கடந்த வாரம் வியாழக்கிழமை அலுவலகத்திலிருந்து தாமதமாக கிளம்பினேன், எந்த வேளையில் இந்த வேலை தேர்ந்தெடுத்தேன் என்பதை யோசித்து சந்திர பாபு சார் பாட்டு மனதில் ஒலித்தது "நான் ஒரு முட்டாளுங்க ...." சிரித்துக் கொண்டே எவளோ உண்மை என்று மின் தொடரை நோக்கி நடந்தேன், மின் தொடர் பயணம் ஒன்றரை மணி நேரம் நான் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்தது. இரவு 11.30 மணி இருக்கும் என் வீட்டிற்கு 15 நிமிடம் நடை. தெரு விளக்குகள் ஒளிர்ந்து மஞ்சள் போர்த்தினார் போல தார் ரோடும் சிமென்ட் ரோடும்; அத்துடன் பனி , சில்லென்று நடக்க ஆரம்பிதேன். நான் மட்டும் தான் நடந்து வருகிறேன் திரும்பி பார்த்தால் யாருமே இல்லை, பயமில்லை எனக்கு மகிழ்ச்சி தான் அதிகமாக இருந்தது பனி விழ யாருமில்லாத சாலையில் மஞ்சள் நிற தெரு விளக்குகளுடன் அந்த நொடிகளை இன்னும் ரம்யமாக்க இசைஞானி சார் பாட்டு
கேட்டால் சொர்க்கம் என்று யோசித்தேன்
அந்த பனி விழும் இரவில் சத்தமாக கேக்கலாம் யாரும் தான் இல்லையே என்ற நிலையில் எடுத்தவுடன் "தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ.." பாடலை மொபைலில் ஒலி பெருக்கியாக கேட்டுக்கொண்டு நடந்தேன், யாரும் தான் இல்லையே என்ற நிலையில் நாமும் பாடலாமே என பாட்டினோடே பாட ஆரம்பிக்கும் முன் நாய் எதாவது உள்ளதா என்று பார்த்து விட்டு ஆரம்பித்தேன். "கதையா விடுகதையா......" என அந்த பாட்டின் அழகை கத்தியின்றி ரத்தமின்றி செய்யும் பைல்ஸ் ஆபரேஷன் போல கண்டம் செய்தேன் !! திடீர் ஒரு குரல் " டேய் !! தம்பி !!" பீடி வலித்துக்கொண்டு ஒரு 50 வயது ஆசாமி ஒரு தள்ளு வண்டி அதில் வாழைப் பழம், ஒரு காடை விளக்கு, கொஞ்சம் போதையில் இருந்தார். அருகே வந்து " ராஜா சார் பாட்டு தானே" . " ஆமா ணா " என்றேன்.
" சரி ! உன் கிட்ட ' பொன்மானே சங்கீதம் பாடவா ' ன்னு ரஜினி பாட்டு இருக்க ?? " என கேட்டார்.
ராஜா சார் எவ்வளவு மக்களின் இதயத்தில் 365 நாட்களும் பனியாக இருக்கிறார் என்பதை நினைத்தேன். " ணா , எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ணா.. ஒரு நிமிஷம் தேடி எடுக்கிறேன் " என்றேன்.
பாட்டு கிடைத்தது, ஒலிக்க வைக்க ஆரம்பித்தேன். அந்த பாட்டிற்கு அவர் எனக்கு ஒரு வாழப் பழம் கொடுத்தார். " இந்த பாட்டு முடிஞ்ச உடனே போ தம்பி " என்றார்.
நானும் அவரும் பிளாட் பாரம் மீது அமர்ந்தோம் பாட்டுடன் நானும் அவரும் " ... பொன் ஊஞ்சல் ஆயிரம் ... தேன் மழை நீ ஓய் ... என் காதல் வானிலே பெண் மேகம் ஊர்வலம் .." என கத்தினோம் நானும் அவரும், மகிழ்ச்சியின் உச்சம் அது, மணி 12 தொட சில நேரம் தான் ஒரு போலீஸ் எங்கள் கூச்சலை கேட்டு நெருங்கி வந்தார்.
" என்ன டா சூப்பர் சிங்கர்ஸ்!! செம்ம மப்பா" என்றார்.
"சார் !! சும்மா ஒரு பாட்டு கேக்கனு ன்னு சொன்னாரு இவரு அதான்.. நான் ஆபீஸ் ல இருந்து வீட்டுக்கு போறேன் சார் ." என்றேன் நான்.
" உன் முகரைய பாத்தா அப்படி தெரியலயே.. சரி அத விடு இது 'ராஜா சார் பாட்டு தானே' " என்றார் போலீஸ் காரர்.
பழவண்டி காரரின் அதே தொனியில், நான் சிரித்துக் கொண்டே ஆமாம் என்றேன். பழவண்டி அண்ணா அவரை மதிக்காமல் "பொன் மானே" பாடிக்கொண்டிரிந்தார்.
"உன் கிட்ட குருவாயுரப்ப பாட்டு, பாலசந்தர் சார் படம், ராஜா சார் மியூசிக் வெச்சி இருக்கியா ?? " போலீஸ் கேட்க்க.
அந்த பாடலை ஒலிக்க ஆரம்பித்தேன் , நான் அந்த போலீஸ் மற்றும் பழம் விற்கும் அண்ணா ஒன்றாக " குருவாயுரப்பாபாபாபாபாபாபா நான் கொண்ட காதலுக்கு நி தானே ....." என்ற கத்தினோம்.
அன்று இசை இரவு தான் !! ராஜா சாரின் ஆளுமை நம் வாழ்வின் கடினமான சூழலில் மயில் இறகாக, நம் துன்பத்தை இலகுவாக்குவர் அவரின் இசையில் ...
No comments:
Post a Comment