~~~ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா !! ~~~
"என் பையனுக்கு 6 வயசு தான் ஆகுது. அதுக்குள்ளாற ஐ-பேட்ல எல்லா கேம்ஸ் ஆடுறான்",
"அட நீங்க ஒன்னு , என் பொண்ணு டவுன்லோட் பண்ண கத்துக்கிட்டு அவளாவே இன்ஸ்டால் பண்றா " என்ற பெற்றோரின் புகழ் பாடும் உரையாடலை எங்கோ நாம் கேட்டிருக்க கூடும். ஒரு காலக்கட்டத்தில் அம்மா/அப்பா பாட்டி வடை சுட்ட கதையைச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம் இன்று எங்கிருந்தோ சுட்டக் கதைக் கூட சொல்ல நேரமில்லாமல் ஓடுகிற வாழ்க்கையில் நிதானமாக ஐ-பேடையும் அலைபேசியும் குழந்தைகளிடம் கொடுத்து சந்தர்ப்பத்திற்கு தப்பிப்போரின் எண்ணிக்கை அதிகம். தாய் தந்தை கைச்சூட்டின் கதகதப்பில் இருப்பதைக் காட்டிலும் அலைபேசியின் சூட்டில் காய்ந்துக்கொண்டிருக்கும் கைகள் ஏராளம். இதனால், குழந்தைகள் மந்தமான சூழலுக்கு தள்ளப்படும் நிலை இன்று நிலவுகிறது.
இத்தைகைய போக்கினால் கைபேசியில் வரும் வெளிச்சம் கண்களுக்கு தேவையில்லாத சிரமத்தைத் தரும் அதுவுமில்லாமல் அதன் கதிர்வீச்சு உடல் ரீதியான சில கேடுகளை விளைவிக்கும். குழந்தைகள் முதல் வளர் இளம் பருவம் மற்றும் பெரியவர்கள் வரையில் விளக்கைத் தேய்க்கும் அலாவுதீன் போல கோடிக்கணக்கான அலாவுதீன்கள் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் நேராக விஷயத்திற்கு வருவோம் .
குழந்தைகளுக்கு இன்று அவசியம் தேவைப்படுவது ஏதோ ஒரு விளையாட்டில் நாம் சேர்ப்பது நன்மை பயக்கும், கட்டாயமாக விளையாட்டின் முக்கியத்துவமும் புரிதலும் பெற்றோர்கள் அறிய வேண்டும். இன்று சிறு பொறிகருவியின் (GADGETS) ஆதிக்கம் ஓங்கியிருக்க, நம் பிள்ளைகளின் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்தியாவில் ஒரு கொடியே நாற்பது லட்சம் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் எனும் புள்ளி விவரம் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது .குழந்தைகளுக்கு வியர்வை வருவது வீட்டில் மின்சாரம் துண்டிக்கும் போது மட்டுமே என்பது வருத்தமளிக்கிறது.
வரும் விடுமுறை நாட்களில் உடல் உழைப்போடு செயல்படும் எதாவது ஒரு விளையாட்டில் நமது பிள்ளைகளை சேர்த்துவிட்டால் அவர்களின் எதிர்காலத்திற்கு நீங்கள் வித்திடும் பாதையே அவர்களின் எதிர்காத்திற்கு வழிவகுக்கும்.
குழந்தைகள்/சிறார்கள் விளையாடினால் ஏற்படும் நன்மைகள் என்று பார்க்கும்போது : -
# விளையாட்டில் வெற்றி தோல்வியால் ஏற்படும் மனப்பக்குவம் எந்த சூழலிலும் சமநிலையோடு பார்க்கும் தன்மை ஏற்படும்.
# படிப்பில் அதீத கவனத்தோடு செயல்படுவார்கள்.
# பலரிடம் பழகும் வாய்ப்பு உண்டாகும். அதன் வெளிப்பாடாக மேடை பயமோ தெரியாத மனிதர்களோடு சகஜமாக பேசும் ஆற்றல் இயல்பாக வரும்.
# வகுப்பில் சக மாணவர்களிளிடையில் ஏதோ ஒரு விளையாட்டில் இருப்பின் ஒரு நல்ல முன் உதாரணமாக திகழ்வார்கள்.
# மன அழுத்தம் குறையும், சுறுசுறுப்பு மேலிடும்.
# இக்கட்டான சமயங்களில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் தீர்க்கமாக இருக்கும்.
# ஆளுமை, மன உறுதி , உத்வேகம் , நட்பு பாராட்டல் , தன்னமிக்கை, மதிக்கும் பண்பு என அனைத்தும் சீர் பெற்று வளரும்.
# மிக முக்கியமாக உடல் தோற்றமும் வலிமையும் மேம்படும்.
இப்படியாக நன்மைகளை அடுக்கிக்கொண்டே போகலாம், குழந்தைகள் சேட்டை செய்யாமல் இருக்க நாம் வீடியோ கேம்ஸ் அல்லது கைபேசியை அவர்களிடம் கொடுத்து சமாளிக்கும் பெற்றோர்கள் எப்படியான விளைவுகளை அவர்கள் உருவாக்குகிறார்கள் என்பது அவர்களே அறியாத ஒன்று; நாளைடைவில், இதனால் குழந்தைகள்/ சிறார்கள் ஒரு செயலுக்கு அடிமையாவதன் மூலக் காரணம் பெற்றோர்களாகவே இருக்கின்றனர். சரி அலைபேசியோடு அடிமையாக இருக்கும் குழந்தைகளை என்ன செய்வது என்று கேட்டால் அவர்களை திசை திருப்புவதே ஒரு உகந்த செயல். எப்படி திசை திருப்புவது என்று நீங்கள் கேட்பது கேட்கிறது ! மேற்கூறியவற்றை மனதில் கொள்ளுங்கள் , 'விளையாட வைப்பதே' சாலச் சிறந்தது. குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு மைதானத்திற்கு செல்லுங்கள், விளையாடும் குழந்தைகளை நேரில் பார்க்கட்டும். அதனால், அவர்களுக்கு ஓர் உன்னத உத்வேகம் உண்டாகும், அவர்களும் அதில் பங்கேற்க பெரும் விசை மனதில் எழும். இதை முயற்சி செய்து தான் பாருங்களேன். மாற்றம் உண்டாகும் ங்க ..
பாரதி எழுத்தில் தீட்டிய, " ஓடி விளையாடு பாப்பா" படித்தால் மட்டும் போதுமா ? இங்கு பள்ளிகளில் விளையாட்டிற்காக ஒதுக்கப்படும் நேரங்களும் கூட முடிக்காத பாடம் எடுக்க ஆசிரியர்கள் முனைவது நிதர்சனமான உண்மை. 'இன்றே செய் அதை நன்றே செய்' எனும் பழமொழிக்கு தகுந்தாற் போல இன்றே நம் பிள்ளைகளிடத்தில் சிறு பொறிகருவிகளை (GADGETS) சற்றே தள்ளி வைத்து விளையாட்டை அருகாமையில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். உங்களால் விலை உயர்ந்து பொருட்செலவு அதிகமா இருக்கும் விளையாட்டில் சேர்க்க இயலவில்லை என்றால் பரவாயில்லை, நம் பாரம்பர்ய விளையாட்டான சிலம்பம் கபடியில் சேர்க்கலாம் அதில் அவ்வளவு பொருட்செலவு கிடையாது. இதையும் பாரமாக கருதுவாராயின் குறைந்த பட்சம் அருகில் இருக்கும் பூங்காவிற்கு கூட்டி செல்லுங்கள் ஓடி விளையாடட்டும்.

No comments:
Post a Comment