மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது எனும் குறுஞ்செய்தி வந்தவுடன் சாவரிக்காக காத்திக்கிடந்து கந்தன் செய்தி வந்த எண்ணிற்கு அழைத்து பேசினார், விரைந்து மருத்துவமனைக்கும் சென்றார், இருபத்தி எட்டு வயது இளைஞருக்கு இருதய அறுவைசிகிச்சைக்காக என்பதை அறிந்தார். அந்த இளைஞரின் தந்தை விம்மி புலம்பி அழுதுகொண்டிருந்தார் "சம்பாரி..சம்பாரி னு எவளோ பிரஷர் குடுத்தா அவன் பொண்டாட்டி ... ஐயோ...ஐயோ."
கந்தன் ரத்தம் கொடுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பினார், தனது ஆட்டோவில் செல்லும் போது அந்த தந்தையின் அழுகுரல் உடன் வந்தவாறே இருந்தது, அப்பொழுது தன் மனைவியை பற்றி சிந்திக்கலானார், ஆட்டோ ஒட்டிக்கொண்டு தானே பேசினார் " டெய்லி 500 ரூபா கெடச்சா பெரிய விஷயம், இதுவரைக்கும் அவ நேத்து ஜாஸ்தியா இருந்துது இன்னைக்கி கம்மியா இருக்கே ன்னு சொன்னது இல்ல, நான் குடுக்கற காச வெச்சி தான் குகன்க்கு ஸ்கூல் பீஸ் , புக்ஸ் லாம் வாங்கி தறா, சமைக்கிறா, சேத்து வெச்ச
காசுல சீட்டு போடுறா, அவள இதுவரைக்கும் பாராட்டி பேசுனதே இல்ல அவ அருமை இப்பதான் தெரியுது, அவ உண்மையான வாழ்க்கை துணை.
No comments:
Post a Comment