Translate

Sunday, August 10, 2014

லிவ் தி மொமென்ட்


   ஒரு யானையும் அதோட பாகனும் பல டவுன்ல கலெக்ஷன் பண்ணிக்கிட்டு பிசியா சூத்திகிட்டு இருந்தாங்க !, அந்த யானை பெயர் கர்ணா அதோட ஓனர் ஜம்போ. கர்ணா குட்டிய இருக்கும் போது ஜம்போ தான் வளத்தான் அப்பறம் காசு ஆசைல வித்துட்டான் சில வருடம் கழித்து கர்ணாவ வாங்கினவன் அவன வெச்சி நிறைய சம்பாரிச்சிட்டு வெளியூருக்கு நட கட்ட ரெடி ஆனான் அப்போ திரும்ப ஜம்போ கிட்ட கர்ணாவ ப்ரீயா கொடுத்துட்டு போய்டான்.
   இப்போ ஜம்போ , கர்ணா வெச்சி தான் பொழப்ப நடத்துறான், பல நாள் கர்ணாவ பட்டினி போடுவான், இரக்கமே இல்லாம இருப்பான் ஜம்போ ஆனா கர்ணா நன்றியோட அவன் என்ன செஞ்சாலும் பொறுத்துகிட்டு தும்பிக்கையால ஆசிர்வாதமும் , ஈக்கும் கொசுககும் காதுல டாட்டா சொல்லிட்டு , சிரிச்சிட்டே பல பேருக்கு செல்பீ கொடுப்பான்!!

       ஒரு நாள் ஜம்போ "டாய் கர்ணா! உனக்கு நான் எதுவுமே பண்ணது இல்ல , எதாவது   கேளு டா" என்றான்.

 "ஓனர் , எனக்கு ஒரு வாரம் லீவ் வேணும்" ன்னு சொன்னான் கர்ணா.

" தொ டா , என்ன பண்ணபோற ஒரு வாரம் ?" என ஜம்போ கேட்க.

" ஒரே முது வலி ஓனர் , ஒரு வாரம் அப்படியே சுத்திட்டு ரெஸ்ட் எடுத்துட்டு அடுத்த வாரம் வந்து உங்ககிட்ட ஜாயின் பண்ணிடறேன்" என்றான் கர்ணா.

"நான் கொஞ்ச நேரம் குனிஞ்சாலே முது வலிக்குது , நீ லைப் புல்லா குனிஞ்சிட்டே தான் இருக்க, அப்போ செம்மயா முது வலி இருக்கும்  , ஸோ யுவர் லீவ் கிராண்டட்" என ஜம்போ சொல்ல.

" ஓனர் , உங்கள மாதிரி ஆளுங்க தான் IT ல கொடி கட்டி பறகுறாங்க; நீங்க IT க்கு போங்க , செம்ம பிரைன் உங்களுக்கு, ரொம்ப தாங்க்ஸ் ஓனர் " என்றான் கர்ணா.

" அப்படியா !!! உனக்கு இனைல இருந்தே லீவ் , கரெக்டா ஒரு வாரம் கழிச்சு வந்திடனும்"

"சூர். ஓனர் "

கர்ணா மெல்லமாக நடக்க ஆரம்பித்தான், அங்கு வந்த நாய் ஒன்று
" என்னப்பா ஜாலி தான் , ஒரு வாரம் லீவ் .. ஆனா நீ திரும்ப இங்க தானே பிச்ச எடுக்கு வரணும் " என கேலியாக சிரித்து தீர்த்தது.
இதற்கு கர்ணா,
"என்னக்கு அடுத்த ஒவ்வொரு நிமிஷமும் 1 ஹவர் மாதிரி, அடுத்த நிமிஷத்துக்கு வாழப்போறேன். அடுத்த வாரம் வரத்துக்கு என் கணக்கு படி பல மாசங்கள் இருக்கு. கண்ணுக்கு தெரியாத கவலைய யோசிக்ரத விட , கண்ணுக்கு தெரியற சந்தோஷத்த அனுபவிக்கலாம் !!!
பாத்து போடா லூசு நாயே" என்று கர்ணா மகிழ்ச்சியாக நகர்ந்தான்.   

