Translate

Monday, March 9, 2015

இரண்டு இட்லி - குட்டி கதை

'இரண்டு இட்லி' எனும் தலைப்பில் குறுங்கதை எழுதியுள்ளேன், படிக்க கிழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும் ...

இரண்டு இட்லி - குட்டி கதை

Saturday, March 7, 2015

தூர் வாரினேன்


            தூர் வாரும் பொழுது பழைய பொம்மைகளை கிணற்றிலிருந்து எடுக்கும்போது அந்த வீட்டுச் சிறுவனின் கண்களுக்கு புது பொம்மையாக திகழும், களிமண் கலந்தாலும் சேற்றில் இருந்தாலும் திரும்பி வந்தால் அது மகிழ்ச்சி தான்! இப்படி என் நினைவுகளை தூர் வாரும் போது அந்த சிறுவனாக மாறினேன்..
    ஞாபகம் எனும் சாவியுடன் என் பள்ளி இரும்பு கதவை திறந்தேன்,
 +1 வகுப்பிற்குள் நுழைந்தேன், என் நண்பர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், முதல் வரிசையில் ஸ்ரீதர், சரவணன், பிரவீன் மற்றும் ரவி அமர்ந்திருந்தார்கள். அப்படியே அவர் முகங்களை ரசித்துக் கொண்டே இருந்தேன், கவலை இல்லாத கண்களும் சிரிக்கும் கன்னங்களும் பார்கையில் மார்கழியில் AC ரூம் ஆனது என் மனது .
 நான்(விக்னேஷ்) அங்கு கடைசி பெஞ்சில் சண்முகம் , சுரேஷ் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். தீடீர் என்று எங்கள் கணக்கு வாத்தியார் சபீ உல்லாஹ் உள்ளே வந்தார், எல்லோரும் எழுந்தனர் "குட் மார்னிங்" என்ற கோரஸ்.
 "நான் ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன், யாரோ.. நான் உங்களுக்கு சரியா சொல்லி தரல ன்னு கம்ப்ளைன்ட் செஞ்சிட்டாங்க so i cant work here anymore " என்று முன்னும் பின்னுமாக நடந்து சொல்லிக்கொண்டிருக்கிறார், அதை சொன்னவுடன் வகுப்பே பேரு மூச்சு விட்டது, அவர் பின் புறமாக செல்கையில் அப்போது மூன்றாவது பெஞ்சில் இருக்கும் ஆதிகேஷ் கையை ஓங்கி அவரை குத்துவது பாவனை செய்தான், சபீ திடீரென்று திரும்பினார் ஆதி மாட்டிக்கொண்டான், வகுப்பில் ஒரு நிசப்தம். ஆதியின் கையை முறுக்கி "ஏண்டா  கை ஒங்குரியோ.. !! நீ தாண்டா போட்டு குடுத்திருப்ப" என்று பல்லைக் கடித்து முதுகில் நான்கு குத்து நன்கு குத்தினார். அந்த நேரத்தில் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த விக்னேஷ் சத்தம்போட்டு சிரித்தான் அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை திடீர் என்று நான் நினைவு என்பதை மறந்து "டேய் அடி வாங்க போற.. சிரிக்காத" என்றேன் என்னைப் பார்த்தே :-).. ஆனால் என்ன புண்ணியம் , சபீ விக்னேஷை " டேய் நீ வெளிய வா , நான் வேலையவிட்டு போன.. ! என்னை ஒருத்தன் அடிக்க வந்தா..! உனக்கு அவளோ சந்தோசமா " என கூறி சர மாரியாக முதுகில் கல் தோசை சுட்டுக்கொண்டிருந்தார். பின்னர் ஆதியும் விக்னேஷும் வெளியே நிற்கவைத்தார் சபீ, சரி இந்த ரெண்டு பேர் என்ன செய்கிறார்கள் என்று வெளியே சென்று பார்த்தேன் விக்னேஷ் சொல்கிறான் "மச்சி  நம்ப அவன்கிட்ட நிக்கல் குந்தல் போற்றுக்கணும் டா , செத்திருப்பான்" ஆதி விக்னேஷை அடித்து நிக்கல் என்றான். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை ஓடி வந்துவிட்டேன்.
