நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
அவன் தேர்ந்த திறமைசாலி, நல்ல கதைசொல்லி ஒரு பெரிய இயக்குனரிடம் உதவி இயக்குனனாக பணியாற்றிக்கொண்டிருந்தான்.என்றுமே எதிர்பாராத அந்த நாள் வந்தது, அவன் தன் இயக்குனர் எடுத்த காட்சியில் பிழையை கூறினான், இயக்குனருக்கு அது தவறில்லை எனவும் தன் அகம்பாவத்தையும் காட்டினார். அவனுக்கு சாபமிட்டார் 'ஒரு போதும் உனக்கு படம் இயக்க வாய்ப்பே கிடைக்காது' என. அவ்வார்த்தைகளை அடுப்பாங்கறை மூளையில் தூசிக்கு நடுவே சொருகினான். அவன் பெருமுயற்சியுடன் ஒரு கதையை தயார் செய்தான் ஒரு நடிகரும் ஒப்பந்தமானார் ஆனால் தயாரிப்பாளர் கிட்டவில்லை; மனம் தளராது போராடினான் இப்பவும் கிடைக்கவில்லை ஜனங்களிடம் வசூல் (Crowd funding) செய்து படம் துவங்கலாம் என்ற முயற்சியுடன் ஆரம்பித்தான் கணிசமான தொகை வந்தது, படப்பிடிப்பு ஆரம்பமானது; படம் முடிந்து வெளியானது, மாபெரும் வெற்றி, வசூல் சாதனை படைத்தது; அவன் பெரிய இடத்திற்கு சென்றான், அடுத்த படம் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் ஒப்பந்தமானான்; அவனுடைய இயக்குனர் பணத்தட்டுப்பாடு வந்தது அதை கேட்டதும் அவன் பணம் தர முற்படவில்லை ஆயின் அவருக்கு பல வாய்ப்புகள் வரவழைத்து பணம் புழக்கம் அதிகம் பெற செய்தான், இது அந்த இயக்குனருக்கு தெரியாது. இப்படியேயாக போக அந்த மாநகரில் பேரிடர் மழை வெள்ளம், மக்கள் அவதிப்பட்டனர் சிறிது நாட்களில் சற்று சீரானது ஆனால் பலர் வீடில்லாமல் இருந்தார்கள், அவன் வீடிழந்தவர்கள் என நூறுக்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு சென்று பணம் கொடுத்துதான் அவனிடம் கடேசி ரூபாய் இருக்கும்வரை கொடுத்தான்.
அவன் உதவியாளன் "சார், வேஸ்ட் சார் நீங்க; எதுக்கு தேவ இல்லாம உதவி செய்றீங்க"
அதற்கு அவன் " உதாரணத்துக்கு , கடல்ல இருந்து மழை மேகம் உருவாகுது, சரியான நேரத்துல மழை பெய்யல்லனா கடல் கூட வத்தி போய்டும் அப்படி தான் இதுவும்.."
No comments:
Post a Comment