Translate

Saturday, March 7, 2015

தூர் வாரினேன்


            தூர் வாரும் பொழுது பழைய பொம்மைகளை கிணற்றிலிருந்து எடுக்கும்போது அந்த வீட்டுச் சிறுவனின் கண்களுக்கு புது பொம்மையாக திகழும், களிமண் கலந்தாலும் சேற்றில் இருந்தாலும் திரும்பி வந்தால் அது மகிழ்ச்சி தான்! இப்படி என் நினைவுகளை தூர் வாரும் போது அந்த சிறுவனாக மாறினேன்..
    ஞாபகம் எனும் சாவியுடன் என் பள்ளி இரும்பு கதவை திறந்தேன்,
 +1 வகுப்பிற்குள் நுழைந்தேன், என் நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், முதல் வரிசையில் ஸ்ரீதர், சரவணன், பிரவீன் மற்றும் ரவி அமர்ந்திருந்தார்கள். அப்படியே அவர் முகங்களை ரசித்துக் கொண்டே இருந்தேன், கவலை இல்லாத கண்களும் சிரிக்கும் கன்னங்களும் பார்கையில் மார்கழியில் AC ரூம் ஆனது என் மனது .
 நான்(விக்னேஷ்) அங்கு கடைசி பெஞ்சில் சண்முகம் , சுரேஷ் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். தீடீர் என்று எங்கள் கணக்கு வாத்தியார் சபீ உல்லாஹ் உள்ளே வந்தார், எல்லோரும் எழுந்தனர் "குட் மார்னிங்" என்ற கோரஸ்.
 "நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன், யாரோ.. நான் உங்களுக்கு சரியா சொல்லி தரல ன்னு கம்ப்ளைன்ட் செஞ்சிட்டாங்க so i cant work here anymore " என்று முன்னும் பின்னுமாக நடந்து சொல்லிக்கொண்டிருக்கிறார், அதை சொன்னவுடன் வகுப்பே பேரு மூச்சு விட்டது, அவர் பின் புறமாக செல்கையில் அப்போது மூன்றாவது பெஞ்சில் இருக்கும் ஆதிகேஷ் கையை ஓங்கி அவரை குத்துவது பாவனை செய்தான், சபீ திடீரென்று திரும்பினார் ஆதி மாட்டிக்கொண்டான், வகுப்பில் ஒரு நிசப்தம். ஆதியின் கையை முறுக்கி "ஏண்டா  கை ஒங்குரியோ.. !! நீ தாண்டா போட்டு குடுத்திருப்ப" என்று பல்லைக் கடித்து முதுகில் நான்கு குத்து நன்கு குத்தினார். அந்த நேரத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த விக்னேஷ் சத்தம்போட்டு சிரித்தான் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை திடீர் என்று நான் நினைவு என்பதை மறந்து "டேய் அடி வாங்க போற.. சிரிக்காத" என்றேன் என்னைப் பார்த்தே :-).. ஆனால் என்ன புண்ணியம் , சபீ விக்னேஷை " டேய் நீ வெளிய வா , நான் வேலையவிட்டு போன.. ! என்னை ஒருத்தன் அடிக்க வந்தா..! உனக்கு அவளோ சந்தோசமா " என கூறி சர மாரியாக முதுகில் கல் தோசை சுட்டுக்கொண்டிருந்தார். பின்னர் ஆதியும் விக்னேஷும் வெளியே நிற்கவைத்தார் சபீ, சரி இந்த ரெண்டு பேர் என்ன செய்கிறார்கள் என்று வெளியே சென்று பார்த்தேன் விக்னேஷ் சொல்கிறான் "மச்சி  நம்ப அவன்கிட்ட நிக்கல் குந்தல் போற்றுக்கணும் டா , செத்திருப்பான்" ஆதி விக்னேஷை அடித்து நிக்கல் என்றான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஓடி வந்துவிட்டேன்.
        சரி ஸ்டாப் ரூமிற்கு போகலாம் என்று எண்ணினேன் ஐயய்யோ என் நினைவும் அடிவாங்கணுமா என ஜகா வாங்கி திரும்பவும் ஒரு மணி நேரம் கழித்து வகுப்பிற்கு சென்றால் அது ப்ரீ பிரியட். எல்லோரும் சத்தம்போட்டு இருந்தார்கள்,