        சரி ஸ்டாப் ரூமிற்கு போகலாம் என்று எண்ணினேன் ஐயய்யோ என் நினைவும் அடிவாங்கணுமா என ஜகா வாங்கி திரும்பவும் ஒரு மணி நேரம் கழித்து வகுப்பிற்கு சென்றால் அது ப்ரீ பிரியட். எல்லோரும் சத்தம்போட்டு இருந்தார்கள்,
 ரேகா, மணிமேகலை, நீரஜா  மூவரும் எதோ எழுதிக் கொண்டு இருந்தார்கள், ஜெயந்தி ,சரண்யா மற்றும் மஞ்சுளா ஏதோ ஆழ்ந்த உரையாடலுடன்; ராஜ் பரத் மற்றும் ரவி முஜிபுனிஸா, சுரேகா  வுடன் பேசி சிரித்துக்கொண்டும்; நரேஷ், சிவா ,ராகேஷ் புக் கிரிகெட்ஆடிக்கொண்டும்; தமிழ் குமரன் வழக்கம் போல கடலைப் போட்டுக்கொண்டிருந்தான்; கிச்சு லக்ஷ்மி நாராயணிடம் எந்த கம்ப்யுடர் சென்டர் போகலாம் என்று கேட்டுக்கொண்டிருந்தான் ;பிரவீன் ராஜ் ரியாசிடம் அடி வாங்கிக்கொண்டு இருந்தான். எனக்கு அந்த அறையில் பேரின்பத்தின் ஒலி கேட்டது !!! 
        +1 போதும், +2 விற்கு போகலாம் என யோசித்து நுழைந்தேன், சற்று முன் பார்த்த முகங்கள் மீசையுடன் ஒரே ஆச்சர்யம் ! என் நண்பன் சண்முகம் SPL, பத்ம பிரியா ASPL இருவரும் அசம்ப்லீயின் போது வழி நடத்துகிறார்கள், ' யு ட்யுப்' விடியோவை நகர்த்துவது போல நானும் நகர்ந்தேன், ஆசிரியர் தினம் - கலை நிகழ்சிகள் நடைப்பெற்று கொண்டிருகிறது நண்பன் மகேந்திர பாபு stand-up comedy செய்துக் கொண்டிருந்தான், பள்ளியில் அப்படி ஒரு சிரிப்பு சத்தம்... இன்னும் நகர்ந்தேன் , குழந்தைகள் தினம் - Ads Ap பில் ரவி பட்டையை கிளப்பினான், இன்னொரு கலை நிகழ்ச்சியில் ராஜ் பரத் பிதாமகன் 'விக்ரம்' கெட்டப்பில், பிரவீன் ராஜ் காதல் கொண்டேன் 'தனுஷ்' ஆகா ஆட்பரித்தார்கள்... இன்னும் நகர்ந்தேன் ,பள்ளியின் கடைசி நாள் - "மச்சி நம்ப எல்லாரும் ஒரே காலேஜ் சேரனும் டா" என சரaவணன் சொன்னான், "மச்சி உங்கள எல்லாம் ரொம்ப மிஸ் பண்ண போறேன் டா" என கமல் சொல்கிறான். சில தோழிகள் பிரதீபா ,மணிமேகலை , பூர்ணிமா , விஜி , பிரியங்கா  கண் கலங்கினர். அந்த இடம் முழுவதும் ஒரு தூய அன்பின் சாரலை உணர்ந்தேன், என் கண்களும் சற்று கலங்கியது ஆனால் எனக்கு தெரியும் இவர்கள் இனி இப்படி பழகப்போவதில்லை , சந்திக்கபோவதில்லை ! முக நூலில் கூட ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க போவதில்லை! இருந்தாலும் அந்த நொடி மகிழ்ச்சியின் நொடி எதிர் பாரா அன்பின் துளி !!

