ?
"அதான் பா மனுஷனுங்க தண்ணீர் குடிபாங்கலே கும்லரோ டம்ப்லரோ! உன்ன மாதிரி சாப்பாடு தேட போய் தான் இப்போ பேய் ஆயிட்டாங்க, அதனால தான் நான் வெறுத்து போய்ட்டேன் , இனி ஹாய் யா இருக்கலாம்னு முடிவி பண்ணிட்டேன் " என்றான் சுரேஷ் எறும்பு .
"என்ன சுரேஷ் இது என்ன புதுசா , அடுத்த செக்கேன்டே நான் கூட சாவலாம், அத பத்தி யோசிக்கமா நம்ப ஆளுங்களுக்கு இந்த சாப்பாடு பயன்படுத்தா அது போதும், வா பா அங்க ஒரு சர்கர கல் இருக்கு தூக்கிட்டு வா யாருக்காவது பயன்படட்டும் சும்மா இருந்து போற உயிர் வேல செஞ்சி போகட்டும் உன் லவ்வர் ஆஷா மாதிரி" என்றான் ரமேஷ் எறும்பு .
"சுயநலமா இருந்துட்டேன் ரமேஷ் , சரி போறேன் பா ".
"போயிட்டு ஒரு லேப்ட்டு திரும்பு ஓரமா இருக்கும் பாரு" என்றான் ரமேஷ்.
சரி என்று சுரேஷ் சொல்லிட்டு சர்க்கரை கல் எடுக்க போனான்.
ரமேஷ் மீண்டும் அந்த பெரிய சர்க்கரை கல்லை சுமந்து சென்றது, போகும் வழியில் ஒரு கார் அதான் மீது ஏறியது, "ராட்ச்சஸ மனித குழந்தையின் விளையாட்டு போல என நினைத்து இறந்தான் ரமேஷ்".
சுரேஷ், ரமேஷ் சொன்ன இடத்தில சர்க்கரை கல்லை எடுத்து தன் மக்களுக்கு சேர்க்கலாம் என சிந்தித்து நகர்ந்தான்.
" எவளோ சீக்கிரமா ரமேஷ் ரீச் ஆயிட்டான் போல , செம்ம ஸ்பீடு பா அவன் " என்று கூறியவாறு அப்பாவியாக நகர்தான் சுரேஷ்.
"எறும்புக்கு மனித உயர சிந்தனை , மனிதனுக்கு எறும்பு உயர சிந்தனை "
மற்றவர்களுக்காக வாழ்வதும் , உழைப்பதும் சுகம் தான்..

No comments:
Post a Comment