Live the moment !!

Friday, August 8, 2014

ஹைக்கூ // பள்ளி


கையில் கடிகாரம் இல்லை
  மகிழ்ச்சியின் நேரம் தெரியும்,
 பள்ளி மணி ஓசை !

மழையே வா ,
 கடவுளை வேண்டும்
விவசாயி பள்ளி மாணவன் !

காலைப் போட்டாலும் போடாவிட்டாலும் ,
  காலில் போடுவார்
தமிழய்யா !!

வகுப்பு தேர்வு, மர மண்டைகளின்
  வினாக்களைச் சுமக்கும் ,
மர பெஞ்சுகள் !!

கணக்கு பரீட்சை,
  பச்சைக் குத்தும் மோகம்
 பார்முலாக்கள் !!

படிக்காத வாண்டுக்கு
  ஆசிரியரின் ஆசீர்வாதம்
நறுக்கென கொட்டு !

Saturday, August 2, 2014

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 2

உழைப்பைத் தின்னுவார்கள் இன்பமாய் செரிக்கும்....

   உதைய பிரகாஷ் , என் நெருங்கிய நண்பன். லயோலா கல்லூரியில் அவனை அறிமுகம் செய்தது. உதையா மிடல் கிளாஸ் குடும்பம் தான் , எனக்கு தெரிந்தவரையில் மூன்றாண்டு பீஸை அவனே சம்பாரித்து கட்டிகொண்டான், திறமைசாலி எல்லோரிடமும் நன்றாக பழகுவான். முதல் ஆண்டில் இருந்தே பார்ட் டைம் வேலை செய்துகொண்டே படிப்பான். என் கிளாசில் மொத்தம் 80 உருப்படிகள் இதில் பாதிக்கும் மேர்பாட்டோர்க்கு உதயா தான் முதல் சம்பளம் வாங்கி கொண்டுதான். இன்போசிஸ் கம்பனிக்கு நங்கள் ரெக்ரூட்மெண்ட் () செய்து கொடுப்போம் .
     இந்த கம்பனிக்கு ஒரு இடைத்தரகர் போல ஒரு சிறிய கம்பெனி செயல் பட்டது (Meta I). இவர்களிடம் உதையாவுக்கு அறிமுகம் கிடைத்தது கல்லூரியின் 2 ஆம் ஆண்டில், கடுமையாக உழைத்தான் அதே சமயம் படிக்கவும் செய்தான், வீட்டு வாடகை கட்டினான்  என  சொல்லிக்  கொண்டேபோகலாம். இவன் மட்டும் சம்பாதிக்கவில்லை எங்களையும் அவன் சம்பாதிக்க வைத்தான். உதயாவும் நாங்களும் சுத்தாத ஊரே கிடையாது. நாக்பூர் , அசாம் , வைசாக் , கேரளா என நிறைய மாநிலங்கள் சென்றுள்ளோம். தமிழ் நாட்டில் போகாத காலேஜே இல்லை, எங்கள் வேலை கேம்பஸ் ரெக்ரூட்மெண்ட் , மாணவர்களுக்கு
விண்ணப்பம் முதல் வினா தாள் வரை கொடுப்போம் சில நேரம் பதிலையும் கூட. ஒரு கல்லூரிக்கு கேம்பஸ் நடத்தவேண்டும் என்றால்  நாங்கள் சென்னை டீம் அதாவது லயோலா ப்ரெண்ட்சும் அவர்களுடைய ப்ரெண்ட்சும் என 40 பேர் போவோம் , ஒரே கூத்தாக இருக்கும். உதயா தான் எங்களுக்கு லீட். அவன் தான் பிளான் செய்வான் யாருக்கு என்ன வேலையென்று. அவன் உழைப்பு தான் இந்த வேலையை எங்கள் நண்பர் பிரதர் பெல்லார்மின் தொடர்ந்தார்.
    19 வயதில் வீடு வாடகை , தன படிப்பு  செலவு என அவனே உழைத்து பார்த்துக்கொண்டான். 2 செம் பீஸ் கட்டவேண்டும் அவன் ஒரு மதம் கால் சென்டரில் நைட் ஷிபிட் செய்து காலையில் கல்லூரிக்கு வருவான் , கண்கள் சிவந்து கனவுகள் விழித்து இருக்கும். மூன்றாவது ஆண்டு முடிவில் 75 % எடுத்து தேர்ச்சிப்   பெற்றான் அதுமட்டும் இல்லை லயோல காம்பஸ் இன்டர்வயுவில்  TCS வேலை கிடைத்தது , அங்கும் கடுமையாக உழைத்தான் வேறு ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்தான், இப்பொழுது TL ஆகா இருக்கிறான்.
   உதயா மாதிரியான ஆட்கள் மிகவும் குறைவு , கஷ்டம் புரிந்து நடப்பது சிறப்பு தான். உதயா உழைப்பின் உதயம் , இப்பொழுது அவன் JK  வின் தீவிர கருத்துக்களின் ஈர்த்து பெரிய சிந்தனைவாதியாக உள்ளான்.