 ரேகா, மணிமேகலை, நீரஜா  மூவரும் எதோ எழுதிக் கொண்டு இருந்தார்கள், ஜெயந்தி ,சரண்யா மற்றும் மஞ்சுளா ஏதோ ஆழ்ந்த உரையாடலுடன்; ராஜ் பரத் மற்றும் ரவி முஜிபுனிஸா, சுரேகா  வுடன் பேசி சிரித்துக்கொண்டும்; நரேஷ், சிவா ,ராகேஷ் புக் கிரிகெட்ஆடிக்கொண்டும்; தமிழ் குமரன் வழக்கம் போல கடலைப் போட்டுக்கொண்டிருந்தான்; கிச்சு லக்ஷ்மி நாராயணிடம் எந்த கம்ப்யுடர் சென்டர் போகலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தான் ;பிரவீன் ராஜ் ரியாசிடம் அடி வாங்கிக்கொண்டு இருந்தான். எனக்கு அந்த அறையில் பேரின்பத்தின் ஒலி கேட்டது !!! 
        +1 போதும், +2 விற்கு போகலாம் என யோசித்து நுழைந்தேன், சற்று முன் பார்த்த முகங்கள் மீசையுடன் ஒரே ஆச்சர்யம் ! என் நண்பன் சண்முகம் SPL, பத்ம பிரியா ASPL இருவரும் அசம்ப்லீயின் போது வழி நடத்துகிறார்கள், ' யு ட்யுப்' விடியோவை நகர்த்துவது போல நானும் நகர்ந்தேன், ஆசிரியர் தினம் - கலை நிகழ்சிகள் நடைப்பெற்று கொண்டிருகிறது நண்பன் மகேந்திர பாபு stand-up comedy செய்துக் கொண்டிருந்தான், பள்ளியில் அப்படி ஒரு சிரிப்பு சத்தம்... இன்னும் நகர்ந்தேன் , குழந்தைகள் தினம் - Ads Ap பில் ரவி பட்டையை கிளப்பினான், இன்னொரு கலை நிகழ்ச்சியில் ராஜ் பரத் பிதாமகன் 'விக்ரம்' கெட்டப்பில், பிரவீன் ராஜ் காதல் கொண்டேன் 'தனுஷ்' ஆகா ஆட்பரித்தார்கள்... இன்னும் நகர்ந்தேன் ,பள்ளியின் கடைசி நாள் - "மச்சி நம்ப எல்லாரும் ஒரே காலேஜ் சேரனும் டா" என சரaவணன் சொன்னான், "மச்சி உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ண போறேன் டா" என கமல் சொல்கிறான். சில தோழிகள் பிரதீபா ,மணிமேகலை , பூர்ணிமா , விஜி , பிரியங்கா  கண் கலங்கினர். அந்த இடம் முழுவதும் ஒரு தூய அன்பின் சாரலை உணர்ந்தேன், என் கண்களும் சற்று கலங்கியது ஆனால் எனக்கு தெரியும் இவர்கள் இனி இப்படி பழகப்போவதில்லை , சந்திக்கபோவதில்லை ! முக நூலில் கூட ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க போவதில்லை! இருந்தாலும் அந்த நொடி மகிழ்ச்சியின் நொடி எதிர் பாரா அன்பின் துளி !!

    ஞாபகம் எனும் சாவியை பூட்டி வெளியே வந்தேன். இன்று இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தன் குழந்தைகளுடன் வாழ்கையின் மேகத்தில் குடும்பத்தில் மழையாக இருகிறார்கள்..

இதை நீங்கள் வாசித்திருந்தால் ... தூர் வாரி இருப்பீர்கள் ஞாபகமேனும் சாவியுடன் !!!!!!!






1 comment:

  1. என் அன்பு நண்பன் விக்னேஷ், உன்னுடைய இந்த ப்ளாக் போஸ்ட் நமது பள்ளி கலாத்துக்கு என்னை அழைத்து சென்று விட்டது, வெகு காலம் கழித்து அந்த விலை மதிப்பற்ற நியாபகங்களை நானும் தூர் வாரினேன், மிக்க மகிழ்ச்சியாக இருந்தது நண்பா. நீ இன்னும் இவ்வாறு மேலும் சில நல்ல கட்டுரைகளை எழுத வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள். உமது எழுத்து என்றும் அழியா பொக்கிஷமாக என்னுடைய வாழுத்துக்கள்.

    நட்புடன் ரவீந்திரன்

    ReplyDelete