    ஞாபகம் எனும் சாவியை பூட்டி வெளியே வந்தேன். இன்று இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தன் குழந்தைகளுடன் வாழ்கையின் மேகத்தில் குடும்பத்தில் மழையாக இருகிறார்கள்..

இதை நீங்கள் வாசித்திருந்தால் ... தூர் வாரி இருப்பீர்கள் ஞாபகமேனும் சாவியுடன் !!!!!!!






Wednesday, March 4, 2015

நுங்கம்பாக்கம் , Chennai - 600034 / part 6

            
 தெளிவே உயர்வு !


              இளமையில் தெளிவு மிகவும் தொலைவு, கலங்கிய குட்டையில் மீன் பிடிக்க முடியுமா ? தெளிவில்லா மனதில் முடிவு எடுக்க முடியுமா ? தோல்விகளைச் சுமக்கும்  மூட்டையாக அனுபவங்கள் திகழும் அதிலிருந்து லேசாக தெளிவு தண்ணிப் பாம்பைப் போல் தலைக் காட்டும் ஆனால் வெகு சிலர் மட்டுமே தீர்க்கமாகவும் நிதானமாகவும் முடிவெடுப்பார்கள் இதனால் அவர்களுக்கு அனுபவம் இல்லை என்று சொல்ல இயலாது , அவர்கள் மற்றவர்களின் அனுபவத்தைச் சிந்திக்கும் சிந்தியலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இளமையில் தெளிவு ஒரு வரம் அதற்கு நாம் பொறுமை, எந்த தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு நிதானம் வேண்டும் இப்படி பட்டவர்களை நாம் சந்தித்திருப்போம் , நீங்கள் படிக்க போகும் நபர்களும் இந்த சாயலில் இருப்பார்கள் , இவர்களை வாசிக்கும் பொழுதும் உங்கள் வட்டாரத்தின் ஒரு நண்பரோ உறவினரோ நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன்.
      தேவ பிரகாஷ் ,லயோலா கல்லூரி நண்பன் கணித பிரிவு. மிகவும் அருமையாக படிப்பான், பனிரெண்டாம் வகுப்பில் 1134 மதிப்பெண்கள் வாங்கினான். சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த BE யின் மோகம் அதிகரித்தது, 700 மதிப்பெண் வாங்கினவன் தேர்வில் தோல்வியுற்றவன் இப்படி தங்களால் பொறியியல் தாக்கு பிடிக்க முடியுமா என்று சற்றே சிந்திக்காமல் பெருமைக்காகவும் தன் நண்பர்கள் பொறியியல் தேர்வுசெய்துள்ளர்கள் என்பதாலும் , பெற்றோர்களின் கட்டாயத்தாலும் தெளிவில்லாத முடிவு எடுத்து அவதிப்பட்டவர்கள் ஏராளம், இச் சூழலில் 1134 மதிப்பெண் எடுத்து இளங்கலை கணிதம் தேர்வு செய்தான் தேவா, அவனது பெற்றோர்கள் BE என்ற முடிவில் இருந்தார்கள் ஆனால் அவனது முடிவில் தெளிவும் தீர்கமமும் இருந்தது. ஒரு நாள் தேவாவிடம் "ஏண்டா உனக்கு ஈசிய இன்ஜினியரிங்  சீட் கெடச்சிருக்கும் அதுவும் அண்ணா யூனிவர்சிட்டிலயே கெடச்சிருக்குமே? " என ஒரு நண்பன் கேட்டான். அதற்கு தேவா "பாதிபேரு BE ன்னு விழறாங்க யோசிக்காமலே , நமக்குன்னு ஒரு விஷன் வேணும் டா எனக்கு மாத்ஸ் பிடிக்கும் அதானல இங்க அப்பளை பண்ணேன் " என்று சொன்னது எனக்கு இந்த வயதில் தெளிவா என வியந்தேன். மிக நன்றாக படிக்கக்கூடியவன் தேவா எல்லோருக்கும் சொல்லிக் கொடுத்து அவர்களையும் நல்ல மதிப்பெண் வாங்க வைத்தான், மூன்றாண்டு முடியும்  தருவையில் எல்லோரும் காம்பஸ் இன்டர்வ்யுவிற்கு தயாரானார்கள் இவன் மட்டும் போகவில்லை, சென்றிருந்தால் ஐ. டி கம்பனிகளுக்கு பெருத்த லாபம் வாய்த்திருக்கும். எல்லாரும் MCA MBA என மேற்படிபிற்கு வித விதமான கூடங்களில் சேர்ந்து TANCET மற்றும் சில நுழைவு தேர்வுக்கு தயாரானார்கள், இதற்கெல்லாம் அவன் போகாமல் முதல் மதிப்பெண் வாங்கும் அறிவு அவனிடம் இருந்தது. அந்த சூழலில் அவனிடம் நான் " என்ன மச்சா என்னதான் பிளான் பண்ற ? MCA வும் இல்ல MBA வும் இல்ல ன்ற ஆனா TANCET க்கு மட்டும் ஏன் அப்பளை பண்ண ? "
அதற்கு "மச்சா வீட்ல ஒரே தொல்ல MCA ன்னு சொல்றாங்க , எனக்கு சுத்தமா பிடிக்கல சும்மா பேருக்கு அப்பளை பண்ணேன். எப்படியும் நெகடிவ் ஸ்கோர் அதனால தப்பு தப்பா எழுதிட்ட மார்க் கம்மி ஆயிடும் அப்பரம் வீட்ல என் இஷ்டத்துக்கு விட்ருவாங்க " என்றான்.
"என்ன தாண்ட உன் இஷ்டம் ?" என நான் கேட்க்க
"மச்சா , Msc maths பண்ணனும் , ஸ்கூல் ல பசங்களுக்கு கிளாஸ் எடுக்கணும் .. எல்லாருக்கும் நல்ல கல்விய சொல்லிக்கொடுக்கணும் " என்றான்
அன்று அவனிடம் இருந்த நட்பு மகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தியது, இன்று அவன் சொன்னது போல ஒரு பள்ளியில் கணக்கு வாத்தியாராக மிகவும் மகிழ்ச்சியின் ஒளியாக இருக்கிறான். அவன் நினைத்தால் கல்லூரிக்கு கூட சென்று வகுப்பு எடுக்கலாம் ஆனால் தெளிவாக இருந்து சமூகத்திற்கு ஏணியாக இருக்கிறான்.
தேவா ஒரு புரட்சி தான் ..!
   