    உதையவை சொன்னதும் ரூபனை சொல்லாமல் இருக்க முடியாது, ரூபன் கிறிஸ்டோபர் நாளைய IAS , இவன் எங்கள் கிளாசின் சைலண்ட் ஹீரோ. BSC படிக்கும் போதே இந்திரா காந்தி பல்கலை கழகத்தில் BA வும் கரஸில் படித்துக்கொண்டிருந்தான். அதீத திறமையும் பொறுப்பும் உடையவன் உதையாவிற்கும் ரூபனுக்கும் நிறைய ஒற்றுமை உண்டு.
ரூபன் மிகவும் திறமைசாலி , அவனை நாங்கள் எல்லோரும் அம்பி என்று சொல்லுவார்கள். என்னடா அவனே வாலண்டியரா எல்லாத்துக்கும் போறான்   என்று நாங்கள் கிண்டலாக கேட்டதுண்டு , இப்போது தான் புரிந்தது அது லீடர்ஷிப் என்று.
   கொட்டிவாக்கத்தில் அந்தோனி பள்ளியில் நாங்கள் அறிவியல் கண்காட்சி ஒருங்கிணைத்து அந்த மாணவர்களுக்காக நடத்தினோம், ரூபன் அதில் முக்கிய பங்கு வகித்தான், மற்றவர்களுக்காக அனுதினமும் உழைப்பவன். யாராவது நல்லது செய்தார்கள் அல்லது திறமையான செயலை செய்தார்களே ஆனால் முதலாவதாக பாராட்டுவது ரூபன்.
   எங்கள் மூன்றாம் ஆண்டில் கல்லூரி சுற்றுலா, சென்னையில் இருந்து பெங்களூர் சென்றோம்.  பெங்களூர் டூர்,   எ டு ஈஸட் ரூபன் தான் ஏற்பாடு செய்தான், அவ்வளவு உழைத்தான் , எங்கள் சார்கள் கூட ஜாலியாக இருந்தார்கள் இவன் ஹோட்டல் முதலிய எல்லா வேலைகளையும் ஏற்பாட்டையும் செய்தான், இதிலே டூரும் முடிந்தது.
என்னடா என்ஜாய் பண்ணவே இல்ல நீ என்று கேட்டால் , சலனமே இல்லாமல் சிரிப்பான், ஒரு உழைக்கும் ஜீவன்.
   இன்று பல கம்பனிகள் மாரி இன்று ஒரு பெரிய IT நிறுவனத்தில் PL ஆகா இருக்கிறான், நாளை IAS ஆகா மாறுவான் என்பது என் நம்பிக்கை.
     இதே போல் நாம் அன்றாடம் உழைக்கும் நண்பர்களையும் உறவினர்களையும் கடக்கிறோம் ஆனால் இவர்களை காலத்தால் மறக்கிறோம்.
     
தொடரும் ..

Tuesday, July 29, 2014

நம்பி'கை' வேண்டி

என் கை நகங்களில் அவள் முகங்கள்,
  உள்ளங்கையில் மார்கழிச்  சூடு,
கோர்க்கும் பூவாக விரல்கள்
  என்றும் மணம் வீசும் அதே வாசத்தோடு,
வண்டிகளின் கூச்சலில் என் செவிக்கு
 வளையல்களின் கச்சேரி  தோள்களில் அரங்கேறும் ,
அனுதினமும் அன்னமிடும் கையை
 என் இதய கட்சியின் சின்னம் தான்,
உன் விரல் கேட்க
என் விரல் பேச
ஏனோ  மோதிரமும் கூச்சப்படும்,
அந்த நாளை எப்போ வருமோ ?
கோவிலைப் பார்த்து கேட்டது என் கைகள் ...

Saturday, July 19, 2014

தாயின் அகம் நம் தாயகம்

 
     தாய்நாட்டிற்காக  ராணுவத்தில் கணவனை இழந்த ஒரு தாய் , தனியே வாடியிருக்க தன் ஒரே மகனையும் ராணுவத்தில் சேர்த்து நாட்டிற்காக பெருமை சேர்கிறாள். மகனும் ராணுவத்தில் சேர்ந்தான் நாட்டிற்காக தன் கடமையை ஆற்றிகொண்டிருந்தான். இரண்டு வருடங்கள் ஓடியது ,அது ஒரு போர் காலம்  தன் மகனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. அந்த தாய் மிகவும் வருத்தத்திலும் ஏக்கத்திலும் இருந்தாள், தன் மகனை ஒரு முறை பார்க்க முடியாத என்ற மன குமுறல் அலறிக்கொண்டிருக்க , ஒரு தந்தி வந்தது. " அம்மா , நாளை மதியம் நம் ஊரைக் கடந்து தான் நான் பயணிக்கும் இரயில் செல்லும், நமது ஊர் இரயில் நிலையத்தில் இரண்டு நிமிடங்கள் நிற்கும். நீ வா அம்மா நான் பாக்கணும்" என்று அந்த கடிதத்தில் இருந்தது.
    தாய்க்கு பேரின்பம் , இராணுவத்திற்குப்  போன பிறகு தன் மகனை முதல் கடிதம் அதுவும் இரண்டு ஆண்டுகள் கழித்து . சந்திக்க போகிறாள் அந்த தாய்  அவளுக்குள் கேள்வியும் வருத்தமும் எழுந்து கொண்டேயிருந்தது , தன் மகன்  உண்ணாமல் உறங்காமல் மேலிந்திருப்பானோ ? சிரிப்பானோ ? அழுவானோ ? என்றெல்லாம் யோசிக்க தொடங்கினாள். அன்றிரவு நாளை சந்திக்கும் மகனுக்காக தன் கைபட அவனுக்கு பிடித்த உணவை தயார் செய்கிறாள்.
    காலை விடிந்தது , தட புடலாக உணவு வகைகளைத் தயார் செய்தால் அந்த தாயார். எல்லா உணவையும் ஒரு சூடு பதம் பெற்ற பெட்டியில் போட்டு 11 மணிக்கு இரயில் நிலையத்திற்கு சென்றாள். ஒரு துளி நேரம் கூட அவள் அமரவில்லை காணல் நீர் தோன்றிய தண்டவாளத்தைப் பார்த்துகொண்டிருந்தாள். மதியம் கடந்தது , ஒரு அறிவிப்பு வந்தது ஒலி பெருக்கி மூலம் " ராணுவ இரயில் வர தாமதம் ஆனதால் இங்கு நிற்காது , மன்னிக்கவும்" என செய்தி வெளியானது. இந்த தாயைப்போல் பலரும் தங்களது நேச உறவை இரண்டு நிமிடம் பார்க்க வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தினர். இவள் மட்டும் கலங்கவில்லை தன் மகனைப் பார்ப்போம் என்ற நினைத்தாள். இரயிலின் கூவல் சத்தம் கேட்க்க ஆரம்பித்தது, அங்கு ஒரே பரபரப்பு காணல் நீரைக் கிழித்து இரயில் வர தொடங்கியது.
   தாய் யோசிக்கிறாள் , தன் மகனைப் பார்ப்போம் ஆனால் அவள் தயாரித்த உணவை எப்படி தருவது , இரயிலும்  நெருங்கிக் கொண்டிருந்தது வேகமும் குறைந்த பாடில்லை, முடிந்தவரை வீரர்கள் எல்லாம் வெளியே தொங்கியபடி பயணிக்கிறார்கள் , தங்களது உறவுகளை பார்த்துவிடலாம் என்று. தன் கையில் கொண்டுவந்த உணவு பெட்டியை கிழே வைக்கிறாள், இரயிலும் நடைமேடையை நெருங்கியது அரை வினாடிக்குள் தன் மகனை பார்க்கிறாள் , இரயில் வேகம் சற்று குறைகிறது. மகனும் கை வீச தாயும்  கை வீசிகொள்ள கரை உடைந்து ஓடியது கண்ணீர் தூள்கள். சட்டென்று அவள் இரயில் மீது பாய்கிறாள், இரண்டு பெட்டிக்கு நடுவே விழிகிறாள் பெரிய கூச்சல் , மரண ஓலம், மக்களின் அலறல். இரயில் மெதுவாக நின்றது, அந்த தாய் சென்று மற்ற தாய்க்கும் உறவுக்கும் 5 நிமிடங்கள் தங்களது நேச உறவை சந்திக்க சந்தர்ப்பம் கொடுத்தாள்.
   அவள் நினைத்தது தன் மகனை இனி பார்ப்பேனோ இல்லையோ என் உணவை அவன் உண்ணட்டும் இதில் மற்றவர்களும் தங்களது உறவை பார்ப்பார்களே என்ற உணர்வும் சேர்த்து. அந்த மகன் உறைந்து போனான், " அடித்தாயே என் இதயத்தில் அடித்தாயே" என்று அழ யாரோ ஒருவர் அவள் எடுத்து வந்த உணவு பெட்டியைக் கொடுக்க, அவள் இதயச்சூடு அந்த உணவில் இருந்தது.......