     தேவாவைப் பற்றி கூறினால் ஜான் சபாஸ்டின் மனதின் வாசலில் நின்று என் நினைவில் கோலம் போடுகிறான், ஜான் சபா என்ற 'சபா' இந்த பெயரில் எங்களுக்கு ஒரு புத்துணர்ச்சி இருக்கும், அவன் சோகமாக இருந்ததே இல்லை மற்றவர்கள் சோகமாக இருந்தாலும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவான். என்றும் புன்னகை இசையின் சபா எங்கள் சபா. பொருளாதரத்தில் சற்று பின்னடைவுடன் இருந்தது சபாவின் குடும்பம், இவன் சம்பாரித்து தான் எல்லாம் செய்யவேண்டிய சூழ்நிலை.தெளிவான முடிவு படிப்பின் தொடக்கத்திலயே "நான் வேலைக்கு போய்டுவேன் மச்சி நமக்கு PG லாம் வேண்டாம்" என்ற சொல் எங்களுக்கு இன்னும் எதிரொலிக்கிறது. சிறு வயதிலே குடும்ப நிலையறியும் மனமும் குணமும் சிலருக்கே! கல்லூரி படிப்பும் முடிந்தது , வேலைத் தேடி இவன் நிம்மதியை தொலைத்தான், அயராத உழைப்பில் சத்யம் கம்பெனியில் வேலை கிடைத்தது ஹைதராபாத் சென்றான் மூன்று மாதங்கள் நன்றாக சென்றது, மதமானால் தவறாமல் வீட்டிற்கு பணம் அனுப்புவான், திடீரென்று சத்யம் கம்பெனி கடனில் மூழ்கியது , இராமலிங்க ராஜு செய்த தவறு அப்பாவி சபாவை பாதித்தது. பாதிக்கும் மேற்ப்பட்டோரை வேலையிலிருந்து நீக்கினர் அதில் சபாவும் ஒருவன். முற்றிலும் உடைந்தான் ஆனால் நோருங்கவில்லை, தெளிவாக இருந்தான் வீட்டில் தன் வேலை போனதை சொல்லவில்லை, ஒரு மாதம் வேலை தேடினான் நண்பர்கள் உதவினார்கள், சம்பளம் என்று கடன் வாங்கிய பணத்தை வீட்டிற்கு அனுப்பினான், சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு வேலை கிடைத்தது.இன்று இன்போசிசில் பணிபுரிகிறான் தன் குடும்ப பொருளாதார சூழலையும் உயர்த்தினான். இதையெல்லாம் விட தான் காதலித்த பெண்ணையே திருமணமும் செய்தான் இது பெரிய தெளிவு !!! இன்று லண்டனில் வேலை செய்கிறான் சபா, அந்த பெயருக்கு அவ்வளவு புத்துணர்ச்சி ஆம் !!! சபாவைப் போல் உங்கள் வட்டாரத்தில் யாரோ ஒருவர் தெளிவாக இருக்ககூடும் அவர்களை நினைவுக் கோலம் போடுங்கள் உங்கள் மனதின் வாசலில் புத்துணர்ச்சியுடன் நிற்பார்கள்!

தெளிவே உயர்வு !!

Wednesday, February 18, 2015

சிறுகதை - கல்யாணமும் காட்சியும்


திருமண பந்தத்தின் அழகியலை சொல்லும் வகையில் ஒரு முயற்சி!

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

சிறுகதை - கல்யாணமும் காட்சியும்



வலைதளத்திலும்  !!

http://www.sirukathaigal.com/குடும்பம்/கல்யாணமும்-காட்சியும்/

 

ஒலி பெருக்கி - Screenplay