 இது அண்ணன் BKK விற்காக
  

இளைஞனின் குரல் // பாடல்

சரணம்
அட ..
நாங்க போடாத கோலமா
தொடர் முயற்சியின் தாளமா
வரையபடாத ஓவியம் தான் 
நாளைக்கு காவியம் தான்

பல்லவி 1 :
வெற்றிய தேடி நாம போறோம் ;
ஏனோ தோல்வி நம்ல தேடி வரும்
கூட அனுபவத்தையும் கூட்டி தரும்
காலையும் மாலையா மாறும்
எங்க திறமை நேத்து பிரியாணியா நாறும்.

பல்லவி 2 :
அம்புலன்சுக்கே வழி எங்க கிடக்கு  ,
வாய்ப்புக்கு எங்கடா அட்ரஸ் இருக்கு
கிடச்சா அடிச்சு நொறுக்கு ,
அதுவரை புத்திய சார்ப்பா நறுக்கு ,
நாங்க சுத்தி திரியும்  கிறுக்கு

பல்லவி 3 :
கனவு  நிசமாக  டிசைன் பண்ணுவோம்
உழைப்ப மட்டுமே திண்ணுவோம்
நட்சத்திரமா மின்னுவோம்
 பாசிட்டிவ்வாவே எண்ணுவோம் !!

சரணம்
அட ..
நாங்க போடாத கோலமா
தொடர் முயற்சியின் தாளமா
வரையபடாத ஓவியம் தான் 
நாளைக்கு காவியம் தான் ...